PHP-and-MySQL/C4/Cookies-Part-1/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
---|---|
0:00 | php cookies குறித்த டுடோரியலுக்கு நல்வரவு |
0:04 | special websites ஐ உருவாக்கும் போது Cookies முக்கியமானவை. இதில்தான் user தகவல்களை பதிந்து வைக்கிறோம். |
0:11 | cookie என்பது உங்கள் அல்லது பயனரின் கணினியில் web server ஆல் store செய்யப்பட்ட set of data |
0:18 | அதாவது ஒரு website குப்போனால், 'Remember me' போன்ற தேர்வை செய்தால் நமது விவரங்கள் சேகரிக்கப்பட்டு மீண்டும் அங்கே செல்லும்போது பயன்படுத்தப்படும். |
0:30 | மீண்டும் log in செய்ய வேண்டிய அவசியம் இராது |
0:32 | ஆனால் 'remember me' போன்ற button ஐ சொடுக்கவில்லை எனில் அமர்வுகள் browser ஐ மூடியதும் முடிந்துவிடும். |
0:42 | sessions என்னும் அமர்வுகள் உடனடியாக நிறுத்தப்படும்; cookies பின் கால பயனுக்கு சேமிக்கப்படும். |
0:50 | cookie ஐ உருவாக்குவதை கற்ப்போம். |
0:53 | இதை setcookie function ஆல் செய்யலாம். |
0:55 | இந்த function 5 parameterகள் வரை எடுத்துக்கொள்ளும். நான் பயன்படுத்துவது 3. |
1:00 | முதலில் முக்கியமானது cookie இன் பெயர்; அதை 'name' க்கு அமைக்கிறேன். |
1:05 | இரண்டாவது, cookie இல் இருத்த வேண்டிய data; அதை Alex என type செய்கிறேன். |
1:12 | அடுத்தது கொஞ்சம் சிக்கலானது. |
1:15 | அது எப்போது காலாவதி ஆகும் என்பது. |
1:18 | இதை second களில் அமைக்க வேண்டும். |
1:21 | இதை represent செய்ய ஒரு வேரியபிளை 'exp' என அமைப்பேன். இது நேரத்துக்கு சமம். |
1:28 | இங்கே கொஞ்சம் மதிப்பை இடலாம். |
1:31 | இப்போது இடுவது zero. |
1:33 | இதை echo out செய்ய இந்த cookie function ஐ இப்போதைக்கு நீக்கலாம். |
1:39 | வெறுமே time ஐ அது என்ன செய்கிறது எனக் காட்ட echo out செய்கிறேன். |
1:43 | refresh செய்யலாம். இங்கே நிறைய எண்களை காணலாம். |
1:47 | இதுதான் unique time-stamp. |
1:50 | unique time-stamp என்பது January ஒன்று, 1970 க்கு துவங்குவது. |
1:56 | 1970, January 1 விடியற்காலை 12க்கு |
2:02 | இங்கே அதை பார்க்கலாம் ... seconds எண்ணிக்கை எதிர்காலத்து date போல இருக்கிறது. |
2:10 | உதாரணமாக இது இப்போது 88, இப்போது 89, மேலும் நான் refresh செய்ய செய்ய, ஒவ்வொரு second உம் அதிகமாகிறது. |
2:20 | ஆகவே குறிப்பிட value ஐ அதிகமாக்க இது நல்ல வழி. |
2:28 | இந்த cookie ஒரு நாளில் காலாவதி ஆக, நாளின் நேரத்தை seconds இல் காண வேண்டும். |
2:34 | 24 ஐ 60 ஆல் பெருக்க நாளின் நிமிஷங்கள் கிடைக்கும். |
2:39 | விடையை 60 ஆல் பெருக்க நாளின் seconds கிடைக்கும் அது 86,400. |
2:47 | ஆகவே zero ஐ 86400 ஆல் மாற்றினால், variable "expire" இல் இப்போது ஒரு நாள் கழிந்த நேரம் இருக்கிறது. |
2:56 | நேரம் கருதி நான் இதை copy செய்கிறேன். expire variable ஐ இங்கே சேர்க்கிறேன். |
3:02 | இந்த function 'name' என அழைக்கப்படும் 'Alex' என்னும் value உள்ள cookie ஐ அமைக்கும். மேலும் time function ஐ இங்கே பயன்படுத்தி seconds இல் படிக்க அது ஒரு நாளில் காலாவதி ஆகிவிடும். |
3:13 | refresh செய்யலாம். errors ஏதுமில்லை. அது வேலை செய்கிறது. |
3:19 | commenting ஐ பயன்படுத்தி இது எல்லாவற்றையும் comment out செய்வேன். |
3:23 | அதன் கீழே இந்த cookie ஐ echo out செய்வேன். |
3:26 | இதை ஏன் comment செய்தேன்? பயனர் வலைக்கு வரும் ஒவ்வொரு நேரமும் cookie ஐ அமைக்க தேவையில்லை. |
3:33 | log in script ஐ பயன்படுத்தி பயனர் website இல் log செய்ய அனுமதித்தால், cookie ஐ ஒரு முறை அமைத்தல் போதும்; சேமிக்கப்படும். |
3:41 | மேலும் அமைத்துள்ள நேரத்துக்குள் அதை பயன்படுத்தலாம். |
3:46 | ஆகவே set செய்வது echo மற்றும் dollar sign .. underscore cookie. |
3:52 | இருப்பது cookie யின் பெயர், type செய்வது 'name'. Refresh செய்ய தெரிவது 'Alex'. |
3:59 | சோதித்துப்பார்க்கலாம். browser ஐ மூடி, கணினியை மீள் துவக்கி இங்கே வந்து பார்த்தால் இது இன்னும் Alex. ஏனெனில் அது கணினியில் சேமிக்கப்பட்டது. |
4:11 | சரி இப்போது இன்னொரு cookie ஐ செட் செய்யலாம். இங்கே ... இது 'age'.... என் வயது 19. |
4:24 | என் expiry time இதை அப்படியே வைத்துக்கொள்கிறேன் |
4:29 | இதை இங்கே வைக்கலாம். |
4:31 | block commenting ஐ line-comment ஆல் மாற்றினால் அழகாக இருக்கும். |
4:36 | நம் expiry time க்கு இங்கே இன்னொரு cookie. |
4:41 | அதற்கும் அதே expiry time. சரியாக வருகிறதா என்று பார்க்கலாம். |
4:46 | ஆகவே இதை நீக்கலாம். |
4:48 | இன்னொரு cookie ஐ அதே expiry time உடன் அமைத்தோம். |
4:51 | refresh. சரியாக அமைந்தது. |
4:55 | இதை comment out செய்து இங்கே echo out செய்கிறேன். |
5:01 | ஆகவே ஒன்றுக்கு மேற்பட்ட cookie களை ஒரு பக்கத்தில் அமைக்கலாம்.refresh செய்ய கிடைப்பது 19. |
5:07 | ஒரேஒரு வரியிலும் cookie ஐ அமைக்கலாம். |
5:11 | அதற்கு type செய்கிறேன்.... echo underscore cookie, name மற்றும் எழுதுக.. "is" மற்றும் age. |
5:27 | ஒரு வரியில் Alex வயது 19 என்பது சேமித்த cookies மூலம் தெரிகிறது. |
5:34 | browser ஐ மூடிவிட்டோ, கணினியை மீள்துவக்கியோ இரண்டு மணி நேரம் கழித்தோ வந்து பார்த்தாலும் இந்த தகவல் கணினியில் சேமிக்கப்பட்டு பயன்படுத்த தயாராக இருக்கும். |
5:44 | ஆகவே இவை மிக பயனுள்ளவை; உருவாக்கவும் சுலபம். User ஐ echo out செய்யவும் இயலும் என்பதை கவனிக்கவும். |
5:53 | இன்னொரு function உள்ளது. அது 'print r' அல்லது 'print underscore r' எனப்படும். |
5:58 | நாம் 'dollar underscore cookie' ஐ இங்கே echo out செய்ய இயலும். பின்னால் அதை align செய்யலாம்.... |
6:05 | Refresh செய்ய இங்கே ஒரு array உள்ளது; வேறு value க்கள் உள்ளன. |
6:12 | name உள்ளது. அது equal to Alex ; age உள்ளது. அது equal to 19. |
6:22 | இவை அமைக்கப்பட்ட cookies; இவை cookies இன் values. |
6:27 | நீங்களே இவற்றை echo out செய்ய பயனாகும். |
6:31 | இன்னொரு function ஐ இரண்டாம் பகுதியில் சொல்கிறேன். மேலும் 'if' statement மூலம் cookie அமைக்கப்பட்டதா இல்லையா எனவும் காணலாம். |
6:41 | மேலும் cookie ஐ unset செய்வதையும் பார்க்கலாம். |
6:45 | 2 ஆம் பகுதியில் சந்திப்போம். நன்றி. |