GIMP/C2/Easy-Animation/Tamil

From Script | Spoken-Tutorial
Revision as of 13:08, 3 April 2014 by Priyacst (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration


00.23 இந்த tutorial லில் எளிய animation பற்றி காண்போம்.
00.28 GIMP animation ன் package... GAP அல்லது GIMP animation package எனப்படும். இது Animations, படங்கள் மற்றும் திரைப்படங்கள் குறித்து மிக அதிகமாக செய்யும்
00.43 ஆனால் அதை பின்னர் பார்ப்போம்.


00.46 ஜெர்மனியில் பழைய animationகள் Daumenkino அல்லது Front Cinema எனப்படும்.
00.55 ஆங்கிலத்தில் இது Flip Book அல்லது Flick Book எனப்படும்.
01.02 இந்த புத்தகம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பல படங்களை கொண்டிருக்கும். ஆனால் பக்கத்திற்கு பக்கம் சிறிய மாற்றம் இருக்கும். அவற்றை புரட்டும் போது சிறு நகரும் படத்தைப் பெறுகிறோம்.
01.20 இங்கே இந்த video உம் ஒரு animation ஆகும். ஒரு நொடியில் 25 படங்கள் ஓடும் காட்சியை பார்க்கிறீர்கள் .
01.36 இங்கே இரு விளம்பரங்கள் உள்ளன, இது ரால்ப் ஸ்டைநார்ட் உடையது. animated gif ஐ காட்டும் இது Rob உடையது.
01.51 ரால்ப் ஸ்டைநார்ட் ன் விளம்பரத்தை இங்கே மேம்படுத்த விரும்புகிறேன்.
01.56 இந்த விளம்பரத்தில் Meet The GIMP logo ஐ காட்ட விரும்புகிறேன்.


02.04 இப்போது இந்த படத்தை என் desktop ல் சேமிக்க வேண்டும். வெற்றிகரமாக ஒரு animation ஐ உருவாக்க வேண்டும்.
02.15 எனவே ரால்ப் ஸ்டைநார்ட் ன் படத்தை இங்கிருந்து எடுத்து ...திருடி என் desktop ல் சேமிக்கிறேன்.
02.24 இந்த படத்தை GIMP ல் திறக்கிறேன்.


02.28 இதை tool box மீது இழுத்து விட... இங்கே இது உள்ளது.
02.35 இங்கே இதை சற்று பெரிதாக்குகிறேன்.
02.43 அடிப்படையில் இந்த படத்தில் ஒரு animation உம் இல்லை. ஆனால் layer dialog ல் எட்டு layerகளின் ஒரு அடுக்கு உள்ளது.
02.56 மேலே இது.... index செய்யப்பட்டதும்... 80 by 80 pixelகளின் எட்டு layerகளைக் கொண்டதுமான ஒரு gif படம் என காணலாம்.
03.13 இந்த படம் 256 பலவித நிறங்கள் கொண்டு உருவாக்கப்பட்டது.
03.19 இந்த நிறங்களைக் காண Dialog சென்று பின் ColorMap செல்க.
03.27 இங்கே இந்த படத்தில் பயன்படுத்தப்படும் நிறங்களைக் காணலாம். இங்கே அதிகமான blue மற்றும் சில மற்ற நிறங்கள் உள்ளன. ஒவ்வொரு நிறமும் ஒரு index மற்றும் HTML notation ஐ கொண்டுள்ளது.
03.50 எனவே gif படங்கள் index செய்யப்பட்டவை. rgb படங்கள் அல்ல.... எனவே அவை ஒரு மட்டுப்படுத்தப்பட்ட நிறங்களைக் கொண்டிருக்கும்.
04.05 இப்போது இங்கே frame களை காணலாம்.
04.10 முதலாவது layer... background என பெயரிடப்பட்டிருப்பதைக் காணலாம். அடைப்புகளில் milliseconds உள்ளது அதாவது 5 Seconds.
04.25 எனவே இந்த படம் 5 நொடிகளுக்கு காட்டப்படும். தொடர்ந்து frameகள் 2,3,4... 100 millisecondகளுடன்... replace தேர்வும் உள்ளது.
04.42 frameகளை காண shift key ஐ அழுத்தி... பிடித்து.... இங்கே கண்ணில் சொடுக்குக. மற்ற அனைத்து frameகளும் மறைக்கப்படுகிறது.
04.55 இப்போது அவற்றை மேலே இங்கே அடுக்க முடியும்.
05.03 index நிறங்களை பயன்படுத்துவதில் ஒரு குறை உள்ளது.
05.07 இங்கே பல புள்ளிகளைக் காணலாம். ஏனெனில் படம் வெறும் 256 வெவ்வேறு நிறங்களை மட்டும் கொண்டது.
05.18 எனவே இங்கே இது என் background படம்.
05.23 இது மற்றொன்று. மற்றொரு படத்திலும் நான் இந்த animation ஐ பயன்படுத்தியுள்ளேன். இந்த படம் மக்களால் உருவாக்கப்பட்டது.... பாடங்களை பின்தொடர்வதற்கு பதிலாக.... அவரின் அனுமதியுடன் இதை நான் பயன்படுத்தியுள்ளேன்.
05.44 இந்த மீதி படங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மிருதுவான வழியைப் பெற மற்ற படங்களின் கலவையே.
05.56 இந்த animation ஐ மீண்டும் உருவாக்க இந்த அடுக்கிலிருந்து இரு படங்களை எடுக்க வேண்டும். அது மிக சுலபம்.
06.06 இங்கே சிறுபடத்தின் மீது சொடுக்கி mouse button ஐ பிடித்து மேலே tool box க்கு இழுக்கவும்.
06.15 இங்கே இது என் முதல் படம்.
06.18 இப்போது இங்கே சொடுக்குக... இது இங்கே என் இரண்டாம் படம்.
06.24 எனவே இங்கே இந்த இரு படங்கள் உள்ளன. என் உண்மை animation ஐ மூடலாம். இதை எதையும் நான் சேமிக்க விரும்பவில்லை.
06.40 இப்போது Meet the GIMP logo ஐ சேர்க்க விரும்புகிறேன்.


06.46 அதை tool box மீது இழுக்கவும். இங்கே இது உள்ளது.
06.53 80 by 80 pixel களுக்கு இதை மறுஅளவாக்க வேண்டும். பின் வெள்ளைநிறத்தை என் background ஆக சேர்க்க வேண்டும். ஏனெனில் கருப்பு இந்த படத்திற்கு மிக கடுமையாக இருக்கும்.
07.12 அதை செய்ய ஒரு புது layer ஐ சேர்க்கிறேன், white ல் நிரப்புகிறேன். அதை கீழே இழுக்கிறேன். இப்போது வெள்ளை என் background ஆக உள்ளது.


07.25 Layer dialog ல் வலது சொடுக்கி Flatten Image ஐ தேர்க.
07.33 இப்போது வெள்ளையில் flat Meet The GIMP logo உள்ளது.
07.39 இப்போது Image சென்று, Scale Image செல்க. 80 pixelகள் இருக்க விரும்புகிறேன், Interpolation ல், cubic நன்று. Scale ல் சொடுக்குக.
07.51 இப்போது படம் மறுஅளவாக்கப்படுகிறது. ஆனால் இது மிருதுவாக உள்ளது.
07.58 மறுஅளவாக்கலுக்கு பின் அதை கூர்மையாக்க வேண்டும்.
08.03 எனவே செல்க Filters, Enhance, Sharpen.
08.09 sharpness ஐ அதிகரிக்க வேண்டும் என நினைக்கிறேன்.
08.15 இது நன்றாக உள்ளது என நினைக்கிறேன்.
08.22 இப்போது ஒரு animation ஆக உருவாக காத்திருக்கும் 3 படங்கள் உள்ளன.
08.29 ஒரு விஷயம் நான் மறந்தே போனேன்... இந்த அடிப்படை படங்களை சேமிப்பது..
08.37 இது முதலாவது இங்குள்ளது. Meet The GIMP. இதை mtg80.xcf என சேமிக்கிறேன்.
08.55 இங்கே இதுவும்.
08.58 menu ஐ அணுக மற்றொரு வழி படத்தில் வலது சொடுக்கி Image, Mode பின் RGB.
09.11 பின் செல்க ... File பின் Save As.
09.21 இந்த படத்தை என் அடிப்படையாக பயன்படுத்துவேன்.
09.26 எனவே, இதை மீண்டும் சேமிக்கிறேன். இம்முறை ஒரு copy ஆக.
09.33 இதை avatar.xcf என்கிறேன்.
09.41 ஆம் இதை மாற்ற வேண்டும், இதை முன்னர் செய்திருந்தேன்.
09.48 செல்க File, Open.
09.52 எனவே இங்கே இது என் அடிப்படை படம்.
09.56 முதலாவதாக நான் செய்ய விரும்புவது இந்த படத்தை Meet The GIMP Logo உடன் சேர்ப்பது.
10.05 அதற்கு இதை ஒரு பிரதி எடுக்கிறேன். பின் இதை logo உடன் கலக்கிறேன்.
10.14 இந்த படத்தை சொடுக்குவதன் மூலம் தேர்ந்து இந்த tool box க்கு இழுக்கிறேன். இங்கே என் layer உள்ளது. இப்போது logo ஐ தேர்ந்து இந்த படத்தின் மீது இழுக்கிறேன். பெயரிடப்படாத ஒரு துண்டு layer ஐ பெறுகிறோம். இது சேமிக்கப்படுவதில்லை.
10.40 இப்போது என் படங்களுடன் இரு layerகள் உள்ளன.
10.46 இந்த இரு layerகளுக்கு இடையே 3 படிகள் வேண்டும்.


10.51 அதை செய்ய transparency ஐ தேர்கிறேன். அது 25%.
11.01 இப்போது இந்த படத்தை flatten செய்து.... இதை என் avatar.xcf படத்திற்கு இழுக்கிறேன்.
11.11 இந்த பெயர்களை பின்னர் மாற்றுவேன்
11.18 பெயரிடப்படாத படத்திற்கு செல்கிறேன், Edit பின் Undo செல்க.
11.27 இப்போது transparency ஐ 50% க்கு அமைக்கிறேன்.
11.36 Layer ல் வலது சொடுக்கி Flatten Image ஐ தேர்க, இதை இழுப்பதற்கு முன், இந்த layer ஐ Frame X.... அடைப்புகளில் 100 milliseconds என மறுபெயரிடுகிறேன்.
12.02 இப்போது avatar.xcf க்கு இதை இழுக்கிறேன். பின் என் படத்திற்கு வருகிறேன்.
12.14 ctrl + Z ஐ அழுத்துகிறேன். மேல் layerன் opacity ஐ 75% போல மாற்றுகிறேன்.
12.26 layer ல் வலது சொடுக்கி Flatten Image ஐ தேர்க.
12.34 இந்த layer ஐ இந்த படத்துக்கு இழுக்கிறேன்.
12.39 இந்த animation படிக்கு அவ்வளவுதான்.
12.45 இப்போது logo ஐ இந்த படத்துக்கு இழுக்க வேண்டும். இங்கே ஒருங்கிணைந்த முதல் 3 layerகள் உள்ளன.
12.57 இப்போது இங்கே துண்டு layer ஐ மூடுகிறேன். இதை சேமிக்கவில்லை.
13.05 இப்போது இது எவ்வாறு வேலை செய்தது என பார்க்கலாம்.
13.10 ஆனால் அதற்கு முன் இங்கே என் வேலையை சேமிக்கிறேன்.
13.15 இப்போது செல்க Filters, Animation பின் Playback.
13.26 இங்கே என் animation.
13.29 play மீது சொடுக்குகிறேன்.
13.33 இதை இயக்கும் முன் முதலில் இந்த layerகளின் பெயர்களை மாற்ற வேண்டும்.
13.43 மற்ற பல image word processing option ல் செய்வது போல இந்த layerகளை மறுபெயரிட முடியும்.
13.56 text ஐ தேர்ந்தெடுத்து, Ctrl + C ஐ அழுத்துக. அடுத்த layer ல் double click செய்து Ctrl + V ஐ அழுத்தி தேவையான மாற்றத்தை செய்க.
14.14 இப்போது அனைத்து frameகளும் அவற்றின் சரியான பெயர்களை கொண்டுள்ளன.
14.22 எனவே என் படத்துக்கு திரும்ப சென்று Filters, Animation, Playback செல்க. இதை இங்கே காணலாம்.
14.34 அடிப்படை படத்தை பார்க்கிறோம்.
14.38 இது மற்றொரு படத்துக்கு மாற்றப்படுகிறது. ஆனால் மிக வேகமாக உள்ளது.
14.50 இது சற்று மெதுவாக இருக்கலாம்.
14.55 எனவே கால அளவை மாற்றுகிறேன். 200 milliseconds என்கிறேன்.
15.02 எனவே மீண்டும் Filters, Animation, Playback.
15.15 இது சரி என நினைக்கிறேன்.
15.18 கடைசியாக செய்ய வேண்டியது... இந்த படத்தை index செய்து ஒரு gif படமாக சேமிக்கவும். இது சுலபமாக செய்யப்படுகிறது.
15.30 செல்க File, Save As. பெயர் extention ஐ GIF என மாற்றி Save ல் சொடுக்குக.
15.43 பின் option dialog ஐ பெறுகிறேன்
15.47 இங்கே இந்த layerகளை gif ஆல் கையாள முடியாது.
15.52 இது animation frameகளை மட்டுமே கையாளும்.
15.57 எனவே இதை Animation ஆக சேமிக்க விரும்புகிறேன்.
16.04 GIF ஆல் Grey Scale அல்லது Index Imageகளை மட்டும் கையாள முடியும்.
16.10 எனவே இதை index விளைவாக மாற்ற விரும்புகிறேன்.
16.15 இவை முன்னிருப்பு setting. என் படத்திற்கு இவை போதும் என நினைக்கிறேன். இதை என்னால் மாற்ற முடியும். ஆனால் அது தேவை என நினைக்கவில்லை.
16.26 எனவே சொடுக்குக Export.
16.29 இங்கே Created With GIMP மற்றும் Loop forever ஐ காண்க.
16.36 Frame disposal ல் frame லிருந்து frame ஐ மாற்ற விரும்புகிறேன்.
16.43 இந்த மற்ற தேர்வுகள் குறியிடப்படவில்லை. எனவே அவற்றை குறியிடாமலேயே விடுகிறேன். ஏனெனில், காலஅளவை 5000 அல்லது 2000 milliseconds என மாற்ற விரும்புகிறேன் எனில் பின் இதை செய்யலாம்.
17.01 இப்போது Save ல் சொடுக்குகிறேன். விளைவைக் காண்போம்.
17.07 அதற்கு GIMP ஐ பயன்படுத்தவில்லை. ஆனால் Mozilla.
17.13 Mozilla ல் எதிர்பார்த்தபடி வேலைசெய்கிறது.
17.18 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
17.22 இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Ranjana