OpenModelica/C3/Block-Component-Modeling/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 16:42, 11 December 2017 by Venuspriya (Talk | contribs)
Time | Narration |
00:01 | Block component modeling குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: ஒரு blockஐ எப்படி வரையறுப்பது. |
00:12 | blockகளை எப்படி இணைப்பது. |
00:15 | Modelica Libraryல் இருந்து, blockகளை எப்படி பயன்படுத்துவது. |
00:19 | இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான், OpenModelica 1.9.2ஐ பயன்படுத்துகிறேன். |
00:26 | பின்வரும் operating systemகளில் எவற்றையும் நீங்கள் பயன்படுத்தலாம். |
00:30 | இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, மற்றும் பயிற்சி செய்ய, Modelicaவில், component oriented modeling பற்றி உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும். |
00:38 | முன்நிபந்தனை டுடோரியல்கள், எங்கள் வலைதளத்தில் கூறப்பட்டுள்ளன. அவற்றை பார்க்கவும். |
00:44 | இப்போது, blockகளை பற்றி மேலும் கற்போம். |
00:48 | Block, Modelicaவில், தனித்திறன் கொண்ட ஒரு class ஆகும். |
00:52 | இது, control applicationகளில் பயன்படுகிறது. |
00:56 | உதாரணத்திற்கு, வேதிப் பொறியியல் control applicationகளில் அடிக்கடி காணப்படும், PI மற்றும் PID controllerகளுக்கான blockகளை, Modelica Library கொண்டிருக்கிறது. |
01:08 | ஒரு block classன் variableகள், fixed causalityஐ கொண்டிருக்க வேண்டும்: input அல்லது output. |
01:15 | Connect statementகளை பயன்படுத்தி, blockகளை இணைக்கலாம். |
01:19 | Connect statementகளை பற்றி முந்தைய டுடோரியல்களில் நாம் கற்றோம். |
01:24 | Blockகளுக்கு இடையே, interfaceஆக, Connectorகள் செயல்படுகின்றன. |
01:28 | Input மற்றும்output signalகளை model செய்ய, அவை பயன்படுத்தப்படுகின்றன. |
01:33 | உதாரணத்திற்கு, இது, real input signalகளை model செய்கின்ற ஒரு block connectorக்கான declaration ஆகும். |
01:41 | இப்போது, block component modelingஐ ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ள முயற்சிப்போம். |
01:47 | பின்வரும் operationகளை செய்ய, blockகளை பயன்படுத்துகின்ற ஒரு classஐ நாம் எழுதுவோம்: inputஆக, இரண்டு நேரத்தினால் மாறுபடும் signalகளை எடுத்துக்கொண்டு, அவற்றின் கூட்டலை output செய்யவும். |
01:59 | நேரத்தினால் மாறுபடும் ஒரு signalஐ எடுத்துக்கொண்டு, அதை ஒரு constantஆல் amplify செய்யவும். |
02:05 | Schematicsஐ பயன்படுத்தி, இந்த problem statementஐ விரிவாக வரையறுப்போம். |
02:11 | இரண்டு signalகளை inputஆக எடுத்துக்கொண்டு, அதன் கூட்டலைreturn செய்கின்ற blockக்கான ஒரு schematicஐ , இந்தப் படம் காட்டுகிறது. |
02:19 | இதை எளிதாக்க, நேரத்தை குறிப்பிடுகின்ற tஐ , signal 1ஆக தேர்வு செய்வோம். |
02:26 | signal 2ஐ , 2 (times) t (squared)ஆக வைத்துக்கொள்வோம். |
02:31 | இது, ஒரு signalன், amplificationக்கான schematic ஆகும். |
02:35 | இது, இரண்டு inputகள், மற்றும் ஒரு outputஐ கொண்ட முந்தைய caseற்கு ஒத்ததாகும். |
02:41 | நமது signalஆக, ஒரு inputஐ தேர்வு செய்வோம். |
02:46 | மற்றொரு input, அதாவது, signal 2, signalஐ amplify செய்வதற்கான ஒரு constant Kஆக இருக்கட்டும். |
02:54 | இந்த இரண்டு inputகளின் பெருக்கற்பலனே, தேவையானoutput ஆகும். |
02:59 | signal 2, அதாவது, K, 5 unitகளாக இருக்க நாம் தேர்வு செய்துள்ளோம். |
03:06 | Signalகளின் கூட்டல், மற்றும் amplification இரண்டிற்கும், 2 inputகள் மற்றும் 1 output உடன் கூடிய ஒரு block தேவை என்பதை கவனிக்கவும். |
03:16 | Multiple Input Single Output என்பதின் சுருக்கமான, MISO என்ற பெயருள்ள ஒரு blockஐ , Modelica library, ஏற்கனவே கொண்டுள்ளது. |
03:24 | அது, Modelica.Interfaces.Block packageல் கிடைக்கிறது. |
03:30 | இந்த block uக்கான input, ஒரு vector ஆகும். ஏனெனில், அதனால், inputஆக, பல signalகளை ஏற்றுக்கொள்ள முடியும். |
03:38 | y என்பது output. அது ஒரு scalar ஆகும். |
03:42 | OMEditஐ பயன்படுத்தி, நமது சிக்கலை எப்படி தீர்ப்பது என்று, இப்போது விவாதிப்போம். |
03:48 | Sum என்று பெயரிடப்பட்ட ஒரு blockஐ உருவாக்க, MISO blockஐ நீட்டிப்போம். |
03:53 | ஒரு classஐ நீட்டிப்பது பற்றி, முந்தைய டுடோரியல்களில், நாம் கற்றோம். |
03:59 | Product என்று பெயரிடப்பட்ட ஒரு blockஐ உருவாக்க, MISOஐ நீட்டிக்கவும். |
04:04 | Main என்ற பெயரைக் கொண்ட ஒரு classஐ உருவாக்கவும். |
04:08 | Main classல், Sum மற்றும் Product blockகளின், instanceகளை உருவாக்கவும். |
04:14 | இறுதியாக, input மற்றும் output variableகளுக்கு தொடர்புடைய, தேவையான equationகளை, program செய்யவும். |
04:22 | Sum, signalகளின் கூட்டலை குறிப்பிடுவதையும், ஆனால், Product, amplification of signalஐ குறிப்பிடுவதையும் கவனிக்கவும். |
04:32 | நான் தேவையான blockகளை, ஏற்கனவே உருவாக்கி, அவற்றை, arithmeticOperationsUsingBlocks என்று பெயரை கொண்ட ஒரு fileயினுள் தொகுத்துள்ளேன். |
04:42 | எங்கள் வலைத்தளத்தில் இந்த fileஐ கண்டுபிடித்து, நீங்கள் தரவிறக்கிக் கொள்ளலாம். |
04:46 | OMEditக்கு இப்போது மாறுகிறேன். |
04:49 | arithmeticOperationsUsingBlocks packageஐ முதலில் விளக்கி, பின், MISO blockன் syntaxஐ விளக்குகிறேன். |
04:59 | arithmeticOperationsUsingBlocks packageஐ , OMEditல் நான் ஏற்கனவே திறந்துவிட்டேன். |
05:06 | அதை, Libraries Browserல் விரிவாக்குகிறேன். |
05:10 | Package, Sum, Product என்ற பெயருடைய blockகளையும், ஒரு main classஐயும் கொண்டிருப்பதை கவனிக்கவும். |
05:18 | அவை மூன்றின் மீதும், டபுள்-க்ளிக் செய்யவும். |
05:24 | Modelica Libraryல் இருந்து, MISO blockஐயும் நான் திறக்கிறேன். |
05:29 | Modelica libraryஐ விரிவாக்கவும். |
05:32 | Blocks → Interfacesக்கு செல்லவும். சிறிது கீழே scroll செய்யவும். |
05:39 | MISOஐ டபுள்-க்ளிக் செய்யவும். |
05:43 | செயல்பாட்டில் MISOக்கு ஒத்ததாக இருக்கும், பல்வேறு blockகளையும், Interfaces package கொண்டிருக்கிறது. |
05:51 | சிறந்த பார்வைக்கு, OMEdit windowஐ இடது பக்கம் நகர்த்துகிறேன். |
05:57 | முதலில், Sum blockஐ பார்ப்போம். |
06:01 | அது Text Viewல் திறந்தால், Diagram Viewக்கு மாறவும். |
06:05 | ஒரு blockஐ declare செய்வதற்கானsyntax இதுவே. |
06:10 | Modelica libraryல், MISO block இருக்கின்ற இடத்தில் இருந்து, அதை மரபுவழி பெற, இந்த statement பயன்படுத்தப்படுகிறது. |
06:16 | முந்தைய டுடோரியல்களில், Class inheritance அல்லதுClass extension பற்றி நாம் கற்றோம். |
06:23 | இப்போது, ஒரு கணத்திற்கு, ஒரு படி பின்னால் சென்று, MISO blockஐ விளக்குகிறேன். |
06:29 | MISO tabக்கு செல்லவும். Text Viewக்கு மாறவும். |
06:35 | MISO, ஒரு partial block ஆகும். அதன் பொருள், அதை மரபுவழியாக மட்டுமே பெற முடியும், ஆனால்instantiate, செய்யமுடியாது. |
06:43 | அது Block classஐ மரபுவழியாகப் பெறுகிறது. |
06:46 | காட்டப்பட்டுள்ள pathஐ பயன்படுத்தி, இதை, Modelica libraryல் நீங்கள் கண்டுபிடிக்கலாம். |
06:51 | அதன் Diagram View'க்காக மட்டுமே, இந்த class இங்கு பயன்படுத்தப்படுகிறது. அதனால், இதை விவாதிக்க வேண்டாம். |
06:58 | n, inputகளின் எண்ணிக்கையை குறியீட்டுக்காட்டுகிறது. |
07:02 | Block, மரபுவழியாக பெறப்படும் போது, இந்த parameterஐ மாற்றலாம். |
07:08 | ஒரு real input signalஐ தெளிவாக வர்ணிக்கின்றRealInput, ஒரு connector ஆகும். |
07:14 | இங்கு, நாம் ஏற்கனவே விவாதித்தது போல், input, ஒரு vector u ஆகும். |
07:20 | இவ்வாறே, RealOutput, ஒரு connector ஆகும். இது ஒரு real output signalஐ வர்ணிக்கிறது. |
07:27 | இங்கு, y, real-valued output signal ஆகும். |
07:31 | RealInput மற்றும்RealOutput, MISOஐ போல், Modelica Libraryவின் ஒரே packageல் இருக்கின்றன. |
07:38 | அவற்றை பார்க்கவும். |
07:41 | இப்போது, MISO blockன் , Diagram View எப்படி இருக்கும் என்பதை நான் உங்களுக்கு காட்டுகிறேன். |
07:46 | இப்போது, Sum blockக்கு திரும்பச் சென்று, நாம் விட்ட இடத்தில் இருந்து தொடருவோம். |
07:52 | Variables y மற்றும்u, இந்த blockன் ஒரு பகுதியாகும். ஏனெனில், அது MISOஐ மரபுவழியாகப் பெறுகிறது. |
07:59 | நாம் முந்தைய டுடோரியல்களில் கற்றது போல், Sum, ஒரு array function ஆகும். |
08:05 | அது inputஆக ஒரு arrayஐ எடுத்துக்கொண்டு, அதன் elementகளின் கூட்டலை return செய்கிறது. |
08:11 | Product blockக்கு மாறுகிறேன். Text Viewக்கு மாறவும். |
08:17 | இந்த blockஉம், MISOஐ மரபுவழியாகப் பெறுகிறது. |
08:21 | நாம் முந்தைய டுடோரியல்களில் பார்த்தது போல், Product, ஒரு arrayஐ , inputஆக எடுத்துக்கொள்கின்ற ஒரு array function ஆகும். |
08:29 | அதன் elementகளின் பெருக்கற்பலனை அது return செய்கிறது. |
08:33 | இப்போது, main classக்கு மாறுகிறேன். |
08:37 | Text Viewக்கு மாறவும். |
08:39 | இந்த statementகள், Sum மற்றும் Product blockகளின், instantiationஐ சுட்டிக்காட்டுகிறது. |
08:44 | OMEditன், drag and drop செயல்பாட்டை பயன்படுத்தியும், இந்த instanceகளை உருவாக்கலாம். |
08:51 | முந்தைய டுடோரியல்களில், நாம் இந்த அம்சத்தை பற்றி விவாதித்தோம். |
08:56 | MISOவில், nin, input vector uன், dimensionக்கான ஒரு parameter ஆகும். |
09:03 | இந்த parameterக்கு, 2 மதிப்பை நாம் ஒதுக்குகிறோம். |
09:07 | இந்த equation, signalகளின் Sumக்கு, signal 1 மற்றும் signal 2ன் மதிப்புகளை, சுட்டிக்காட்டுகிறது. இதை நாம், slideகளில் விவாதித்தோம். |
09:17 | இவ்வாறே, நாம் ஏற்கனவே விவாதித்தது போல், இது, signalனின் amplificationக்கு, Signal 1 மற்றும் Signal 2ன் மதிப்புகளை சுட்டிக்காட்டுகிறது. |
09:29 | இப்போது, இந்த classஐ simulate செய்கிறேன். Simulate பட்டனை க்ளிக் செய்யவும். |
09:33 | Pop up windowஐ மூடவும். |
09:36 | Libraries Browserல், mySumஐ விரிவாக்கவும். yஐ தேர்ந்தெடுக்கவும். |
09:43 | கொடுக்கப்பட்டுள்ள signalன் மதிப்புகளுக்கு ஏற்ப, இது, ஒரு plotஐ உருவாக்குகிறது என்பதை கவனிக்கவும். |
09:51 | இத்துடன், நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். |
09:54 | பயிற்சியாக, RealInput, RealOutput, SI, SO மற்றும் MO blockகளுக்கான, codeகளை பார்க்கவும். |
10:04 | அதை, Modelica.Blocks.Interfaces packageல் நீங்கள் பார்க்கலாம். |
10:10 | RealInput மற்றும்RealOutput, அடிக்கடி பயன்படுத்தப்படும் connectorகள் ஆகும். |
10:17 | அதனால், அவற்றை புரிந்துகொள்வது அவசியமானதாகும். |
10:21 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும்: org /What\_is\_a\_Spoken\_Tutorial. அது, Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
10:27 | spoken tutorialகளை பயன்படுத்தி நாங்கள் செய்முறை வகுப்புகள் நடத்துகிறோம். சான்றிதழ்கள் தருகிறோம். எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
10:33 | இந்த ஸ்போகன் டுடோரியலில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், கூறப்பட்டுள்ள வலைத்தளத்தை பார்க்கவும். |
10:40 | பிரபலமான புத்தகங்களில் இருந்து, தீர்க்கப்பட்ட உதாரணங்களை code செய்வதை நாங்கள் ஒருங்கிணைக்கிறோம். பங்களிப்பவர்களுக்கு மதிப்பூதியம் தருகிறோம். எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும். |
10:50 | Commercial simulator labகளை, OpenModelicaக்கு, இடம் பெயர்க்க நாங்கள் உதவுகிறோம். |
10:56 | Spoken Tutorial Projectக்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது. |
11:03 | ஆதரவு அளித்த, OpenModelicaவின் வளர்ச்சிக்கு குழுவிற்கு நாங்கள் நன்று செலுத்துகிறோம். |
11:09 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ..குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி . |