Digital-Divide/D0/How-to-apply-for-a-PAN-Card/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 ஒரு PAN அட்டைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதற்கான ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் பின்வரும் நடைமுறைகளை கற்போம்-
00:09 ஒரு PAN அட்டைக்கு விண்ணப்பித்தல்
00:12 அடையாள சான்றுக்கான ஆவணங்கள் மற்றும்
00:15 விண்ணப்பத்தின் நிலையை கண்காணித்தல்
00:18 Pan அட்டை விண்ணப்ப படிவம்... படிவம் 49A எனப்படும்
00:24 இந்த படிவத்தை கீழே கொடுக்கப்பட்ட இணைப்பிலிருந்து தரவிறக்கி கொள்ளலாம்
00:28 இந்த படிவத்தை தரவிறக்கிய பின் அதை ஒரு ப்ரிண்ட் அவுட் எடுக்கவும்.
00:35 அடுத்த படி அந்த படிவத்தை நிரப்புவது.
00:38 இந்த படிவத்தில் தெளிவாக பெரிய எழுத்துக்களில் ஆங்கிலத்தில் மட்டுமே நிரப்ப வேண்டும்.
00:45 இந்த படிவத்தை நிரப்ப கருப்பு மை பேனா பரிந்துரைக்கப்படுகிறது.
00:49 ஒவ்வொரு பெட்டியிலும் ஒரே ஒரு character ஐ நிரப்புக அதாவது (எழுத்து /எண் / நிறுத்தற்குறி).
00:58 ஒவ்வொரு வார்த்தைக்கும் பின் ஒரு காலி பெட்டி விட வேண்டும்.
01:03 'தனிநபர்' விண்ணப்பதாரருக்கு சமீபத்தில் எடுத்த வெள்ளை நிற புன்புலத்துடன் வண்ண புகைப்படம் 2 தேவை.
01:09 இந்த புகைப்படங்களை படிவத்தில் அதற்காக கொடுக்கப்பட்ட இடங்களில் ஒட்ட வேண்டும்.
01:14 புகைப்படத்தின் அளவு 3.5செ.மீ x 2.5செ.மீ என இருக்க வேண்டும்
01:21 புகைப்படங்களை பின்(pin) அடித்தோ க்ளிப்பை(clip) இணைத்தோ படிவத்துடன் சேர்க்க கூடாது.
01:26 இடப்பக்க புகைப்படத்தின் மீது கையெழுத்திடவோ அல்லது கைநாட்டையோ வைக்க வேண்டும்.
01:32 வலப்பக்க புகைப்படத்தில் கையெழுத்தோ அல்லது கைநாட்டோ புகைப்படத்திற்கு கீழே இருக்க வேண்டும்.
01:39 கைநாட்டிற்கு.... ஆவணங்களை பதிவு செய்யும் அதிகாரி அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியிடம் இருந்து அதிகாரப்பூர்வ முத்திரைகளுடன் சான்றொப்பம் பெற வேண்டும்.
01:48 இப்போது படிவத்தை நிரப்ப ஆரம்பிக்கலாம்.
01:51 முதலில், வரிவிதிப்பு அலுவலரின் தகவல்களை நிரப்புக.
01:58 வரிவிதிப்பு அலுவலரின் தகவல்கள் இந்த இணையத்தளங்களில் கிடைக்கும்-
02:08 முதல் பகுதியில் உங்கள் சொந்த தகவல்களை நிரப்ப வேண்டும்.
02:13 இங்கே, Shri, Smt போல உங்கள் title ஐ தேர்ந்தெடுக்கவும்.
02:19 உங்கள் துணைப்பெயர், முதல் பெயர் மற்றும் நடுபெயரை முழுவடிவில் எழுதுக.
02:25 முதல் எழுத்து ஏதும் இல்லாமல் அவற்றை நிரப்ப வேண்டும்.
02:29 Ms, Dr., Kumari போன்று ஏதும் உங்கள் பெயருடன் எழுதக்கூடாது
02:37 தனிநபர் அல்லாதோரின் பெயரை நிரப்ப கொடுக்கப்பட்ட இடம் போதவில்லை எனில்?
02:42 அச்சமயங்களில், முதல் மற்றும் நடு பெயர்களுக்காக கொடுக்கப்பட்ட இடங்களில் அவற்றை தொடர்ந்து எழுதலாம்.
02:50 ஒரு குழுமத்தின் பெயர் எனில், பெயரில் சுருக்கங்கள் ஏதும் இருக்கக்கூடாது.
02:55 எ.கா. 'Private Limited' ஐ முழுமையாக எழுதியிருக்க வேண்டும்.
03:00 Pvt Ltd, Private Ltd, P, P. Ltd போன்று இருக்க கூடாது.
03:10 தனியுரிமை வியாபாரம் எனில், உரிமையாளரின் பெயரில் PAN ஐ விண்ணப்பிக்க வேண்டும்.
03:16 அது PAN அட்டையில் அச்சடிக்கப்படும்.
03:19 கடைசி பெயரை முழுவடிவில் எழுத வேண்டும் என்பதை கவனிக்க.
03:24 ஒருவர் மற்ற பெயரில் அறியப்பட்டாலோ அறியப்பட்டிருந்தாலோ அதை அடுத்த பகுதி கேட்கிறது.
03:30 விண்ணப்பதாரர் "yes" ஐ தேர்ந்தெடுத்தால், பகுதி 1 க்கு பொருந்தும் பின்வரும் வழிமுறைகளை நிரப்ப வேண்டும்.
03:38 பகுதி 4, பாலினம் , இதை தனிநபர் விண்ணப்பதாரர் மட்டும் நிரப்ப வேண்டும்.
03:44 பகுதி 5 பிறந்த தேதியைக் கேட்கிறது.
03:48 விண்ணப்பதாரர்களின் பல்வேறு வகைகளில் இருந்து தேதிகள் எதிர்பார்க்கப்படும் படிவத்தில் குறிப்பிடப்படுகின்றன.
03:54 எ.கா. ஒரு குழுமம் அதன் இணைக்கப்பட்ட தேதியை(Date of incorporation) வழங்கவேண்டும்.
04:00 அடுத்து, தனிநபர் விண்ணப்பதாரர் அவரின் தந்தையின் பெயரை எழுத வேண்டும்.
04:05 பகுதி 1 போலவே இங்கேயும் நிரப்ப வேண்டும்.
04:10 திருமணமான பெண்கள் தங்கள் தந்தையின் பெயரை எழுத வேண்டும். கணவனின் பெயரை அல்ல என்பதை கவனிக்க.
04:17 பகுதி 7 உங்கள் முகவரியைக் கேட்கிறது.
04:20 வீட்டு முகவரியை.... தனிநபர், HUF, AOP, BOI அல்லது AJP ஆகியோர் மட்டுமே நிரப்ப வேண்டும்
04:29 எ.கா வணிகம் அல்லது தொழில் போன்று வருவாய் மூலம் வைத்திருந்தால் தனிநபர்கள் அலுவலக முகவரியை இங்கே தரவேண்டும்.
04:38 நிறுவனம், LLP, குழுமம், உள்ளூர் ஆணையம் அல்லது அறக்கட்டளை எனில், அலுவலக முகவரியைத் தர வேண்டும்.
04:49 அனைத்து விண்ணப்பதாரர்களும் கொடுக்கும் முகவரியில் பின்வரும் தகவல்கள் இருக்க வேண்டும் -
04:54 நகரம்/மாநகரம்/மாவட்டம்,
04:57 மாநிலம்/ஒன்றிய பிரதேசம், மற்றும்
05:00 அஞ்சல் குறியீடு
05:02 வெளிநாட்டு முகவரிகளில் நாட்டின் பெயர் மற்றும் அதன் ZIP எண்ணும் இருக்க வேண்டும்.
05:07 பகுதி 8, அதாவது தொடர்புக்கான முகவரி (Address for Communication)-
05:11 தனிநபர்/HUF/AOP/BOI/AJP ஆகியோர் 'வீடு' அல்லது 'அலுவலக' முகவரியை குறியிடலாம்.
05:21 மற்ற விண்ணப்பதாரர்கள் அலுவலக முகவரியை எழுத வேண்டும்
05:25 அனைத்து தொடர்புகளும் இங்கு எழுதப்பட்ட முகவரிக்கு அனுப்பப்படும்.
05:30 பகுதி 9 ல் தொலைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி தகவல்களை நிரப்ப வேண்டும்
05:37 நாட்டின் குறியீடு அதாவது ISD குறியீடு மற்றும் பகுதி/STD குறியீடு தொலைப்பேசி தகவல்களில் இருக்க வேண்டும்
05:46 எ.கா. ஒரு டெல்லி தொலைப்பேசியின் தகவல்கள் 23557505 என்ற எண்ணை பின்வருமாறு நிரப்புக
05:54 9 1 நாட்டின் குறியீடு
05:56 1 1 STD குறியீடு
06:00 விண்ணப்பத்தில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் விண்ணப்பதாரர்களை தொடர்பு கொள்வதற்கு,
06:09 மின்னஞ்சல் மூலம் PAN அட்டையை அனுப்புவதற்கு,
06:12 நிலையை தெரியப்படுத்த SMS அனுப்புவதற்கு எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி தேவை
06:16 பகுதி 10 ல், பொருந்தக்கூடிய பிரிவு நிலையை தேர்ந்தெடுக்கவும்.
06:21 வரையறுக்கப்பட்ட கூட்டு வணிகம் எனில், அந்த PAN க்கு நிறுவனம் நிலையை கொடுக்க வேண்டும்.
06:28 குழுமங்களின் பதிவாளரால் கொடுக்கப்படும் குழுமங்களின் பதிவு பற்றி பகுதி 11 கேட்கிறது.
06:35 மற்ற விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசு ஆணையத்தால் வழங்கப்பட்ட பதிவு எண்ணைக் தரவேண்டும்.
06:42 பகுதி 12 - ஆதார் எண் வழங்கப்பட்டிருந்தால் இந்திய குடிமக்கள் அதை எழுத வேண்டும்.
06:48 ஆதார் அட்டையின் ஒரு பிரதி இதனுடன் இணைத்து தரவேண்டும்.
06:53 பகுதி 13 ல், ஒரு வர்த்தம்/தொழில் குறியீடை பயன்படுத்தி வருவாய் மூலத்தை விண்ணப்பதாரர் சுட்டிக்காட்ட வேண்டும்
07:01 இந்த குறியீடுகள் படிவத்தின் மூன்றாம் பக்கத்தில் கிடைக்கும்.
07:05 எ.கா. மருத்துவ தொழில் மற்றும் வர்த்தகத்திற்கு குறியீடு 01
07:10 பொறியியலுக்கு 02
07:13 பகுதி 14 வரிவிதிப்புக்குரியவரின் பிரதிநிதியின் சொந்த தகவல்களைக் கேட்கிறது.
07:19 வருமான வரி சட்டம், 1961 ன் பகுதி 160ல் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் மட்டுமே வரிவிதிப்புக்குரியவரின் பிரதிநிதியாக செயல்பட முடியும்.
07:29 அவற்றில் சில-
07:31 வேறிட வாழ்வோரின் முகவர்,
07:33 18 வயதுகுட்பட்டவர், பைத்தியம் அல்லது மூடன், நீதிமன்றக் காப்பிலுள்ளவர் போன்றோரின் பாதுகாவலர் அல்லது நிர்வாகி
07:41 18 வயதுகுட்பட்டோர், மனநிலை சரியில்லாதோர், இறந்தோர், பைத்தியம் அல்லது மூடன் ஆகியோர்க்கு வரிவிதிப்புக்குரியவரின் பிரதிநிதி கட்டாயம் தேவை.
07:54 வரிவிதிப்புக்குரியவரின் பிரதிநிதி பற்றிய தகவல்களை இங்கே நிரப்ப வேண்டும்.
08:00 பகுதி 15, Pan அட்டை விண்ணப்பத்திற்கு சமர்பிக்க வேண்டிய ஆவணங்களை பற்றியது.
08:06 PAN விண்ணப்பத்துடன் அடையாள சான்று மற்றும் முகவரி சான்றை கட்டாயம் இணைக்க வேண்டும்.
08:13 இந்த ஆவணங்கள் விண்ணப்பதாரரின் பெயரில் இருக்க வேண்டும்.
08:18 வரிவிதிப்புக்குரியவரின் பிரதிநிதியும் இந்த ஆவணங்களை இணைக்க வேண்டும்.
08:24 Pan விண்ணப்ப படிவத்தின் 4 ஆம் பக்கத்தில் அடையாள மற்றும் முகவரி சான்றாக பயன்படக்கூடய ஆவணங்களின் பட்டியல் உள்ளது.
08:33 படிவத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு ஆவணத்தை விண்ணப்பதாரர் சேர்க்க வேண்டும்.
08:39 எ.கா.- தனிநபர் விண்ணப்பதாரர் மற்றும் HUF க்கான அடையாள சான்றுகளாவன-
08:45 பள்ளி இறுதி சான்றிதழ்
08:47 குடும்ப அட்டை
08:49 ஓட்டுநர் உரிமம் போன்றவை.
08:53 முகவரி சான்றுக்கான ஆவணங்களாவன-
08:56 மின்சாரக் கட்டண ரசீது, தொலைப்பேசி கட்டண ரசீது
08:59 பாஸ்போர்ட் போன்றவை.
09:01 இப்போது விண்ணப்பம் பற்றிய சில பொதுவான தகவல்களைக் காண்போம்-
09:06 PAN விண்ணப்பம் செயலாக்கத்திற்கான கட்டணம் ரூ.96.00 அதாவது ரூ 85.00 கூடுதலாக சேவை வரி 12.36%.
09:18 பின்வருமாறு பணம் செலுத்தலாம்- கேட்பு வரைவோலை (Demand Draft), காசோலை(Cheque)
09:23 இந்தியாவிற்கு வெளியே உள்ள முகவரிகளுக்கு, செயலாக்க கட்டணம் ரூ. 962.00
09:28 அதாவது[ (விண்ணப்ப கட்டணம் 85.00 உடன் அனுப்ப கட்டணம் 771.00) கூடுதலாக சேவை வரி 12.36%].
09:40 வெளிநாட்டு முகவரிகளுக்கு, மும்பையில் செலுத்தக்கூடிய கேட்பு வரைவோலையாக மட்டுமே பணம் வழங்கீடு இருக்கவேண்டும்.
09:48 படிவத்தின் கடைசியில் உள்ள பெட்டி விண்ணப்பதாரரின் கையொப்பம் அல்லது கைநாட்டிற்காக.
09:54 18 வயதுக்குட்பட்டோர், இறந்தோர், பைத்தியம் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டோர்காக வரிவிதிப்புக்குரியவரின் பிரதிநிதியின் கையொப்பம் அல்லது கைநாட்டு கொடுக்கப்பட வேண்டும்.
10:04 கையொப்பம் அல்லது கைநாட்டு இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
10:09 இந்த படிவத்தை ஏற்றுக்கொண்டதற்கான ஒரு ஒப்புதலை விண்ணப்பத்தாரர் பெறுவார்.
10:14 அது ஒரு தனித்த அடையாள எண்ணைக் கொண்டிருக்கும்.
10:18 இந்த எண்ணை விண்ணப்பத்தின் நிலையை காண்காணிக்க பயன்படுத்தலாம்.
10:23 வருமான வரி துறை இணையத்தளம் அல்லது இந்த இணையத்தளங்களைப் பயன்படுத்தி அதன் நிலையைக் கண்காணிக்கலாம்
10:32 இந்த இணையத்தளத்தில், "Status Track " தேடுதல் இந்த வேலையைச் செய்யும்.
10:38 இந்த தேடுதலுக்கு ஒப்புதல் எண் அல்லது பெயர், பிறந்த தேதி போன்ற தகவல்கள் தேவைப்படும்
10:46 SMS வழியாகவும் PAN நிலை தகவலைப் பெறமுடியும்.
10:50 SMS- NSDLPAN <space>15-இலக்க ஒப்புதல் எண். இதை 57575 க்கு அனுப்பவும்
11:01 அஞ்சல முகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
11:05 இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.
11:08 சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது-
11:13 PAN அட்டைக்கு விண்ணப்பிக்க வழிமுறை
11:15 அடையாள சான்றுக்கான ஆவணங்கள் மற்றும்
11:19 PAN ன் நிலையை கண்காணித்தல்
11:22 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
11:25 இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது
11:28 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
11:33 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
11:38 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
11:42 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
11:49 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
11:53 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
12:01 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro
12:11 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது
12:13 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Ranjana