Linux-AWK/C2/Conditional-statements-in-awk/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:01 | Awkல் conditional statementகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது- Awkல், if, else, else if . |
00:15 | இதை சில உதாரணங்கள் மூலம் நாம் செய்வோம். |
00:19 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், Ubuntu Linux 16.04 Operating System மற்றும் gedit text editor 3.20.1ஐ பயன்படுத்துகிறேன். |
00:32 | உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் நீங்கள் பயன்படுத்தலாம். |
00:36 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, இந்த வலைத்தளத்தில் உள்ள முந்தையawk டுடோரியல்களை நீங்கள் படித்திருக்க வேண்டும். |
00:43 | C அல்லதுC++ போன்ற ஏதேனும் ஒரு programming language, உங்களுக்கு தெரிந்திருக்கவேண்டும். |
00:50 | இல்லையெனில், எங்கள் வலைத்தளத்தில் உள்ள அதற்கான டுடோரியல்களை படிக்கவும். |
00:56 | இந்த டுடோரியலில் பயன்படுத்தப்பட்டுள்ள fileகள், இந்த டுடோரியல் பக்கத்தில் உள்ள Code Files இணைப்பில் உள்ளது. அவற்றை தரவிறக்கி, extract செய்துகொள்ளவும். |
01:06 | ஒரு செயலை செய்வதற்கு முன்பு, ஒரு குறிப்பிட்ட conditionஐ சரிபார்க்க, ஒரு conditional statement நம்மை அனுமதிக்கிறது. |
01:14 | like if, else, else-if போன்ற conditional statementகள், awkல் எப்படி வேலை செய்கின்றன என்பதை கற்போம். |
01:22 | எந்த programming languageலும் உள்ளது போல், if -else statement ன் syntax பின்வருமாறு: |
01:28 | if conditional-expression1, true என்றால், பின் action1.ஐ செய்யவும். |
01:34 | else if conditional-expression2, true என்றால், பின் action2.ஐ செய்யவும். |
01:41 | பல else if statements கள், இதன் பின் தொடரலாம். |
01:46 | இறுதியில், குறிப்பிட்ட conditional expressionகளில் எதுவும் true இல்லையெனில், பின் action nஐ செய்யவும். |
01:54 | else மற்றும்else-if பாகங்கள், கட்டாயமற்றவை ஆகும். ஒரு உதாரணத்தை பார்ப்போம். |
02:02 | நாம் முன்னர் பயன்படுத்திய அதே awkdemo.txt fileஐ பயன்படுத்துவோம். |
02:10 | ரூபாய் 8000க்கும் மேல் உதவித்தொகை பெறுகின்ற மாணவர்களுக்கு, 50 சதவிகிதம் உயர்வு கொடுக்கவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். |
02:19 | இந்த conditionக்கு, ஒரு awk fileஐ உருவாக்குவோம். |
02:23 | காட்டப்பட்டுள்ள பின்வரும் codeஐ , ஒரு text editorல் டைப் செய்து, அதை cond dot awk என சேமிக்கவும். நான் இதை ஏற்கனவே செய்துவிட்டேன். |
02:34 | அதே file, Code Files இணைப்பிலும் உள்ளது. |
02:39 | இந்த codeல், நாம் Output Field Separatorஆக colon.ஐ set செய்துள்ளோம். |
02:45 | முதல் print statement , field headingகளை print செய்கிறது. |
02:50 | அடுத்து, ஆறாவது fieldன் மதிப்பு, 8000க்கும் அதிகமாக உள்ளதா என்று if statement சரிபார்க்கும். |
02:58 | ஆம் எனில், இரண்டாவதுprint statement செயல்படுத்தப்படும். |
03:03 | இந்த print statementனுள் உள்ள $6 into 1.5, ஆறாவது fieldன் மதிப்பை, 1.5 சதவிகிதத்தால் பெருக்கும். |
03:13 | இந்த codeஐ இப்போது செயல்படுத்துவோம். |
03:16 | CTRL, ALT மற்றும் T keyகளை அழுத்தி, terminalஐ திறக்கவும். |
03:22 | cd commandஐ பயன்படுத்தி, நீங்கள் தரவிறக்கி, extract செய்த Code Fileகளை வைத்துள்ள folderக்கு செல்லவும். |
03:29 | இப்போது டைப் செய்க: awk space hyphen capital F pipe குறியீடு இரட்டை மேற்கோள்களினுள் space hyphen சிறிய f space cond dot awk space awkdemo dot txt. Enter.ஐ அழுத்தவும். |
03:49 | conditionஐ பூர்த்தி செய்த, அதிகரிக்கப்பட்ட உதவித்தொகையை பெற்ற ஒரு மாணவரின் recordஐ மட்டும் output காட்டுகிறது. |
03:57 | இப்போது, விதி மாறுகிறது என்று வைத்துக்கொள்வோம்: ரூபாய் 8000க்கும் மேல் உதவித்தொகை பெறுகின்ற மாணவர்களுக்கு, 50 சதவிகிதம் உயர்வு. |
04:07 | இல்லையெனில், 30 சதவிகிதம் உயர்வு கொடுக்கவும். இதை நாம் எப்படி செய்வது? |
04:13 | நாம் ஒரு else block.ஐ சேர்க்கவேண்டும். |
04:16 | மீண்டும், cond dot awk fileக்கு மாறவும். |
04:21 | பின்வரும், code வரியை சேர்ப்போம். இறுதியாக மூடுகின்ற curly braceக்கு முன், Enter.ஐ அழுத்தவும். |
04:30 | else , Enter.ஐ அழுத்தவும். |
04:33 | print space dollar 2 comma dollar 6 comma dollar 6 into 1.3 |
04:42 | Fileஐ சேமித்து, terminal.க்கு மாறவும். |
04:46 | முன்பு செயல்படுத்தப்பட்ட commandஐ பெற, up arrow key ஐ அழுத்தவும். பின், Enter.ஐ அழுத்தவும். |
04:53 | இப்போது, outputஐ கவனிக்கவும். யோஜ்னா சொவ்த்ரீ, முன்பு 1000 பெற்றுக்கொண்டிருந்தார். இப்போது, 1300 பெற்றுக்கொண்டிருக்கிறார். |
05:04 | மீண்டும் விதிகளை மாற்றுவோம். ரூபாய் 8000துக்கும் மேல் உதவித்தொகை பெறுகின்ற மாணவர்களுக்கு, 50 சதவிகிதம் உயர்வு. |
05:13 | ரூபாய் 6000துக்கும் மேல் உதவித்தொகை பெறுகின்ற மாணவர்களுக்கு, 40 சதவிகிதம் உயர்வு. இல்லையெனில், 30 சதவிகிதம் உயர்வு கொடுக்கவும். |
05:23 | Codeக்கு மாறவும். காட்டப்பட்டுள்ளபடி, codeஐ update செய்யவும். |
05:29 | Fileஐ சேமித்து, terminal.க்கு திரும்பவும். |
05:33 | Terminal.ஐ clear செய்கிறேன். |
05:36 | முன்பு செயல்படுத்தப்பட்ட commandஐ பெற, up arrow key ஐ அழுத்தவும். பின், Enter.ஐ அழுத்தவும். |
05:44 | இம்முறை, மாணவர் மீரா நாயர் 40 சதவிகிதம் உயர்வு பெற்றுள்ளதை கவனிக்கவும். |
05:51 | இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
05:54 | சுருங்கச் சொல்ல. இந்த டுடோரியல் நாம் கற்றது: awkல் உள்ள, if , else, else if போன்ற Conditional statementகள். |
06:05 | பயிற்சியாக, விதிகளை பின்பற்றி கிரேடுகளை கொடுக்கவும்: மதிப்பெண், 90க்கு சமமாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால், கிரேடு A ஆகும். |
06:15 | மதிப்பெண், 80க்கு சமமாகவோ அல்லது அதிகமாகவோ இருந்து, ஆனால் 90க்கு குறைவாக இருந்தால், கிரேடு B ஆகும். |
06:23 | மதிப்பெண், 70க்கு சமமாகவோ அல்லது அதிகமாகவோ இருந்து, ஆனால் 80க்கு குறைவாக இருந்தால், கிரேடு C ஆகும். |
06:30 | மதிப்பெண், 60க்கு சமமாகவோ அல்லது அதிகமாகவோ இருந்து, ஆனால் 70க்கு குறைவாக இருந்தால், கிரேடு D ஆகும். இல்லையெனில், கிரேடு F ஆகும். |
06:41 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
06:49 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு , ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
06:58 | மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
07:02 | இந்த ஸ்போகன் டுடோரியலில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் உள்ளதா? இந்த தளத்தை பார்க்கவும். |
07:08 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
07:20 | இந்த ஸ்கிரிப்ட், அந்தராவினால் வழங்கப்பட்டுள்ளது. விடை பெற்றுக்கொள்வது, ஐ ஐ டி பாம்பேயிலிருந்து பிரவீன். கலந்துகொண்டமைக்கு நன்றி. |