Ruby/C2/Ruby-Methods/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Ruby Methodகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:05 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது |
00:07 | method என்றால் என்ன? |
00:09 | method க்கான Syntax மற்றும் |
00:11 | சில உதாரணங்களை காண்போம். |
00:13 | இங்கே நாம் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் பதிப்பு 12.04 Ruby 1.9.3 |
00:21 | இந்த டுடோரியலை தொடர உங்களுக்கு லினக்ஸில் டெர்மினல் மற்றும் டெக்ஸ்ட் எடிடரை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். |
00:28 | இப்போது methodகளுக்கான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம் |
00:31 | ஒரு குறிப்பிட்ட பணியை செய்துமுடிக்கும் ஒரு தன்னிறைவான ப்ரோகிராம் Method ஆகும். |
00:37 | மற்ற programming language ல் உள்ள functionகள் போன்றதே Ruby method. |
00:42 | Method பெயர் கீழ்நிலை எழுத்துடன் ஆரம்பிக்க வேண்டும். |
00:45 | 'Methodகள் அவை call செய்யப்படுவதற்கு முன் define செய்யப்படவேண்டும். |
00:49 | Method க்கான syntax ஐ காண்போம் |
00:52 | keyword def ஐ பயன்படுத்தி பின் method பெயரை கொண்டு Methodகள் define செய்யப்படுகின்றன. |
00:57 | arguments என்பது செயல்படுத்தப்பட method க்கு அனுப்பப்படும் மதிப்புகளை குறிக்கிறது. |
01:02 | ruby code பகுதி செயல்பாட்டை செயல்படுத்தும் method ன் உள்ளடக்கத்தை குறிக்கிறது. |
01:09 | method உள்ளடக்கமானது மேலே இந்த definition ஐயும் கீழே end என்ற வார்த்தையும் கொண்டு மூடப்படுகிறது |
01:16 | இது argumentகளுடன் கூடிய method எனப்படுகிறது. |
01:19 | method க்கான மற்றொரு syntax |
01:23 | keyword def பின் method பெயர் மற்றும் ஒரு காலி argument பட்டியல் |
01:28 | method ன் உள்ளடக்கத்தை குறிக்கும் ruby code பகுதி |
01:32 | method ன் முடிவை குறிக்கும் end வார்த்தை |
01:36 | இது argumentகள் இல்லாத method எனப்படுகிறது. |
01:39 | ஒரு method ஐ எவ்வாறு பயன்படுத்துவது என காண்போம். |
01:42 | gedit editor ல் ஏற்கனவே ஒரு ப்ரோகிராமை டைப் செய்து வைத்துள்ளேன். |
01:46 | அதை திறக்கிறேன். |
01:48 | நம் file பெயர் method hyphen without hyphen argument dot rb என்பதை குறித்துக்கொள்க |
01:55 | rubyprogram folder னுள் அந்த file ஐ நான் சேமித்துள்ளேன். |
01:59 | இந்த ப்ரோகிராமில் method ஐ பயன்படுத்தி இரு எண்களின் கூடுதலை கணக்கிடுவோம். |
02:03 | ப்ரோகிராமை காண்போம். |
02:05 | இங்கே ஒரு global variable a ஐ declare செய்துள்ளோம் |
02:08 | அதற்கு மதிப்பு 5 ஐ assign செய்யவதன் மூலம் அதை initialize செய்துள்ளோம். |
02:13 | Global variable பெயர்களுக்கு முன் ஒரு dollar குறி ($) இருக்கும். |
02:17 | Global variableகளை Ruby ப்ரோகிராமில் எங்கிருந்து வேண்டுமானாலும் அணுகலாம்; அவை எங்கு declare செய்யப்பட்டிருக்கின்றன என்பது முக்கியமல்ல. |
02:25 | இங்கே argumentகள் ஏதும் இன்றி ஒரு add என்ற method ஐ declare செய்துள்ளோம். |
02:31 | இங்கே பயனரை இரண்டாம் எண்ணை கொடுக்க சொல்லி கேடகிறோம். |
02:35 | பயனர் மதிப்பை கொடுப்பார். |
02:38 | gets method உள்ளீட்டை console ல் இருந்து ஒரு string வடிவில் பெறும். |
02:44 | எனவே நாம்to_i method ஐ பயன்படுத்தி இதை integer ஆக மாற்ற வேண்டும். |
02:50 | மாற்றப்பட்ட மதிப்பு பின் variable b ல் சேமிக்கப்படுகிறது. b ஒரு local variable. |
02:56 | இதை அது declare செய்யப்பட்ட method னுள் மட்டும் அணுக முடியும். |
03:01 | இங்கே global variable a மற்றும் variable b ன் மதிப்புகளை கூட்டுவோம் |
03:07 | இதன் முடிவு பின் variable sum ல் சேமிக்கப்படுகிறது |
03:10 | பின் sum ஐ அச்சடிப்போம் |
03:13 | ஒரு string னுள் ஒரு variable ஐ நுழைக்கும் ஒரு வழியை இது காட்டுகிறது. |
03:18 | இங்கே sum ன் உள்ளடக்கம் ஒரு string ஆக திருப்பப்படுகிறது and is substituted into the outer string. |
03:25 | method ன் முடிவை end குறிக்கிறது. |
03:28 | இரு வகை methodகள் உள்ளன. |
03:31 | User-defined method - அது நம் add method. |
03:35 | Pre-defined method - அது print, gets மற்றும் to_i method. |
03:42 | இங்கே நம் add method ஐ call செய்கிறோம். |
03:45 | கூட்டல் செயல்பாடு செயல்படுத்தப்பட்டு முடிவு அச்சடிக்கப்படும். |
03:50 | இப்போது Save பட்டன் மீது க்ளிக் செய்க. |
03:53 | முன் சொன்னது போல இந்த ப்ரோகிராம் rubyprogram folder ல் சேமிக்கப்படும். |
03:59 | இப்போது இந்த ப்ரோகிராமை இயக்குவோம். |
04:02 | Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினலை திறக்கவும். |
04:07 | திரையில் டெர்மினல் விண்டோ தோன்றுகிறது. |
04:11 | இந்த ப்ரோகிராமை இயக்க, துணைdirectory rubyprogram க்கு நாம் போக வேண்டும். |
04:16 | எனவே டைப் செய்போம் cd space Desktop/rubyprogram பின் எண்டரை அழுத்துக |
04:26 | இப்போது டைப் செய்க ruby space method hyphen without hyphen argument dot rb எண்டரை அழுத்துக |
04:40 | Enter the second number என காட்டப்படுகிறது. |
04:44 | மதிப்பு 4 என கொடுக்கிறேன் பின் எண்டரை அழுத்துக |
04:48 | Sum of two numbers 5 and 4 is 9 என வெளியீட்டை பெறுகிறோம் |
04:53 | இப்போது argumentகள் உள்ள method க்கு ஒரு உதாரணம் காண்போம். |
04:58 | gedit editor ல் இந்த ப்ரோகிராமை நான் ஏற்கனவே டைப் செய்துள்ளேன், அதை திறக்கிறேன். |
05:03 | நம் file பெயர் method hyphen with hyphen argument dot rb என்பதை கவனிக்கவும் |
05:10 | rubyprogram folder னுள் இந்த file ஐயும் சேமித்துள்ளேன். |
05:15 | இந்த ப்ரோகிராமை காண்போம். |
05:18 | இங்கே add என்ற method ஐ declare செய்துள்ளோம். a,b ஆகியவை method add ன் argumentகள் ஆகும் |
05:26 | இங்கே a மற்றும் b ன் மதிப்புகள் கூட்டப்பட்டு கூடுதல் call செய்யப்படும் method க்கு திருப்பப்படுகிறது. |
05:31 | method ன் முடிவை end குறிக்கிறது. |
05:35 | இங்கே பயனரின் உள்ளீட்டை கேட்கிறோம். |
05:38 | பயனர் a மற்றும் b ன் மதிப்புகளை கொடுப்பார். |
05:41 | மதிப்புகள் முறையே variable a மற்றும் b, ல் சேமிக்கப்படும். |
05:46 | இங்கே add method ஐ call செய்கிறோம் |
05:49 | பின் argumentகளை a மற்றும் b என அனுப்புகிறோம் |
05:52 | கூட்டல் செயல்பாடு செயல்படுத்தப்பட்ட பின் method add மூலம் திருப்பப்பட்ட மதிப்பு c ல் சேமிக்கப்படும் |
05:59 | இங்கே c ல் சேமிக்கப்பட்ட கூடுதலை அச்சடிப்போம். |
06:03 | இந்த code ஐ இயக்குவோம். டெர்மினலுக்கு செல்வோம். |
06:07 | முதலில் டெர்மினலை துடைப்போம். clear என டைப் செய்து எண்டரை அழுத்துக |
06:14 | நாம் ஏற்கனவே துணை directory rubyprogram ல் உள்ளோம் |
06:17 | இப்போது, முந்தைய command ஐ பெற மேல் அம்பு விசையை இருமுறை அழுத்துக. |
06:22 | method hyphen without hyphen arguments dot rb ஐ method hyphen with hyphen arguments dot rb என மாற்றுக |
06:32 | பின் எண்டரை அழுத்துக |
06:35 | Enter the values of a and b என காட்டப்படுகிறது. |
06:38 | 8 மற்றும் 9 ஐ கொடுக்கிறேன் |
06:41 | 8 ஐ கொடுத்து எண்டரை அழுத்துக |
06:43 | 9 ஐ கொடுத்து எண்டரை அழுத்துக |
06:46 | நாம் பெறும் வெளியீடு |
06:47 | Sum of two numbers 8 and 9 is 17. |
06:52 | இப்போது நான் Ruby method ன் ஒரு முக்கியமான அம்சத்தை காட்டுகிறேன் |
06:56 | text editor ல் நம் ப்ரோகிராமுக்கு வருவோம். |
06:59 | keyword return ஐ நீக்குக |
07:02 | இப்போது Save பட்டன் மீது க்ளிக் செய்க. |
07:05 | code ஐ இயக்குவோம். டெர்மினலுக்கு செல்க |
07:09 | முந்தைய command ஐ பெற மேல் அம்பு விசையை அழுத்தி எண்டரை அழுத்துக |
07:14 | Enter the values of a and b ' என காட்டப்படுகிறது. |
07:18 | 10 மற்றும் 15 ஐ கொடுக்கிறேன் |
07:21 | 10 எண்டர் 15 எண்டர் |
07:27 | நாம் பெறும் வெளியீடு |
07:29 | Sum of two numbers 10 and 15 is 25. |
07:33 | keyword return ஐ நீக்கிய பின்பும் இந்த ப்ரோகிராம் பிழை ஏதுமின்றி இயக்கப்படுவதைக் காண்க |
07:40 | ஏனெனில் method ல் கணக்கிடப்பட்ட மதிப்பை Ruby தானாகவே திருப்புகிறது |
07:46 | method ல் உள்ள keyword return ஆனது Ruby ல் கட்டாயமல்ல |
07:50 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
07:53 | நம் slideகளுக்கு வருவோம் |
07:55 | சுருங்க சொல்ல |
07:57 | இந்த டுடோரியலில் நாம் கற்றது |
07:59 | Methodகள் |
08:01 | argumentகள் அற்ற Method |
08:04 | மற்றும் argumentகள் உள்ள Method க்கு Syntax |
08:06 | method லிருந்து திருப்பப்படும் மதிப்பு. |
08:08 | பயிற்சியாக |
08:10 | பயனரிடமிருந்து உள்ளீட்டை பெற்று method ஐ பயன்படுத்தி ஒரு சதுரத்தின் பரப்பளவை கணக்கிட ஒரு ப்ரோகிராம் எழுதுக |
08:17 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
08:20 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
08:23 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
08:28 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
08:33 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
08:36 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
08:44 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
08:49 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
08:55 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
09:00 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |