Java/C2/Getting-started-java-Installation/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 11:20, 28 November 2013 by Priyacst (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration


00.01 Java ஐ நிறுவுதல் குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு.


00.07 இந்த tutorialலில் நாம் கற்கப்போவது
00.09 Synaptic Package Manager ஐ பயன்படுத்தி JDK ஐ நிறுவுதல்..
00.13 ஏன் Java?
00.14 Java ன் வகைகள் மற்றும் applicationகள்.
00.17 இங்கு நாம் பயன்படுத்துவது
00.19 Ubuntu version 11.10
00.21 Java Development Environment JDK 1.6
00.26 இந்த tutorial ஐ தொடர இணைய இணைப்பு வேண்டும்.


00.31 உங்கள் கணினியில் Synaptic Package Manager ஐ நிறுவியிருக்க வேண்டும்.
00.35 உங்களுக்கு Linux ல் Terminal, Text Editor மற்றும் Synaptic Package Manager ஐ பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
00.43 இல்லையெனில், spoken-tutorial.org ல் உள்ள Linux க்கான spoken tutorialஐ காணவும்.
00.51 java program ஐ இயக்க JDK, Java Development Kitஐ நிறுவ வேண்டும்.
00.57 JDK பற்றி மேலும் அறிய இந்த இணைய இணைப்புக்குச் செல்லவும்:
01.02 இப்போது Synaptic Package Managerஐ பயன்படுத்தி JDK ஐ நிறுவலாம்.
01.07 இதற்கு root permissions வைத்திருக்க வேண்டும்.
01.10 ஒரு repositoryஐ தேர்ந்தெடுக்கவும் தெரிய வேண்டும்.


01.14 இவை முன்னர் குறிப்பிட்ட Linuxக்கான முன்தேவை tutorialலில் விவரிக்கப்படுகின்றன.
01.19 இப்போது உங்கள் Desktopல் இடது மூலையில் உள்ள Taskbarஐ காணலாம்.
01.25 மேலே DashHomeஐ காணலாம்.
01.28 DashHomeல் சொடுக்கவும்.
01.31 search barல் எழுதுக Synaptic.


01.35 Synaptic Package Managerஐ இங்கே காண்பீர்கள்.
01.38 Synaptic Package Managerஐ சொடுக்கவும்.
01.42 உறுதிப்பாடுக்கு password ஐ கொடுக்கச்சொல்லி கேட்கப்படுவீர்கள்.
01.47 எனவே உங்கள் password ஐ கொடுத்து Authenticateஐ சொடுக்குக.


01.56 இது Synaptic Package Managerஐ திறக்கிறது.
02.03 இப்போது Quick Filter box ல் எழுதுக jdk.


02.08 openjdk-6-jdk என்ற packageஐ காண்கிறோம்.


02.13 அதன்மீது வலது சொடுக்கி Mark for Installation மீது சொடுக்கவும்.


02.17 பின் Apply buttonல் சொடுக்கவும்.
02.20 marked changes பட்டியலை உறுதிசெய்ய கேட்கப்படுவீர்கள்.
02.24 எனவே To be Installed ல் சொடுக்கி Apply button ல் சொடுக்கவும்.
02.30 நிறுவுதல் சில நொடிகள் எடுக்கலாம்.
02.38 இப்போது, option openjdk-6-jdk பச்சை நிறத்தில் இருப்பதைக் காணலாம்.
02.48 எனவே நம் நிறுவுதல் முடிந்தது.
02.52 இப்போது, நிறுவியதை சரிபார்க்கலாம், அதற்கு Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்
03.03 இங்கே Terminal ஐ ஏற்கனவே திறந்துவைத்துள்ளேன்.
03.06 command prompt ல் எழுதுக java space hyphen version பின் Enter செய்க.


03.15 jdkன் version எண் காட்டப்படுவதைக் காணலாம்.


03.20 நீங்கள் பயன்படுத்தும் version ஐ பொருத்து உங்கள் version எண் வேறுபடலாம்.
03.26 வெற்றிகரமாக jdk ஐ நிறுவி விட்டோம்
03.30 இப்போது எளிய Java program இயக்கி வேலைசெய்கிறதா என காண்போம்.
03.35 TestProgram dot java என்ற file பெயரில் சேமித்த code ஐ ஏற்கனவே வைத்துள்ளேன்.
03.42 இப்போது இந்த code ஐ compile செய்து இயக்கலாம்.
03.45 இந்த code... We have successfully run a Java Program என Terminalலில் காட்டுகிறது.
03.53 எனவே Terminalக்கு வருவோம்.
03.57 file TestProgram dot java ஐ Home directory ல் சேமித்துள்ளேன் என்பதை நினைவுகொள்க.
04.03 தற்போது நான் Home Directoryல் உள்ளேன்.
04.07 எனவே command prompt ல் எழுதுக javac space TestProgram dot java.
04.19 இது code ஐ compile செய்ய.
04.21 Enter செய்க.
04.25 இப்போது, code ஐ இயக்குகிறேன்.
04.27 எனவே எழுதுக java space TestProgram பின் Enter செய்க.
04.35 We have successfully run a java program என வெளியீடு பெறுகிறோம்.
04.44 எனவே, நம் நிறுவுதல் சரியானது.
04.48 இப்போது slideகளுக்கு வருவோம்.
04.51 ஏன் Java பயனுள்ளது என இப்போது விளக்குகிறேன்.
04.55 Java எளிமையானது.
04.57 Java... object oriented ஆனது.
04.59 இது platform சார்பற்றது
05.01 இது பாதுகாப்பானது.
05.02 Java அதிக செயல்திறன் கொண்டது.
05.04 Java... multi – thread கொண்டது.
05.07 இப்போது Java ன் சில வகைகள் மற்றும் applications ஐ காணலாம்.
05.11 -JSP அல்லது Java Server Pages: இது சாதாரண HTML tags உடன் கூடிய code ஐ சார்ந்தது.
05.18 JSP... dynamic web pages உருவாக்கத்தில் பயன்படுகிறது.
05.22 -Java Applets: இது web applicationகளுக்கு ஊடாடும் அம்சங்களை வழங்க பயன்படுகிறது.
05.28
05.33 இது XML structured documentகளை இடமாற்ற பயன்படுகிறது.
05.38 -JavaBeans: JavaBeans மீண்டும் பயன்படுத்தக்கூடிய software component ஆகும்.
05.43 இது புதிய அல்லது மேம்பட்ட applicationகளை உருவாக்கப் பயன்படுகிறது.
05.47 -Mobile Java: இது mobile phone போன்ற பல பொழுதுபோக்கு சாதனங்களில் பயன்படுகிறது.
05.53 எனவே இந்த tutorial லில் நாம் கற்றது
05.56 Synaptic Package Manager ஐ பயன்படுத்தில JDK ஐ நிறுவுதல்.
05.59 Java programஐ compile செய்து இயக்குதல்.
06.02 Java பயன்பாட்டின் நன்மைகள்.
06.04 Javaன் வகைகள் மற்றும் Applicationகள்
06.08 மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
06.14 இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
06.17 இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
06.22 Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.


06.27 இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
06.30 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org


06.36 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.


06.47 மேலும் விவரங்களுக்கு
[1] 
06.58 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
07.01 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Gaurav, Pratik kamble, Priyacst