Health-and-Nutrition/C2/How-to-bathe-a-newborn/Tamil
From Script | Spoken-Tutorial
|
|
00:00 | பச்சிளம் குழந்தையை எவ்வாறு குளிப்பாட்டுவது குறித்த Spoken tutorial க்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது- குளியலுக்கு முன் மற்றும் குளியலின் போது, ஒரு தாய் அல்லது பராமரிப்பாளருக்கான பாதுகாப்பு உதவிக்குறிப்புகள் |
00:15 | ஒரு ஒரு குழந்தையை முதலில் எப்போது குளிப்பாட்டுவது, ஸ்பாஞ் குளியல், |
00:20 | வழக்கமான குளியல், பாரம்பரிய குளியல், |
00:23 | மலைப்பாங்கான பகுதிகள் அல்லது குளிர்ந்த பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு குளியல் மற்றும் Cradle cap. |
00:32 | பச்சிளம் குழந்தையை எப்படி குளிப்பாட்டுவது குறித்து புதிய பெற்றோர்கள் ஆர்வமாக இருப்பர். |
00:37 | குழந்தையை குளிப்பாட்டும் போது, அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். |
00:42 | ஒரு சிறிய தவறு கூட பச்சிளம் குழந்தைக்கு பெரிய தீங்கை விளைவிக்கலாம். |
00:46 | தொடங்குவதற்கு முன், ஒரு குழந்தையை குளிப்பாட்டுவதற்கு முன் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை அறிந்து கொள்வது அவசியம் - |
00:54 | தாய் அல்லது குடும்ப உறுப்பினர்- குழந்தையைத் தொடுவதற்கு முன்பு எப்போதும் விரல் நகங்களை வெட்டியிருக்க வேண்டும் மற்றும் |
01:02 | மோதிரங்கள், வளையல்கள் அல்லது கடிகாரங்களை அணிந்திருக்கக்கூடாது |
01:07 | இது குழந்தைக்கு காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களை குறைக்கும். |
01:11 | எனவே, ஒரு குழந்தையை முதலில் எப்போது குளிப்பாட்ட வேண்டும்? |
01:16 | பிரசவத்திற்கு 48 மணி நேரத்திற்குப் பிறகு குழந்தையை ஸ்பாஞ்சினால் குளிப்பாட்ட ஆரம்பிக்கலாம். |
01:22 | தொப்புள் கொடி விழும் வரை ஸ்பாஞ்சினால் மட்டுமே குளிப்பாட்ட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். |
01:29 | தொப்பிள் கொடி விழுந்தவுடன், தாய் அல்லது வேறு எந்த குடும்ப உறுப்பினரும் குழந்தையை வழக்கமான முறையில் குளிப்பாட்ட ஆரம்பிக்கலாம். |
01:38 | இருப்பினும், ஒரு குழந்தை குறைந்த எடையுடன் பிறந்தால், அத்தகைய குழந்தைக்கு 2 கிலோகிராம் வரை எடை அதிகரிக்கும் வரை ஸ்பாஞ்சினால் குளிப்பாட்ட வேண்டும். |
01:49 | ஸ்பாஞ்சினால் எப்படி குளிப்பாட்டுவது என்று பார்ப்போம். |
01:53 | தொடங்குவதற்கு முன், மூடிய ஜன்னல்களுடன் அறை போதுமான அளவு சூடாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தவும். |
02:00 | ஒரு ஸ்பாஞ் குளியலுக்கு முன் மிகவும் மென்மையான, சுத்தமான, சிறிய துணியை தயாராக வைத்திருக்கவும். |
02:07 | குழந்தையை பாதுகாப்பான, சமமான மேற்பரப்பில் வைக்க வேண்டும். |
02:12 | தரை பாதுகாப்பானது. |
02:15 | குழந்தையை உயர்ந்த மேடையில் வைக்க வேண்டாம். |
02:19 | குளிப்பதற்கான நீரின் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருக்கக்கூடாது. |
02:26 | தாய் தனது முழங்கை அல்லது மணிக்கட்டைப் பயன்படுத்தி நீரின் வெப்பநிலையை சரிபார்க்க வேண்டும். |
02:32 | குளிக்கும் போது, முதலில் சுத்தம் செய்ய சோப்பு நீரைப் பயன்படுத்தவும். |
02:37 | சோப்பு நீரை உருவாக்க எப்போதும் லேசான, நிறமற்ற மற்றும் மணமற்ற சோப்பு அல்லது குழந்தை சோப்பை பயன்படுத்தவும். |
02:45 | பின்னர் சோப்பை அகற்ற சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்தவும். |
02:50 | சிறிய, மென்மையான துணியை தண்ணீரில் நனைத்து அதிகப்படியான தண்ணீரை பிழிந்து நீக்கவும். |
02:56 | இப்போது குழந்தையின் கண்ணை உள் மூலையில் இருந்து வெளிப்புற விளிம்பு வரை துடைக்கவும். |
03:02 | மற்ற உடல் பாகங்களைத் துடைக்க அதே துணியைப் பயன்படுத்த வேண்டாம். |
03:06 | மற்ற உடல் பாகங்களை சுத்தம் செய்ய எப்போதும் புதிய மற்றும் மென்மையான துணியைப் பயன்படுத்துங்கள். |
03:12 | மேலும், மடிப்புகளை சுத்தம் செய்ய மறக்காதீர்கள் - அக்குள் பகுதி, காதுகளுக்கு பின்னால், |
03:18 | கழுத்தில், கை விரல்கள் மற்றும் கால்விரல்களுக்கு இடையில் மற்றும் பிறப்புறுப்பு பகுதியில். |
03:25 | ஸ்பாஞ் குளியல் என்றால் என்ன என்பதை விவாதித்தோம், இப்போது வழக்கமான குளியல் பற்றி அறிந்து கொள்வோம். |
03:31 | தொப்புள் கொடி விழுந்தபின் ஆரோக்கியமான எல்லா குழந்தைகளையும் வழக்கமான முறையில் குளிப்பாட்ட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும் |
03:39 | ஒரு வழக்கமான குளியலின் போது, நீங்கள் ஒரு குளியல் தொட்டியைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் - முதலில், குளியல் தொட்டியின் 2 அங்குலங்கள் வரை சோப்பு நீரால் நிரப்பவும். |
03:48 | சோப்பு நீரை உருவாக்க, முன்பு விளக்கியபடி எப்போதும் லேசான நிறமற்ற மற்றும் மணமற்ற சோப்பு அல்லது குழந்தை சோப்பை பயன்படுத்தவும். |
03:58 | மற்றொரு தொட்டியில் நல்ல தண்ணீரை நிரப்பி தயாராக வைத்திருக்கவும். |
04:03 | பின்னர், இரண்டு தொட்டிகளிலும் உள்ள தண்ணீரின் வெப்பநிலையை உங்கள் முழங்கையால் சரிபார்க்கவும். |
04:09 | நீரின் வெப்பநிலையை சரிபார்த்த பிறகு, குழந்தையை மிகவும் கவனமாக சோப்பு நீரைக் கொண்ட தொட்டியில் வைக்கவும், தலையை எப்போதும் தாங்கி பிடித்துக்கொள்ள உறுதிப்படுத்தவும். |
04:22 | குழந்தை ஏற்கனவே தொட்டியில் இருக்கும்போது கூடுதல் தண்ணீரை சேர்க்க வேண்டாம். |
04:27 | தொடங்குவதற்கு- முதலில், மணமற்ற மற்றும் நிறமற்ற குழந்தை ஷாம்பு அல்லது சோப்பைப் பயன்படுத்தி குழந்தையின் தலையைக் கழுவுங்கள். |
04:35 | பின்னர் மெதுவாக நல்ல தண்ணீரில் சோப்பை கழுவவும். |
04:39 | அடுத்து, மிகவும் அசுத்தம் அடையக்கூடிய, மடிப்புக்கள், பிறப்புறுப்பு பகுதி மற்றும் உடலின் எஞ்சிய பகுதிகளையும் சுத்தம் செய்யவும். |
04:47 | இறுதியில், உடலின் மற்ற பகுதிகளை மெதுவாக நல்ல தண்ணீரில் கழுவவும். |
04:53 | அடுத்து, தாய் அல்லது பராமரிப்பாளர் பாரம்பரிய இந்திய முறையில் குழந்தையை குளிப்பாட்ட விரும்பினால் , உங்கள் கால்களை நீட்டி தரையில் உட்கார்ந்து கொள்ளுங்கள். |
05:06 | பின்னர், குழந்தையை உங்கள் காலில் வைக்கவும். |
05:09 | குழந்தையின் தலை, தாய் அல்லது பராமரிப்பாளரின் பாதத்தின் அருகில் இருக்க வேண்டும். |
05:14 | குழந்தையின் கால்கள் தாய் அல்லது பராமரிப்பாளரின் அடிவயிற்றின் அருகில் இருக்க வேண்டும். |
05:20 | இப்போது குழந்தை குளிக்க சரியான நிலையில் உள்ளது. |
05:24 | குளித்த பிறகு, மென்மையான மற்றும் சுத்தமான துண்டுகளைப் பயன்படுத்தி குழந்தையை உடனடியாக துடைக்கவும். |
05:30 | முன்பு விளக்கியபடி மடிப்புகளை துடைக்க நினைவில் கொள்ளவும். |
05:35 | டால்கம் பவுடர் அல்லது பேபி பவுடர் பயன்படுத்துவதையும் தவிர்க்கவும். |
05:40 | பேபி பவுடர்கள் பச்சிளம் குழந்தைகளுக்கு சுவாச சிரமத்தை ஏற்படுத்தக்கூடும். |
05:45 | கண்களில் ஒருபோதும் மையை பயன்படுத்த வேண்டாம். |
05:49 | மையின் பயன்பாடு பச்சிளம் குழந்தைகளுக்கு ஈய விஷம் மற்றும் தொற்றுநோய்க்கு வழிவகுக்கும். |
05:56 | மலைப்பாங்கான பகுதிகளிலோ அல்லது குளிர்ந்த பகுதிகளிலோ வாழும் குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். |
06:04 | அத்தகைய இடங்களில் உள்ள குழந்தைகளுக்கு, தொப்புள் கொடி விழுவதற்கு முன்பு விரைவான விரைவாக ஸ்பாஞ்சினால் குளிப்பாட்டலாம் கொடுக்கலாம். |
06:11 | இருப்பினும், குழந்தையை துடைத்த உடனேயே, தாய் அல்லது பராமரிப்பாளர் குழந்தைக்கு தோலுடன் தோல் தொடர்பை வழங்க வேண்டும். |
06:20 | இது குழந்தைகளில் குளிர் நடுக்கம் வராமல் பாதுகாக்கும். |
06:25 | வாரத்திற்கு இரண்டு முறை, ஷாம்பு பயன்படுத்தினால் போதும் என்பதை நினைவில் கொள்க. |
06:30 | எல்லா நாட்களும் ஷாம்பூவை பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் இது உச்சந்தலையில் வறட்சியை ஏற்படுத்தும். |
06:35 | பிறந்த குழந்தைக்கு உச்சந்தலையில் மிருதுவான திட்டுகள் அல்லது செதில்கள் இருக்கலாம். இது, Cradle cap என்று அழைக்கப்படுகிறது. |
06:45 | இந்த திட்டுகள் அல்லது செதில்களைச் சுற்றி சிறிது சிவந்து இருக்கலாம். |
06:50 | Cradle cap பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை என்பதை நினைவில் கொள்க. |
06:54 | அது தானாகவே போய்விடும். அதற்கு, சிகிச்சையளிக்க தேவையில்லை. |
06:59 | குழந்தை எண்ணெய், செதில்களை மென்மையாக்க உதவும். |
07:04 | எண்ணெயைப் பயன்படுத்தும்போது, சிறிய அளவை மட்டுமே செதில்களில் தேய்க்கவும். |
07:09 | அதிகப்படியான எண்ணெய் நிலைமையை மோசமாக்கக்கூடும். |
07:12 | கண்ணீரை வரவழைக்காத குழந்தை ஷாம்பூவினால் ஓரிரு மணி நேரத்திற்குள் கழுவ வேண்டும். |
07:20 | அதன்பிறகு, மேலும் சேர்வதை தவிர்க்க, ஒரு மணிநேரத்திற்குப் பிறகு மெதுவாக செதில்களைத் துலக்குங்கள். |
07:27 | புண்பட்ட உச்சந்தலை மேலும் தொற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்பதால் செதில்களை ஒருபோதும் இழுக்காதீர்கள். |
07:33 | இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |