Inkscape/C2/Create-and-edit-multiple-objects/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Inkscape ல் “ பல objectகளை உருவாக்குதல் மற்றும் edit செய்தல்” குறித்த ஸ்போகன் டுடோரியல்களின் தொடருக்கு நல்வரவு.
00:08 இந்த டுடோரியலில் கற்க போவது objectகளை Copy மற்றும் paste செய்தல்
00:13 objectகளை Duplicate மற்றும் clone செய்தல்
00:16 வெவ்வேறு objectகளை Group மற்றும் Order செய்தல்
00:19 Multiple selection மற்றும் invert selection
00:22 Clipping மற்றும் Masking
00:25 இந்த டுடோரியலுக்காக நான் பயன்படுத்துவது Ubuntu Linux 12.04
00:31 Inkscape பதிப்பு 0.48.4
00:35 Dash home க்கு சென்று Inkscape என டைப் செய்க.
00:39 Inkscape logo ஐ க்ளிக் செய்து அதை திறக்கலாம்
00:42 நாம் ஏற்கனவே உருவாக்கிய file Assignment_1.svg ஐ திறப்போம்.
00:49 அதை என் Documents folderல் சேமித்திருந்தேன்.
00:52 முதலில் object ஐ copy மற்றும் paste செய்ய கற்போம்.
00:56 அதற்கு, முதலில் ஒரு object ஐ தேர்ந்தெடுக்கவேண்டும். எனவே ஐங்கோணத்தைக் க்ளிக் செய்க.
01:02 இப்போது அதை copy செய்ய உங்கள் keyboard ல் Ctrl + C ஐ அழுத்துக.
01:07 இப்போது அதை paste செய்ய Ctrl + V ஐ அழுத்துக. canvas ல் ஐங்கோணத்தின் பிரதியை காணலாம்.
01:17 objectகளின் பிரதியை உருவாக்க மூன்று வழிகள் உள்ளன.
01:21 இந்த மூன்று வழிகளிலும், object பிரதி original போலவே இருக்கும்.
01:29 முதல் வழி Paste Special எனப்படும்
01:32 object ஐ copy செய்ய ஏற்கனவே Ctrl + Cஐ அழுத்தியுள்ளோம் என்பதை நினைவுகொள்க.
01:38 Object ஐ copy செய்த இடத்திலேயே paste செய்ய Ctrl + Alt + V keyகளை அழுத்துக.
01:47 கீழே உள்ள original object ஐ காண copy செய்யப்பட்ட object ஐ நகர்த்துவோம்.
01:54 இந்த இரு objectகளையும் நகர்த்தி வைப்போம்.
01:57 இரண்டாம் முறை Duplication எனப்படும். duplicationக்கு முதலில் object ஐ copy செய்யவேண்டியதில்லை.
02:05 ஐங்கோணத்தை தேர்ந்தெடுத்து உங்கள் keyboard ல் Ctrl + D keyகளை அழுத்துக.
02:13 இப்போது original ஐங்கோணத்தின் மேலே அதன் duplicate உள்ளது.
02:19 original object ஐ காண duplicate செய்யப்பட்ட object ஐ நகர்த்துவோம்.
02:25 duplicate object ல் செய்யப்படும் மாற்றம் original objectஐ பாதிக்காது.
02:32 அதன் நிறத்தை பச்சையாக மாற்றியும் அளவை குறைத்தும் அதை சோதிப்போம்.
02:40 மூன்றாம் வழி Cloning எனப்படும்
02:44 ellipse ஐ க்ளிக் செய்து ஒரு clone ஐ உருவாக்க Alt + D ஐ அழுத்துக.
02:49 முன்னர் போல, original objectக்கு மேலே clone செய்யப்பட்ட object உள்ளது.
02:55 அதை காண இதை நகர்த்துவோம்.
02:58 clone செய்யப்பட்ட objectக்கு எப்போதும் original object உடன் தொடர்பு இருக்கும் என்பதை குறித்துக்கொள்க.
