GIMP/C2/Easy-Animation/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:23 இந்த tutorial லில் எளிய animation பற்றி காண்போம்.
00:28 GIMP animation ன் package... GAP அல்லது GIMP animation package எனப்படும். இது Animations, படங்கள் மற்றும் திரைப்படங்கள் குறித்து மிக அதிகமாக செய்யும்
00:43 ஆனால் அதை பின்னர் பார்ப்போம்.
00:46 ஜெர்மனியில் பழைய animationகள் Daumenkino அல்லது Front Cinema எனப்படும்.
00:55 ஆங்கிலத்தில் இது Flip Book அல்லது Flick Book எனப்படும்.
01:02 இந்த புத்தகம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பல படங்களை கொண்டிருக்கும். ஆனால் பக்கத்திற்கு பக்கம் சிறிய மாற்றம் இருக்கும். அவற்றை புரட்டும் போது சிறு நகரும் படத்தைப் பெறுகிறோம்.
01:20 இங்கே இந்த video உம் ஒரு animation ஆகும். ஒரு நொடியில் 25 படங்கள் ஓடும் காட்சியை பார்க்கிறீர்கள் .
01:36 இங்கே இரு விளம்பரங்கள் உள்ளன, இது ரால்ப் ஸ்டைநார்ட் உடையது. animated gif ஐ காட்டும் இது Rob உடையது.
01:51 ரால்ப் ஸ்டைநார்ட் ன் விளம்பரத்தை இங்கே மேம்படுத்த விரும்புகிறேன்.
01:56 இந்த விளம்பரத்தில் Meet The GIMP logo ஐ காட்ட விரும்புகிறேன்.
02:04 இப்போது இந்த படத்தை என் desktop ல் சேமிக்க வேண்டும். வெற்றிகரமாக ஒரு animation ஐ உருவாக்க வேண்டும்.
02:15 எனவே ரால்ப் ஸ்டைநார்ட் ன் படத்தை இங்கிருந்து எடுத்து ...திருடி என் desktop ல் சேமிக்கிறேன்.
02:24 இந்த படத்தை GIMP ல் திறக்கிறேன்.
02:28 இதை tool box மீது இழுத்து விட... இங்கே இது உள்ளது.
02:35 இங்கே இதை சற்று பெரிதாக்குகிறேன்.
02:43 அடிப்படையில் இந்த படத்தில் ஒரு animation உம் இல்லை. ஆனால் layer dialog ல் எட்டு layerகளின் ஒரு அடுக்கு உள்ளது.
02:56 மேலே இது.... index செய்யப்பட்டதும்... 80 by 80 pixelகளின் எட்டு layerகளைக் கொண்டதுமான ஒரு gif படம் என காணலாம்.
03:13 இந்த படம் 256 பலவித நிறங்கள் கொண்டு உருவாக்கப்பட்டது.
03:19 இந்த நிறங்களைக் காண Dialog சென்று பின் ColorMap செல்க.
03:27 இங்கே இந்த படத்தில் பயன்படுத்தப்படும் நிறங்களைக் காணலாம். இங்கே அதிகமான blue மற்றும் சில மற்ற நிறங்கள் உள்ளன. ஒவ்வொரு நிறமும் ஒரு index மற்றும் HTML notation ஐ கொண்டுள்ளது.
03:50 எனவே gif படங்கள் index செய்யப்பட்டவை. rgb படங்கள் அல்ல.... எனவே அவை ஒரு மட்டுப்படுத்தப்பட்ட நிறங்களைக் கொண்டிருக்கும்.
04:05 இப்போது இங்கே frame களை காணலாம்.
04:10 முதலாவது layer... background என பெயரிடப்பட்டிருப்பதைக் காணலாம். அடைப்புகளில் milliseconds உள்ளது அதாவது 5 Seconds.
04:25 எனவே இந்த படம் 5 நொடிகளுக்கு காட்டப்படும். தொடர்ந்து frameகள் 2,3,4... 100 millisecondகளுடன்... replace தேர்வும் உள்ளது.
04:42 frameகளை காண shift key ஐ அழுத்தி... பிடித்து.... இங்கே கண்ணில் சொடுக்குக. மற்ற அனைத்து frameகளும் மறைக்கப்படுகிறது.
04:55 இப்போது அவற்றை மேலே இங்கே அடுக்க முடியும்.
05:03 index நிறங்களை பயன்படுத்துவதில் ஒரு குறை உள்ளது.
05:07 இங்கே பல புள்ளிகளைக் காணலாம். ஏனெனில் படம் வெறும் 256 வெவ்வேறு நிறங்களை மட்டும் கொண்டது.
05:18 எனவே இங்கே இது என் background படம்.
05:23 இது மற்றொன்று. மற்றொரு படத்திலும் நான் இந்த animation ஐ பயன்படுத்தியுள்ளேன். இந்த படம் மக்களால் உருவாக்கப்பட்டது.... பாடங்களை பின்தொடர்வதற்கு பதிலாக.... அவரின் அனுமதியுடன் இதை நான் பயன்படுத்தியுள்ளேன்.
05:44 இந்த மீதி படங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மிருதுவான வழியைப் பெற மற்ற படங்களின் கலவையே.
05:56 இந்த animation ஐ மீண்டும் உருவாக்க இந்த அடுக்கிலிருந்து இரு படங்களை எடுக்க வேண்டும். அது மிக சுலபம்.
06:06 இங்கே சிறுபடத்தின் மீது சொடுக்கி mouse button ஐ பிடித்து மேலே tool box க்கு இழுக்கவும்.
06:15 இங்கே இது என் முதல் படம்.
06:18 இப்போது இங்கே சொடுக்குக... இது இங்கே என் இரண்டாம் படம்.
06:24 எனவே இங்கே இந்த இரு படங்கள் உள்ளன. என் உண்மை animation ஐ மூடலாம். இதை எதையும் நான் சேமிக்க விரும்பவில்லை.
06:40 இப்போது Meet the GIMP logo ஐ சேர்க்க விரும்புகிறேன்.
06:46 அதை tool box மீது இழுக்கவும். இங்கே இது உள்ளது.
06:53 80 by 80 pixel களுக்கு இதை மறுஅளவாக்க வேண்டும். பின் வெள்ளைநிறத்தை என் background ஆக சேர்க்க வேண்டும். ஏனெனில் கருப்பு இந்த படத்திற்கு மிக கடுமையாக இருக்கும்.
07:12 அதை செய்ய ஒரு புது layer ஐ சேர்க்கிறேன், white ல் நிரப்புகிறேன். அதை கீழே இழுக்கிறேன். இப்போது வெள்ளை என் background ஆக உள்ளது.
07:25 Layer dialog ல் வலது சொடுக்கி Flatten Image ஐ தேர்க.
07:33 இப்போது வெள்ளையில் flat Meet The GIMP logo உள்ளது.
07:39 இப்போது Image சென்று, Scale Image செல்க. 80 pixelகள் இருக்க விரும்புகிறேன், Interpolation ல், cubic நன்று. Scale ல் சொடுக்குக.
07:51 இப்போது படம் மறுஅளவாக்கப்படுகிறது. ஆனால் இது மிருதுவாக உள்ளது.
07:58 மறுஅளவாக்கலுக்கு பின் அதை கூர்மையாக்க வேண்டும்.
08:03 எனவே செல்க Filters, Enhance, Sharpen.
08:09 sharpness ஐ அதிகரிக்க வேண்டும் என நினைக்கிறேன்.
08:15 இது நன்றாக உள்ளது என நினைக்கிறேன்.
08:22 இப்போது ஒரு animation ஆக உருவாக காத்திருக்கும் 3 படங்கள் உள்ளன.
08:29 ஒரு விஷயம் நான் மறந்தே போனேன்... இந்த அடிப்படை படங்களை சேமிப்பது..
08:37 இது முதலாவது இங்குள்ளது. Meet The GIMP. இதை mtg80.xcf என சேமிக்கிறேன்.
08:55 இங்கே இதுவும்.
08:58 menu ஐ அணுக மற்றொரு வழி படத்தில் வலது சொடுக்கி Image, Mode பின் RGB.
09:11 பின் செல்க ... File பின் Save As.
09:21 இந்த படத்தை என் அடிப்படையாக பயன்படுத்துவேன்.
09:26 எனவே, இதை மீண்டும் சேமிக்கிறேன். இம்முறை ஒரு copy ஆக.
09:33 இதை avatar.xcf என்கிறேன்.
09:41 ஆம் இதை மாற்ற வேண்டும், இதை முன்னர் செய்திருந்தேன்.
09:48 செல்க File, Open.
09:52 எனவே இங்கே இது என் அடிப்படை படம்.
09:56 முதலாவதாக நான் செய்ய விரும்புவது இந்த படத்தை Meet The GIMP Logo உடன் சேர்ப்பது.
10:05 அதற்கு இதை ஒரு பிரதி எடுக்கிறேன். பின் இதை logo உடன் கலக்கிறேன்.
10:14 இந்த படத்தை சொடுக்குவதன் மூலம் தேர்ந்து இந்த tool box க்கு இழுக்கிறேன். இங்கே என் layer உள்ளது. இப்போது logo ஐ தேர்ந்து இந்த படத்தின் மீது இழுக்கிறேன். பெயரிடப்படாத ஒரு துண்டு layer ஐ பெறுகிறோம். இது சேமிக்கப்படுவதில்லை.
10:40 இப்போது என் படங்களுடன் இரு layerகள் உள்ளன.
10:46 இந்த இரு layerகளுக்கு இடையே 3 படிகள் வேண்டும்.
10:51 அதை செய்ய transparency ஐ தேர்கிறேன். அது 25%.
11:01 இப்போது இந்த படத்தை flatten செய்து.... இதை என் avatar.xcf படத்திற்கு இழுக்கிறேன்.
11:11 இந்த பெயர்களை பின்னர் மாற்றுவேன்
11:18 பெயரிடப்படாத படத்திற்கு செல்கிறேன், Edit பின் Undo செல்க.
11:27 இப்போது transparency ஐ 50% க்கு அமைக்கிறேன்.
11:36 Layer ல் வலது சொடுக்கி Flatten Image ஐ தேர்க, இதை இழுப்பதற்கு முன், இந்த layer ஐ Frame X.... அடைப்புகளில் 100 milliseconds என மறுபெயரிடுகிறேன்.
12:02 இப்போது avatar.xcf க்கு இதை இழுக்கிறேன். பின் என் படத்திற்கு வருகிறேன்.
12:14 ctrl + Z ஐ அழுத்துகிறேன். மேல் layerன் opacity ஐ 75% போல மாற்றுகிறேன்.
12:26 layer ல் வலது சொடுக்கி Flatten Image ஐ தேர்க.
12:34 இந்த layer ஐ இந்த படத்துக்கு இழுக்கிறேன்.
12:39 இந்த animation படிக்கு அவ்வளவுதான்.
12:45 இப்போது logo ஐ இந்த படத்துக்கு இழுக்க வேண்டும். இங்கே ஒருங்கிணைந்த முதல் 3 layerகள் உள்ளன.
12:57 இப்போது இங்கே துண்டு layer ஐ மூடுகிறேன். இதை சேமிக்கவில்லை.
13:05 இப்போது இது எவ்வாறு வேலை செய்தது என பார்க்கலாம்.
13:10 ஆனால் அதற்கு முன் இங்கே என் வேலையை சேமிக்கிறேன்.
13:15 இப்போது செல்க Filters, Animation பின் Playback.
13:26 இங்கே என் animation.
13:29 play மீது சொடுக்குகிறேன்.
13:33 இதை இயக்கும் முன் முதலில் இந்த layerகளின் பெயர்களை மாற்ற வேண்டும்.
13:43 மற்ற பல image word processing option ல் செய்வது போல இந்த layerகளை மறுபெயரிட முடியும்.
13:56 text ஐ தேர்ந்தெடுத்து, Ctrl + C ஐ அழுத்துக. அடுத்த layer ல் double click செய்து Ctrl + V ஐ அழுத்தி தேவையான மாற்றத்தை செய்க.
14:14 இப்போது அனைத்து frameகளும் அவற்றின் சரியான பெயர்களை கொண்டுள்ளன.
14:22 எனவே என் படத்துக்கு திரும்ப சென்று Filters, Animation, Playback செல்க. இதை இங்கே காணலாம்.
14:34 அடிப்படை படத்தை பார்க்கிறோம்.
14:38 இது மற்றொரு படத்துக்கு மாற்றப்படுகிறது. ஆனால் மிக வேகமாக உள்ளது.
14:50 இது சற்று மெதுவாக இருக்கலாம்.
14:55 எனவே கால அளவை மாற்றுகிறேன். 200 milliseconds என்கிறேன்.
15:02 எனவே மீண்டும் Filters, Animation, Playback.
15:15 இது சரி என நினைக்கிறேன்.
15:18 கடைசியாக செய்ய வேண்டியது... இந்த படத்தை index செய்து ஒரு gif படமாக சேமிக்கவும். இது சுலபமாக செய்யப்படுகிறது.
15:30 செல்க File, Save As. பெயர் extention ஐ GIF என மாற்றி Save ல் சொடுக்குக.
15:43 பின் option dialog ஐ பெறுகிறேன்
15:47 இங்கே இந்த layerகளை gif ஆல் கையாள முடியாது.
15:52 இது animation frameகளை மட்டுமே கையாளும்.
15:57 எனவே இதை Animation ஆக சேமிக்க விரும்புகிறேன்.
16:04 GIF ஆல் Grey Scale அல்லது Index Imageகளை மட்டும் கையாள முடியும்.
16:10 எனவே இதை index விளைவாக மாற்ற விரும்புகிறேன்.
16:15 இவை முன்னிருப்பு setting. என் படத்திற்கு இவை போதும் என நினைக்கிறேன். இதை என்னால் மாற்ற முடியும். ஆனால் அது தேவை என நினைக்கவில்லை.
16:26 எனவே சொடுக்குக Export.
16:29 இங்கே Created With GIMP மற்றும் Loop forever ஐ காண்க.
16:36 Frame disposal ல் frame லிருந்து frame ஐ மாற்ற விரும்புகிறேன்.
16:43 இந்த மற்ற தேர்வுகள் குறியிடப்படவில்லை. எனவே அவற்றை குறியிடாமலேயே விடுகிறேன். ஏனெனில், காலஅளவை 5000 அல்லது 2000 milliseconds என மாற்ற விரும்புகிறேன் எனில் பின் இதை செய்யலாம்.
17:01 இப்போது Save ல் சொடுக்குகிறேன். விளைவைக் காண்போம்.
17:07 அதற்கு GIMP ஐ பயன்படுத்தவில்லை. ஆனால் Mozilla.
17:13 Mozilla ல் எதிர்பார்த்தபடி வேலைசெய்கிறது.
17:18 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
17:22 இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Ranjana