Linux/C2/Ubuntu-Desktop-16.04/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Ubuntu Linux Desktop 16.04 குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:09 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: gnome சூழலில் Ubuntu Linux Desktop |
00:17 | மற்றும் Ubuntu Desktopல் உள்ள சில பொதுவான applicationகள். |
00:22 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், Ubuntu Linux 16.04 O S.ஐ பயன்படுத்துகிறேன். |
00:29 | Ubuntu desktop இவ்வாறு காணப்படும். |
00:33 | திரையின் இடது பக்கத்தில் நீங்கள், launcherஐ காண்பீர்கள். |
00:37 | நாம் launcherஐ எப்படி மறைப்பது? |
00:40 | அதைச் செய்ய, இடது பக்கத்தில் உள்ள launcher க்கு செல்லவும். System Settings icon.ஐ க்ளிக் செய்யவும். |
00:47 | System Settings windowவில், Appearanceஐ க்ளிக் செய்யவும். |
00:51 | Appearance windowவில், Behavior tabஐ க்ளிக் செய்யவும். |
00:56 | இங்கு, Auto-hide the Launcher ஐ ON நிலைக்கு மாற்றவும். |
01:01 | இப்போது, launcher மறைக்கப்படும். |
01:04 | இங்கு காட்டப்பட்டுள்ளபடிlauncher மறைக்கப்பட்டிருந்தால், அதை மீண்டும் நாம் புலனாக்கலாம். |
01:10 | அதைச் செய்ய, திரையின் இடது முனைக்கோடிக்கு cursorஐ நகர்த்தவும். |
01:15 | Launcher புலனாகும். |
01:18 | Cursorஐ அங்கிருந்து நகர்த்தினால், launcher மீண்டும் மறைக்கப்படும். |
01:23 | Appearance windowவுக்கு திரும்பச் சென்று, Auto-hide the Launcher ஐ OFF நிலைக்கு திருப்பவும். |
01:30 | Windowவின் மேல் இடது பக்கத்தில் உள்ள சிறிய X iconஐ க்ளிக் செய்து, இந்த windowவை மூடவும். |
01:37 | Launcherல் முன்னிருப்பாக சில iconகள் இருப்பதை கவனிக்கவும். |
01:42 | Launcherன் மேல், Dash home iconஐ நீங்கள் காணலாம். |
01:47 | Dash home என்பது, Ubuntu Linux,ல் உள்ள எல்லா applicationகளுக்கான அணுகலை, ஒரே திரையினுள் கொடுக்கின்ற ஒரு interface ஆகும். |
01:55 | Dash home, ஐ திறக்க, அதை க்ளிக் செய்யவும். |
01:59 | Search bar fieldஐ , நீங்கள் தெளிவாக மேலே காணலாம். |
02:04 | இப்போது, ஒரு குறிப்பிட்ட applicationஐ எப்படி கண்டறிவது? நீங்கள் தேடுகின்ற applicationனின் பெயரை டைப் செய்தால், உடனே அதை நீங்கள் காண்பீர்கள். இது மிகவும் எளிதானது. |
02:16 | Calculator applicationஐ கண்டறிய முயற்சிப்போம். |
02:20 | அதனால், search bar fieldல் டைப் செய்க: C a l c. |
02:26 | தங்கள் பெயரில், c a l c என்பதை கொண்டுள்ள எல்லா applicationகளும் பட்டியலிடப்படும். |
02:32 | இங்கு, LibreOffice Calc மற்றும்Calculator பட்டியலிடப்பட்டிருப்பதை கவனிக்கவும். |
02:37 | Calculator iconஐ க்ளிக் செய்யவும். Calculator application இப்போது திரையில் திறக்கிறது. |
02:45 | எண்கணிதம், அறிவியல் சார்ந்த மற்றும் நிதி பற்றிய கணக்கீடுகளை செய்ய, Calculator உதவி புரிகிறது. |
02:52 | சில எளிய கணக்கீடுகளை செய்ய முயற்சிப்போம். |
02:55 | 5 asterix 8 என டைப் செய்து, equal to குறியை க்ளிக் செய்யவும். |
03:02 | equal to குறியை க்ளிக் செய்வதற்கு பதிலாக, keyboardல் உள்ள Enter ஐயும் நீங்கள் அழுத்தலாம். |
03:09 | Calculatorல் பதில் காட்டப்படுகிறது. |
03:13 | இவ்வாறே, Calculator applicationஐ பயன்படுத்தி எல்லா விதமான கணக்கீடுகளை நாம் செய்யலாம். |
03:20 | இப்போது, windowவின் மேல் இடது பக்கத்தில் உள்ள இந்த சிறிய X iconஐ க்ளிக் செய்து, இந்த Calculator ல் இருந்து வெளிவரவும். |
03:28 | Ubuntu Linux OSல் உள்ள, வேறு சில முக்கியமான applicationகளைப் பற்றி பார்ப்போம். |
03:34 | அதற்கு, நாம் Dash home.க்கு திரும்பச் செல்வோம். |
03:38 | Search barல், gedit என டைப் செய்வோம். gedit , Ubuntu Linux OSன், முன்னிருப்பான Text Editor ஆகும். |
03:48 | Text Editor icon கீழே தோன்றுகிறது. அதை திறக்க, அதை க்ளிக் செய்வோம். |
03:55 | நீங்கள் திரையில் தற்போது காண்பது, gedit Text Editor window ஆகும். |
04:00 | இங்கு நான் சில textஐ டைப் செய்கிறேன். உதாரணத்திற்கு, டைப் செய்க: "Hello World". |
04:07 | Fileஐ சேமிக்க, Ctrl மற்றும் S keyகளை ஒன்றாக அழுத்தவும். |
04:14 | மாறாக, File ஐ க்ளிக் செய்து, பின் Saveஐ க்ளிக் செய்யலாம். |
04:20 | இப்போது, “Save as” என்று பெயரிடப்பட்ட ஒரு dialog box திறக்கிறது. அது ஒரு filename ஐயும், fileஐ சேமிக்க வேண்டிய இடத்தையும் கேட்கிறது. |
04:31 | அதனால், பெயரை "Hello.txt". என டைப் செய்வோம். |
04:36 | .txt , text fileன் முன்னிருப்பான நீட்டிப்பு ஆகும். |
04:41 | இடத்திற்கு, Desktop.ஐ தேர்தெடுப்போம். பின், கீழுள்ள Save பட்டனை க்ளிக் செய்யவும். |
04:49 | Windowவின் மேல் இடது பக்கத்தில் உள்ள சிறிய X iconஐ க்ளிக் செய்து, இந்த gedit windowவை இப்போது மூடுவோம். |
04:57 | file Hello.txtஐ நாம் Desktop,ல் காணலாம். இதன் பொருள், நமது text file வெற்றிகரமாக சேமிக்கப்பட்டுவிட்டது என்பதாகும். |
05:05 | இந்த fileஐ நான், டபுள்-க்ளிக் செய்து திறக்கிறேன். |
05:09 | நாம் எழுதிய textஉடன், நமது text file திறந்திருப்பதை காணலாம். |
05:14 | Internet, gedit Text Editor பற்றி பல தகவல்களை கொண்டிருக்கிறது. |
05:19 | இந்த தலைப்பில் சில ஸ்போகன் டுடோரியல்கள், இந்த வலைத்தளத்தில் உள்ளன. |
05:25 | இந்த text editorஐ மூடி, மற்றொரு applicationஐ பார்ப்போம், அதாவது, Terminal. |
05:32 | அதனால், Dash home, க்கு மீண்டும் செல்வோம். Search bar fieldல், terminal என்ற சொல்லை டைப் செய்யவும். |
05:41 | கீழே தோன்றுகின்ற, Terminal iconஐ க்ளிக் செய்யவும். |
05:45 | Terminal window திரையில் திறக்கிறது. Terminal ஐ திறப்பதற்கானshortcut, Ctrl+Alt+T keyகளாகும் என்பதை கவனிக்கவும். |
05:55 | Terminal, command line. எனவும் அழைக்கப்படுகிறது. ஏனெனில், இங்கிருந்து நீங்கள் கணினிக்கு கட்டளையிட முடியும். |
06:02 | இது, GUIஐ விட அதிக சக்தி வாய்ந்ததாகும். |
06:06 | நான் Terminal windowக்கு மாறுகிறேன். |
06:09 | Terminal.ஐ பற்றி தெரிந்து கொள்ள, இப்போது ஒரு எளிய commandஐ டைப் செய்வோம். டைப் செய்க: 'ls' . பின், Enter.ஐ அழுத்தவும். |
06:18 | தற்போதைய directoryல், fileகள் மற்றும் folderகளின் ஒரு பட்டியலை நீங்கள் காணலாம். |
06:23 | இங்கு, Home folderல் இருக்கும் fileகள் மற்றும் folderகளை அது காட்டுகிறது. |
06:28 | Home folderஐ பற்றி, இந்த டுடோரியலில் பின்னர் காண்போம். |
06:33 | இப்போதிலிருந்து, terminalலில் அதிக நேரத்தை நாம் செலவிடமாட்டோம். |
06:37 | Windowவின் மேல் இடது பக்கத்தில் உள்ள சிறிய X iconஐ க்ளிக் செய்து, இந்த terminal ஐ மூடவும். |
06:43 | இந்த வலைத்தளத்திலுள்ள, Linux ஸ்போகன் டுடோரியல் தொடரில், Terminal commandகள் நன்றாக விளக்கப்பட்டுள்ளன. |
06:49 | இப்போது, மற்றொரு applicationக்கு செல்வோம். அதாவது, Firefox Web Browser. |
06:55 | மீண்டும், Dash home.ஐ திறக்கவும். Search barல் டைப் செய்க: Firefox |
07:01 | Firefox Web Browser iconஐ க்ளிக் செய்யவும். |
07:05 | Firefox Web Browser , world wide web.ஐ அணுகப் பயன்படுத்தப்படுகிறது. Firefox browser window இப்போது திறந்திருப்பதை நாம் காணலாம். |
07:15 | spoken tutorial வலைத்தளத்திற்கு செல்வோம். அதற்கு, address bar ஐ க்ளிக் செய்யவும் அல்லது keyboardல் F6 ஐ அழுத்தவும். |
07:24 | இப்போது, "spoken-tutorial.org" என டைப் செய்து, Enter.ஐ அழுத்துவோம். |
07:31 | நீங்கள் Internet இணைப்பை கொண்டிருந்தால், பின் கொடுக்கப்பட்டுள்ள வலைத்தளத்துடன் Firefox இணைத்துக்கொள்ளும். |
07:37 | Spoken Tutorial Homepage , browserல் திறக்கிறது. |
07:41 | முன்பு விளக்கியது போல் இதை மூடி, அடுத்த applicationக்கு செல்வோம். |
07:47 | அதனால், மீண்டும் Dash home க்கு சென்று, search barல் டைப் செய்க: office . |
07:53 | Calc, Impress, Writer மற்றும் Draw போன்ற, LibreOffice ன் பல்வேறு கூறுகளை நீங்கள் காண்பீர்கள். |
08:01 | LibreOffice , Ubuntu Linux OSன் முன்னிருப்பான office application ஆகும். |
08:07 | இந்த கூறுகளுக்கான மிகச் சிறந்த டுடோரியல்கள், Spoken Tutorial வலைத்தளத்தில் உள்ளன. |
08:13 | இப்போது, Video தேர்வை ஆராய்வோம். |
08:17 | Search barல் டைப் செய்க: video |
08:20 | காட்டப்பட்டுள்ள பட்டியலில், Videos. என்று பெயரிடப்பட்டapplication ஒன்றுள்ளது. |
08:25 | Videos , காணொளிகள் மற்றும் பாட்டுக்களை play செய்ய பயன்படுத்தப்படுகிறது. முன்னிருப்பாக அது, open format video fileகளை மட்டும் play செய்கிறது. |
08:34 | அதனால், எனது pen-driveவில் இருந்து ஒரு மாதிரி fileஐ நான் play செய்கிறேன். |
08:38 | இப்போது, எனது கணினியில் உள்ள ஒரு usb slot ல், எனது pen-driveஐ நான் புகுத்துகிறேன். Pen-drive folder தானாகவே திறந்துவிட்டது. |
08:47 | அது திறக்கவில்லை எனில், அதை launcherல் இருந்து நாம் அணுகலாம். |
08:52 | Launcherல், pen-drive iconஐ கண்டறியவும். |
08:56 | அதை க்ளிக் செய்தால், pen-driveல் உள்ள fileகள் மற்றும் folderகளை அது காட்டுகிறது. |
09:02 | இப்போது, play செய்வதற்கு, big buck bunny.ogv என்ற movie fileஐ நான் தேர்ந்தெடுக்கிறேன். |
09:08 | இதுவே எனது file. அதை திறக்க, அதை நான் டபுள்-க்ளிக் செய்கிறேன். |
09:14 | அது முன்னிருப்பாக, Videosல் திறக்கிறது. |
09:17 | திரைப்படத்தை நிறுத்துவோம். |
09:20 | இப்போது, Desktopக்கு செல்வதற்கு, Ctrl, Windows மற்றும் D keyகளை அழுத்துவோம். |
09:26 | இப்போது, Desktopல் உள்ள வேறு சில முக்கியமான விஷயங்களை பார்ப்போம். |
09:31 | Launcherல் உள்ள folder iconஐ கவனிக்கவும். அதை க்ளிக் செய்வோம். |
09:37 | Home folder திறக்கிறது. |
09:39 | Ubuntu Linuxல், ஒவ்வொரு userக்கும் ஒரு தனித்த Home folder உள்ளது. |
09:44 | Home folder ஐ , "our house" எனக் கூறலாம். இங்கு, நமது fileகள் மற்றும் folderகளை நாம் சேமித்துக்கொள்ளலாம். நாம் அனுமதி அளித்தால் மட்டுமே, மற்றவர்கள் அதை பார்க்க முடியும். |
09:56 | file permissionகள் பற்றிய மேலும் தகவல், Linux ஸ்போகன் டுடோரியல் தொடரில் உள்ளது. |
10:03 | திரும்பச் செல்வோம். நமது Home folderல், Desktop, Documents, Downloads, போன்ற மற்ற folderகளை நாம் காணலாம். |
10:14 | Linuxல், எல்லாம் ஒரு fileஆக இருக்கும். Desktop folder ஐ டபுள்-க்ளிக் செய்து, திறப்போம். |
10:21 | இங்கு, நாம் text editorல் இருந்து சேமித்த அதே "hello.txt" fileஐ காண்கிறோம். |
10:28 | அதனால், இந்த folder மற்றும் Desktop இரண்டுமே ஒன்றேயாகும். |
10:32 | இந்த folder ஐ நான் இப்போது மூடுகிறேன். இத்துடன், இந்த டுடோரியல் முடிந்துவிட்டது. சுருங்கச் சொல்ல, |
10:39 | இந்த டுடோரியலில் நாம், Ubuntu Desktop, launcher மற்றும் அவற்றில் உள்ள சில iconகள் |
10:49 | Calculator, Text Editor, Terminal, Firefox Web Browser, Videos போன்ற சில பொதுவான applicationகள், LibreOffice Suiteன் கூறுகள் மற்றும் Home folderஐ பற்றி கற்றோம். |
11:04 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
11:12 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு மற்றும் nbsp குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
11:25 | இந்த ஸ்போகன் டுடோரியலில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் உள்ளதா? இந்த தளத்தை பார்க்கவும். |
11:30 | உங்கள் கேள்விக்கான நிமிடம் மற்றும் நொடியை தேர்வு செய்யவும். உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கவும். எங்கள் குழுவிலிருந்து எவரேனும் ஒருவர் அதற்கு பதிலளிப்பார். |
11:40 | ஸ்போகன் டுடோரியல் மன்றம் இந்த டுடோரியலுக்கான குறிப்பிட்ட கேள்விகளுக்காகும். இதில் தொடர்பில்லாத மற்றும் பொதுவான கேள்விகளை கேட்க வேண்டாம். |
11:50 | இது குழப்பத்தை குறைக்க உதவும். குழப்பம் குறைந்தால், இந்த விவாதத்தை நாம் பயிற்றுரையாக பயன்படுத்தலாம். |
11:59 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
12:11 | இந்த டுடோரியலுக்கான ஸ்கிரிப்ட், ஸ்போகன் டுடோரியல் குழுவால் வழங்கப்பட்டுள்ளது. விடை பெற்றுக்கொள்வது, ஐ ஐ டி பாம்பேயிலிருந்து பிரவீன். கலந்துகொண்டமைக்கு நன்றி. |