Digital-Divide/D0/Newborn-Child-Care/Tamil
From Script | Spoken-Tutorial
Visual Cue | Narration |
00:02 | பச்சிளம் குழந்தை பராமரிப்பு குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்க போவது:- |
00:09 | ஒரு பச்சிளம் குழந்தையை எவ்வாறு பராமரிப்பது |
00:12 | ஒரு புதிய தாய் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகள் |
00:15 | அந்த பிரச்சனைகளை எவ்வாறு சமாளிப்பது |
00:18 | டாக்டர் அஞ்சலி அனிதாவின் வீட்டிற்கு வந்து புதிதாய் பிறந்த குழந்தைக்காக தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். |
00:25 | அனிதா தன் குழந்தையை தவறான வழியில் பிடித்திருப்பதை டாக்டர் அஞ்சலி கவனிக்கிறார். |
00:30 | குழந்தையை தூக்கும்போது கவனமாக இருக்கும்படி அவர் அனிதாவிடம் சொல்கிறார். |
00.35 | குழந்தையின் தலையை எவ்வாறு தாங்குவது என்பதையும் குழந்தையை தொட்டிலில் இருந்து எவ்வாறு தூக்குவது அல்லது போடுவது என்பதையும் டாக்டர் அஞ்சலி செய்து காட்டுகிறார் |
00.45 | குழந்தையை மென்மையாக கையாளுமாறு டாக்டர் அனிதாவிற்கு அறிவுரை கூறுகிறார். |
00.51 | அனிதா டாக்டரிடம் இவையனைத்தும் தனக்கு புதியது என்று கூறுகிறார். |
00.55 | மேலும் குழந்தையை நன்கு பராமரிக்க அவரிம் அறிவுரை கேட்கிறார். |
01.02 | டாக்கடர் அஞ்சலி சந்தோஷமாக ஏற்கிறார். |
01:04 | முதலாவதும் முக்கியமானதுமாக அவர் சுட்டிக்காட்டுவது - |
01:09 | பச்சிளம் குழந்தையை கையாளும் முன் சோப்பு அல்லது கரி சாம்பல் கொண்டு உங்கள் கைகளை கழுவுங்கள் |
01:15 | பச்சிளம் குழந்தைகளுக்கு வலிமையான நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது. |
01.19 | எனவே, எளிதில் நோய்த் தொற்று ஏற்படும். |
01.24 | அனிதா குழந்தைக்கு எப்போதெல்லாம் பாலூட்டுவது என டாக்டரிடம் கேட்கிறார். |
01.28 | பச்சிளம் குழந்தைக்கு 2 லிருநது 3 மணிநேரத்திற்கு ஒருமுறை பாலூட்ட வேண்டும் என டாக்டர் கூறுகிறார். |
01:37 | குழந்தையின் உடல் நலத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்தியின் வளர்ச்சிக்கும் தாய்ப்பால் மிக முக்கியமானது என அவர் விளக்குகிறார் |
01.46 | மேலும் தாய்ப்பால் கொடுக்கும்போது, ஒவ்வொரு மார்ப்பகத்திலும் 10 லிருந்து 15 நிமிடங்கள் கொடுக்க வேண்டும். |
01.56 | பின் அனிதா குழந்தைக்கு மாற்றுணவு பற்றி கேட்கிறார் |
02:02 | பால் பொருட்கள் போன்ற மாற்றுணவை கொடுக்கிறீர்கள் எனில் |
02:08 | ஒவ்வொரு முறையும் கிட்டத்தட்ட 60 லிருந்து 90 கிராம் வரை எடுக்கலாம் என டாக்டர் கூறுகிறார். |
02:14 | எப்போது எப்படி குழந்தையை குளிப்பாட்டுவது என டாக்டரிடம் அனிதா கேட்கிறார். |
02.21 | முதல் சில வாரங்களுக்கு குழந்தை மிக மென்மையாக இருக்கும் என டாக்டர் விளக்குகிறார். |
02.28 | குழந்தையை பஞ்சால் தொட்டு துடைக்க வேண்டும் என அவர் சொல்கிறார் |
02.33 | (a) தொப்புள் கொடி உதிர்ந்து |
02.37 | (b) முனைத்தோல் குணமாகி |
02.39 | (c) தொப்புள் பூரண குணமடையும் வரை. |
02.43 | ஆரம்ப காலத்திற்கு பின், வாரத்திற்கு 2 - 3 முறை வீரியம் குறைந்த லேசான சோப்பினால் குளிப்பாட்டலாம் என டாக்டர் விளக்குகிறார். |
02.53 | முதல் வயது வரை இதை தொடரலாம். |
02.56 | அடிக்கடி குளிப்பாட்டினால் சருமம் வறண்டு விடலாம் |
03.01 | டாக்டர் அஞ்சலி குழந்தையின் உடலில் சில தடிப்புகள் இருப்பதைக் காட்டினார். |
03.06 | அனிதா பயந்துவிட்டார். |
03.08 | அவர் இம்மாதிரியான தடிப்புகளை எவ்வாறு நீக்குவது என டாக்டரை கேட்கிறார் |
03.13 | ஈரமான டைப்பரால் தடிப்புகள் வருவதாக டாக்டர் விளக்குகிறார். |
03.19 | மேலும் குழந்தையின் துணி டைப்பரையை அடிக்கடி மாற்ற வேண்டும் என்றும்... மலம் கழித்த பின் கூடுமானவரை சீக்கிரம் மாற்ற வேண்டும் என்றும் கூறுகிறார். |
03.29 | லேசான சோப்பினால் அந்த பகுதியை சுத்தம் செய்த பின் துடைக்கவும். |
03.34 | பின் ஈரப்பதத்தை குறைக்க சிறிது பேபி பெளடரை பூசவும். |
03.39 | துணி டைப்பரை பயன்படுத்துகிறீர்கள் எனில் அவற்றை சுடுநீரில் துவைத்து டெட்டால் போன்ற கிருமி நாசினியைப் பயன்படுத்த வேண்டும் என டாக்டர் விளக்குகிறார். |
03.49 | ஒரு நாளைக்கு கொஞ்ச நேரம் டைப்பரை போடாமல் விடுவதும் ஒரு நல்ல யோசனைதான். |
03.55 | அனிதா டாக்டர் அஞ்சலின் அறிவுரைகளுக்கு நன்றி கூறி அவற்றை மனதில் வைத்துக்கொள்வதாக கூறினார். |
04.02 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
04.05 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
04.09 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது |
04.12 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
04.18 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
04.25 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
04.29 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
04.39 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
04.44 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
04.53 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro |
05.09 | இந்த டுடோரியலுக்கு ஸ்க்ரிப் அவ்னிஷ் குமார், ட்ராயிங்ஸ் செளரப் காட்கில் |
05.16 | தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |