OpenModelica/C3/Icon-and-Diagram-Views/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 14:21, 28 November 2017 by Jayashree (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Icon மற்றும்Diagram Viewகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: ஒரு classன், Icon மற்றும்diagram viewகளை எப்படி குறிப்பிடுவது.
00:14 Icon/Diagram Viewல், ஒரு polygon மற்றும் ellipseஐ எப்படி சேர்ப்பது.
00:20 இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான், OpenModelica 1.9.2ஐ பயன்படுத்துகிறேன்.
00:27 இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, பின்வரும் operating systemகளில் எவற்றையும் நீங்கள் பயன்படுத்தலாம்: Linux, Windows, Mac OS X அல்லதுFOSSEE OS on ARM.
00:39 இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, மற்றும் பயிற்சி செய்ய, Modelicaவில், class definition பற்றி தெரிந்து இருக்க வேண்டும். Annotationகளை எப்படி குறிப்பிடுவது என்று தெரிந்து இருக்க வேண்டும்.
00:51 முன்நிபந்தனை டுடோரியல்கள், எங்கள் வலைதளத்தில் கூறப்பட்டுள்ளன. அவற்றை பார்க்கவும்.
00:57 ஒரு modelஐ graphicalஆக பார்க்க, Icon மற்றும்diagram viewகள் இயலச்செய்கின்றன.
01:03 ஒரு modelன் Icon மற்றும்diagram viewகளை குறிப்பிட, Annotationகளை பயன்படுத்தலாம்.
01:09 Icon View, Icon Annotationஐ பயன்படுத்தி குறிப்பிடப்படுகிறது, ஆனால், Diagram View, Diagram Annotationஐ பயன்படுத்தி குறிப்பிடப்படுகிறது.
01:19 component-oriented modelingக்கு, drag-and-drop செயல்பாட்டை அவை இயலச்செய்கின்றன.
01:25 பின்வரும் டுடோரியல்களில், இந்த அம்சத்தைப் பற்றி மேலும் விவாதிப்போம்.
01:30 இப்போது, Icon and Diagram Annotationகளின் syntaxஐ புரிந்துகொள்ள முயற்சிப்போம்.
01:37 முந்தைய டுடோரியல்களில் பார்த்தது போல், annotationகளை recordகளாக சிறப்பாக புரிந்துகொள்ள முடியும்.
01:44 அதனால், Icon and Diagram annotationகளை, coordinateSystem மற்றும்graphicsஐ , fieldகளாக கொண்டrecordகளாக கருதலாம்.
01:55 அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக பார்ப்போம்.
01:58 பின்வரும் fieldகளை கொண்ட ஒரு recordஆக, coordinateSystem கருதப்படலாம்: extent, initialScale, preserveAspectRatio மற்றும்grid.
02:10 அவற்றை ஒரு உதாரணம் மூலமாக புரிந்துகொள்வோம்.
02:15 Icon/Diagram Annotationனின் syntaxஐ விளக்குகின்ற ஒரு உதாரணம் இதோ.
02:22 இப்போது, OMEditக்கு மாறுகிறேன்.
02:26 bouncingBallWithAnnotations என்ற பெயருடைய ஒரு உதாரணத்தின் மூலம், icon and diagram annotationகளை புரிந்துகொள்வோம்.
02:35 எங்கள் வலைதளத்தில் இருந்து இந்த fileஐ தரவிறக்கிக் கொள்ளவும்.
02:39 முந்தைய டுடோரியல்களில், இந்த model பயன்படுத்தப்பட்டது.
02:42 இந்த model பற்றிய மேலும் விவரங்களுக்கு, முன்நிபந்தனை டுடோரியல்களை பார்க்கவும்.
02:48 நான் OMEditல், ஏற்கனவே bouncingBallWithAnnotationsஐ திறந்துவிட்டேன்.
02:54 Libraries Browserல், அதன் icon மீது டபுள்-க்ளிக் செய்யவும்.
02:58 Model இப்போது Icon Viewல் திறந்துவிட்டது.
03:02 அது, Diagram அல்லது Text Viewல் திறந்தால், Icon Viewக்கு மாறவும்.
03:08 சிறந்த பார்வைக்கு, OMEdit windowஐ இடது பக்கம் நகர்த்துகிறேன்.
03:14 இந்த modelன் Icon Viewல், வெள்ளை பின்னணியில் ஒரு வட்டத்தை நீங்கள் கவனிக்கலாம்.
03:21 Icon Viewல் இருக்கின்ற வெள்ளை இடைவெளியை, நான் canvas என குறிப்பிடுகிறேன்.
03:27 Canvas, gridகளாக பிரிக்கப்பட்டுள்ளதை கவனிக்கவும்.
03:32 Canvasன் propertyகளை எப்படி கையாள்வது என்று முதலில் கற்போம்.
03:37 பின், ஒரு circle மற்றும், ஒரு polygonஐ எப்படி சேர்ப்பது என்று கற்போம்.
03:43 Circleன் பக்கத்தில் இருக்கின்ற canvasஐ ரைட்-க்ளிக் செய்யவும். Propertiesஐ தேர்ந்தெடுக்கவும்.
03:51 காட்டப்பட்டுள்ளபடி, ஒரு dialog box தோன்றுகிறது.
03:55 Extent, Grid மற்றும்Component என்று பெயரிடப்பட்ட வகைகள் இருப்பதை கவனிக்கவும்.
04:04 Extent, canvasன் பரப்பளவை குறிக்கிறது.
04:07 Left மற்றும்Top என்று பெயரிடப்பட்டfieldகள், canvasன் மேல் இடது மூலையில் இருக்கின்ற coordinateகளை ஒத்திருக்கிறது.
04:16 Left, horizontal coordinateஐ ஒத்திருக்கிறது, மற்றும், Top, vertical coordinateஐ ஒத்திருக்கிறது.
04:24 இவ்வாறே, Bottom மற்றும்Right, canvasன் கீழ் வலது மூலையில் இருக்கின்ற coordinateகளை ஒத்திருக்கிறது.
04:33 இப்போது, Left fieldஐ -200 unitகளுக்கு மாற்றுவோம். Okஐ க்ளிக் செய்யவும்.
04:41 Canvas, இடது பக்கம், 100 unitகள் விரிந்திருப்பதை கவனிக்கவும்.
04:47 மீண்டும், canvasஐ ரைட்-க்ளிக் செய்து, Propertiesஐ தேர்ந்தெடுக்கவும்.
04:53 Grid, gridன் அளவை குறிக்கிறது.
04:57 Extent மற்றும்gridன் unitகள், Scale Factorல் வேறுபடுவதை கவனிக்கவும்.
05:04 Gridன் horizontal field ஐ , 4 unitகளுக்கு மாற்றவும். Okஐ க்ளிக் செய்யவும்.
05:11 Canvasல் gridன் அளவு அதிகரித்திருப்பதை கவனிக்கவும்.
05:16 Icon View ன், இந்த propertyகளை, Text Viewல் இருக்கின்ற Icon annotationஐ பயன்படுத்தியும் கையாளலாம்.
05:24 Icon View ல் செய்யப்படுகின்ற எந்த மாற்றமும், Icon annotationல் அதன்படி பிரதிபலிக்கப்படுகிறது என்பதை கவனிக்கவும்.
05:32 இதை புரிந்துகொள்ள முயற்சிப்போம். Modeling பகுதியின் மேலுக்கு சென்று, Text Viewஐ க்ளிக் செய்யவும். சிறிது கீழே scroll செய்யவும்.
05:43 நாம் slideகளில் கண்டது போல், coordinateSystem, Icon annotationல் இருக்கின்ற ஒருfield ஆகும்.
05:50 Extent, coordinateSystemல் இருக்கின்ற ஒரு field ஆகும். அது இரண்டு ஜோடி எண்களை கொண்டிருக்கிறது.
05:57 Properties dialog boxஐ பயன்படுத்தி, extentஐ எப்படி கையாள்வது என்பதை நாம் ஏற்கனவே கண்டுவிட்டோம்.
06:04 முதல் ஜோடி எண்கள், {-200,-100} ஆகும்.
06:09 இந்த ஜோடியின் முதல் எண், அதாவது, -200, canvasன் மேல் இடது மூலையின், horizontal coordinateஐ குறிக்கிறது.
06:20 இவ்வாறே, அதே pointன் vertical coordinateஐ , -100 குறிக்கிறது.
06:27 இரண்டாவது ஜோடி, வெள்ளை இடைவெளியின், கீழ் வலது மூலையின் coordinateகளை குறிக்கிறது.
06:35 Properties dialog boxல் நாம் கண்டது போல், இந்த 4 எண்கள், top, bottom, left மற்றும் right fieldகளுக்கு ஒத்திருப்பதை கவனிக்கவும்.
06:45 இப்போது, Icon Viewன் Properties dialog boxஐ பயன்படுத்தி, extentஐ நான் மாற்றுகிறேன்.
06:52 அது, Text Viewன் annotationயிலும் பின், அதன்படி மாறுகிறதா என்று பார்ப்போம்.
06:59 Icon Viewக்கு மாறுகிறேன்.
07:02 Canvasஐ ரைட்-க்ளிக் செய்து, Propertiesஐ தேர்ந்தெடுக்கவும்.
07:07 Left fieldஐ , -150.00க்கு மாற்றவும். Okஐ க்ளிக் செய்யவும்.
07:14 Text Viewஐ க்ளிக் செய்யவும். கீழே scroll செய்யவும்.
07:18 Extentல், முதல் ஜோடி coordinateகள், {-200,-100}ல் இருந்து, {-150,-100}க்கு மாறியிருப்பதை கவனிக்கவும்.
07:30 இது, Icon Viewல், Properties dialog boxஐ பயன்படுத்தி நாம் செய்த மாற்றத்தினால் ஏற்பட்டதாகும்.
07:37 அதனால், Icon annotationல் செய்யப்படுகின்ற எந்த மாற்றமும், Icon Viewல், அதற்கு தொடர்புடைய ஒரு மாற்றத்தை உருவாக்குகிறது, மேலும், இதற்கு நேர்மாறாகவும் நடக்கிறது.
07:46 CoordinateSystemன், ScaleFactor போன்ற மற்ற fieldகள் பற்றிய விவாதம் இந்த டுடோரியலுக்கு அப்பாற்பட்டதாகும்.
07:54 Slideகளுக்கு திரும்பச் செல்கிறேன்.
07:57 Icon annotation, coordinateSystem மற்றும் graphicsஐ , அதன் elementகளாக கொண்டிருக்கிறது என்பதை நாம் முன்பே விவாதித்தோம்.
08:06 Graphics record, பின்வரும் itemகளை கொண்டிருக்கலாம்: Line , Rectangle , Ellipse , Polygon, Text மற்றும்Bitmap.
08:17 இப்போது, இந்த itemகளை, Icon and Diagram viewsல் எப்படி சேர்ப்பது என்பது பற்றி விவாதிப்போம்.
08:25 OMEditக்கு திரும்பச் செல்கிறேன்.
08:29 இந்த annotationகளை மூன்று படிகளில் நாம் புரிந்துகொள்ளலாம். bouncingBallWithAnnotations, தனது Icon Viewல், ஏற்கனவே ஒரு circleஐ புகுத்தப்பெற்றுள்ளது.
08:40 Ellipse annotationஐ பயன்படுத்தி, circle பெறப்படுகிறது. முதலில், அதன் propertyகளை மாற்ற முயற்சிப்போம்.
08:49 ஒரு Ellipse சேர்க்கப்பட்டு, icon annotation னின் graphics field ல், அதன் propertyகள் குறிப்பிடப்பட்டுள்ளதை கவனிக்கவும்.
08:59 Icon Viewக்கு செல்கிறேன்.
09:02 Circleயினுள் இருக்கும், நீல இடைவெளியின் மீது, ரைட்-க்ளிக் செய்யவும். Propertiesஐ தேர்ந்தெடுக்கவும்.
09:09 OriginX, ellipseன் மையத்தின்horizontal coordinate ஆகும்.
09:15 இவ்வாறே, OriginY, ellipseன் மையத்தின்vertical coordinate ஆகும்.
09:22 Extent1X, ellipseன், மிக இடது பக்கமான pointன், horizontal coordinate ஆகும்.
09:29 Extent1Y, ellipseன், மிக மேலான pointன், vertical coordinate ஆகும்.
09:36 இவ்வாறே, Extent2X மற்றும், Extent2Y, ellipseன் மேல் இருக்கின்ற, மிகவும் வலது பக்கமான, மற்றும், மிகவும் கீழான pointகளுக்கு ஒத்திருக்கிறது.
09:48 Line Style, எல்லை கோட்டின் propertyகளை மாற்ற பயன்படுத்தப்படுகிறது.
09:53 Line Styleனின் கீழே இருக்கின்ற Colorஐ க்ளிக் செய்யவும்.
09:57 இது, எல்லையின் நிறத்தை மாற்ற அனுமதிக்கிறது.
10:01 நான் சிவப்பை தேர்ந்தெடுத்து, பின், OKஐ க்ளிக் செய்கிறேன்.
10:05 Line Styleனின் கீழே இருக்கின்ற, Pattern drop downஐ க்ளிக் செய்யவும்.
10:10 இது, எல்லையின் patternஐ மாற்ற அனுமதிக்கிறது. நான் ஒரு solid வரியை தேர்வு செய்துள்ளேன்.
10:17 Thickness field, எல்லையின் தடிப்பை குறிப்பிடுகிறது.
10:21 அதை, 0.5 unitகளுக்கு மாற்றவும்.
10:25 OKஐ க்ளிக் செய்யவும்.
10:27 எல்லையின் நிறம், சிவப்பிற்கு மாறுவதையும், தடிப்பின் அதிகரிப்பையும் கவனிக்கவும்.
10:34 இப்போது வட்டத்தின் மீது, மீண்டும் ஒருமுறை ரைட்-க்ளிக் செய்து, Propertiesஐ தேர்ந்தெடுக்கவும்.
10:40 Fill Styleன் கீழ் உள்ள, Colorஐ க்ளிக் செய்யவும்.
10:44 Color Paletteல், Blackஐ தேர்வு செய்யவும். OKஐ க்ளிக் செய்யவும்.
10:49 இந்த நிறம், ellipseன் உட்பகுதியில் நிரப்பப்பட வேண்டிய நிறத்தை குறியீட்டுக்காட்டுகிறது.
10:56 இப்போது, Fill Pattern drop-down menuஐ க்ளிக் செய்யவும்.
11:00 FillPattern.Horizontalஐ தேர்வு செய்து, பின், OKஐ க்ளிக் செய்யவும்.
11:06 Fill color, கருப்புக்கு மாறியிருப்பதையும், pattern, solidல் இருந்துhorizontal வரிகளுக்கு மாறியிருப்பதையும் கவனிக்கவும்.
11:15 Ellipse annotationஐ விளக்க, இப்போது, Text Viewக்கு மாறுகிறேன். Text Viewஐ க்ளிக் செய்யவும். கீழே scroll செய்யவும்.
11:25 lineColor, மூன்று எண்களை எடுத்துக்கொள்கிறது. அவை எல்லையின் நிறத்தை வரையறுக்கின்றன.
11:31 இந்த மூன்று எண்களில், ஒவ்வொன்றும், 0ல் இருந்து, 255 வரை மதிப்புகளை எடுத்துக்கொள்ள முடியும்.
11:38 அவை, பயன்படுத்தப்பட்ட நிறத்தின் RGB intensityஐ ஒத்திருக்கின்றன.
11:44 fillPattern, உட்புறப்பகுதியில் நிரப்படவேண்டிய patternஐ குறிப்பிடுகிறது.
11:51 extent, coordinateSystemன், extent fieldஉடன் கருத்தளவில் ஒத்திருக்கிறது.
11:57 LineThickness, எல்லையின் தடிப்பை குறியீட்டுக்காட்டுகிறது.
12:02 நாம் ஏற்கனவே பார்த்தது போல், Properties dialog boxஐ பயன்படுத்தி, இந்த அனைத்து fieldகளையும் நாம் மாற்ற முடியும் என்பதை கவனிக்கவும்.
12:10 Tool barஐ பயன்படுத்தி, ஒரு புது ellipseஐ உருவாக்க, Icon Viewக்கு இப்போது நான் மாறுகிறேன். Icon Viewஐ க்ளிக் செய்யவும்.
12:19 சிறிது இடத்தை காலி செய்ய, இருக்கின்ற circle ஐ நான் மீண்டும் ஒழுங்குபடுத்துகிறேன்.
12:24 circleஐ ரைட்- க்ளிக் செய்து, Propertiesஐ தேர்வு செய்யவும்.
12:29 Extent2Yஐ , 0 unitகளுக்கு மாற்றவும். OKஐ க்ளிக் செய்யவும்.
12:35 இப்போது, ஒரு புது ellipseஐ சேர்க்க, toolbarல் இருக்கின்ற, Ellipse பட்டனை க்ளிக் செய்யவும்.
12:42 Canvasல், எங்கினும் லெப்ட்-க்ளிக் செய்து, mouseஐ அழுத்திக்கொண்டே இழுக்கவும்.
12:50 ஒரு Ellipse உருவாக்கப்பட்ட பிறகு, mouse ஐ விடவும்.
12:55 Ellipseஐ ரைட்- க்ளிக் செய்து, propertiesஐ உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்ற, Propertiesஐ தேர்வு செய்யவும். OKஐ க்ளிக் செய்யவும்.
13:05 இவ்வாறே, Tool Barஐ பயன்படுத்தி, ஒரு Line, Polygon, Rectangle மற்றும் Textஐ நீங்கள் சேர்க்கலாம்.
13:13 இப்போது, Diagram Viewஐ நான் விளக்குகிறேன். Diagram Viewஐ க்ளிக் செய்யவும்.
13:19 இங்கு ஒரு வரி சேர்க்கப்பட்டுள்ளதை கவனிக்கவும். இந்த வரியின் propertyகள், Diagram annotationல் குறிப்பிடப்பட்டுள்ளன.
13:28 Diagram annotationஐ புரிந்துகொள்ள, Text Viewக்கு மாறவும். கீழே scroll செய்யவும்.
13:35 Diagram annotation, syntaxல், Icon annotationஐ ஒத்திருக்கிறது.
13:41 தன் component recordகளாக, அது coordinateSystem மற்றும் graphicsஐ கொண்டிருக்கிறது.
13:47 Diagram Viewல் சேர்க்கப்பட்ட Lineனின் propertyகள், இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.
13:53 Line annotationனின் fieldகளை எளிதாக புரிந்துகொள்ளலாம்.
13:58 இப்போது, Icon மற்றும் Diagram View'களுக்கு இடையே உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்வோம்.
14:04 OMEdit Windowஐ வலது பக்கம் நகர்த்துகிறேன்.
14:09 Ctrl + Sஐ அழுத்தி modelஐ சேமிக்கவும்.
14:13 Icon Viewல் காட்டப்படுகின்ற வடிவம், இங்கு காட்டப்பட்டுள்ளபடி, Libraries Browserல் ஒரு iconஆக தோன்றுகிறது.
14:22 ஆனால், Diagram View, component-oriented modelingல் கணிசமாக பயன்படுத்தப்படுகிறது.
14:29 பின்வரும் டுடோரியல்களில், component-oriented modelingஐ பற்றி மேலும் கற்போம்.
14:35 இப்போது, slideகளுக்கு திரும்பச் செல்கிறேன்.
14:39 நாம் ஏற்கனவே விவாதித்தது போல், Ellipse, பின்வரும் fieldகளை கொண்டிருக்கிறது.
14:44 பயிற்சியாக, modelன் Icon Viewல், ஒரு line, polygon, rectangle மற்றும் textஐ சேர்க்கவும்.
14:53 அதன் propertyகளை மாற்றி, அதன் annotationகளை புரிந்துகொள்ளவும்.
14:58 இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம்.
15:02 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். அது, Spoken Tutorial Project ஐ சுருங்க சொல்கிறது.
15:08 ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி நாங்கள் செய்முறை வகுப்புகள் நடத்துகிறோம்.எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
15:14 இந்த ஸ்போகன் டுடோரியலில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், பின்வரும் வலைத்தளத்தை பார்க்கவும்.
15:20 பிரபலமான புத்தகங்களில் இருந்து, தீர்க்கப்பட்ட உதாரணங்களை code செய்வதை நாங்கள் ஒருங்கிணைக்கிறோம். காட்டப்பட்டுள்ள வலைத்தளத்தை பார்க்கவும்.
15:28 Commercial simulator labகளை, OpenModelicaக்கு, இடம் பெயர்க்க நாங்கள் உதவுகிறோம்.
15:33 எங்களது lab migration திட்டம் பற்றிய மேலும் தகவல்களுக்கு, வலைத்தளத்தை பார்க்கவும்.
15:39 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது.
15:46 ஆதரவு அளித்த, OpenModelicaவின் வளர்ச்சிக்கு குழுவிற்கு நாங்கள் நன்று செலுத்துகிறோம். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.

Contributors and Content Editors

Jayashree, Priyacst, Venuspriya