Jmol-Application/C2/Structures-from-Database/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 16:58, 3 November 2014 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Jmol ல் தரவுத்தளங்களில் (Database) உள்ள அமைப்புகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
00:10 * PubChem தரவுத்தளத்திலிருந்து வேதியியல் அமைப்புகளை ஏற்றுதல்
00:14 * ஜிகெம்பெயிண்டில் வரையப்பட்ட இருபரிமாண அமைப்புகளை Jmol ல் முப்பரிமாண மாதிரிகளாக மாற்றுதல்.
00:21 இந்த டுடோரியலை தொடர Jmol அப்ளிகேஷன் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
00:27 இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தைக் காணவும்.
00:33 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது
00:35 * உபுண்டு இயங்குதளம் பதிப்பு. 12.04
00:40 * Jmol பதிப்பு 12.2.2
00:44 * Java பதிப்பு 7
00:46 * ஜிகெம்பெயிண்ட் பதிப்பு 0.12.10
00:51 * மொசில்லா ஃபயர்பாக்ஸ் ப்ரெளசர் 22.0
00:56 ஒரு புதிய Jmol அப்ளிகேஷன் விண்டோவை திறந்துவைத்துள்ளேன்.
01:00 தரவுத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள சேர்மங்களின் அமைப்புகளை ஏற்ற ஒரு அம்சத்தை Jmol கொண்டுள்ளது.
01:07 menu bar ல் உள்ள 'File' menu 'Get MOL' தேர்வைக் கொண்டுள்ளது
01:12 இது வேதியியல் அமைப்பு தரவுத்தளம் 'PubChem' லிருந்து மூலக்கூறுகளை ஏற்றுகிறது
01:17 Protein Data Bank லிருந்து புரத அமைப்புகளை ஏற்ற 'Get PDB' என்ற மற்றொரு தேர்வையும் கொண்டுள்ளது.
01:26 இந்த அம்சம் மற்றொரு டுடோரியலில் விரிவாக விளக்கப்படும்.
01:31 panel ல் ஒரு வேதியியல் அமைப்பை ஏற்ற, 'Get Mol' மீது க்ளிக் செய்க.
01:36 திரையில் ஒரு 'Input' dialog box திறக்கிறது.
01:40 இந்த உரைப்பெட்டியில் பின்வருவனவற்றை டைப் செய்வதன் மூலம் தரவுத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள எந்த மூலக்கூறையும் ஏற்ற முடியும்:
01:48 பொது பெயர் அல்லது IUPAC பெயர்
01:51 CAS எண்
01:54 CID எண்
01:56 InChi identifier அல்லது
01:58 SMILES identifier
02:01 ஒரு குறிப்பிட்ட இரசாயனத்தின் அடையாள எண்களின் தகவலுக்கு Pubchem தரவுத்தள இணையத்தளத்திற்கு செல்லவும்
02:09 திரையில் ஃபீனாலை (phenol) காட்டுவோம்.
02:13 எனவே உள்ளீட்டு உரைப்பெட்டியில் டைப்செய்க''phenol.
02:16 click on OK பட்டன் மீது க்ளிக் செய்க.
02:20 panel ல் ஃபீனாலின் மாதிரி காட்டப்படுகிறது.
02:24 பல்வேறு rendering தேர்வுகளை பயன்படுத்தி ஃபீனாலின் display ஐ மாற்றமுடியும்.
02:30 இந்த தேர்வுகள் Menu bar மற்றும் Pop-up menu ல் பட்டியலிடப்பட்டுள்ளன.
02:36 ஃபீனாலின் பென்சீன் (benzene) வளையத்திற்கு நம்மால் பதிலிகளை (substituent) சேர்க்க முடியும்.
02:41 முதலில் மாதிரியில் அணுக்களுக்கு பெயரிடுவோம்.
02:45 display menu மீது க்ளிக் செய்து, label ஐ தேர்ந்தெடுக்கவும். பின் number தேர்வு மீது க்ளிக் செய்க.
02:52 இப்போது, கார்பன் அணு எண் 4 உடன் இணைக்கப்பட்டுள்ள ஹைட்ரஜன் எண் 10 க்கு பதிலாக ஒரு அமினோ குழுவை வைப்போம்
03:00 modelkit menuஐ திறந்து, தேர்வுகளில் நைட்ரஜனை தேர்ந்தெடுக்கவும்.
03:06 ஹைட்ரஜன் எண் 10 மீது க்ளிக் செய்க.
03:09 panel ல் பாரா-அமினோ ஃபீனாலின் (Para-Amino Phenol) மூலக்கூறு உள்ளது.
03:14 display ஐ Sticks display ஆக மாற்றுவோம்.
03:18 modelkit menu ஐ மூடவும்.
03:21 Pop-up menu ஐ திறந்து, Style க்கு வந்து, Scheme ஐ தேர்ந்தெடுத்து பின் Sticks தேர்வு மீது க்ளிக் செய்க.
03:30 panel ல் பாரா-அமினோ ஃபீனாலின் (Para-Amino-phenol) மாதிரியை sticks display ல் கொண்டுள்ளோம்.
03:36 உருவாக்க கடினமாக சிக்கலான அமைப்புகளை, எளிமையாக panel ல் ஏற்ற முடியும்.
03:42 உதாரணமாக cholesterol.
03:45 File menu மீது க்ளிக் செய்க
03:47 Get Mol தேர்வு மீது க்ளிக் செய்து, உரைப்பெட்டியில் டைப் செய்க Cholesterol .
03:54 OK பட்டன் மீது க்ளிக் செய்க.
03:57 Cholesterol ன் மூலக்கூறு panel ல் காட்டப்படுகிறது.
04:02 மூலக்கூறின் இரட்டை பிணைப்பு மற்றும் பக்க-சங்கிலி போன்ற அம்சங்களை முன்னிலைப்படுத்த முடியும்
04:08 இரட்டை பிணைப்பை முன்னிலைப்படுத்த, இரட்டை பிணைப்பின் கார்பன் அணுக்களின் நிறங்களை முதலில் மாற்றுவோம்.
04:15 tool bar ல் 'Select atoms' ஐகான் மீது க்ளிக் செய்க.
04:19 பின் இரட்டை பிணைப்பில் உள்ள கார்பன் அணுக்கள் மீது க்ளிக் செய்க.
04:24 அணுக்களை சுற்றி மஞ்சள் நிள ஒளிவட்டம் தோன்றுகிறது.
04:28 Pop-up-menu ஐ திறக்கிறது.
04:30 Color க்கு வந்து, Atoms ஐ தேர்ந்தெடுத்து பின் Orange தேர்வு மீது க்ளிக் செய்க.
04:37 இப்போது tool bar ல் “Rotate molecule” தேர்வு மீது க்ளிக் செய்க.
04:42 cholesterol மாதிரியில் உள்ள இரட்டை பிணைப்பு இப்போது ஆரஞ்ச் நிறத்தில் உள்ளது.
04:49 அதேபோல, பக்க சங்கிலியில் உள்ள கார்பன்களையும் முன்னிலைப்படுத்த முடியும்.
04:54 Pop-up-menu ஐ பயன்படுத்தி நிறத்தை violet ஆக மாற்றுக.
04:59 முக்கிய அம்சங்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட Cholesterol மாதிரியை panel ல் கொண்டுள்ளோம்.
05:06 பயிற்சியாக,
05:08 * Pubchem தரவுத்தளத்தில் இருந்து caffeine அமைப்பை ஏற்றுக.
05:11 * அந்த மூலக்கூறில் முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்துக.
05:15 * display ஐ wireframe க்கு மாற்றுக.
05:19 இப்போது Jmol ன் மற்றொரு முக்கிய அம்சத்தை விவரிக்கிறேன்
05:24 மற்றொரு மென்பொருளில் வரைப்பட்ட மூலக்கூறுகளின் இருபரிமாண அமைப்புகளை முப்பரிமாண மாதிரிகளாக மாற்ற முடியும்.
05:31 இங்கே panel ல் அமினோஅமில அலனைன் (aminoacid Alanine) மாதிரியைக் கொண்டுள்ளேன்.
05:36 இந்த மூலக்கூறின் இருபரிமாண அமைப்பு ஜிகெம்பெய்ண்ட் என்ற மென்பொருளில் வரையப்பட்டது
05:42 இந்த அமைப்பு .mol file ஆக சேமிக்கப்பட்டது.
05:46 ஜிகெம்பெய்ண்ட் என்பது இருபரிமாண அமைப்புகளை வரைவதற்கான ஒரு கட்டற்ற மென்பொருள்.
05:51 ஜிகெம்பெய்ண்ட் டுடோரியல்கள் பின்வரும் இணைப்பில் கிடைக்கும்.
05:56 அமைப்புகளை வரையவும் அதை .mol format ல் சேமிக்கவும், Analysis of Compounds டுடோரியலைக் காணவும்.
06:05 இந்த ஜிகெம்பெய்ண்ட் காட்சி பகுதியில் காட்டப்பட்டுள்ள இருபரிமாண வரைப்படங்களாவன
06:10 * Amino acid -Alanine
06:12 * Nuclioside -Adenosine
06:14 * Saccharide -Alpha-D glucopyranose
06:19 நாம் அவற்றை என் Desktop ல் .mol format ல் சேமித்துள்ளேன்
06:24 முதலில், அலனைனின் இருபரிமாண அமைப்பை Jmol அப்ளிகேஷனில் ல் முப்பரிமாண மாதிரியாக காண்பொம்.
06:32 எனவே ஒரு புதிய Jmol விண்டோவை திறக்கிறேன்.
06:36 tool bar ல் 'Open a file' ஐகான் மீது க்ளிக் செய்க.
06:40 நான் Desktop folder ஐ தேர்ந்தெடுத்து open மீது க்ளிக் செய்கிறேன். file Alanine.mol ஐ தேர்ந்தெடுத்து Open பட்டன் மீது க்ளிக் செய்கிறேன்.
06:51 திரையில் அலனைன் முப்பரிமாண மாதிரி திறக்கிறது.
06:55 modelkit menu ஐ திறந்து 'fix hydrogens and minimize' தேர்வு மீது க்ளிக் செய்க.
07:03 அமைப்புக்கு ஹைட்ரஜன்கள் சேர்க்கப்பட்டு energy minimization செய்யப்பட்டுள்ளது.
07:08 மற்ற .mol file களுடன் செய்யவது போல menu bar மற்றும் Pop-up menu ஐ பயன்படுத்தி display ஐ மாற்ற முடியும்.
07:15 இங்கே Jmol ல் Adenosine.mol ன் முப்பரிமாண மாதிரி உள்ளது
07:19 இது Jmol ல் Alpha-D-glucopyranose.mol ன் முப்பரிமாண மாதிரி
07:25 சுருங்கசொல்ல.
07:27 இந்த டுடோரியலில் நாம் கற்றது
07:32 * Pubchem தரவுத்தளத்திலிருந்து வேதியியல் அமைப்புகளை ஏற்றுதல்.
07:34 * Phenol மற்றும் Cholesterol ன் display ஐ மாற்றுதல்.
07:38 * ஜிகெம்பெய்ண்டில் வரையப்பட்ட இருபரிமாண அமைப்புகளை Jmol ல் முப்பரிமாண மாதிரிகளாக மாற்றுதல்.
07:44 * Alanine, Adenosine மற்றும் Alpha-D-glucopyranose ன் இருபரிமாண அமைப்புகளை முப்பரிமாண மாதிரிகளாக மாற்றுதல்.
07:53 இங்கே உங்களுக்கான மற்றொரு பயிற்சி.
07:56 # பின்வரும் அமினோ அமிலங்களின் இருபரிமாண அமைப்புகளை ஜிகெம்பெய்ண்டில் வரைக
08:01 * Cysteine
08:03 * Histidine
08:04 * Phenylalanine
08:06 # .mol fileகளாக சேமிக்கவும்.
08:09 # அந்த fileகளை Jmol ல் திறந்து display ஐ மாற்றவும்.
08:12 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial
08:16 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
08:19 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
08:23 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
08:29 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
08:33 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
08:40 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
08:45 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
08:52 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro
08:57 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.


Contributors and Content Editors

Priyacst