Inkscape/C2/Create-and-edit-multiple-objects/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Inkscape ல் “ பல objectகளை உருவாக்குதல் மற்றும் edit செய்தல்” குறித்த ஸ்போகன் டுடோரியல்களின் தொடருக்கு நல்வரவு. |
00:08 | இந்த டுடோரியலில் கற்க போவது objectகளை Copy மற்றும் paste செய்தல் |
00:13 | objectகளை Duplicate மற்றும் clone செய்தல் |
00:16 | வெவ்வேறு objectகளை Group மற்றும் Order செய்தல் |
00:19 | Multiple selection மற்றும் invert selection |
00:22 | Clipping மற்றும் Masking |
00:25 | இந்த டுடோரியலுக்காக நான் பயன்படுத்துவது Ubuntu Linux 12.04 |
00:31 | Inkscape பதிப்பு 0.48.4 |
00:35 | Dash home க்கு சென்று Inkscape என டைப் செய்க. |
00:39 | Inkscape logo ஐ க்ளிக் செய்து அதை திறக்கலாம் |
00:42 | நாம் ஏற்கனவே உருவாக்கிய file Assignment_1.svg ஐ திறப்போம். |
00:49 | அதை என் Documents folderல் சேமித்திருந்தேன். |
00:52 | முதலில் object ஐ copy மற்றும் paste செய்ய கற்போம். |
00:56 | அதற்கு, முதலில் ஒரு object ஐ தேர்ந்தெடுக்கவேண்டும். எனவே ஐங்கோணத்தைக் க்ளிக் செய்க. |
01:02 | இப்போது அதை copy செய்ய உங்கள் keyboard ல் Ctrl + C ஐ அழுத்துக. |
01:07 | இப்போது அதை paste செய்ய Ctrl + V ஐ அழுத்துக. canvas ல் ஐங்கோணத்தின் பிரதியை காணலாம். |
01:17 | objectகளின் பிரதியை உருவாக்க மூன்று வழிகள் உள்ளன. |
01:21 | இந்த மூன்று வழிகளிலும், object பிரதி original ஐ போலவே இருக்கும். |
01:29 | முதல் வழி Paste Special எனப்படும் |
01:32 | object ஐ copy செய்ய ஏற்கனவே Ctrl + Cஐ அழுத்தியுள்ளோம் என்பதை நினைவுகொள்க. |
01:38 | Object ஐ copy செய்த இடத்திலேயே paste செய்ய Ctrl + Alt + V keyகளை அழுத்துக. |
01:47 | கீழே உள்ள original object ஐ காண copy செய்யப்பட்ட object ஐ நகர்த்துவோம். |
01:54 | இந்த இரு objectகளையும் நகர்த்தி வைப்போம். |
01:57 | இரண்டாம் முறை Duplication எனப்படும். duplicationக்கு முதலில் object ஐ copy செய்யவேண்டியதில்லை. |
02:05 | ஐங்கோணத்தை தேர்ந்தெடுத்து உங்கள் keyboard ல் Ctrl + D keyகளை அழுத்தவும். |
02:13 | இப்போது original ஐங்கோணத்தின் மேலே pentagon ன் duplicate உள்ளது. |
02:19 | original object ஐ காண duplicate செய்யப்பட்ட object ஐ நகர்த்துவோம். |
02:25 | duplicate object ல் செய்யப்படும் மாற்றம் original objectஐ பாதிக்காது. |
02:32 | அதன் நிறத்தை பச்சையாக மாற்றியும் அளவை குறைத்தும் அதை சோதிப்போம். |
02:40 | மூன்றாம் வழி Cloning எனப்படும் |
02:44 | ellipse ஐ க்ளிக் செய்து ஒரு clone ஐ உருவாக்க Alt + D ஐ அழுத்துக. |
02:49 | முன்னர் போல, original objectக்கு மேலே clone செய்யப்பட்ட object உள்ளது. |
02:55 | அதை காண இதை நகர்த்துவோம். |
02:58 | clone செய்யப்பட்ட objectக்கு எப்போது original object உடன் தொடர்பு இருக்கும் என்பதை குறித்துக்கொள்க. |
03:04 | original object அதன் parent எனப்படும். |
03:08 | original object ல் ஏற்படும் அளவு, நிறம் போன்ற எந்த மாற்றமும், அதன் clone ஐ பாதிக்கும். |
03:16 | original object ன் நிறத்தை ஊதாவாக மாற்றி...., அதை சுழற்றி..... அதன் அளவை மாற்றி... இதை சோதிப்போம். |
03:30 | clone செய்யப்பட்ட objectலும் தானாகவே அதே மாற்றங்கள் நடப்பதைக் காண்க. |
03:36 | original object ல் இருந்து clone ன் தொடர்பை நீக்க, முதலில் clone ஐ தேர்ந்தெடுத்து பின் Shift + Alt + D ஐ அழுத்துக |
03:44 | இப்போது, original object ஐ தேர்ந்தெடுத்து அதன் அளவை மாற்றுக. |
03:50 | clone செய்யப்பட்ட object பாதிக்கப்படவில்லை என்பதைக் காண்க. |
03:54 | இந்த செயல்களுக்குான short-cut iconகள் இங்கே command bar உள்ளன. |
04:01 | multiple objectஐ தேர்ந்தெடுக்க Shift key ஐ பிடித்துக்கொண்டே தேர்ந்தெடுக்க விரும்பும் objectகளின் மீது க்ளிக் செய்க. |
04:08 | முதலில் நீள்வட்டத்தை தேர்ந்தெடுக்கிறேன். பின் Shift key ஐ பிடித்துக்கொண்டே மற்றொரு நீள்வட்டத்தை க்ளிக் செய்கிறேன். |
04:15 | இப்போது இரு objectகளும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதைக் காண்க. |
04:19 | இவற்றை இப்போது Ctrl + G keyகளை அழுத்தி group செய்வோம். |
04:24 | நீள்வட்டங்கள் இப்போது single object ஆக group செய்யப்பட்டுள்ளன. |
04:28 | அவற்றை இப்போது நகரத்தி இரு objectகளும் ஒன்றாக நகர்வதைக் காணலாம். |
04:35 | group ன் அளவை மாற்ற முயலும்போது இரு objectகளின் அளவும் மாறுகிறது. |
04:43 | நிறத்தை நீலமாக மாற்றி இரு objectகளும் ஒரே நிறமாக மாறுவதைக் காணலாம். |
04:53 | groupல் ஒரு objectன் property ஐ மாற்ற நினைத்தால் என்ன செய்வது? |
05:01 | groupல் ஒரு Object ஐ மட்டும் தேர்ந்தெடுக்க, Ctrl button ஐ அழுத்தி அந்த object ல் click செய்க |
05:08 | இதனால், அந்த group ன் உள் சென்று ஒவ்வொரு objectஆக தேர்ந்தெடுக்கலாம். |
05:13 | groupல் இருந்து வெளியேற, canvas ன் காலிஇடத்தில் எங்கேனும் க்ளிக் செய்க. |
05:18 | objectகளை ungroup செய்ய, முதலில் group ஐ தேர்ந்தெடுத்து ' Ctrl + Shift + G keyகள் அல்லது Ctrl + U keyகளை' அழுத்துக |
05:28 | இப்போது நீள்வட்டங்கள் ungroup செய்யப்பட்டுள்ளன. |
05:31 | இந்த செயல்களுக்கான short-cut iconகள் இங்கே command bar ல் உள்ளன. |
05:36 | canvas ல் அனைத்து objectகளையும் தேர்ந்தெடுக்க Ctrl + A' keyகளை' அழுத்துக |
05:42 | அனைத்து objectகளையும் தேர்வுநீக்க, canvas ன் காலியிடத்தில் எங்கேனும் க்ளிக் செய்க. |
05:48 | ஏதேனும் ஒரு object ஐ தவிர அனைத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டும் எனில், Invert Selection தேர்வை பயன்படுத்தலாம். |
05:55 | இந்த அம்புைத் தவிர அனைத்து objectகளையும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்போம். |
05:59 | முதலில், அம்பைக் க்ளிக் செய்க. இப்போது Edit menu க்கு சென்று Invert selection ஐ தேர்ந்தெடுக்கவும் |
06:08 | இந்த அம்பைத் தவிர canvas ல் அனைத்து object களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதைக் காண்க. |
06:16 | இப்போது objectகளை அடுக்க கற்போம். |
06:20 | இந்த சிறிய ஐங்கோணத்தை பெரிய ஐங்கோணத்திற்கு மேலே வைக்கிறேன். |
06:25 | இப்போது ஒரு நட்சத்திரத்தை வரைந்து அதை சிறிய ஐங்கோணத்தின் மேலே வைக்கிறேன். |
06:36 | சிறிய ஐங்கோணத்தை தேர்ந்தெடுக்கிறேன். Object menu க்கு சென்று Raise ஐ க்ளிக் செய்க |
06:42 | இப்போது சிறிய ஐங்கோணம் நட்சத்திரத்திற்கு மேல் வந்திருப்பதைக் காண்க. |
06:47 | நட்சத்திரத்தை க்ளிக் செய்க. Object menuக்கு சென்று Lowerஐ க்ளிக் செய்க |
06:53 | இப்போது அந்த நட்சத்திரம் பெரிய ஐங்கோணத்திற்கு பின் சென்றுவிட்டது. |
07:00 | பெரிய ஐங்கோணத்தை இப்போது க்ளிக் செய்கிறேன். Object menu க்கு சென்று Raise to top ஐ க்ளிக் செய்க. இப்போது பெரிய ஐங்கோணம் மேலே தோன்றுகிறது. |
07:11 | மீண்டும் இப்போது Object menuக்கு சென்று Lower to bottomஐ க்ளிக் செய்க. பெரிய ஐங்கோணம் இப்போது அடியில் சென்றுள்ளதைக் காணலாம். |
07:20 | Tool controls bar லும் இந்த தேர்வுகளைக் காணலாம். |
07:25 | அடுத்து Clipping பற்றி காண்போம் |
07:28 | உங்கள் சிக்கலான object களை Clipping உருவாக்குகிறது |
07:31 | உங்கள் design ன் மற்றொரு element அல்லது shapeக்கு மாற்றுகிறது |
07:35 | இது அதன் முழூ வடிவத்தை மாற்றுவதன் மூலம் சீக்கிரமாகவும் சுலபமாகவும் நடக்கிறது. |
07:39 | இந்த செயல்விளக்கத்திற்கு ஒரு படத்தை பயன்படுத்துகிறேன். புது Inkscape file ல் ஒரு படம் உள்ளது. |
07:45 | இந்த படத்தில் ஒரு நீள்வட்டத்தை வரைகிறேன். |
07:49 | இப்போது, அந்த படத்தையும் நீள்வட்டத்தையும் தேர்ந்தெடுக்கவும். |
07:53 | Object menuக்கு சென்று Clip பின் Set ல் க்ளிக் செய்க |
07:59 | நீள்வட்டத்தின் வடிவத்திற்கு அந்த படம் இப்போது clip செய்யப்பட்டிருப்பதைக் காண்க. |
08:04 | Clipping ல், objectன் வடிவம் clipஆக பயன்படுகிறது, தோன்றும் பரப்பை வரையறுக்கிறது. |
08:09 | clip ஐ நீக்க Object menu க்கு சென்று Clip பின் Release ல் க்ளிக் செய்க |
08:17 | இப்போது clip விடுவிக்கப்படுகிறது. |
08:19 | அடுத்து Masking செய்ய கற்போம். |
08:22 | Masking உம் Clipping போன்றதே. |
08:25 | Masking ல், ஒரு object ன் transparency அல்லது lightness இரண்டாம் object ன் opacity ஐ நிர்ணயிக்கிறது. |
08:32 | Masking ன் செயல்விளக்கத்திற்கு, நீள்வட்டத்தை gradient tool ஐ பயன்படுத்தி semi-transparent ஆக மாற்றுகிறேன். |
08:38 | நீள்வட்டத்தை தேர்ந்தெடுக்கவும். |
08:40 | Object menu க்கு சென்று Fill and stroke ல் க்ளிக் செய்க |
08:44 | Radial gradient க்கு சென்று Editல் க்ளிக் செய்க |
08:50 | நிறத்தை வெள்ளையாக மாற்ற RGB sliderகளை வலது கோடிக்கு நகர்த்தவும். |
09:00 | Stop drop down arrow ஐ க்ளிக் செய்து வேறொரு stop ஐ தேர்ந்தெடுக்கவும். |
09:05 | நிறத்தை கருப்பாக மாற்ற RGB sliderகளலை இடது கோடிக்கு நகர்த்தவும் alpha value ஐ 255 ஆக மாற்றவும். |
09:15 | இதற்கிடையில் மற்றொரு நிறத்தை சேர்க்க Add stop ஐ க்ளிக் செய்க. |
09:20 | Node toolஐ க்ளிக் செய்து diamond handle ஐ மேல்நோக்கி நகர்த்தவும். |
09:27 | இப்போது படத்தையும் நீள்வட்டதையும் தேர்ந்தெடுக்கவும். |
09:30 | Object menu க்கு சென்று |
09:32 | Mask பின் Set ஐ க்ளிக் செய்க |
09:36 | படத்தின் மீது mask உருவாக்கப்பட்டிருப்பதைக் காண்க. |
09:40 | நீள்வட்டத்தில் உள்ள masking objectன் transparency propertiesஐ படம் ஏற்றுள்ளதைக் காண்க. |
09:47 | maskஐ நீக்க, Object menu க்கு சென்று |
09:51 | Mask ஐ க்ளிக் செய்து பின் Release. |
09:54 | mask நீக்கப்பட்டுவிட்டது. |
09:56 | சுருங்கசொல்ல. |
09:57 | இந்த டுடோரியலில் நாம் கற்றது objectகளை Copy மற்றும் paste செய்தல் |
10:02 | objectகளை Duplicate மற்றும் clone செய்தல் |
10:05 | வெவ்வேறு objectகளை Group மற்றும் Order செய்தல் |
10:08 | Multiple selection மற்றும் invert selection |
10:10 | Clipping மற்றும் Masking |
10:12 | இங்கே உங்களுக்கான இரு பயிற்சிகள் உள்ளன |
10:15 | சாம்பல் நிறத்தில் செங்குத்து நீள்வட்டத்தையும் கருப்பு நிற வட்டத்தையும் உருவாக்கவும். |
10:20 | நீள்வட்டத்தின் மேலே மையத்தில் வட்டத்தை வைக்கவும். |
10:23 | அது கண் வடிவில் இருக்க வேண்டும். |
10:25 | அவற்றை group செய்யவும். |
10:27 | அடுத்து மற்றொரு கண்ணை உருவாக்க clone ஐ உருவாக்குக. |
10:31 | இரு கண்களும் தெரியுமாறு அதை பக்கத்தில் நகர்த்தி வைக்கவும். |
10:35 | நீல நிற வட்டத்தையும் சிவப்பு நிற சதுரத்தையும் உருவாக்குக. |
10:40 | சதுரத்தை Duplicate செய்து அவற்றை குறுக்கே எதிரெதிரே வைக்கவும். |
10:45 | இரு சதுரங்களையும் தேரந்தெடுத்து ஒரே object ஆக group செய்யவும். |
10:50 | group செய்யப்பட்ட சதுரங்களுக்கு நடுவே மேலே வட்டத்தை வைக்கவும். |
10:54 | இரண்டையும் தேர்ந்தெடுத்து ஒரு clipஐ உருவாக்குக. அது ஒரு இரு சுழல் முடிச்சு (bow) போன்று இருக்க வேண்டும். |
11:00 | நீங்கள் செய்து முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும். |
11:03 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும். |
11:12 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
11:21 | மேலும் தகவல்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
11:23 | இதற்கு ஆதரவு இந்திய அரசின் MHRD,NMEICT மூலம் கிடைக்கிறது. |
11:31 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும். |
11:35 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
11:38 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |