Scilab/C2/Getting-Started/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:02 Scilab உடன் தொடங்குதல் குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00:07 இந்த tutorial இல் நாம் கற்பது:
00:09 Scilab ஐ calculator ஆக பயன்படுத்த...
00:12 மதிப்புகளை ஒருvariable இல் சேமிக்க...
00:15 இந்த variableகளைக்கொண்டு பல கணித செயல்பாடுகளை செய்ய...
00:21 நடப்பு directory இல் செயலாக்கிய கட்டளைகளை சேமிக்க ஒரு file ஐ உருவாக்க...
00:29 கலப்பெண்களை define செய்ய
00:31 பன்மடி-exponential, மடக்கை-logarithmic மற்றும் திரிகோணமதி-trigonometric செயல்பாடுகளை எண்கள் மீது செயலாக்க.
00:38 இந்த tutorial ஐ ஆரம்பிக்கும் முன்... உங்கள் கணினியில் Scilab ஐ நிறுவி இருக்க வேண்டும்.
00:44 இதை செய்து காட்ட நான் பயன்படுத்துவது Scilab 5.2.0 மற்றும் Mac OS/X
00:51 இந்த tutorial க்கான Flow chart இதோ...
00:55 உங்கள் Desktop இல் Scilab shortcut icon ஐ சொடுக்கி Scilab ஐ துவக்கவும்.
01:01 இதுதான் Scilab console window. cursor... command prompt இல் இருப்பதை காணுங்கள்.
01:07 இந்த tutorial ஐ Scilab இல் சம நேரத்தில் பயிற்சி செய்ய பரிந்துரைக்கிறேன். video வை தேவையான இடைவெளியில் நிறுத்திக் கொள்க.
01:16 Scilab ஐ calculator ஆக பயன்படுத்தலாம்.
01:19 அது செய்யக்கூடிய சில அடிப்படை செயல்பாடுகளை பார்க்கலாம்.
01:25 Type செய்க: 42 + 4 x 4 - 64 / 4 பின் enter செய்க.
01:36 வெளியீடு எதிர்பார்த்தது போல 42.
01:39 இந்த விடை 42 முன்னிருப்பு variable ஆன "ans" இல் வைக்கப்பட்டுள்ளதை காணுங்கள்.
01:45 பெயர் கொண்ட variable களையும் உருவாக்கலாம் : Type செய்க...
01:49 a equal 12, b=21 , c=33 enter செய்க.
02:00 இது 12, 21 மற்றும் 33 ஆகியவற்றை variableகள் a, b மற்றும் c இல் முறையே வைக்கிறது.
02:08 scilab console ஐ clc command ஆல் துடைக்கிறேன்.
02:13 சில கணித செயல்பாடுகளை இந்த variable களுடன் செய்யலாம்.
02:19 உதாரணமாக
02:21 a+b+c தரும் விடை 66
02:27 மேலும்
02:29 a into
02:35 அடைப்புகளில் b plus c தரும் விடை 648
02:41 இந்த விடையை இன்னொரு variable க்கு asign செய்யலாம். உதாரணமாக 'd'. அதற்கு type செய்க d = அடைப்புகளில் a+b... into c கிடைக்கும் விடை...
02:58 d = 1089.
03:01 இந்த variableகளின் மதிப்புகளை... அவற்றின் பெயர்களை command line இல் comma க்களால் பிரித்து டைப் செய்வதன் மூலம் சோதிக்கலாம்.
03:09 a,b,c,d.... Enter ஐ அழுத்தவும்
03:16 console ஐ clc command ஆல் துடைக்கிறேன்.
03:21 அடுக்கை எழுத keyboard இல் number key 6 இன் மீதுள்ள “raised to” குறியை பயன்படுத்தி காணலாம்.
03:29 இந்த குறியை பெற ' shift key' மற்றும் number key 6 ஐ ஒரே நேரத்தில் அழுத்தவும்.
03:34 உதாரணமாக , 7 ன் இரண்டடுக்கைக் கண்டுபிடிக்க 7 raised to 2... Enter ஐ அழுத்தவும் .
03:43 எந்த எண்ணின் வர்கமூலத்தையும் கண்டுபிடிக்க, உதாரணமாக 17, நாம் செய்வது : sqrt அடைப்புகளில் 17
03:55 இதுவும் 17 raised to 0.5 என்பதும் ஒன்றே.
04:06 பாரம்பரியமாக நேர்மறை மதிப்பு மட்டுமே வெளியீடாக வரும்.
04:10 பொதுவாக 34 ன் அடுக்கு (2 by 5), ஐ கண்டு பிடிக்க type செய்க:
04:15 34 raised to அடைப்புகளில் 2 by 5... Enter ஐ அழுத்தவும் .
04:25 எதிர்மறை அடுக்குகளையும் பயன்படுத்தலாம்.
04:28 கன்சோலை clc command ஆல் துடைக்கிறேன்
04:33 இதுவரை நாம் பார்த்தது சில எளிய கணக்கீடுகள் மற்றும் variableகளை Scilab இல் உருவாக்கும் முறை
04:40 இப்போது புதிய கட்டளையை பார்க்கலாம்
04:43 இது முன்னே வெளியீடுகளுடன் கொடுத்த கட்டளையை நினைவு கொள்ள உதவும்.
04:49 முதலில் type செய்யும் command .. pwd ... Enter ஐ அழுத்தவும்
04:55 இதுவே என் கணினியில் நடப்பு directory
04:58 உங்கள் கணினியில் வேறாக இருக்கலாம்.
05:01 நடப்பு directory ஐ மாற்ற முடியும். அதற்கு நீங்கள் பார்ப்பது போல scilab console window வில் toolbar இல் உள்ள current directory icon ஐ சொடுக்கினால் போதும்.
05:15 இப்போது diary command ஐ type செய்யவும்:
05:20 diary அடைப்புகளில் ஒற்றை மேற்கோள்களில் myrecord.txt... பின் Enter ஐ அழுத்தவும்
05:40 இந்த கட்டளை நடப்பு directory இல் "myrecord.txt" என்ற பெயருடன் ஒரு file ஐ உருவாக்கும்.
05:48 இனி Scilab session இன் transcript இந்த file லில் சேமிக்கப்படும்.
05:53 அதன் பயன் இந்த tutorial இல் பின்னால் காட்டப்படும்.
06:00 tutorial ஐ இப்போது நிறுத்தி video வுடன் கொடுத்துள்ள பயிற்சி எண் ஒன்றை முயற்சிக்கவும்.
06:07 இப்போது Scilab கலப்பெண்களை கையாளுவதைப் பார்க்கலாம்
06:13 கற்பனை அலகு i .. Scilab இல் percent i என define செய்யப்படுகிறது.
06:18 உதாரணமாக , 5.2 x percent i தருவது 5.2i
06:29 மேலும் அடைப்புகளில் 10 plus 5 into percent i... into.... 2 into percent i தரும் விடை -10. + 20.i
06:58 console ஐ துடைக்கிறேன்
07:04 Scilab இல் கிடைக்கும் வேறு சில predefined numerical constantகளை காணலாம்.
07:09 i போலவே, அவற்றின் பெயர்களும் percent sign இல் துவங்கும்
07:13 உதாரணமாக , percent pi.
07:18 pi இன் மதிப்பு எதிர்பார்த்ததேதான்.
07:21 இப்போது, பின் வருமாறு pi இன் பயனை சில உள்ளமைந்த திரிகோணமிதி செயல்பாடுகள் மூலம் விளக்கலாம்.
07:27 sin அடைப்புகளில் percent pi / 2 க்கு விடை 1
07:37 மேலும் cos அடைப்புகளில் percent pi / 2 க்கு விடை 6.123D-17.'
07:50 கோணங்கள் ரேடியன்களிலும் அளக்கப்படலாம் என்பதை கவனிக்கவும்.
07:54 இரண்டாவதற்கு விடை எல்லா நடைமுறைக்கும் பூஜ்யம் என்பதை கவனிக்கவும்
07:59  %eps என்பது "machine epsilon" என்னும் எண்ணுக்கு சம்பந்தப்பட்டது.
08:03 இதுவே Scilab கொடுக்கக்கூடிய குறைந்த பட்ச digit resolution
08:08 %eps என console லில் Type செய்து உங்கள் கணினியில் அதன் மதிப்பை காண்க.
08:19 என் கணினியில் அது 2.220D-16
08:24 இதுவே Scilab பயன்படுத்தும் floating point precision
08:28 இந்த எண் 2.22 into 10^(-16) க்கு குறியீடு ஆகும். console ஐ துடைக்கிறேன்
08:41 யாரும் 0.000456 என எழுத விரும்பினால் 4.56d-4 அல்லது 4.56e-4 என அதை எழுதலாம்.
09:06 scilab variableகள் மற்றும் functionகள் case-sensitive ஆக இருந்தாலும் இங்கே நாம் small d அல்லது capital D, small e, அல்லது capital E என எழுதலாம்.
09:16 natural logarithm இன் base ... இன்னொரு முக்கியமான predefined numerical constant
09:22 percent e எதிர்பார்த்த விடையை தரும்.
09:30 அதே விடையை function "exp மூலம் பெறலாம்.
09:35 உதாரணமாக : exp அடைப்புகளில் 1... பின் Enter ஐ அழுத்தவும்
09:44 இரண்டு விடைகளும் ஒன்றே எனக்காணலாம்.
09:47 console ஐ clc command ஆல் துடைக்கிறேன்
09:56 அதே போல %e raised to 2 பின்வரும் விடையை தரும்
10:04 அதை exp அடைப்புகளில் 2 என டைப் செய்தும் பெறலாம்
10:18 command log என்பது ஒரு எண்ணின் natural logarithm, அதாவது base eக்கு.
10:23 base 10 க்கு logarithm பெற log 10 ஐ பயன்படுத்தவும்.
10:29 உதாரணமாக , log10 அடைப்புகளில் 1e minus 23. பின் Enter ஐ அழுத்தவும். இது தரும் எதிர்பார்த்த விடை -23.
10:47 எதிர்மறையின் logarithm ஐ எடுத்துக்கொண்டால் நாம் பெறுவது கலப்பெண்கள்
10:51 கலப்பெண்களை சோதிக்க scilab console இல் type செய்க: log அடைப்புகளில் -1 அல்லது  %i
11:01 இப்போது நினைவு கொள்ளுங்கள்... நாம் டைப் செய்த கட்டளைகள் எல்லாவற்றையும் myrecord.txt என்னும் file இல் சேமிக்க diary command கொடுத்தோம்.
11:09 இப்போது, அந்த file ஐ மூடுவதையும் காண்பதையும் பார்க்கலாம்.
11:13 file ஐ மூட, type செய்க,
11:16 diary அடைப்புகளில் பூஜ்ஜியம்
11:21 இந்த கட்டளை file myrecord.txt ஐ சேமித்து மூடுகிறது.
11:26 மேலும் இந்த file ஐ உருவாக்கிய இடம் நடப்பு directory.... இப்போது அது desktop என்பதையும் நினைவு கொள்ளுங்கள்.
11:34 உங்கள் scilab console window toolbar இல் உள்ள Open-a-file shortcut icon ஐ சொடுக்கி இந்த file ஐ திறக்கலாம்.
11:46 file format ஐ all file என ஆக்குகிறேன்.
11:51 myrecord.txt ஐ தேர்ந்து Open மீது சொடுக்கலாம்.
11:59 கட்டளைகள்... Scilab அவற்றுக்கு கொடுத்த விடைகள் உள்ளிட்ட எல்லா பரிவர்தனைகளும் இந்த file லின் பதிவாகியுள்ளன.
12:10 இந்த file ஐ மூடலாம்.
12:15 yes ஐ சொடுக்கவும்.
12:21 ஒரு program ஐ உருவாக்கும் போது பல code களுடன் சோதனை செய்து கடைசியில் தகுந்த code ஐ பெறுவோம் என நமக்குத்தெரியும்.
12:29 இந்த எல்லா பரிவர்த்தனைகளையும் Diary command மூலம் பதிவாக்கலாம்.
12:35 உங்களுக்கு நினைவிருக்கும் myrecord.txt file ஐ நாம் diary அடைப்புகளில் பூஜ்ஜியம் கட்டளை மூலம் மூடினோம்.
12:42 இந்த கட்டளையை செயலாக்கிய பின் எந்த பரிவர்த்தனையையும் செய்ய இயலாது என்பதை நினைவில் கொள்க.
12:48 session ஐ மீண்டும் சேமிக்க நினைத்தால் diary command ஐ மீண்டும் செயலாக்க வேண்டும்.
12:54 file இல் முக்கிய தகவல் ஏதும் இருந்தால் diary command இல் வேறு file பெயரைத்தர வேண்டும்.
13:03 அதே file பெயரைத் தருவது இருக்கும் file ஐ மேலெழுதும்.
13:09 video வை இங்கே நிறுத்தி, video வுடன் உள்ள இரண்டாம் பயிற்சியை செய்யவும்.
13:15 கணக்குக்கு தீர்வு பூஜ்ஜியம் இல்லை என்று கவனித்து இருப்பீர்கள்.
13:21 இதை மேலும் கையாளுவது எப்படி என்று அறிய type செய்க “help clean”.
13:27 பொதுவாக எந்த ஒரு command குறித்த உதவி வேண்டி இருந்தாலும் 'help' அல்லது argument உடன் கூடிய help command ஐ பயனாக்கலாம்.
13:37 உதாரணமாக , scilab console இல் type செய்க “help chdir” ... Enter ஐ அழுத்தவும் .
13:53 help browser இன் அளவை அதிகமாக்குகிறேன்.
14:01 Help chdir கட்டளை நடப்பு directory ஐ மாற்றுவது குறித்து விவரங்களை தருகிறது
14:10 இன்னொரு தேர்வு scilab console window வின் toolbar இல் help browser icon ஐ சொடுக்குவது.
14:20 help browser ஐ மூடி slideகளுக்கு வருகிறேன்.
14:31 மேல் கீழ் அம்பு விசைகள் நாம் முன்னே இயக்கிய command களை காண உதவும்.
14:36 மேல் கீழ் அம்பு விசைகளை பயன்படுத்தும்போது நீங்கள் எந்த command இலும் நிறுத்தி Enter ஐ அழுத்த அது இயக்கப்படும்.
14:45 தேவையானால் commandகளை edit செய்யவும் இயலும்.
14:48 உண்மையில் 'e' இல் துவங்கும் முன்னே type செய்த ஒரு command தேவையானால் , பின் e என் type செய்து, மேல் அம்பு விசையை அழுத்தவும்.
14:59 tab விசையை commad ஐ தானே நிறைவு செய்ய அழுத்தவும். தேர்ந்தெடுக்க கிடைக்கும் எல்லா தேர்வுகளும் காட்டப்படும்.
15:07 இந்த tutorial இல் நாம் கற்றது:
15:10 Scilab ஐ calculator ஆக பயன்படுத்துதல்.
15:12 முன்னிருப்பு variable ans. இல் விடையை சேமிக்க...
15:16 சமக்குறி மூலம் variable க்கு மதிப்புகளை Assign செய்ய...
15:20 console இல் கமாக்களால் பிரித்து variable இன் பெயரை டைப் செய்து அதன் மதிப்பை சோதிக்க...
15:28 நடப்பு directory ஐ pwd command ஆல் சோதிக்க...
15:34 diary command ஆல் console இல் type செய்த commandகளை ஒரு file இல் சேமிக்க...
15:40 கலப்பெண்கள், natural exponents மற்றும் π ஆகியவற்றை முறையே %i, %e மற்றும்  %piஆல் Define செய்ய...
15:49 எந்த command க்கும் விவரமான உதவி கோர help command ஐ பயன்படுத்த...
15:54 இத்துடன் Scilab உடன் தொடங்குதல் குறித்த spoken tutorial முடிகிறது.
15:59 Scilab இல் உள்ள இன்னும் பல functionகள் பின் வரும் மற்ற spoken tutorial களில் சொல்லப்படும்.
16:06 இந்த spoken tutorial... Free and Open Source Software in Science and Engineering Education(FOSSEE) ஆல் உருவாக்கப்பட்டது.
16:14 FOSSEE project குறித்த மேலதிக தகவல்களுக்கு http://fossee.in அல்லது http://scilab.in வலைத்தளத்தை பார்க்கவும்.
16:22 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
16:29 இது குறித்த மேலதிக தகவல்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen intro ஐ பார்க்கவும்.
16:43 இந்த spoken tutorial கற்க பயனுள்ளதாக இருந்திருக்குமென நினைக்கிறோம்
16:48 இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி!

Contributors and Content Editors

PoojaMoolya, Pratik kamble, Priyacst