Ruby/C2/Ruby-Methods/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Ruby Methodகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:05 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
00:07 method என்றால் என்ன?
00:09 method க்கான Syntax மற்றும்
00:11 சில உதாரணங்களை காண்போம்.
00:13 இங்கே நாம் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் பதிப்பு 12.04 Ruby 1.9.3
00:21 இந்த டுடோரியலை தொடர உங்களுக்கு லினக்ஸில் டெர்மினல் மற்றும் டெக்ஸ்ட் எடிடரை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
00:28 இப்போது methodகளுக்கான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்
00:31 ஒரு குறிப்பிட்ட பணியை செய்துமுடிக்கும் ஒரு தன்னிறைவான ப்ரோகிராம் Method ஆகும்.
00:37 மற்ற programming language ல் உள்ள functionகள் போன்றதே Ruby method.
00:42 Method பெயர் கீழ்நிலை எழுத்துடன் ஆரம்பிக்க வேண்டும்.
00:45 'Methodகள் அவை call செய்யப்படுவதற்கு முன் define செய்யப்படவேண்டும்.
00:49 Method க்கான syntax ஐ காண்போம்
00:52 keyword def ஐ பயன்படுத்தி பின் method பெயரை கொண்டு Methodகள் define செய்யப்படுகின்றன.
00:57 arguments என்பது செயல்படுத்தப்பட method க்கு அனுப்பப்படும் மதிப்புகளை குறிக்கிறது.
01:02 ruby code பகுதி செயல்பாட்டை செயல்படுத்தும் method ன் உள்ளடக்கத்தை குறிக்கிறது.
01:09 method உள்ளடக்கமானது மேலே இந்த definition ஐயும் கீழே end என்ற வார்த்தையும் கொண்டு மூடப்படுகிறது
01:16 இது argumentகளுடன் கூடிய method எனப்படுகிறது.
01:19 method க்கான மற்றொரு syntax
01:23 keyword def பின் method பெயர் மற்றும் ஒரு காலி argument பட்டியல்
01:28 method ன் உள்ளடக்கத்தை குறிக்கும் ruby code பகுதி
01:32 method ன் முடிவை குறிக்கும் end வார்த்தை
01:36 இது argumentகள் இல்லாத method எனப்படுகிறது.
01:39 ஒரு method ஐ எவ்வாறு பயன்படுத்துவது என காண்போம்.
01:42 gedit ல் ஏற்கனவே ஒரு ப்ரோகிராமை டைப் செய்து வைத்துள்ளேன்.
01:46 அதை திறக்கிறேன்.
01:48 நம் file பெயர் method hyphen without hyphen argument dot rb என்பதை குறித்துக்கொள்க
01:55 rubyprogram folder னுள் அந்த file ஐ நான் சேமித்துள்ளேன்.
01:59 இந்த ப்ரோகிராமில் method ஐ பயன்படுத்தி இரு எண்களின் கூடுதலை கணக்கிடுவோம்.
02:03 ப்ரோகிராமை காண்போம்.
02:05 இங்கே ஒரு global variable a ஐ declare செய்துள்ளோம்
02:08 அதற்கு மதிப்பு 5 ஐ assign செய்வதன் மூலம் அதை initialize செய்துள்ளோம்.
02:13 Global variable பெயர்களுக்கு முன் ஒரு dollar குறி ($) இருக்கும்.
02:17 Global variableகளை Ruby ப்ரோகிராமில் எங்கிருந்து வேண்டுமானாலும் அணுகலாம்; அவை declare செய்யப்பட்டிக்கும் இடம் முக்கியமல்ல.
02:25 இங்கே argumentகள் ஏதும் இன்றி ஒரு add என்ற method ஐ declare செய்துள்ளோம்.
02:31 இங்கே பயனரை இரண்டாம் எண்ணை கொடுக்க சொல்லி கேட்கிறோம்.
02:35 பயனர் மதிப்பை கொடுப்பார்.
02:38 gets method உள்ளீட்டை console ல் இருந்து ஒரு string வடிவில் பெறும்.
02:44 எனவே நாம்to_i method ஐ பயன்படுத்தி இதை integer ஆக மாற்ற வேண்டும்.
02:50 மாற்றப்பட்ட மதிப்பு பின் variable b ல் சேமிக்கப்படுகிறது. b ஒரு local variable.
02:56 இதை அது declare செய்யப்பட்ட method னுள் மட்டும் அணுக முடியும்.
03:01 இங்கே global variable a மற்றும் variable b ன் மதிப்புகளை கூட்டுவோம்
03:07 இதன் முடிவு பின் variable sum ல் சேமிக்கப்படுகிறது
03:10 பின் sum ஐ அச்சடிப்போம்
03:13 string னுள் variable ஐ நுழைக்கும் ஒரு வழியை இது காட்டுகிறது.
03:18 இங்கே sum ன் உள்ளடக்கம் outer string ல் வைக்கப்பட்டு ஒரு string ஆக திருப்பப்படுகிறது.
03:25 method ன் முடிவை end குறிக்கிறது.
03:28 இரு வகை methodகள் உள்ளன.
03:31 User-defined method - அது நம் add method.
03:35 Pre-defined method - அது print, gets மற்றும் to_i method.
03:42 இங்கே நம் add method ஐ call செய்கிறோம்.
03:45 கூட்டல் செயல்பாடு செயல்படுத்தப்பட்டு முடிவு அச்சடிக்கப்படும்.
03:50 இப்போது Save பட்டன் மீது க்ளிக் செய்க.
03:53 முன் சொன்னது போல இந்த ப்ரோகிராம் rubyprogram folder ல் சேமிக்கப்படும்.
03:59 இப்போது இந்த ப்ரோகிராமை இயக்குவோம்.
04:02 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினலை திறக்கவும்.
04:07 திரையில் டெர்மினல் விண்டோ தோன்றுகிறது.
04:11 இந்த ப்ரோகிராமை இயக்க, துணைdirectory rubyprogram க்கு நாம் போக வேண்டும்.
04:16 எனவே டைப் செய்போம் cd space Desktop/rubyprogram பின் எண்டரை அழுத்துக
04:26 இப்போது டைப் செய்க ruby space method hyphen without hyphen argument dot rb எண்டரை அழுத்துக
04:40 Enter the second number என காட்டப்படுகிறது.
04:44 மதிப்பு 4 என கொடுக்கிறேன் பின் எண்டரை அழுத்துக
04:48 Sum of two numbers 5 and 4 is 9 என வெளியீட்டை பெறுகிறோம்
04:53 இப்போது argumentகள் உள்ள method க்கு ஒரு உதாரணம் காண்போம்.
04:58 gedit ல் இந்த ப்ரோகிராமை நான் ஏற்கனவே டைப் செய்துள்ளேன், அதை திறக்கிறேன்.
05:03 நம் file பெயர் method hyphen with hyphen argument dot rb என்பதை கவனிக்கவும்
05:10 rubyprogram folder னுள் இந்த file ஐயும் சேமித்துள்ளேன்.
05:15 இந்த ப்ரோகிராமை காண்போம்.
05:18 இங்கே add என்ற method ஐ declare செய்துள்ளோம். a,b ஆகியவை method add ன் argumentகள் ஆகும்
05:26 இங்கே a மற்றும் b ன் மதிப்புகள் கூட்டப்பட்டு... கூடுதல் call செய்யப்படும் method க்கு திருப்பப்படுகிறது.
05:31 method ன் முடிவை end குறிக்கிறது.
05:35 இங்கே பயனரின் உள்ளீட்டை கேட்கிறோம்.
05:38 பயனர் a மற்றும் b ன் மதிப்புகளை கொடுப்பார்.
05:41 மதிப்புகள் முறையே variable a மற்றும் b ல் சேமிக்கப்படும்.
05:46 இங்கே add method ஐ call செய்கிறோம்
05:49 பின் argumentகளை a மற்றும் b என அனுப்புகிறோம்
05:52 கூட்டல் செயல்பாடு செயல்படுத்தப்பட்ட பின் method add மூலம் திருப்பப்பட்ட மதிப்பு c ல் சேமிக்கப்படும்
05:59 இங்கே c ல் சேமிக்கப்பட்ட கூடுதலை அச்சடிப்போம்.
06:03 இந்த code ஐ இயக்குவோம். டெர்மினலுக்கு செல்வோம்.
06:07 முதலில் டெர்மினலை துடைப்போம். clear என டைப் செய்து எண்டரை அழுத்துக
06:14 நாம் ஏற்கனவே துணை directory rubyprogram ல் உள்ளோம்
06:17 இப்போது, முந்தைய command ஐ பெற மேல் அம்பு விசையை இருமுறை அழுத்துக.
06:22 method hyphen without hyphen argument dot rbmethod hyphen with hyphen argument dot rb என மாற்றுக
06:32 பின் எண்டரை அழுத்துக
06:35 Enter the values of a and b என காட்டப்படுகிறது.
06:38 8 மற்றும் 9 ஐ கொடுக்கிறேன்
06:41 8 ஐ கொடுத்து எண்டரை அழுத்துக
06:43 9 ஐ கொடுத்து எண்டரை அழுத்துக
06:47 நாம் பெறும் வெளியீடு Sum of two numbers 8 and 9 is 17.
06:52 இப்போது நான் Ruby method ன் ஒரு முக்கியமான அம்சத்தை காட்டுகிறேன்
06:56 text editor ல் நம் ப்ரோகிராமுக்கு வருவோம்.
06:59 keyword return ஐ நீக்குக
07:02 இப்போது Save பட்டன் மீது க்ளிக் செய்க.
07:05 code ஐ இயக்குவோம். டெர்மினலுக்கு செல்க
07:09 முந்தைய command ஐ பெற மேல் அம்பு விசையை அழுத்தி எண்டரை அழுத்துக
07:14 Enter the values of a and b ' என காட்டப்படுகிறது.
07:18 10 மற்றும் 15 ஐ கொடுக்கிறேன்
07:21 10 எண்டர் 15 எண்டர்
07:27 நாம் பெறும் வெளியீடு
07:29 Sum of two numbers 10 and 15 is 25.
07:33 keyword return ஐ நீக்கிய பின்பும் இந்த ப்ரோகிராம் பிழை ஏதுமின்றி இயக்கப்படுவதைக் காண்க
07:40 ஏனெனில் method ல் கணக்கிடப்பட்ட மதிப்பை Ruby தானாகவே திருப்புகிறது
07:46 method ல் உள்ள keyword return ஆனது Ruby ல் கட்டாயமல்ல
07:50 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
07:53 நம் slideகளுக்கு வருவோம்
07:55 சுருங்க சொல்ல
07:57 இந்த டுடோரியலில் நாம் கற்றது
07:59 Methodகள்
08:01 argumentகள் அற்ற Method
08:04 மற்றும் argumentகள் உள்ள Method க்கு Syntax
08:06 method லிருந்து திருப்பப்படும் மதிப்பு.
08:08 பயிற்சியாக
08:10 பயனரிடமிருந்து உள்ளீட்டை பெற்று method ஐ பயன்படுத்தி ஒரு சதுரத்தின் பரப்பளவை கணக்கிட ஒரு ப்ரோகிராம் எழுதுக.
08:17 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
08:20 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
08:23 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
08:28 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
08:33 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
08:36 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
08:44 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
08:49 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
08:55 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
09:00 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst