Scilab/C2/Getting-Started/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:10, 4 June 2014 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Visual Cue Narration
00.02 Scilab உடன் தொடங்குதல் குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00.07 இந்த tutorial இல் நாம் கற்பது:
00.09 Scilab ஐ calculator ஆக பயன்படுத்த...
00.12 மதிப்புகளை ஒருvariable இல் சேமிக்க...
00.15 இந்த variableகளைக்கொண்டு பல கணித செயல்பாடுகளை செய்ய...
00.21 நடப்பு directory இல் செயலாக்கிய கட்டளைகளை சேமிக்க ஒரு file ஐ உருவாக்க...
00.29 கலப்பெண்களை define செய்ய
00.31 பன்மடி-exponential, மடக்கை-logarithmic மற்றும் திரிகோணமதி-trigonometric செயல்பாடுகளை எண்கள் மீது செயலாக்க.
00.38 இந்த tutorial ஐ ஆரம்பிக்கும் முன்... உங்கள் கணினியில் Scilab ஐ நிறுவி இருக்க வேண்டும்.
00.44 இதை செய்து காட்ட நான் பயன்படுத்துவது Scilab 5.2.0 மற்றும் Mac OS/X
00.51 இந்த tutorial க்கான Flow chart இதோ...
00.55 உங்கள் Desktop இல் Scilab shortcut icon ஐ சொடுக்கி Scilab ஐ துவக்கவும்.
01.01 இதுதான் Scilab console window. cursor... command prompt இல் இருப்பதை காணுங்கள்.
01.07 இந்த tutorial ஐ Scilab இல் சம நேரத்தில் பயிற்சி செய்ய பரிந்துரைக்கிறேன். video வை தேவையான இடைவெளியில் நிறுத்திக் கொள்க.
01.16 Scilab ஐ calculator ஆக பயன்படுத்தலாம்.
01.19 அது செய்யக்கூடிய சில அடிப்படை செயல்பாடுகளை பார்க்கலாம்.
01.25 Type செய்க: 42 + 4 x 4 - 64 / 4 பின் enter செய்க.
01.36 வெளியீடு எதிர்பார்த்தது போல 42.
01.39 இந்த விடை 42 முன்னிருப்பு variable ஆன "ans" இல் வைக்கப்பட்டுள்ளதை காணுங்கள்.
01.45 பெயர் கொண்ட variable களையும் உருவாக்கலாம் : Type செய்க...
01.49 a equal 12, b=21 , c=33 enter செய்க.
02.00 இது 12, 21 மற்றும் 33 ஆகியவற்றை variableகள் a, b மற்றும் c இல் முறையே வைக்கிறது.
02.08 scilab console ஐ clc command ஆல் துடைக்கிறேன்.
02.13 சில கணித செயல்பாடுகளை இந்த variable களுடன் செய்யலாம்.
02.19 உதாரணமாக
02.21 a+b+c தரும் விடை 66
02.27 மேலும்
02.29 a into
02.35 அடைப்புகளில் b plus c தரும் விடை 648
02.41 இந்த விடையை இன்னொரு variable க்கு asign செய்யலாம். உதாரணமாக 'd'. அதற்கு type செய்க d = அடைப்புகளில் a+b... into c கிடைக்கும் விடை...


02.58 d = 1089.
03.01 இந்த variableகளின் மதிப்புகளை... அவற்றின் பெயர்களை command line இல் comma க்களால் பிரித்து டைப் செய்வதன் மூலம் சோதிக்கலாம்.
03.09 a,b,c,d.... Enter ஐ அழுத்தவும்
03.16 console ஐ clc command ஆல் துடைக்கிறேன்.
03.21 அடுக்கை எழுத keyboard இல் number key 6 இன் மீதுள்ள “raised to” குறியை பயன்படுத்தி காணலாம்.
03.29 இந்த குறியை பெற ' shift key' மற்றும் number key 6 ஐ ஒரே நேரத்தில் அழுத்தவும்.
03.34 உதாரணமாக , 7 ன் இரண்டடுக்கைக் கண்டுபிடிக்க 7 raised to 2... Enter ஐ அழுத்தவும் .
03.43 எந்த எண்ணின் வர்கமூலத்தையும் கண்டுபிடிக்க, உதாரணமாக 17, நாம் செய்வது : sqrt அடைப்புகளில் 17
03.55 இதுவும் 17 raised to 0.5 என்பதும் ஒன்றே.
04.06 பாரம்பரியமாக நேர்மறை மதிப்பு மட்டுமே வெளியீடாக வரும்.
04.10 பொதுவாக 34 ன் அடுக்கு (2 by 5), ஐ கண்டு பிடிக்க type செய்க:
04.15 34 raised to அடைப்புகளில் 2 by 5... Enter ஐ அழுத்தவும் .
04.25 எதிர்மறை அடுக்குகளையும் பயன்படுத்தலாம்.
04.28 கன்சோலை clc command ஆல் துடைக்கிறேன்
04.33 இதுவரை நாம் பார்த்தது சில எளிய கணக்கீடுகள் மற்றும் variableகளை Scilab இல் உருவாக்கும் முறை
04.40 இப்போது புதிய கட்டளையை பார்க்கலாம்
04.43 இது முன்னே வெளியீடுகளுடன் கொடுத்த கட்டளையை நினைவு கொள்ள உதவும்.
04.49 முதலில் type செய்யும் command .. pwd ... Enter ஐ அழுத்தவும்
04.55 இதுவே என் கணினியில் நடப்பு directory
04.58 உங்கள் கணினியில் வேறாக இருக்கலாம்.
05.01 நடப்பு directory ஐ மாற்ற முடியும். அதற்கு நீங்கள் பார்ப்பது போல scilab console window வில் toolbar இல் உள்ள current directory icon ஐ சொடுக்கினால் போதும்.
05.15 இப்போது diary command ஐ type செய்யவும்:
05.20 diary அடைப்புகளில் ஒற்றை மேற்கோள்களில் myrecord.txt... பின் Enter ஐ அழுத்தவும்
05.40 இந்த கட்டளை நடப்பு directory இல் "myrecord.txt" என்ற பெயருடன் ஒரு file ஐ உருவாக்கும்.
05.48 இனி Scilab session இன் transcript இந்த file லில் சேமிக்கப்படும்.
05.53 அதன் பயன் இந்த tutorial இல் பின்னால் காட்டப்படும்.
06.00 tutorial ஐ இப்போது நிறுத்தி video வுடன் கொடுத்துள்ள பயிற்சி எண் ஒன்றை முயற்சிக்கவும்.
06.07 இப்போது Scilab கலப்பெண்களை கையாளுவதைப் பார்க்கலாம்
06.13 கற்பனை அலகு i .. Scilab இல் percent i என define செய்யப்படுகிறது.
06.18 உதாரணமாக , 5.2 x percent i தருவது 5.2i
06.29 மேலும் அடைப்புகளில் 10 plus 5 into percent i... into.... 2 into percent i தரும் விடை -10. + 20.i
06.58 console ஐ துடைக்கிறேன்
07.04 Scilab இல் கிடைக்கும் வேறு சில predefined numerical constantகளை காணலாம்.
07.09 i போலவே, அவற்றின் பெயர்களும் percent sign இல் துவங்கும்
07.13 உதாரணமாக , percent pi.
07.18 pi இன் மதிப்பு எதிர்பார்த்ததேதான்.
07.21 இப்போது, பின் வருமாறு pi இன் பயனை சில உள்ளமைந்த திரிகோணமிதி செயல்பாடுகள் மூலம் விளக்கலாம்.
07.27 sin அடைப்புகளில் percent pi / 2 க்கு விடை 1
07.37 மேலும் cos அடைப்புகளில் percent pi / 2 க்கு விடை 6.123D-17.'
07.50 கோணங்கள் ரேடியன்களிலும் அளக்கப்படலாம் என்பதை கவனிக்கவும்.
07.54 இரண்டாவதற்கு விடை எல்லா நடைமுறைக்கும் பூஜ்யம் என்பதை கவனிக்கவும்
07.59  %eps என்பது "machine epsilon" என்னும் எண்ணுக்கு சம்பந்தப்பட்டது.
08.03 இதுவே Scilab கொடுக்கக்கூடிய குறைந்த பட்ச digit resolution
08.08 %eps என console லில் Type செய்து உங்கள் கணினியில் அதன் மதிப்பை காண்க.
08.19 என் கணினியில் அது 2.220D-16
08.24 இதுவே Scilab பயன்படுத்தும் floating point precision
08.28 இந்த எண் 2.22 into 10^(-16) க்கு குறியீடு ஆகும். console ஐ துடைக்கிறேன்
08.41 யாரும் 0.000456 என எழுத விரும்பினால் 4.56d-4 அல்லது 4.56e-4 என அதை எழுதலாம்.
09.06 scilab variableகள் மற்றும் functionகள் case-sensitive ஆக இருந்தாலும் இங்கே நாம் small d அல்லது capital D, small e, அல்லது capital E என எழுதலாம்.
09.16 natural logarithm இன் base ... இன்னொரு முக்கியமான predefined numerical constant
09.22 percent e எதிர்பார்த்த விடையை தரும்.
09.30 அதே விடையை function "exp மூலம் பெறலாம்.
09.35 உதாரணமாக : exp அடைப்புகளில் 1... பின் Enter ஐ அழுத்தவும்
09.44 இரண்டு விடைகளும் ஒன்றே எனக்காணலாம்.
09.47 console ஐ clc command ஆல் துடைக்கிறேன்
09.55 அதே போல
09.56  %e raised to 2 பின்வரும் விடையை தரும்
10.04 அதை exp அடைப்புகளில் 2 என டைப் செய்தும் பெறலாம்
10.18 command log என்பது ஒரு எண்ணின் natural logarithm, அதாவது base eக்கு.
10.23 base 10 க்கு logarithm பெற log 10 ஐ பயன்படுத்தவும்.
10.29 உதாரணமாக , log10 அடைப்புகளில் 1e minus 23. பின் Enter ஐ அழுத்தவும். இது தரும் எதிர்பார்த்த விடை -23.
10.47 எதிர்மறையின் logarithm ஐ எடுத்துக்கொண்டால் நாம் பெறுவது கலப்பெண்கள்
10.51 கலப்பெண்களை சோதிக்க scilab console இல் type செய்க: log அடைப்புகளில் -1 அல்லது  %i


11.01 இப்போது நினைவு கொள்ளுங்கள்... நாம் டைப் செய்த கட்டளைகள் எல்லாவற்றையும் myrecord.txt என்னும் file இல் சேமிக்க diary command கொடுத்தோம்.
11.09 இப்போது, அந்த file ஐ மூடுவதையும் காண்பதையும் பார்க்கலாம்.


11.13 file ஐ மூட, type செய்க,
11.16 diary அடைப்புகளில் பூஜ்ஜியம்
11.21 இந்த கட்டளை file myrecord.txt ஐ சேமித்து மூடுகிறது.
11.26 மேலும் இந்த file ஐ உருவாக்கிய இடம் நடப்பு directory.... இப்போது அது desktop என்பதையும் நினைவு கொள்ளுங்கள்.
11.34 உங்கள் scilab console window toolbar இல் உள்ள Open-a-file shortcut icon ஐ சொடுக்கி இந்த file ஐ திறக்கலாம்.
11.46 file format ஐ all file என ஆக்குகிறேன்.
11.51 myrecord.txt ஐ தேர்ந்து Open மீது சொடுக்கலாம்.
11.59 கட்டளைகள்... Scilab அவற்றுக்கு கொடுத்த விடைகள் உள்ளிட்ட எல்லா பரிவர்தனைகளும் இந்த file லின் பதிவாகியுள்ளன.
12.10 இந்த file ஐ மூடலாம்.
12.15 yes ஐ சொடுக்கவும்.
12.21 ஒரு program ஐ உருவாக்கும் போது பல code களுடன் சோதனை செய்து கடைசியில் தகுந்த code ஐ பெறுவோம் என நமக்குத்தெரியும்.
12.29 இந்த எல்லா பரிவர்த்தனைகளையும் Diary command மூலம் பதிவாக்கலாம்.
12.35 உங்களுக்கு நினைவிருக்கும் myrecord.txt file ஐ நாம் diary அடைப்புகளில் பூஜ்ஜியம் கட்டளை மூலம் மூடினோம்.
12.42 இந்த கட்டளையை செயலாக்கிய பின் எந்த பரிவர்த்தனையையும் செய்ய இயலாது என்பதை நினைவில் கொள்க.
12.48 session ஐ மீண்டும் சேமிக்க நினைத்தால் diary command ஐ மீண்டும் செயலாக்க வேண்டும்.
12.54 file இல் முக்கிய தகவல் ஏதும் இருந்தால் diary command இல் வேறு file பெயரைத்தர வேண்டும்.
13.03 அதே file பெயரைத் தருவது இருக்கும் file ஐ மேலெழுதும்.
13.09 video வை இங்கே நிறுத்தி, video வுடன் உள்ள இரண்டாம் பயிற்சியை செய்யவும்.
13.15 கணக்குக்கு தீர்வு பூஜ்ஜியம் இல்லை என்று கவனித்து இருப்பீர்கள்.
13.21 இதை மேலும் கையாளுவது எப்படி என்று அறிய type செய்க “help clean”.
13.27 பொதுவாக எந்த ஒரு command குறித்த உதவி வேண்டி இருந்தாலும் 'help' அல்லது argument உடன் கூடிய help command ஐ பயனாக்கலாம்.
13.37 உதாரணமாக , scilab console இல் type செய்க “help chdir” ... Enter ஐ அழுத்தவும் .
13.53 help browser இன் அளவை அதிகமாக்குகிறேன்.
14.01 Help chdir கட்டளை நடப்பு directory ஐ மாற்றுவது குறித்து விவரங்களை தருகிறது
14..10 இன்னொரு தேர்வு scilab console window வின் toolbar இல் help browser icon ஐ சொடுக்குவது.
14.20 help browser ஐ மூடி slideகளுக்கு வருகிறேன்.
14.31 மேல் கீழ் அம்பு விசைகள் நாம் முன்னே இயக்கிய command களை காண உதவும்.
14.36 மேல் கீழ் அம்பு விசைகளை பயன்படுத்தும்போது நீங்கள் எந்த command இலும் நிறுத்தி Enter ஐ அழுத்த அது இயக்கப்படும்.
14.45 தேவையானால் commandகளை edit செய்யவும் இயலும்.
14.48 உண்மையில் 'e' இல் துவங்கும் முன்னே type செய்த ஒரு command தேவையானால் , பின் e என் type செய்து, மேல் அம்பு விசையை அழுத்தவும்.
14.59 tab விசையை commad ஐ தானே நிறைவு செய்ய அழுத்தவும். தேர்ந்தெடுக்க கிடைக்கும் எல்லா தேர்வுகளும் காட்டப்படும்.
15.07 இந்த tutorial இல் நாம் கற்றது:
15.10 Scilab ஐ calculator ஆக பயன்படுத்துதல்.
15.12 முன்னிருப்பு variable ans. இல் விடையை சேமிக்க...
15.16 சமக்குறி மூலம் variable க்கு மதிப்புகளை Assign செய்ய...
15.20 console இல் கமாக்களால் பிரித்து variable இன் பெயரை டைப் செய்து அதன் மதிப்பை சோதிக்க...
15.28 நடப்பு directory ஐ pwd command ஆல் சோதிக்க...
15.34 diary command ஆல் console இல் type செய்த commandகளை ஒரு file இல் சேமிக்க...
15.40 கலப்பெண்கள், natural exponents மற்றும் π ஆகியவற்றை முறையே %i, %e மற்றும்  %piஆல் Define செய்ய...
15.49 எந்த command க்கும் விவரமான உதவி கோர help command ஐ பயன்படுத்த...
15.54 இத்துடன் Scilab உடன் தொடங்குதல் குறித்த spoken tutorial முடிகிறது.
15.59 Scilab இல் உள்ள இன்னும் பல functionகள் பின் வரும் மற்ற spoken tutorial களில் சொல்லப்படும்.
16.06 இந்த spoken tutorial... Free and Open Source Software in Science and Engineering Education(FOSSEE) ஆல் உருவாக்கப்பட்டது.
16.14 FOSSEE project குறித்த மேலதிக தகவல்களுக்கு http://fossee.in அல்லது http://scilab.in வலைத்தளத்தை பார்க்கவும்.
16.22 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
16.29 இது குறித்த மேலதிக தகவல்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen intro ஐ பார்க்கவும்.
16.43 இந்த spoken tutorial கற்க பயனுள்ளதாக இருந்திருக்குமென நினைக்கிறோம்
16.48 இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி!

Contributors and Content Editors

PoojaMoolya, Pratik kamble, Priyacst