Arduino/C2/Display-counter-using-Arduino/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Display counter using Arduino. குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Arduino board க்கு ஒரு LCD மற்றும் ஒரு Push buttonஐ இணைப்பது மற்றும் pushbutton அழுத்தப்படும் போதெல்லாம் எண்ணிக்கையை அதிகரிக்க ஒரு programஐ எழுதுவது |
00:22 | இந்த டுடோரியலை புரிந்துகொள்ள உங்களுக்கு, மின்னணுவியல் பற்றிய அடிப்படை மற்றும் C or C++ programming languageன் அடிப்படை தெரிந்து இருக்கவேண்டும். |
00:34 | இங்கு நான் பயன்படுத்துவது: Arduino UNO Board, Ubuntu Linux 14.04 operating system மற்றும் Arduino IDE. |
00:47 | இந்த தொடரின் முந்தைய டுடோரியல் ஒன்றில், Arduino மற்றும் LCDஐ பயன்படுத்தி நாம் ஒரு circuitஐ உருவாக்கினோம். இந்த டுடோரியலில் அதே circuitஐ பயன்படுத்துவோம் |
01:00 | இங்கு, ஒரு pushbuttonஐ சேர்த்து, ஒரு எளிய counterஐ செய்வோம் |
01:06 | முந்தைய டுடோரியலில் pushbutton எப்படி வேலை செய்கிறது என்பதை பற்றி ஏற்கனவே கற்றுக்கொண்டோம். |
01:12 | இப்போது, இணைப்பு circuit விவரங்களை அறிந்து கொள்வோம். |
01:17 | ஒரு pushbutton ஒரு 100 ohm resistor.க்கு இணைக்கப்படுகிறது |
01:22 | pushbutton pin number 7 க்கு இணைக்கப்படுகிறது மற்றும் ஒரு 100 ohm resistor groundக்கு இணைக்கப்படுகிறது |
01:31 | மற்ற எல்லா இணைப்புகளும் நமது முந்தைய பரிசோதனையில் இருந்ததைப் போலவே இருக்கின்றன. |
01:37 | இது circuit வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள இணைப்பின் நேரடி அமைப்பாகும். |
01:44 | இப்போது, Arduino IDE.ல் நாம் ஒரு programஐ எழுதுவோம். அதனால், Arduino IDEக்கு மாறவும் |
01:54 | முதலில் நாம் Liquid crystal library.ஐ சேர்க்கவேண்டும் |
01:59 | காட்டப்பட்டுள்ளபடி codeஐ டைப் செய்யவும் |
02:02 | நான் LiquidCrystal. வகையை சேர்ந்த ஒரு variable lcd ஐ initialize செய்துள்ளேன் |
02:08 | இங்கு, pin number 12, Register Select என initialize செய்யப்பட்டுள்ளது மற்றும் pin number 11, Enable. எனவும் initialize செய்யப்பட்டுள்ளது |
02:19 | அடுத்த 4 அளவுருக்கள் LCD.ன் data lineகளை குறிப்பிடுகின்றன |
02:25 | void setup functionல் காட்டப்பட்டுள்ளபடி டைப் செய்க: lcd.begin 16 comma 2 . இந்த command, LCDஐ வரிசைகள் மற்றும் நெடுவரிசைகளுடன் initialize செய்கிறது |
02:41 | எதுத்து, pin number 7ஐ நாம் INPUTஆக setup செய்வோம். காட்டப்பட்டுள்ளபடி codeஐ டைப் செய்யவும் |
02:49 | வேறு விதமாக, pin எண்ணை நாம் ஒரு variable pbutton.ல் சேமிக்கலாம். காட்டப்பட்டுள்ளபடி pbutton variable ஐ நாம் வரையறுப்போம் |
03:01 | இப்போது, void loop.க்கான codeஐ எழுதுவோம். pushbutton அழுத்தப்படும் போதெல்லாம், LCDயில் ஒரு எண்ணிக்கை அதிகரிக்கிறது |
03:11 | pushbutton அழுத்தப்படுகிறதா இல்லையா என்பதைச் சரிபார்க்க, ஒரு எளிய 'if' statementஐ நாம் எழுதுவோம் |
03:19 | எண்ணிக்கையைக் காண்பிக்கும் முன், பட்டனின் நிலையைச் சரிபார்ப்போம். |
03:25 | இந்த command கர்சர் நிலையை LCDயில் set செய்யும். lcd.print messageஐ print செய்யும் |
03:35 | இப்போது நாம் programஐ compile செய்து, upload செய்வோம். இப்போது நான் pushbuttonஐ அழுத்துகிறேன் |
03:43 | இங்கு, LCDல் “button pressed” என்ற messageஐ நாம் காண்கிறோம். pushbutton வெற்றிகரமாகச் செயல்படுவதை இது காட்டுகிறது. |
03:54 | அடுத்து, ஒரு counterஐ set செய்ய, நாம் programஐ மாற்றுவோம் |
03:58 | Counterக்கு நமக்கு ஒரு variable தேவை. இப்போது, variable countஐ பூஜ்யத்திற்கு நாம் initialize செய்வோம் |
04:08 | இங்கு காட்டப்பட்டுள்ளபடி print statement ஐ மாற்றவும். ஒவ்வொரு முறையும் பட்டனை அழுத்தும் போது, count++ எண்ணிக்கையை ஒன்று அதிகரிக்கும். |
04:21 | இப்போது நாம் programஐ compile செய்து, upload செய்வோம். இப்போது நான் pushbuttonஐ அழுத்துகிறேன் |
04:29 | எதிர்பார்த்தபடி அது வேலை செய்யவில்லை. இங்கே வேறு எண்ணிக்கை காட்டப்படுவதைக் காண்கிறோம். ஏன் இப்படி? |
04:37 | பட்டனை அழுத்துவதற்கான நிலையை நாங்கள் குறிப்பிட்டதே இதற்குக் காரணம். ஆனால் release செய்யப்பட்ட பட்டனின் நிலையை நாங்கள் குறிப்பிடவில்லை. |
04:46 | பட்டனை அழுத்திய நேரத்தின் அடிப்படையில் அதிகரித்த எண்ணை output காட்டுகிறது. |
04:52 | அதனால் இங்கு காட்டப்பட்டுள்ளபடி, ஒரு 'while' statementஐ எழுதுவோம் |
04:57 | இது pushbutton அழுத்தப்பட்ட நிலையில் இருக்கும் போது எண்ணிக்கையைக் காண்பிக்கும். அதன் பொருள், pin 7 HIGH mode ல் உள்ளது |
05:07 | நீங்கள் பட்டனை release செய்யும் போது, நிலை LOW ஆகும், மேலும் அது 'while' loopல் இருந்து வெளியே வரும். |
05:14 | நான் programஐ விளக்குகிறேன் |
05:17 | Program LCDன் initialization உடன் தொடங்குகிறது. நாம் variable pbutton மற்றும் count.ஐ கொண்டிருக்கிறோம் |
05:26 | void setup functionனின் உள், 16 நெடுவரிசைகள் மற்றும் 2 வரிசைகளுடன் LCD ஐ நாம் initialize செய்துள்ளோம். பின், pin number 7'க்கு input, pinMode ஆகும் |
05:42 | void loop functionல், pushbutton HIGHஆக இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை நாங்கள் சரிபார்க்கிறோம். |
05:49 | pushbutton அழுத்தப்படும் போது, cursor பூஜ்ஜிய கமா பூஜ்ஜியமாக அமைக்கப்படும். |
05:56 | lcd.print statement எண்ணிக்கை மதிப்பை print செய்யும். தொடக்கத்தில் count பூஜ்யமாக இருக்கும். Count plus plus 1 ஆக இருக்கும் |
06:09 | பட்டன் release செய்யப்படும் போது, அது while loopஐ உடைத்துக்கொண்டு loop ல் இருந்து வெளியே வரும் |
06:15 | மீண்டும் நீங்கள் பட்டனை அழுத்தினால், அடுத்த மறு iteration தொடங்குகிறது மற்றும் அது எண்ணிக்கையை அதிகரிக்கிறது. |
06:23 | Programஐ compile செய்து, upload செய்வோம் |
06:27 | இப்போது, நான் ஒரு முறை பட்டனை அழுத்தி அதை release செய்கிறேன். |
06:32 | மீண்டும் நான் பட்டனை அழுத்தி, release செய்கிறேன். பட்டனை அழுத்தும் போதெல்லாம் எண்ணிக்கை அதிகரிப்பதைக் நீங்கள் காணலாம். |
06:42 | இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். சுருங்கச் சொல்ல, |
06:47 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: Arduino board க்கு ஒரு LCD மற்றும் ஒரு Push buttonஐ இணைப்பது மற்றும் pushbutton அழுத்தப்படும் போதெல்லாம் எண்ணிக்கையை காட்ட ஒரு programஐ எழுதுவது |
07:03 | ன்வரும் பயிற்சியை செய்யவும். எண்ணிக்கையை 2,4,6 மற்றும் பலவாக காட்ட அதே programஐ மாற்றவும். Programஐ compile செய்து, upload செய்யவும். மேலும், LCDயில் காட்டப்படும் எண்ணிக்கையைக் கவனிக்கவும். |
07:21 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோ, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும் |
07:29 | Spoken Tutorial Project குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
07:38 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை இந்த மன்றத்தில் முன்வைக்கவும் |
07:42 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தை பார்க்கவும் |
07:53 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |