Health-and-Nutrition/C2/Non-vegetarian-recipes-for-adolescents/Tamil
From Script | Spoken-Tutorial
00:01 | குமார பருவத்தினருக்கான அசைவ உனவுகள் குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது- குமார பருவம் என்றால் என்ன? |
00:10 | குமார பருவத்தில் ஊட்டச்சத்து தேவைகள் |
00:13 | பின்வரும் அசைவ உணவுகளை எப்படி தயாரிப்பது: |
00:16 | முட்டை கீரை புர்ஜி |
00:18 | ஆட்டுக்கால் சூப் |
00:20 | மட்டன் கல்லீரல் மற்றும் நுரையீரல் கறி |
00:22 | வெந்தய இலைகளுடன் கொத்திறைச்சி கோழிக்கறி மற்றும் மீன் கறி |
00:26 | குமார பருவம் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்வோம் |
00:30 | குமார பருவம் என்பது குழந்தை பருவத்திலிருந்து இளம்வயதிற்கு மாறுவது |
00:33 | 10 முதல் 19 வயதுடையவர்கள் குமார பருவத்தினராக கருதப்படுகிறார்கள் |
00:39 | இந்த காலகட்டத்தில் ஆற்றல் மற்றும் Proteinகளின் தேவைகள் அதிகம் |
00:44 | ஏன்? ஏனெனில், இந்த காலகட்டத்தில்: உடல், பாலியல், மன மற்றும் சமூக வளர்ச்சி மாற்றங்கள் ஏற்படுகின்றன |
00:53 | ஒரு குமரிப்பெண்ணுக்கு - ஒரு நாளைக்கு 2000-2400 கலோரிகள் மற்றும் 40-55 கிராம் புரதம் தேவைப்படுகிறது |
01:02 | பின்வரும், பிற நுண்ணூட்டச்சத்துக்களின் போதுமான அளவும் அவசியம் |
01:07 | Iron, Calcium, Magnesium, Zinc, Folate மற்றும்Vitamin B-12 போன்றவை |
01:15 | இதே தொடரின் மற்றொரு டுடோரியலில், குமார பருவத்தில் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் விளக்கப்பட்டுள்ளது |
01:22 | குமார பருவத்தின் முக்கியமான அனைத்தையும் கற்றுக்கொண்ட பிறகு; நாம் உணவுகளை தயாரிக்க தொடங்குவோம். |
01:29 | முதல் உணவு முட்டை கீரை புர்ஜி |
01:32 | உங்களுக்கு தேவையானவை: 1 முட்டை, ½ கப் கீரை, 1 சிறிய அளவிலான வெங்காயம், 1 பச்சை மிளகாய் |
01:38 | ½ டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது |
01:41 | ½ டீஸ்பூன் மஞ்சள் |
01:43 | தேவைக்கேற்ப உப்பு, 2 டீஸ்பூன் எண்ணெய் அல்லது வெண்ணெய் |
01:47 | செயல்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் அல்லது வெண்ணெய் சூடாக்கவும் |
01:51 | இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும் |
01:55 | வெங்காயத்தை 2 நிமிடம் வதக்கவும் |
01:58 | இப்போது மஞ்சள் தூள் மற்றும் நறுக்கிய கீரையை சேர்க்கவும் |
02:02 | வாணலியில் முட்டையை உடைத்து போடவும் |
02:06 | அனைத்து பொருட்களையும் நன்றாக கலக்கவும் |
02:08 | இப்போது, முட்டையை நடுத்தர தீயில் 2 நிமிடங்கள் சமைக்கவும் |
02:12 | முட்டை கீரை புர்ஜி பரிமாற தயாராக உள்ளது |
02:15 | அடுத்து ஆட்டுக்கால் சூப்: |
02:17 | உங்களுக்கு தேவையானவை: 200 கிராம் அல்லது 1 முழு ஆட்டுக்கால் |
02:22 | ½ நடுத்தர அளவிலான வெங்காயம் |
02:24 | ½ டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது |
02:26 | ½ டீஸ்பூன் கலந்த முழுமையான மசாலாக்கள் |
02:29 | 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் |
02:31 | தேவைக்கேற்ப உப்பு, 1 டீஸ்பூன் கடலை மாவு |
02:35 | ஆட்டுக்கால் துண்டுகளை நன்கு கழுவி சுத்தம் செய்யவும் |
02:38 | ஆட்டுக்கால் துண்டுகளில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூளை தடவவும் |
02:42 | இதை 15-20 நிமிடங்கள் ஓரமாக வைத்து மீண்டும் கழுவவும் |
02:47 | இது கால் துண்டுகளிலிருந்து வருகின்ற எந்த வாசனையையும் அகற்றும் |
02:50 | பிரஷர் குக்கரில் ஆட்டுக்காலின் துண்டுகள் மற்றும் நறுக்கிய வெங்காயத்தை வைக்கவும் |
02:55 | முழு மசாலா, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மற்றும் உப்பை சேர்க்கவும் |
03:00 | 1 கப் தண்ணீரை சேர்த்து பிரஷர் குக்கரை மூடி வைக்கவும் |
03:03 | ஒரு விசில் வரும் வரை அதிக தீயில் சமைக்கவும் |
03:07 | பின்னர் தீயை குறைத்து 15-20 நிமிடங்கள் சமைக்கவும் |
03:11 | குக்கரில் இருந்து அழுத்தம் தானாகவே வெளியேறியவுடன், பின் திறக்கவும் |
03:16 | அதேசமயம், கால் துண்டுகள் குக்கரில் சமைக்கப்படும் போது, கடலை மாவை இரண்டு மேசைக்கரண்டி தண்ணீரில் கலந்து மெல்லிய விழுதாக்கவும் |
03:25 | சூப்பில் விழுதை சேர்த்து நன்கு கிளறவும் |
03:28 | சூப்பை கொதிக்க வைத்து 2 நிமிடங்கள் மெதுவான தீயில் வைக்கவும் |
03:32 | ஆட்டுக்கால் சூப் தயாராக உள்ளது |
03:35 | அடுத்த உணவு, மட்டன் கல்லீரல் மற்றும் நுரையீரல் கறி |
03:38 | உங்களுக்கு தேவையானவை: 100 கிராம் மட்டன் கல்லீரல் மற்றும் நுரையீரல் |
03:41 | 1 நடுத்தர அளவிலான வெங்காயம், 1 நடுத்தர அளவிலான தக்காளி |
03:45 | 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 1 மேசைக்கரண்டி தயிர் |
03:50 | ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள் |
03:52 | 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள் |
03:54 | தேவைக்கேற்ப உப்பு, 2 டீஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் |
03:58 | ஆட்டிறைச்சி நுரையீரல் மற்றும் கல்லீரலை தண்ணீரில் நன்கு கழுவவும் |
04:02 | பிரஷர் குக்கரில் எண்ணெயை சூடாக்கவும் |
04:03 | நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து லேசான பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும் |
04:08 | பின்னர் நறுக்கிய தக்காளி மற்றும் இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும் |
04:13 | இப்போது, அதில் நுரையீரல் மற்றும் கல்லீரலைச் சேர்க்கவும் |
04:16 | மசாலா, மற்றும் தயிரை சேர்த்து நன்கு கலக்கவும். இதை 5 நிமிடங்கள் வதக்கவும் |
04:22 | 1 கப் தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில் மூடி வைக்கவும் |
04:25 | நடுத்தர தீயில் 15 நிமிடங்கள் சமைக்கவும் |
04:28 | மட்டன் கல்லீரல் மற்றும் நுரையீரல் கறி தயாராக உள்ளது மற்றும் கம்பு ரொட்டி அல்லது சோள ரொட்டியுடன் இதனை பரிமாறலாம் |
04:35 | மட்டன் நுரையீரல் மற்றும் கல்லீரல் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் இதைப் பயன்படுத்தலாம்: சிக்கன் கல்லீரல் மற்றும் சிக்கன் இருதயம் |
04:42 | நான்காவது செய்முறை வெந்தய இலைகளுடன் கொத்திறைச்சி கோழிக்கறி |
04:46 | பின்வருவனவற்றை எடுத்துக்கொள்ளவும்: 100 கிராம் கொத்திறைச்சி கோழிக்கறி, 1 கப் வெந்தய இலைகள் |
04:50 | ½ நடுத்தர அளவிலான வெங்காயம், ½ நடுத்தர அளவிலான தக்காளி |
04:54 | 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது |
04:56 | ½ டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள் |
04:59 | ½ டீஸ்பூன் மஞ்சள் தூள் |
05:01 | 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள், ¼ டீஸ்பூன் கொத்தமல்லி தூள் |
05:06 | தேவைக்கேற்ப உப்பு, 1 டீஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் |
05:10 | ஒரு பானையில் எண்ணையை சூடாக்கவும் |
05:11 | வெங்காயம் மற்றும் இஞ்சி-பூண்டு விழுதை சேர்க்கவும் |
05:14 | வெங்காயம் லேசான பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும் |
05:17 | தக்காளி, சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் கொத்தமல்லி தூளை சேர்க்கவும் |
05:22 | நன்றாக கலந்து, சிறிது உப்பை சேர்க்கவும் |
05:25 | அடுத்து, கொத்திறைச்சி கோழியைச் சேர்த்து 4-5 நிமிடங்கள் வதக்கவும் |
05:30 | அரை கப் தண்ணீரை ஊற்றி பானையை மூடி வைக்கவும் |
05:32 | குறைந்த தீயில் 5 நிமிடங்கள் சமைக்கவும் |
05:35 | நறுக்கிய புதிய வெந்தய இலைகளை சேர்க்கவும் |
05:37 | நன்றாக கலந்து 5 நிமிடங்கள் நடுத்தர தீயில் சமைக்கவும் |
05:41 | கொத்திறைச்சி கோழிக்கறி தயாராக உள்ளது |
05:44 | கடைசி உணவு மீன் கறி |
05:47 | பின்வருவனவற்றை எடுத்துக்கொள்ளவும்: 100 கிராம் அல்லது 2 துண்டுகள் கெண்டை மீன் |
05:50 | 1 சிறிய வெங்காயம், 1 சிறிய தக்காளி |
05:53 | 1 மேசைக்கரண்டி வேர்க்கடலை, 3-4 தேங்காய் துண்டுகள் |
05:57 | 1 டீஸ்பூன் சீரகம், ½ டீஸ்பூன் கொத்தமல்லி தூள் |
06:01 | ½ டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள், ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள் |
06:05 | தேவைக்கேற்ப உப்பு, 2 டீஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் |
06:09 | இந்த செய்முறையை உங்கள் பகுதியில் கிடைக்கின்ற எந்த மீனையும் வைத்து தயாரிக்க முடியும் என்பதை நினைவில் கொள்க |
06:15 | செயல்முறை - ஒரு கடாயில் வேர்க்கடலையை நடுத்தர தீயில் வறுக்கவும் |
06:19 | தீய்ந்து போவதை தவிர்க்க தொடர்ந்து அவற்றைக் கிளறவும் |
06:22 | பின்னர் அவற்றை ஒரு ஓரமாக ஆற வைக்கவும் |
06:25 | வெளிப்புற தோலை அகற்ற, வேர்க்கடலையை உங்கள் உள்ளங்கைகளுக்கு இடையில் தேய்க்கவும் |
06:28 | வெங்காயம், தக்காளி, வேர்க்கடலை, சீரகம், தேங்காய் ஆகியவற்றை ஒரு விழுதாக அரைக்கவும் |
06:34 | ஒரு பானையில் எண்ணையை சூடாக்கி, விழுதை சேர்க்கவும் |
06:37 | சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் உப்பை சேர்க்கவும் |
06:41 | 2-3 நிமிடங்களுக்கு வதக்கவும் |
06:44 | இப்போது மீன் துண்டுகள் மற்றும் 1 கப் தண்ணீர் சேர்க்கவும். அதை ஒரு கொதி நிலைக்கு கொண்டு வரவும் |
06:49 | பாத்திரத்தை மூடி, குறைந்த தீயில் 5 நிமிடங்கள் சமைக்கவும் |
06:53 | அழகுபடுத்த, மேலே நறுக்கிய கொத்தமல்லி இலைகளை நீங்கள் சேர்க்கலாம். மீன் கறி தயார் |
06:59 | இந்த உணவுகள் அனைத்தும் ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகும்: Protein, Fat, Iron போன்றவை |
07:06 | Vitamin B-12, ஜின்க், Magnesium மற்றும் Folate |
07:11 | இந்த உணவுகளின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி பார்ப்போம் |
07:15 | முதலாவதாக, கோழி, மீன், முட்டை, ஆட்டிறைச்சி அனைத்தும் முழுமையான proteintனின் சிறந்த ஆதாரங்கள் ஆகும். |
07:22 | இரண்டாவதாக, அசைவ உணவுகளில் உள்ள Iron, எளிதில் உறிஞ்சப்படுகிறது |
07:28 | மாதவிடாய் இரத்த இழப்பு காரணமாக பெண்களுக்கு, இளம்பருவத்தில் Ironன் தேவைகள் அதிகம் |
07:34 | குறைந்த Iron னின் அளவு சோர்வு, வெளிர் தோல் மற்றும் தொற்றுநோய்கள் வருவதற்கான அதிக ஆபத்தை ஏற்படுத்தும் |
07:40 | மெலிந்த தசை எடை மற்றும் இரத்த அணுக்களின் வளர்ச்சிக்கு, Iron தேவைப்படுகிறது |
07:46 | மூன்றாவதாக, கானாங்கெளுத்தி, காலா, சூரை, பண்ணா, கொய்மீன் மற்றும் சாளை போன்ற மீன்கள் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் நல்ல ஆதாரங்கள் ஆகும். |
07:56 | மூளை மற்றும் காட்சியின் வளர்ச்சிக்கு Omega 3 fatty acidக்கள் தேவை |
08:01 | சுவாரஸ்யமாக, அசைவ உணவு, பால் மற்றும் பால் பொருட்கள் மட்டுமே Vitamin B-12ஐ கொண்டிருக்கின்றன |
08:08 | சிவப்பு இரத்த அணுக்கள் உருவாக்கம், ஆற்றல் உற்பத்தி, நரம்பியல் செயல்பாட்டிற்கு, Vitamin B-12 தேவைப்படுகிறது. |
08:17 | இது கர்ப்ப காலத்தில் கருவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது |
08:23 | மேலும், இறைச்சி மற்றும் முட்டைகள் zincன் நல்ல ஆதாரங்கள் ஆகும். |
08:27 | வளர்ச்சி, அறிவாற்றல் மற்றும் பாலியல் முதிர்ச்சிக்கு, zinc இளமை பருவத்தில் மிகவும் அவசியமாகும். |
08:34 | எனவே, நன்கு சீரான உணவை உட்கொள்வது மிக முக்கியமானது |
08:40 | வெவ்வேறு அசைவ மற்றும் சைவ உணவுகளின் கலவையை நம் உணவில் சேர்க்க வேண்டும் |
08:46 | இத்துடன், குமார பருவத்தினருக்கான அசைவ உனவுகள் குறித்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |