Health-and-Nutrition/C2/General-guidelines-for-Complementary-feeding/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 12:24, 7 March 2022 by Arthi (Talk | contribs)

Jump to: navigation, search
Time
Narration
00:02 கூடுதல் உணவிற்கான பொதுவான வழிகாட்டுதல்கள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது
00:09 6 மாத குழந்தைகளுக்கு கூடுதல் உணவைத் தொடங்குவதன் முக்கியத்துவம்
00:17 மற்றும் 6 முதல் 24 மாத குழந்தைகளுக்கான கூடுதல் உணவு பற்றிய வழிகாட்டுதல்கள்.
00:23 இப்போது தொடங்குவோம்
00:25 ஒரு குழந்தைக்கு பிறந்த நேரம் முதல் 6 மாதங்கள் வரை பிரத்தியேக தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும்.
00:33 6 மாத வயது என்பது குழந்தையின் வாழ்க்கையின் 6 வது மாதத்தின் தொடக்கத்தை குறிக்காது.
00:40 அவள், 6 மாதங்களை பூர்த்தி செய்து தனது வாழ்க்கையின் 7 வது மாதத்தைத் தொடங்குவதை குறிக்கும்
00:47 இந்த வயதில், ஒரு குழந்தைக்கு பிரத்யேக தாய்ப்பால் போதாது.
00:54 தாய்ப்பாலுடன் சேர்த்து, சத்தான வீட்டில் சமைத்த உணவை குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.
01:00 இதுவே கூடுதல் உணவு என்று அழைக்கப்படுகிறது.
01:05 இது, 6 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரை ஒரு குழந்தைக்கு கொடுக்கப்பட வேண்டும்.
01:13 குழந்தையை உயரமாகவும், ஆரோக்கியமாகவும், புத்திசாலித்தனமாகவும் உருவாக்குவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
01:21 6 மாத வயதில் கூடுதல் உணவைத் தொடங்குவது முக்கியம்.
01:27 இல்லையெனில், குழந்தையின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி தடைப்படும்.
01:33 குழந்தை பிற்காலத்தில் திட உணவை நிராகரிக்கும் வாய்ப்புகளும் உள்ளன.
01:41 தாய்ப்பாலூட்டலுடன் கூடுதல் உணவை கொடுப்பது பலமாகிறது என்பதை நினைவில் கொள்க.
01:46 எனவே, குறைந்தபட்சம் 2 வயது வரை தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும்.
01:54 வகை, நிலைத்தன்மை மற்றும் கூடுதல் உணவின் அளவு குழந்தையின் வயதுக்கு ஏற்ப மாறுபடும்.
02:03 ஒவ்வொரு வயதினருக்கும் குறிப்பிட்ட பரிந்துரைகள் உள்ளன.
02:08 இதே தொடரின் மற்றொரு டுடோரியலில் அவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன
02:14 இப்போது, எல்லா வயதினருக்கும் கூடுதல் உணவளிப்பதற்கான முக்கியமான வழிகாட்டுதல்களைப் பற்றி பார்க்கலாம்
02:23 எந்தவொரு புதிய உணவும் முதலில் ஒரு குழந்தைக்கு தனியாக கொடுக்கப்பட வேண்டும்.
02:29 இது பிற உணவுகளுடன் பின்னர் சேர்க்கப்பட வேண்டும்.
02:33 ஒரு குறிப்பிட்ட உணவுக்கு குழந்தைக்கு ஒவ்வாமை இருக்கிறதா என்பதை கண்டறிய இது உதவும்.
02:40 நல்ல ஊட்டச்சத்துக்கு, பலவகையான உணவுகளை உட்கொள்வது அவசியம்.
02:46 ஒவ்வொரு 4 வது நாளிலும், குழந்தையின் உணவில் ஒரு புதிய உணவைச் சேர்க்கவும்.
02:52 முன்பு கொடுக்கப்பட்ட உணவுடன் 1 மேசைக்கரண்டி புதிய உணவை சேர்த்து தொடங்கவும்.
02:59 படிப்படியாக ஒவ்வொரு நாளும் அதன் அளவை அதிகரிக்கவும்.
03:03 அனைத்து 8 உணவுக் குழுக்களிடமிருந்தும், ஊட்டச்சத்து நிறைந்த உணவு படிப்படியாக சேர்க்கப்பட வேண்டும்.
03:11 முதல் மற்றும் முக்கியமான உணவுக்குழு தாய்ப்பால் கொடுப்பது ஆகும்
03:17 இது மற்ற உணவுக் குழுக்களுடன் தினமும் சேர்க்கப்பட வேண்டும்.
03:22 இரண்டாவது குழுவில் தானியங்கள், வேர்கள் மற்றும் கிழங்குகள் ஆகும்
03:28 மூன்றாவது குழுவில் பருப்பு வகைகள், விதைகள் மற்றும் கொட்டைகள் உள்ளன.
03:33 நான்காவது குழு, பால் பொருட்களை கொண்டிருக்கிறது
03:37 ஐந்தாவது குழு இறைச்சி, மீன் மற்றும் கோழி.
03:43 ஆறாவது குழு முட்டை
03:46 ஏழாவது குழு வைட்டமின் ஏ நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள்
03:52 கடைசியாக, மற்ற பழங்கள் மற்றும் காய்கறிகள் எட்டாவது குழு


03:58 ஒரு குழந்தையின் உணவில் அனைத்து 8 உணவுக்குழுக்களும் இருக்க வேண்டும்.
04:05 ஒரு குழந்தையின் உணவில் இந்த குழுக்களில் 5 க்கும் குறைவாக இருந்தால், அது கடுமையான பிரச்சினைக்கு வழிவகுக்கும்.
04:13 அதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
04:16 சில குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைப்பதில்லை.
04:22 அவர்களுக்கு, மீதமுள்ள 7 குழுக்களிடமிருந்து உணவை, ஒவ்வொரு நாளும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
04:28 மேலும், அவர்களுக்கு ஒரு நாளைக்கு 500 மில்லி லிட்டர் விலங்கின் பால் மற்றும் 2 வேளை கூடுதல் உணவை கொடுக்கவும்.
04:39 விலங்குகளின் பாலை குழந்தைக்கு கொடுப்பதற்கு முன்பு எப்போதும் கொதிக்க வைக்கவும்.
04:45 இப்போது, குழந்தையின் உணவில் புதிய உணவுக் குழுக்களைச் சேர்ப்பதற்கான வரிசையைப் பற்றி பார்க்கலாம்
04:52 தாய்ப்பாலுடன், முதல் 6 குழுக்களிடமிருந்து கூடுதல் உணவைக் கொடுக்கத் தொடங்குங்கள்.
05:00 6 மாதத்திற்கு பிறகு குழந்தைக்கு அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் தேவை.
05:06 இருப்பினும், ஆரம்ப நாட்களில் கொடுக்கக்கூடிய உணவின் அளவு சிறியதாக இருக்க வேண்டும்.
05:14 எனவே, முதல் 6 குழுக்களிடமிருந்து ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்கலாம்.
05:20 இந்த உணவுகளில் புரதம் மற்றும் நல்ல கொழுப்புகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
05:27 குழந்தையின் உயரம் மற்றும் தசை எடையின் வளர்ச்சிக்கு அவை முக்கியம்.
05:34 குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு நல்ல கொழுப்புகள் முக்கியம்.
05:40 இந்த உணவுகளுக்குப் பிறகு, காய்கறிகளையும் பழங்களையும் கொடுக்கத் தொடங்குங்கள்.
05:45 காய்கறிகள் மற்றும் பழங்களில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ளன.
05:52 இருப்பினும், அவை முதல் 6 குழுக்களைப் போல புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்தவை அல்ல
06:00 எனவே, எடை தேக்கம் அல்லது எடை இழப்பைத் தவிர்ப்பதற்காக அவை பின்னர் தொடங்கப்படுகின்றன.
06:07 மேலும், பழங்கள் இனிப்பு சுவையுடவை
06:11 இனிப்பு சுவைக்கு முன் குழந்தைகள் பலவிதமான சுவைகளை சுவைப்பது முக்கியம்.
06:18 வெவ்வேறு சுவைகளை சுவைப்பது, குழந்தைகள் அதிக உணவுகளை ஏற்க உதவுகிறது.
06:24 இது, பின்னர் அவர்கள் சில வகை உணவுகளை மட்டுமே உண்பவராக மாறுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.
06:31 எனவே, குழந்தையின் உணவில் மற்ற எல்லா வகையான உணவுகளையும் சேர்த்த பிறகு பழங்கள் சேர்க்கப்படுகின்றன.
06:39 புதிய, பருவகால, உள்ளூர் பழங்களை ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.
06:47 வழக்கமான உணவுக்குப் பிறகு பழத்தை இனிப்பாக கொடுக்கலாம்.
06:52 பழச்சாறு குழந்தையின் வழக்கமான உணவில் கலக்கப்படக்கூடாது.
06:58 இந்த வயதினருக்கு பழச்சாறு பரிந்துரைக்கப்படுவதில்லை.
07:03 இதில் வீட்டில் தயாரிக்கப்பட்ட மற்றும் ரெடிமேட் பழச்சாறு இரண்டும் உள்ளடங்கும்.
07:09 தாய்ப்பால் கொடுப்பதை 2 ஆண்டுகள் வரை தொடர நினைவில் கொள்ளவும்.
07:15 ஒரு குழந்தை மூச்சுத் திணறக் கூடிய அளவிற்கு கடினமான உணவுகளை வழங்குவதைத் தவிர்க்கவும்.
07:21 முழு கொட்டைகள், திராட்சை, சுண்டல் மற்றும் பச்சையான கேரட் துண்டுகள் போன்ற உணவுகள் எடுத்துக்காட்டுகள் ஆகும்.
07:30 புதிதாக சமைத்த, வீட்டில் சுகாதாரமாக தயாரிக்கப்பட்ட உணவே குழந்தைக்கு சிறந்தது.
07:37 குழந்தையின் உணவு சேமிக்கப்பட வேண்டுமானால், பாதுகாப்பான சேமிப்பு குறித்த எங்கள் டுடோரியலைப் பாருங்கள்.
07:44 குழந்தையின் உணவை பாதுகாப்பான முறையில் தயாரிப்பது மற்றும் பரிமாறுவதும் அதே டுடோரியலில் விளக்கப்பட்டுள்ளது.
07:52 மேலும் விவரங்களுக்கு எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
07:56 உணவுடன், கொதித்த பின் ஆறிய நீரையும் 6 மாத குழந்தைக்கு கொடுக்கலாம்.
08:03 ஒரு நாளைக்கு இரண்டு முறை 30 முதல் 60 மில்லி லிட்டர் தண்ணீர் வீதம் கொடுக்கத் தொடங்கலாம்.
08:10 வெப்பமான காலநிலையில் குழந்தையின் தேவைக்கேற்ப இது அதிகரிக்கப்பட வேண்டும்.
08:16 தாய்ப்பால் மற்றும் நீர், குழந்தைக்கு சிறந்த பானங்கள் ஆகும்.
08:21 இருப்பினும், அவை சரியான நேரத்திற்கு கொடுக்கப்பட வேண்டும்.
08:25 உணவுக்கு முன், ஒரு குழந்தைக்கு தாய்ப்பாலோ அல்லது தண்ணீரோ கொடுக்கக்கூடாது
08:31 பசியுள்ள குழந்தை புதிய உணவுகளை சுவைக்க அதிக வாய்ப்புள்ளது.
08:37 குழந்தையின் உணவுக்கு 20 முதல் 30 நிமிடங்கள் முன்போ அல்லது பின்போ தாய்ப்பால் அல்லது தண்ணீர் கொடுக்கலாம்.
08:46 ஒரு குழந்தை நன்றாக வளர போதுமான கூடுதல் உணவு அவசியம்.
08:52 இத்துடன் இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். இந்த டுட்டோரியலை தமிழாக்கம் செய்தது ஜெ யஸ்ரீ, குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி

Contributors and Content Editors

Arthi, Jayashree