03:04 original object அதன் parent எனப்படும்.
03:08 original object ல் ஏற்படும் அளவு, நிறம் போன்ற எந்த மாற்றமும், அதன் clone ஐ பாதிக்கும்.
03:16 original object ன் நிறத்தை ஊதாவாக மாற்றி...., அதை சுழற்றி..... அதன் அளவை மாற்றி... இதை சோதிப்போம்.
03:30 clone செய்யப்பட்ட objectலும் தானாகவே அதே மாற்றங்கள் நடப்பதைக் காண்க.
03:36 original object ல் இருந்து clone ன் தொடர்பை நீக்க, முதலில் clone ஐ தேர்ந்தெடுத்து பின் Shift + Alt + D ஐ அழுத்துக
03:44 இப்போது, original object ஐ தேர்ந்தெடுத்து அதன் அளவை மாற்றுக.
03:50 clone செய்யப்பட்ட object பாதிக்கப்படவில்லை என்பதைக் காண்க.
03:54 இந்த செயல்களுக்குான short-cut iconகள் இங்கே command bar உள்ளன.
04:01 பல objectஐ தேர்ந்தெடுக்க Shift key ஐ பிடித்துக்கொண்டே தேர்ந்தெடுக்க விரும்பும் objectகளின் மீது க்ளிக் செய்க.
04:08 முதலில் நீள்வட்டத்தை தேர்ந்தெடுக்கிறேன். பின் Shift key ஐ பிடித்துக்கொண்டே மற்றொரு நீள்வட்டத்தை க்ளிக் செய்கிறேன்.
04:15 இப்போது இரு objectகளும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதைக் காண்க.
04:19 இவற்றை இப்போது Ctrl + G keyகளை அழுத்தி group செய்வோம்.
04:24 நீள்வட்டங்கள் இப்போது single object ஆக group செய்யப்பட்டுள்ளன.
04:28 அவற்றை இப்போது நகரத்தி இரு objectகளும் ஒன்றாக நகர்வதைக் காணலாம்.
04:35 group ன் அளவை மாற்ற முயலும்போது இரு objectகளின் அளவும் மாறுகிறது.
04:43 நிறத்தை நீலமாக மாற்றி இரு objectகளும் ஒரே நிறமாக மாறுவதைக் காணலாம்.
04:53 groupல் ஒரு objectன் property ஐ மாற்ற நினைத்தால் என்ன செய்வது?
05:01 groupல் ஒரு Object ஐ மட்டும் தேர்ந்தெடுக்க, Ctrl button ஐ அழுத்தி அந்த object ல் click செய்க
05:08 இதனால், அந்த group ன் உள் சென்று ஒவ்வொரு objectஆக தேர்ந்தெடுக்கலாம்.
05:13 groupல் இருந்து வெளியேற, canvas ன் காலிஇடத்தில் எங்கேனும் க்ளிக் செய்க.
05:18 objectகளை ungroup செய்ய, முதலில் group ஐ தேர்ந்தெடுத்து ' Ctrl + Shift + G keyகள் அல்லது Ctrl + U keyகளை' அழுத்துக
05:28 இப்போது நீள்வட்டங்கள் ungroup செய்யப்பட்டுள்ளன.
05:31 இந்த செயல்களுக்கான short-cut iconகள் இங்கே command bar ல் உள்ளன.
05:36 canvas ல் அனைத்து objectகளையும் தேர்ந்தெடுக்க Ctrl + A' keyகளை' அழுத்துக
05:42 அனைத்து objectகளையும் தேர்வுநீக்க, canvas ன் காலியிடத்தில் எங்கேனும் க்ளிக் செய்க.
05:48 ஏதேனும் ஒரு object ஐ தவிர அனைத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டும் எனில், Invert Selection தேர்வை பயன்படுத்தலாம்.
05:55 இந்த அம்புைத் தவிர அனைத்து objectகளையும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்போம்.
05:59 முதலில், அம்பைக் க்ளிக் செய்க. இப்போது Edit menu க்கு சென்று Invert selection ஐ தேர்ந்தெடுக்கவும்
06:08 இந்த அம்பைத் தவிர canvas ல் அனைத்து object களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதைக் காண்க.
06:16 இப்போது objectகளை அடுக்க கற்போம்.
06:20 இந்த சிறிய ஐங்கோணத்தை பெரிய ஐங்கோணத்திற்கு மேலே வைக்கிறேன்.
06:25 இப்போது ஒரு நட்சத்திரத்தை வரைந்து அதை சிறிய ஐங்கோணத்தின் மேலே வைக்கிறேன்.
06:36 சிறிய ஐங்கோணத்தை தேர்ந்தெடுக்கிறேன். Object menu க்கு சென்று Raise ஐ க்ளிக் செய்க
06:42 இப்போது சிறிய ஐங்கோணம் நட்சத்திரத்திற்கு மேல் வந்திருப்பதைக் காண்க.
06:47 நட்சத்திரத்தை க்ளிக் செய்க. Object menuக்கு சென்று Lowerஐ க்ளிக் செய்க
06:53 இப்போது அந்த நட்சத்திரம் பெரிய ஐங்கோணத்திற்கு பின் சென்றுவிட்டது.
07:00 பெரிய ஐங்கோணத்தை இப்போது க்ளிக் செய்கிறேன். Object menu க்கு சென்று Raise to top ஐ க்ளிக் செய்க. இப்போது பெரிய ஐங்கோணம் மேலே தோன்றுகிறது.
07:11 மீண்டும் இப்போது Object menuக்கு சென்று Lower to bottomஐ க்ளிக் செய்க. பெரிய ஐங்கோணம் இப்போது அடியில் சென்றுள்ளதைக் காணலாம்.
07:20 Tool controls bar லும் இந்த தேர்வுகளைக் காணலாம்.
07:25 அடுத்து Clipping பற்றி காண்போம்
07:28 உங்கள் சிக்கலான object களை Clipping உருவாக்குகிறது
07:31 உங்கள் design ன் மற்றொரு element அல்லது shapeக்கு மாற்றுகிறது
07:35 இது அதன் முழூ வடிவத்தை மாற்றுவதன் மூலம் சீக்கிரமாகவும் சுலபமாகவும் நடக்கிறது.
07:39 இந்த செயல்விளக்கத்திற்கு ஒரு படத்தை பயன்படுத்துகிறேன். புது Inkscape file ல் ஒரு படம் உள்ளது.
07:45 இந்த படத்தில் ஒரு நீள்வட்டத்தை வரைகிறேன்.
07:49 இப்போது, அந்த படத்தையும் நீள்வட்டத்தையும் தேர்ந்தெடுக்கவும்.
07:53 Object menuக்கு சென்று Clip பின் Set ல் க்ளிக் செய்க
07:59 நீள்வட்டத்தின் வடிவத்திற்கு அந்த படம் இப்போது clip செய்யப்பட்டிருப்பதைக் காண்க.
08:04 Clipping ல், objectன் வடிவம் clipஆக பயன்படுகிறது, தோன்றும் பரப்பை வரையறுக்கிறது.
08:09 clip ஐ நீக்க Object menu க்கு சென்று Clip பின் Release ல் க்ளிக் செய்க
08:17 இப்போது clip விடுவிக்கப்படுகிறது.
08:19 அடுத்து Masking செய்ய கற்போம்.
08:22 Masking உம் Clipping போன்றதே.
08:25 Masking ல், ஒரு object ன் transparency அல்லது lightness இரண்டாம் object ன் opacity ஐ நிர்ணயிக்கிறது.
08:32 Masking ன் செயல்விளக்கத்திற்கு, நீள்வட்டத்தை gradient tool ஐ பயன்படுத்தி semi-transparent ஆக மாற்றுகிறேன்.
08:38 நீள்வட்டத்தை தேர்ந்தெடுக்கவும்.
08:40 Object menu க்கு சென்று Fill and stroke ல் க்ளிக் செய்க
08:44 Radial gradient க்கு சென்று Editல் க்ளிக் செய்க
08:50 நிறத்தை வெள்ளையாக மாற்ற RGB sliderகளை வலது கோடிக்கு நகர்த்தவும்.
09:00 Stop drop down arrow ஐ க்ளிக் செய்து வேறொரு stop ஐ தேர்ந்தெடுக்கவும்.
09:05 நிறத்தை கருப்பாக மாற்ற RGB sliderகளை இடது கோடிக்கு நகர்த்தவும் alpha value ஐ 255 ஆக மாற்றவும்.
09:15 இதற்கிடையில் மற்றொரு நிறத்தை சேர்க்க Add stop ஐ க்ளிக் செய்க.
09:20 Node toolஐ க்ளிக் செய்து diamond handle ஐ மேல்நோக்கி இழுக்கவும்.
09:27 இப்போது படத்தையும் நீள்வட்டதையும் தேர்ந்தெடுக்கவும்.
09:30 Object menu க்கு சென்று
09:32 Mask பின் Set ஐ க்ளிக் செய்க
09:36 படத்தின் மீது mask உருவாக்கப்பட்டிருப்பதைக் காண்க.
09:40 நீள்வட்டத்தில் உள்ள masking objectன் transparency propertiesஐ படம் ஏற்றுள்ளதைக் காண்க.
09:47 maskஐ நீக்க, Object menu க்கு சென்று
09:51 Mask ஐ க்ளிக் செய்து பின் Release.
09:54 mask நீக்கப்பட்டுவிட்டது.
09:57 சுருங்கசொல்ல, இந்த டுடோரியலில் நாம் கற்றது objectகளை Copy மற்றும் paste செய்தல்
10:02 objectகளை Duplicate மற்றும் clone செய்தல்
10:05 வெவ்வேறு objectகளை Group மற்றும் Order செய்தல்
10:08 Multiple selection மற்றும் invert selection
10:10 Clipping மற்றும் Masking
10:12 இங்கே உங்களுக்கான இரு பயிற்சிகள் உள்ளன
10:15 சாம்பல் நிறத்தில் செங்குத்து நீள்வட்டத்தையும் கருப்பு நிற வட்டத்தையும் உருவாக்கவும்.
10:20 நீள்வட்டத்தின் மேலே மையத்தில் வட்டத்தை வைக்கவும்.
10:23 அது கண் வடிவில் இருக்க வேண்டும்.
10:25 அவற்றை group செய்யவும்.
10:27 அடுத்து மற்றொரு கண்ணை உருவாக்க clone ஐ உருவாக்குக.
10:31 இரு கண்களும் தெரியுமாறு அதை பக்கத்தில் நகர்த்தி வைக்கவும்.
10:35 நீல நிற வட்டத்தையும் சிவப்பு நிற சதுரத்தையும் உருவாக்குக.
10:40 சதுரத்தை Duplicate செய்து அவற்றை குறுக்கே எதிரெதிரே வைக்கவும்.
10:45 இரு சதுரங்களையும் தேரந்தெடுத்து ஒரே object ஆக group செய்யவும்.
10:50 group செய்யப்பட்ட சதுரங்களுக்கு நடுவே மேலே வட்டத்தை வைக்கவும்.
10:54 இரண்டையும் தேர்ந்தெடுத்து ஒரு clipஐ உருவாக்கவும். அது ஒரு இரு சுழல் முடிச்சு (bow) போன்று இருக்க வேண்டும்.
11:00 நீங்கள் செய்து முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும்.
11:03 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளி ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கி காணவும்.
11:12 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
11:21 மேலும் தகவல்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
11:23 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசின் MHRD,NMEICT மூலம் கிடைக்கிறது.
11:31 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்.
11:35 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
11:38 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst