Ruby/C2/Variables-in-Ruby/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 16:35, 18 November 2014 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00:02 Ruby ல் Variableகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
00:09 variable என்றால் என்ன?
00:10 Ruby ல் dynamic typing
00:13 ஒரு variable ஐ declare செய்தல்
00:15 variable வகைகளை மாற்றுதல்
00:18 variableயின் scope என்றால் என்ன?
00:20 variableகளின் வகைகள்.
00:23 இங்கே நாம் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் பதிப்பு 12.04 Ruby 1.9.3
00:32 லினக்ஸ் ல் டெர்மினல் ஐ பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
00:38 irb பற்றியும் தெரிந்திருக்கவேண்டும்
00:41 இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் இணையதளத்தை காணவும்
00:47 இப்போது ஒரு variable என்றால் என்ன என விளக்குகிறேன்.
00:50 ஒரு மதிப்பை சேமிக்க Variable பயன்படுகிறது.
00:54 Variable என்பது assign செய்யப்படக்கூடிய ஒரு குறிப்பு (reference) ஆகும்.
00:58 Ruby variableகள் case sensitive ஆனவை என்பதை குறித்துக்கொள்க
01:04 Variable பெயர்கள் அர்த்தமுள்ளவையாக இருக்கவேண்டும்.
01:07 கீழ்நிலை எழுத்துக்கள் (lowercase letters), எண்கள், underscoreகள் ஆகியவற்றை மட்டும் Variable பெயர் கொண்டிருக்க வேண்டும். எகா : first_name
01:20 இப்போது dynamic typing பற்றி காண்போம்
01:23 Ruby ஒரு dynamic typed language ஆகும்.
01:27 அதாவது ஒரு variable ஐ உருவாக்கும்போது dataவகையை declare செய்யவேண்டியது இல்லை .
01:34 assign செய்யப்படும் போது data வகையை Ruby interpreter நிர்ணயிக்கிறது.
01:39 இப்போது Ruby ல் ஒரு variable ஐ எவ்வறு declare செய்வது என காண்போம்
01:45 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்துவதன் மூலம் டெர்மினலை திறக்கவும்.
01:51 திரையில் டெர்மினல் விண்டோ தோன்றுகிறது.
01:55 இப்போது டைப் செய்க irb
01:57 Interactive Ruby ஐ துவக்க எண்டரை அழுத்துக
02:02 இப்போது டைப் செய்க var1 equal to 10 பின் எண்டரை அழுத்துக
02:09 இங்கே ஒரு variable var1 ஐ declare செய்து அதற்கு ஒரு மதிப்பு 10 ஐ assign செய்துள்ளோம்.
02:15 இதற்கு interpreter ஒதுக்கிய dataவகை... integer ஆ இல்லையா என சோதிப்போம்.
02:21 எனவே டைப் செய்க var1 dot kind_(underscore)of (?)கேள்வி குறி Integer பின் எண்டரை அழுத்துக
02:37 true என்ற வெளியீட்டை பெறுகிறோம்
02:39 Ruby ல் dynamic ஆக variable வகையை மாற்ற முடியும்.
02:44 அதற்கு, ஒரு புது மதிப்பை அதற்கு assign செய்க.
02:47 variable var1 க்கு ஒரு string மதிப்பை assign செய்வதன் மூலம் அதை செய்யலம்
02:53 டைப் செய்க var1 equal to இரட்டை மேற்கோள்களில் hello பின் எண்டரை அழுத்துக
03:02 assign செய்யப்பட்ட variable வகையை சரிபார்ப்போம்
03:06 டைப் செய்க var1 dot class
03:12 variable ன் class ஐ Class method சொல்கிறது. இப்போது எண்டரை அழுத்துக
03:20 string என்ற வெளியீட்டை பெறுகிறோம்
03:23 variable வகை integerstring ஆக தானாகவே ruby மாற்றியுள்ளது
03:29 இப்போது நாம் ஒரு variable ன் மதிப்பை எவ்வாறு வெவ்வேறு வகைக்கு மாற்றுவது என கற்போம்
03:35 slideகளுக்கு திரும்ப வருவோம்
03:38 Ruby variable classeகள் அவற்றின் மதிப்பை வெவ்வேறு வகைக்கு மாற்ற methodகளை கொண்டுள்ளன
03:45 ஒரு variable ஐ integer ஆக மாற்ற to_i method பயன்படுகிறது
03:51 ஒரு variable ஐ floating point மதிப்பாக மாற்ற to_f method பயன்படுகிறது
03:57 ஒரு variable ஐ string ஆக மாற்ற to_s method பயன்படுகிறது
04:03 to_s method எண்ணை argument ஆக ஏற்கிறது.
04:08 மாற்றம் இந்த எண்ணை பொருத்தது.
04:12 இப்போது இந்த methodகளை முயற்சிப்போம்
04:15 டெர்மினலுக்கு செல்வோம் முதலில் டெர்மினலை துடைப்போம்
04:21 irb console ஐ துடைக்க Ctrl L ஐ அழுத்துக
04:25 இப்போது டைப் செய்க y equal to 20 பின் எண்டரை அழுத்துக
04:32 இங்கே y என்ற ஒரு variable ஐ declare செய்து அதற்கு மதிப்பு 20 ஐ assign செய்துள்ளோம்.
04:39 இப்போது to underscore f method ஐ பயன்படுத்தி y ஐ ஒரு floating point மதிப்பாக மாற்றுவோம்
04:47 டைப் செய்க y dot to underscore f பின் எண்டரை அழுத்துக
04:55 float' என மதிப்பை பெறுகிறோம்
04:57 இப்போது டைப் செய்க y dot to underscore s பின் எண்டரை அழுத்துக
05:06 இரட்டை மேற்கோள்களில் 20 என்ற வெளியீட்டை பெறுகிறோம்
05:10 variable y ஐ binary வடிவில் மாற்ற எண் 2to_s method க்கு கொடுக்கவும்
05:18 முந்தைய command ஐ பெற மேல் அம்பு விசையை அழுத்துக
05:22 டைப் செய்க அடைப்புகளில் 2 பின் எண்டரை அழுத்துக
05:29 binary வடிவில் வெளியீட்டை பெறுகிறோம்
05:33 அதேபோல எண்ணை 8 அல்லது 16 ஆக மாற்றுவதன் மூலம் variable yoctal அல்லது hexadecimal வடிவிலும் மாற்ற முடியும்
05:44 நம் slideக்கு வருவோம்
05:47 இப்போது variable scope பற்றி கற்போம்.
05:51 ஒரு ப்ரோகிராமில் ஒரு variable ஐ அணுக கூடிய இடத்தை Scope வரையறுக்கிறது.
05:56 Ruby நான்கு வகை variable scope ஐ கொண்டுள்ளது:
06:00 Local
06:01 Global
06:02 Instance மற்றும்
06:04 Class
06:06 variable பெயரின் ஆரம்பத்தில் ஒரு சிறப்பு எழுத்தைக் பயன்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு variable வகையும் declare செய்யப்படுகிறது
06:14 $ ஒரு global variable ஐ குறிக்கிறது
06:18 கீழ்நிலை எழுத்துக்கள் மற்றும் underscore ஒரு local variable ஐ குறிக்கிறது
06:25 @ ஒரு instance variable ஐ குறிக்கிறது
06:29 இரு @@ குறிகள் ஒரு class variable ஐ குறிக்கிறது
06:33 மேல் நிலை எழுத்துக்கள் (Upper case letters) ஒரு constant ஐ குறிக்கிறது
06:37 மற்றொரு டுடோரியலில் இதுபற்றி விரிவாக காண்போம்.
06:42 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது
06:48 இந்த டுடோரியலில் நாம் கற்றது
06:51 ஒரு variable ஐ declare செய்தல் உ.தா var1=10
06:56 to_f, to_s methodகளை பயன்படுத்தி variable வகையை மாற்றுதல்
07:04 வெவ்வேறு Variable scope.
07:06 பயிற்சியாக
07:08 ஒரு variable ஐ declare செய்து அதை octal மற்றும் hexadecimal வடிவில் மாற்றுக.
07:14 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
07:17 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
07:20 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
07:24 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
07:30 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
07:34 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
07:41 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
07:45 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
07:51 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
07:57 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst