Digital-Divide/D0/Newborn-Child-Care/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00.02 பச்சிளம் குழந்தை பராமரிப்பு குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00.06 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது.-
00.09 ஒரு பச்சிளம் குழந்தையை எவ்வாறு பராமரிப்பது
00.12 ஒரு புதிய தாய் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகள்
00.15 அந்த பிரச்சனைகளை எவ்வாறு சமாளிப்பது
00.18 டாக்டர் அஞ்சலி அனிதாவின் வீட்டிற்கு வந்து புதிதாய் பிறந்த குழந்தைக்காக தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.
00.25 அனிதா தன் குழந்தையை தவறான வழியில் பிடித்திருப்பதை டாக்டர் அஞ்சலி கவனிக்கிறார்.
00.30 குழந்தையை தூக்கும்போது கவனமாக இருக்கும்படி அவர் அனிதாவிடம் சொல்கிறார்.
00.35 குழந்தையின் தலையை எவ்வாறு தாங்குவது என்பதையும் குழந்தையை தொட்டிலில் இருந்து எவ்வாறு தூக்குவது அல்லது போடுவது என்பதையும் டாக்டர் அஞ்சலி செய்து காட்டுகிறார்
00.45 குழந்தையை மென்மையாக கையாளுமாறு டாக்டர் அனிதாவிற்கு அறிவுரை கூறுகிறார்.
00.51 அனிதா டாக்டரிடம் இவையனைத்தும் தனக்கு புதியது என்று கூறுகிறார்.
00.55 மேலும் குழந்தையை நன்கு பராமரிக்க அவரிம் அறிவுரை கேட்கிறார்.
01.02 டாக்கடர் அஞ்சலி சந்தோஷமாக ஏற்கிறார்.
01.04 முதலாவதும் முக்கியமானதுமாக அவர் சுட்டிக்காட்டுவது -
01.09 பச்சிளம் குழந்தையை கையாளும் முன் சோப்பு அல்லது கரி சாம்பல் கொண்டு உங்கள் கைகளை கழுவுங்கள்
01.15 பச்சிளம் குழந்தைகளுக்கு வலிமையான நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது.
01.19 எனவே, எளிதில் நோய்த் தொற்று ஏற்படும்.
01.24 அனிதா குழந்தைக்கு எப்போதெல்லாம் பாலூட்டுவது என டாக்டரிடம் கேட்கிறார்.
01.28 பச்சிளம் குழந்தைக்கு 2 லிருநது 3 மணிநேரத்திற்கு ஒருமுறை பாலூட்ட வேண்டும் என டாக்டர் கூறுகிறார்.
01.37 குழந்தையின் உடல் நலத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்தியின் வளர்ச்சிக்கும் தாய்ப்பால் மிக முக்கியமானது என அவர் விளக்குகிறார்
01.46 மேலும் தாய்ப்பால் கொடுக்கும்போது, ஒவ்வொரு மார்ப்பகத்திலும் 10 லிருந்து 15 நிமிடங்கள் கொடுக்க வேண்டும்.
01.56 பின் அனிதா குழந்தைக்கு மாற்றுணவு பற்றி கேட்கிறார்
02.02 பால் பொருட்கள் போன்ற மாற்றுணவை கொடுக்கிறீர்கள் எனில்
02.08 ஒவ்வொரு முறையும் கிட்டத்தட்ட 60 லிருந்து 90 கிராம் வரை எடுக்கலாம் என டாக்டர் கூறுகிறார்.
02.14 எப்போது எப்படி குழந்தையை குளிப்பாட்டுவது என டாக்டரிடம் அனிதா கேட்கிறார்.
02.21 முதல் சில வாரங்களுக்கு குழந்தை மிக மென்மையாக இருக்கும் என டாக்டர் விளக்குகிறார்.
02.28 குழந்தையை பஞ்சால் தொட்டு துடைக்க வேண்டும் என அவர் சொல்கிறார்
02.33 (a) தொப்புள் கொடி உதிர்ந்து
02.37 (b) முனைத்தோல் குணமாகி
02.39 (c) தொப்புள் பூரண குணமடையும் வரை.
02.43 ஆரம்ப காலத்திற்கு பின், வாரத்திற்கு 2 - 3 முறை வீரியம் குறைந்த லேசான சோப்பினால் குளிப்பாட்டலாம் என டாக்டர் விளக்குகிறார்.
02.53 முதல் வயது வரை இதை தொடரலாம்.
02.56 அடிக்கடி குளிப்பாட்டினால் சருமம் வறண்டு விடலாம்
03.01 டாக்டர் அஞ்சலி குழந்தையின் உடலில் சில தடிப்புகள் இருப்பதைக் காட்டினார்.
03.06 அனிதா பயந்துவிட்டார்.
03.08 அவர் இம்மாதிரியான தடிப்புகளை எவ்வாறு நீக்குவது என டாக்டரை கேட்கிறார்
03.13 ஈரமான டைப்பரால் தடிப்புகள் வருவதாக டாக்டர் விளக்குகிறார்.
03.19 மேலும் குழந்தையின் துணி டைப்பரையை அடிக்கடி மாற்ற வேண்டும் என்றும்... மலம் கழித்த பின் கூடுமானவரை சீக்கிரம் மாற்ற வேண்டும் என்றும் கூறுகிறார்.
03.29 லேசான சோப்பினால் அந்த பகுதியை சுத்தம் செய்த பின் துடைக்கவும்.
03.34 பின் ஈரப்பதத்தை குறைக்க சிறிது பேபி பெளடரை பூசவும்.
03.39 துணி டைப்பரை பயன்படுத்துகிறீர்கள் எனில் அவற்றை சுடுநீரில் துவைத்து டெட்டால் போன்ற கிருமி நாசினியைப் பயன்படுத்த வேண்டும் என டாக்டர் விளக்குகிறார்.
03.49 ஒரு நாளைக்கு கொஞ்ச நேரம் டைப்பரை போடாமல் விடுவதும் ஒரு நல்ல யோசனைதான்.
03.55 அனிதா டாக்டர் அஞ்சலின் அறிவுரைகளுக்கு நன்றி கூறி அவற்றை மனதில் வைத்துக்கொள்வதாக கூறினார்.
04.02 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
04.05 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
04.09 இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது
04.12 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
04.18 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
04.25 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
04.29 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
04.39 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
04.44 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
04.53 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro
05.09 இந்த டுடோரியலுக்கு ஸ்க்ரிப் அவ்னிஷ் குமார், ட்ராயிங்ஸ் செளரப் காட்கில்
05.16 தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst