Digital-Divide/D0/How-to-apply-for-a-PAN-Card/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 15:45, 28 May 2014 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time' Narration
00:01 ஒரு PAN அட்டைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதற்கான ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் பின்வரும் நடைமுறைகளை கற்போம்-
00:09 ஒரு PAN அட்டைக்கு விண்ணப்பித்தல்
00:12 அடையாள சான்றுக்கான ஆவணங்கள் மற்றும்
00:15 விண்ணப்பத்தின் நிலையை கண்காணித்தல்
00:18 Pan அட்டை விண்ணப்ப படிவம்... படிவம் 49A எனப்படும்
00:24 இந்த படிவத்தை கீழே கொடுக்கப்பட்ட இணைப்பிலிருந்து தரவிறக்கி கொள்ளலாம்
00:28 இந்த படிவத்தை தரவிறக்கிய பின் அதை ஒரு ப்ரிண்ட் அவுட் எடுக்கவும்.
00:35 அடுத்த படி அந்த படிவத்தை நிரப்புவது.
00:38 இந்த படிவத்தில் தெளிவாக பெரிய எழுத்துக்களில் ஆங்கிலத்தில் மட்டுமே நிரப்ப வேண்டும்.
00:45 இந்த படிவத்தை நிரப்ப கருப்பு மை பேனா பரிந்துரைக்கப்படுகிறது.
00:49 ஒவ்வொரு பெட்டியிலும் ஒரே ஒரு character ஐ நிரப்புக அதாவது (எழுத்து /எண் / நிறுத்தற்குறி).
00.58 ஒவ்வொரு வார்த்தைக்கும் பின் ஒரு காலி பெட்டி விட வேண்டும்.
01:03 'தனிநபர்' விண்ணப்பதாரருக்கு சமீபத்தில் எடுத்த வெள்ளை நிற புன்புலத்துடன் வண்ண புகைப்படம் 2 தேவை.
01:09 இந்த புகைப்படங்களை படிவத்தில் அதற்காக கொடுக்கப்பட்ட இடங்களில் ஒட்ட வேண்டும்.
01:14 புகைப்படத்தின் அளவு 3.5செ.மீ x 2.5செ.மீ என இருக்க வேண்டும்
01:21 புகைப்படங்களை பின்(pin) அடித்தோ க்ளிப்பை(clip) இணைத்தோ படிவத்துடன் சேர்க்க கூடாது.
01:26 இடப்பக்க புகைப்படத்தின் மீது கையெழுத்திடவோ அல்லது கைநாட்டையோ வைக்க வேண்டும்.
01:32 வலப்பக்க புகைப்படத்தில் கையெழுத்தோ அல்லது கைநாட்டோ புகைப்படத்திற்கு கீழே இருக்க வேண்டும்.
01:39 கைநாட்டிற்கு.... ஆவணங்களை பதிவு செய்யும் அதிகாரி அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியிடம் இருந்து அதிகாரப்பூர்வ முத்திரைகளுடன் சான்றொப்பம் பெற வேண்டும்.
01.48 இப்போது படிவத்தை நிரப்ப ஆரம்பிக்கலாம்.
01.51 முதலில், வரிவிதிப்பு அலுவலரின் தகவல்களை நிரப்புக.
01.58 வரிவிதிப்பு அலுவலரின் தகவல்கள் இந்த இணையத்தளங்களில் கிடைக்கும்-
02:08 முதல் பகுதியில் உங்கள் சொந்த தகவல்களை நிரப்ப வேண்டும்.
02:13 இங்கே, Shri, Smt போல உங்கள் title ஐ தேர்ந்தெடுக்கவும்.
02:19 உங்கள் துணைப்பெயர், முதல் பெயர் மற்றும் நடுபெயரை முழுவடிவில் எழுதுக.
02:25 முதல் எழுத்து ஏதும் இல்லாமல் அவற்றை நிரப்ப வேண்டும்.
02:29 M/s, Dr., Kumari போன்று ஏதும் உங்கள் பெயருடன் எழுதக்கூடாது
02:37 தனிநபர் அல்லாதோரின் பெயரை நிரப்ப கொடுக்கப்பட்ட இடம் போதவில்லை எனில்?
02.42 அச்சமயங்களில், முதல் மற்றும் நடு பெயர்களுக்காக கொடுக்கப்பட்ட இடங்களில் அவற்றை தொடர்ந்து எழுதலாம்.
02.50 ஒரு குழுமத்தின் பெயர் எனில், பெயரில் சுருக்கங்கள் ஏதும் இருக்கக்கூடாது.
02.55 எ.கா. 'Private Limited' ஐ முழுமையாக எழுதியிருக்க வேண்டும்.
03.00 Pvt Ltd, Private Ltd, P, P. Ltd போன்று இருக்க கூடாது.
03:10 தனியுரிமை வியாபாரம் எனில், உரிமையாளரின் பெயரில் PAN ஐ விண்ணப்பிக்க வேண்டும்.
03:16 அது PAN அட்டையில் அச்சடிக்கப்படும்.
03:19 கடைசி பெயரை முழுவடிவில் எழுத வேண்டும் என்பதை கவனிக்க.
03:24 ஒருவர் மற்ற பெயரில் அறியப்பட்டாலோ அறியப்பட்டிருந்தாலோ அதை அடுத்த பகுதி கேட்கிறது.
03.30 விண்ணப்பதாரர் "yes" ஐ தேர்ந்தெடுத்தால், பகுதி 1 க்கு பொருந்தும் பின்வரும் வழிமுறைகளை நிரப்ப வேண்டும்.
03.38 பகுதி 4, பாலினம் , இதை தனிநபர் விண்ணப்பதாரர் மட்டும் நிரப்ப வேண்டும்.
03:44 பகுதி 5 பிறந்த தேதியைக் கேட்கிறது.
03:48 விண்ணப்பதாரர்களின் பல்வேறு வகைகளில் இருந்து தேதிகள் எதிர்பார்க்கப்படும் படிவத்தில் குறிப்பிடப்படுகின்றன.
03:54 எ.கா. ஒரு குழுமம் அதன் இணைக்கப்பட்ட தேதியை(Date of incorporation) வழங்கவேண்டும்.
04:00 அடுத்து, தனிநபர் விண்ணப்பதாரர் அவரின் தந்தையின் பெயரை எழுத வேண்டும்.
04:05 பகுதி 1 போலவே இங்கேயும் நிரப்ப வேண்டும்.
04:10 திருமணமான பெண்கள் தங்கள் தந்தையின் பெயரை எழுத வேண்டும். கணவனின் பெயரை அல்ல என்பதை கவனிக்க.
04:17 பகுதி 7 உங்கள் முகவரியைக் கேட்கிறது.
04:20 வீட்டு முகவரியை.... தனிநபர், HUF, AOP, BOI அல்லது AJP ஆகியோர் மட்டுமே நிரப்ப வேண்டும் .
04.29 எ.கா வணிகம் அல்லது தொழில் போன்று வருவாய் மூலம் வைத்திருந்தால் தனிநபர்கள் அலுவலக முகவரியை இங்கே தரவேண்டும்.
04.38 நிறுவனம், LLP, குழுமம், உள்ளூர் ஆணையம் அல்லது அறக்கட்டளை எனில், அலுவலக முகவரியைத் தர வேண்டும்.
04.49 அனைத்து விண்ணப்பதாரர்களும் கொடுக்கும் முகவரியில் பின்வரும் தகவல்கள் இருக்க வேண்டும் -
04.54 நகரம்/மாநகரம்/மாவட்டம்,
04.57 மாநிலம்/ஒன்றிய பிரதேசம், மற்றும்
05:00 அஞ்சல் குறியீடு
05:02 வெளிநாட்டு முகவரிகளில் நாட்டின் பெயர் மற்றும் அதன் ZIP எண்ணும் இருக்க வேண்டும்.
05:07 பகுதி 8, அதாவது தொடர்புக்கான முகவரி (Address for Communication)-
05:11 தனிநபர்/HUF/AOP/BOI/AJP ஆகியோர் 'வீடு' அல்லது 'அலுவலக' முகவரியை குறியிடலாம்.
05.21 மற்ற விண்ணப்பதாரர்கள் அலுவலக முகவரியை எழுத வேண்டும்
05.25 அனைத்து தொடர்புகளும் இங்கு எழுதப்பட்ட முகவரிக்கு அனுப்பப்படும்.
05.30 பகுதி 9 ல் தொலைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி தகவல்களை நிரப்ப வேண்டும்
05.37 நாட்டின் குறியீடு அதாவது ISD குறியீடு மற்றும் பகுதி/STD குறியீடு தொலைப்பேசி தகவல்களில் இருக்க வேண்டும்
05.46 எ.கா. ஒரு டெல்லி தொலைப்பேசியின் தகவல்கள் 23557505 என்ற எண்ணை பின்வருமாறு நிரப்புக
05.54 9 1 நாட்டின் குறியீடு
05.56 * 1 1 STD குறியீடு
06:00 விண்ணப்பத்தில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் விண்ணப்பதாரர்களை தொடர்பு கொள்வதற்கு,
06:09 மின்னஞ்சல் மூலம் PAN அட்டையை அனுப்புவதற்கு,
06:12 நிலையை தெரியப்படுத்த SMS அனுப்புவதற்கு எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி தேவை
06:16 பகுதி 10 ல், பொருந்தக்கூடிய பிரிவு நிலையை தேர்ந்தெடுக்கவும்.
06.21 வரையறுக்கப்பட்ட கூட்டு வணிகம் எனில், அந்த PAN க்கு நிறுவனம் நிலையை கொடுக்க வேண்டும்.
06.28 குழுமங்களின் பதிவாளரால் கொடுக்கப்படும் குழுமங்களின் பதிவு பற்றி பகுதி 11 கேட்கிறது.
06.35 மற்ற விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசு ஆணையத்தால் வழங்கப்பட்ட பதிவு எண்ணைக் தரவேண்டும்.
06.42 பகுதி 12 -
06.43 ஆதார் எண் வழங்கப்பட்டிருந்தால் இந்திய குடிமக்கள் அதை எழுத வேண்டும்.
06.48 ஆதார் அட்டையின் ஒரு பிரதி இதனுடன் இணைத்து தரவேண்டும்.
06.53 பகுதி 13 ல், ஒரு வர்த்தம்/தொழில் குறியீடை பயன்படுத்தி வருவாய் மூலத்தை விண்ணப்பதாரர் சுட்டிக்காட்ட வேண்டும்
07:01 இந்த குறியீடுகள் படிவத்தின் மூன்றாம் பக்கத்தில் கிடைக்கும்.
07:05 எ.கா. மருத்துவ தொழில் மற்றும் வர்த்தகத்திற்கு குறியீடு 01
07:10 பொறியியலுக்கு 02
07.13 பகுதி 14 வரிவிதிப்புக்குரியவரின் பிரதிநிதியின் சொந்த தகவல்களைக் கேட்கிறது.
07.19 வருமான வரி சட்டம், 1961 ன் பகுதி 160ல் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் மட்டுமே வரிவிதிப்புக்குரியவரின் பிரதிநிதியாக செயல்பட முடியும்.
07.29 அவற்றில் சில-
07,31 வேறிட வாழ்வோரின் முகவர்,
07.33 18 வயதுகுட்பட்டவர், பைத்தியம் அல்லது மூடன், நீதிமன்றக் காப்பிலுள்ளவர் போன்றோரின் பாதுகாவலர் அல்லது நிர்வாகி
07.41 18 வயதுகுட்பட்டோர், மனநிலை சரியில்லாதோர், இறந்தோர், பைத்தியம் அல்லது மூடன் ஆகியோர்க்கு வரிவிதிப்புக்குரியவரின் பிரதிநிதி கட்டாயம் தேவை.
07.54 வரிவிதிப்புக்குரியவரின் பிரதிநிதி பற்றிய தகவல்களை இங்கே நிரப்ப வேண்டும்.
08:00 பகுதி 15, Pan அட்டை விண்ணப்பத்திற்கு சமர்பிக்க வேண்டிய ஆவணங்களை பற்றியது.
08:06 PAN விண்ணப்பத்துடன் அடையாள சான்று மற்றும் முகவரி சான்றை கட்டாயம் இணைக்க வேண்டும்.
08.13 இந்த ஆவணங்கள் விண்ணப்பதாரரின் பெயரில் இருக்க வேண்டும்.
08.18 வரிவிதிப்புக்குரியவரின் பிரதிநிதியும் இந்த ஆவணங்களை இணைக்க வேண்டும்.
08.24 Pan விண்ணப்ப படிவத்தின் 4 ஆம் பக்கத்தில் அடையாள மற்றும் முகவரி சான்றாக பயன்படக்கூடய ஆவணங்களின் பட்டியல் உள்ளது.
08.33 படிவத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு ஆவணத்தை விண்ணப்பதாரர் சேர்க்க வேண்டும்.
08.39 எ.கா.- தனிநபர் விண்ணப்பதாரர் மற்றும் HUF க்கான அடையாள சான்றுகளாவன-
08.45 பள்ளி இறுதி சான்றிதழ்
08.47 குடும்ப அட்டை
08.49 ஓட்டுநர் உரிமம் போன்றவை.
08.53 முகவரி சான்றுக்கான ஆவணங்களாவன-
08.56 மின்சாரக் கட்டண ரசீது
08.57 தொலைப்பேசி கட்டண ரசீது
08.59 பாஸ்போர்ட் போன்றவை.
09.01 இப்போது விண்ணப்பம் பற்றிய சில பொதுவான தகவல்களைக் காண்போம்-
09.06 PAN விண்ணப்பம் செயலாக்கத்திற்கான கட்டணம் ரூ.96.00 அதாவது ரூ 85.00 கூடுதலாக சேவை வரி 12.36%.
09.18 பின்வருமாறு பணம் செலுத்தலாம்-
  • கேட்பு வரைவோலை (Demand Draft)
  • காசோலை(Cheque)
09.23 இந்தியாவிற்கு வெளியே உள்ள முகவரிகளுக்கு, செயலாக்க கட்டணம் ரூ. 962.00
09.28 அதாவது[ (விண்ணப்ப கட்டணம் 85.00 உடன் அனுப்ப கட்டணம் 771.00) கூடுதலாக சேவை வரி 12.36%].
09.40 வெளிநாட்டு முகவரிகளுக்கு, மும்பையில் செலுத்தக்கூடிய கேட்பு வரைவோலையாக மட்டுமே பணம் வழங்கீடு இருக்கவேண்டும்.
09.48 படிவத்தின் கடைசியில் உள்ள பெட்டி விண்ணப்பதாரரின் கையொப்பம் அல்லது கைநாட்டிற்காக.
09.54 18 வயதுக்குட்பட்டோர், இறந்தோர், பைத்தியம் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டோர்காக வரிவிதிப்புக்குரியவரின் பிரதிநிதியின் கையொப்பம் அல்லது கைநாட்டு கொடுக்கப்பட வேண்டும்.
10.04 கையொப்பம் அல்லது கைநாட்டு இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
10.09 இந்த படிவத்தை ஏற்றுக்கொண்டதற்கான ஒரு ஒப்புதலை விண்ணப்பத்தாரர் பெறுவார்.
10.14 அது ஒரு தனித்த அடையாள எண்ணைக் கொண்டிருக்கும்.
10.18 இந்த எண்ணை விண்ணப்பத்தின் நிலையை காண்காணிக்க பயன்படுத்தலாம்.
10.23 வருமான வரி துறை இணையத்தளம் அல்லது இந்த இணையத்தளங்களைப் பயன்படுத்தி அதன் நிலையைக் கண்காணிக்கலாம்
10.32 இந்த இணையத்தளத்தில், "Status Track " தேடுதல் இந்த வேலையைச் செய்யும்.
10.38 இந்த தேடுதலுக்கு ஒப்புதல் எண் அல்லது பெயர், பிறந்த தேதி போன்ற தகவல்கள் தேவைப்படும்
10.46 SMS வழியாகவும் PAN நிலை தகவலைப் பெறமுடியும்.
10.50 SMS- NSDLPAN <space>15-இலக்க ஒப்புதல் எண். இதை 57575 க்கு அனுப்பவும்
11.01 அஞ்சல முகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
11.05 இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.
11.08 சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது-
11.13 PAN அட்டைக்கு விண்ணப்பிக்க வழிமுறை
11.15 அடையாள சான்றுக்கான ஆவணங்கள் மற்றும்
11.19 PAN ன் நிலையை கண்காணித்தல்
11.22 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
11.25 இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது
11.28 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
11.33 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
11.38 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
11.42 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
11.49 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
11.53 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.


12.01 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro
12.11 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது
12.13 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Ranjana