OpenModelica/C2/Introduction-to-OMEdit/Tamil
From Script | Spoken-Tutorial
Revision as of 16:34, 11 December 2017 by Venuspriya (Talk | contribs)
Time | Narration |
00:01 | OMEditக்கு அறிமுகம் குறித்த இந்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது, OpenModelica பற்றி, OMEditக்கு அறிமுகம், |
00:15 | Libraries Browserல் இருந்து, ஒரு Classஐ திறப்பது, Libraries Browserல் இருந்து, ஒரு Classஐ simulate செய்வது. |
00:23 | இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான், OpenModelica பதிப்பு 1.9.5 மற்றும் Ubuntu Linux OS 14.04ஐ பயன்படுத்துகிறேன். |
00:36 | ஆனால், இந்த டுடோரியலில் விளக்கப்பட்டுள்ள செயல்முறை, Windows , ARM மீதான Mac OS X அல்லதுFOSSEE OS , போன்ற மற்ற OSயிலும் இவ்வாறே இருக்கிறது. |
00:48 | இந்த டுடோரியலை பின்பற்ற, differential மற்றும்algebraic equationகள் உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும். |
00:55 | OpenModelica என்றால் என்ன? OpenModelica, ஒரு , open-source modeling மற்றும், simulation சூழல் ஆகும். |
01:03 | இது சிக்கலான systemகளுக்கான, object-oriented, multi-domain modeling language ஆகும். |
01:09 | இது தொழில் சார்ந்த, மற்றும் கல்வி சார்ந்த நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. |
01:15 | முதலில், OMEdit. என்றால் என்ன என்பதை பற்றி காண்போம். |
01:19 | OMEdit என்பது, OpenModelica Connection Editor என்பதன் சுருக்கமாகும். |
01:24 | இது, graphical model க்கான ஒரு புது Graphical User Interface ஆகும். |
01:29 | அது, modelகளை உருவாக்க, மற்றும் மாற்ற, பல அம்சங்களை கொண்டிருக்கிறது. |
01:34 | இப்போது, OMEdit windowக்கு செல்கிறேன். |
01:38 | நான் எனது கணினியில், ஏற்கனவே, OMEditஐ நிறுவிவிட்டேன். |
01:43 | OMEdit windowஐ திறக்க, Dash Homeஐ க்ளிக் செய்யவும். |
01:47 | Search barல் டைப் செய்க: OMEdit. |
01:51 | காட்டப்படுகின்ற OMEdit iconஐ க்ளிக் செய்யவும். |
01:55 | OMEdit iconஐ க்ளிக் செய்தவுடன், Welcome perspective windowஐ நாம் காண்கிறோம். Recent Files மற்றும்Latest News.ன் ஒரு பட்டியலை அது காட்டுகிறது. |
02:06 | OMEdit windowவின் இடது பக்கத்தில், Libraries Browserஐ நாம் காண்கிறோம். இங்கு, libraryகளின் ஒரு பட்டியலை நாம் காணலாம். |
02:15 | Modelica libraryஐ விரிவாக்குவோம். |
02:18 | இதைச் செய்ய, Modelica libraryன் இடது பக்கத்தில் இருக்கின்ற, arrow headஐ க்ளிக் செய்யவும். |
02:23 | இங்கு, கிடைக்கின்ற libraryகளின் பட்டியலை நாம் காணலாம். |
02:28 | Thermal libraryன் இடது பக்கத்தில் இருக்கின்ற, arrow headஐ க்ளிக் செய்யவும். |
02:31 | Thermalன் கீழ், HeatTransfer libraryஐ நாம் பார்க்கிறோம். அதை விரிவாக்கவும். |
02:37 | மீண்டும், பல வெவ்வேறு libraryகள் காட்டப்படுவதை நாம் காண்கிறோம். |
02:43 | இப்போது, Example libraryஐ விரிவாக்குவோம். |
02:47 | இங்கு, Heat Transferன் வெவ்வேறு உதாரணங்களை நாம் காணலாம். |
02:52 | TwoMasses என்ற பெயருடைய classஐ திறப்போம். |
02:56 | TwoMassesஐ ரைட்-க்ளிக் செய்து, Open Classஐ தேர்ந்தெடுக்கவும். |
03:01 | Classஐ திறக்க, class ன் பெயரையும் நாம் டபுள்-க்ளிக் செய்யலாம். |
03:06 | இப்போது, நாம் Modeling Perspective windowவில் உள்ளோம். |
03:10 | முன்னிருப்பாக, class, Diagram Viewல் திறக்கிறது. |
03:14 | Class, Diagram Viewல், திறக்கவில்லை எனில், கவலைப்பட வேண்டாம். |
03:19 | வெவ்வேறு viewகளுக்கு இடையே எப்படி மாறுவது என்று நான் உங்களுக்கு காட்டுகிறேன். |
03:23 | Modeling area windowவில், modelகளின் Diagram Viewஐ நாம் காணலாம். |
03:28 | Modeling areaவின் மேல், நான்கு வெவ்வேறு iconகளை நாம் காண்கிறோம். |
03:33 | முதல்icon, Icon Viewஐ குறித்துக்காட்டுகிறது. |
03:37 | Modelன் உருவமைப்பை பார்க்க, அதை க்ளிக் செய்யவும். |
03:41 | அடுத்த icon, Diagram Viewஐ குறித்துக்காட்டுகிறது. |
03:45 | Modelஐ பிரதிபலிக்கின்ற diagramஐ பார்க்க, அதை க்ளிக் செய்யவும். |
03:49 | மூன்றாவதுicon, Text View icon ஆகும். |
03:52 | அதை க்ளிக் செய்வோம். |
03:54 | Two Masses classக்கு தொடர்புடைய Modelica codeஐ இங்கு நாம் காண்கிறோம். |
04:00 | பின்வரும் டுடோரியல்களில், OMEditல், codeஐ எப்படி எழுதுவது என்று கற்போம். |
04:05 | அடுத்த iconஆன, Documentation viewஐ க்ளிக் செய்யவும். |
04:10 | OMEdit windowவின் வலது பக்கத்தில், Documentation Browser என்ற பெயருடைய புது window தோன்றுகிறது. |
04:17 | Modelஐ பற்றி கொடுக்கப்பட்டுள்ள விரிவான தகவலை இங்கு நாம் படிக்கலாம். |
04:23 | இப்போது, Documentation Browserஐ மூடவும். |
04:27 | ஒரு modelஐ simulate செய்வதற்கு முன்பு, modelன் சரிநிலையை நாம் சரி பார்க்க வேண்டும். |
04:32 | இதைச் செய்ய, முதலில், tool barல், Check All Models பட்டனை கண்டுபிடிக்கவும். |
04:37 | இந்த பட்டன் மீது, இரண்டு வெள்ளை நிற tickகள் இருக்கும். அதை க்ளிக் செய்யவும். |
04:43 | Windowவின் கீழ், ஒரு Messages Browser திறப்பதை கவனிக்கவும். |
04:48 | Modelica classக்கு தொடர்புடைய messageகளை இது காட்டும். |
04:53 | இப்போது, modelஐ simulate செய்ய முயற்சிப்போம். |
04:56 | இதைச் செய்ய, tool barல் இருக்கின்ற, பச்சை நிற arrow பட்டனை க்ளிக் செய்யவும். |
05:02 | இதுவே, modelஐ simulate செய்ய பயன்படுத்தப்படுகின்றSimulate பட்டன் ஆகும். |
05:06 | ஒரு Modelica class.ஐ simulate செய்ய, Ctrl +Bஐயும் நாம் அழுத்தலாம். |
05:11 | Simulate செய்த பிறகு, ஒரு புது window திறக்கிறது. |
05:14 | இது classன் compilation செயல்முறையை காட்டுகிறது. |
05:18 | Compilation வெற்றிகரமாக முடிந்த பிறகு, output window, messageஐ காட்டுகிறது: |
05:23 | Simulation process finished successfully. இந்த windowஐ சிறிதாக்கவும். |
05:30 | முன்னிருப்பாக, OMEdit windowல், Plotting Perspective திறக்கிறது. |
05:35 | அது திறக்கவில்லையெனில், கீழ் வலது பக்கத்தில் இருக்கின்ற, Plotting பட்டனை க்ளிக் செய்யவும். |
05:40 | Plotting windowஐ திறக்க, Ctrl +F3ஐயும் நாம் அழுத்தலாம். |
05:45 | இங்கு, Modelica class.ன், simulation முடிவுகளை நாம் காணலாம். |
05:50 | Plotting Perspectiveன், வலது பக்கத்தில் இருக்கின்ற, Variables Browser windowஐ பார்க்கவும். |
05:55 | Variables Browserன் கீழ்: ஒரு Modelica class.ன், input variableன் மதிப்பை எப்படி மாற்றுவது என்று நான் காட்டுகிறேன். |
06:03 | Conduction variableஐ விரிவாக்குவோம். |
06:06 | Gன் மதிப்பை மாற்றி, Q_flow மற்றும் dTன் மதிப்புகள் எப்படி மாறுகின்றன என்று பார்க்கவும். |
06:13 | முன்னிருப்பாக, G = 10, Q_flow = 263.599 W மற்றும்dT = 26.3599 K |
06:25 | Gன் மதிப்பை, 10ல் இருந்து, 15 க்கு மாற்றுவோம். |
06:30 | பின், Enterஐ அழுத்தவும். |
06:32 | Windowவின் மேல் வலது மூலைக்கு செல்லவும். |
06:35 | Tool barல், Re-simulate பட்டனை க்ளிக் செய்யவும். |
06:39 | Success message window ஐ நாம் பெறுகிறோம். இந்தwindowஐ சிறிதாக்கவும். |
06:44 | Simulation நிறைவு பெற்றவுடன், மாற்றங்களை குறித்துக் கொள்ளவும். |
06:48 | Q_flow = 203.009 W மற்றும்dT = 13.5339 K |
06:56 | இப்போது, ஒரு plotஐ எப்படி உருவாக்குவதென உங்களுக்கு காட்டுகிறேன். |
07:00 | dT variableக்கு எதிரே இருக்கின்ற check boxஐ க்ளிக் செய்யவும். |
07:04 | X-axis ல் time, மற்றும், Y-axisல் dTக்கும் இடையே ஒரு plotஐ நீங்கள் காணலாம். |
07:11 | மாறிக்கொண்டிருக்கிற நேரத்திற்கு, இரண்டு massகளுக்கு இடையே உள்ள ன் வேறுபாட்டை, இந்த plot வர்ணிக்கிறது. |
07:17 | முன்னிருப்பாக, simulation, 0ல் இருந்து, 1 unit நேரத்திற்குrun செய்கிறது. |
07:22 | Simulation Setup optionஐ பயன்படுத்தி, இந்த இடைவெளியை நாம் மாற்ற முடியும். |
07:27 | இதற்கு, Modeling Perspective.க்கு செல்லவும். |
07:30 | கீழ் வலது பக்கத்தில் இருக்கின்ற, Modeling பட்டனை க்ளிக் செய்யவும். |
07:33 | அல்லது, Modeling windowஐ திறக்க, Ctrl +F2ஐ அழுத்தவும். |
07:38 | Tool barல் இருக்கின்ற, Simulation Setup optionஐ க்ளிக் செய்யவும். |
07:43 | Simulation Setup window திறக்கிறது. |
07:46 | Stop Timeஐ , 5 unitக்கு மாற்றவும். |
07:49 | Simulate check box, check செய்யப்பட்டுள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும். |
07:52 | Okஐ க்ளிக் செய்யவும். |
07:55 | உடனே, நாம், success message window ஐ பெறுகிறோம். |
07:59 | இந்தwindowஐ சிறிதாக்கவும். |
08:02 | 0ல் இருந்து, 5 வரைunit நேரத்துடன் கூடிய, simulation இடைவெளிக்கு, class re-simulate செய்யப்படுகிறது. |
08:08 | நேரத்தை தவிர, வேறு எந்த இரண்டு variableகளுக்கு இடையேயும் ஒரு plotஐ நாம் பெறலாம். அதை இப்போது முயற்சிப்போம். |
08:16 | Tool barல் இருக்கின்ற, New Parametric Plot Windowஐ க்ளிக் செய்யவும். |
08:20 | நாம் plot செய்ய விரும்புகின்ற, Q_flow மற்றும் dT என்ற இரண்டு variableகளை தேர்ந்தெடுப்போம். |
08:26 | X-axis ல் dT, மற்றும், Y-axisல் Q_flowக்கும் இடையே ஒரு plotஐ நாம் காணலாம். |
08:34 | அவைகளுக்கு இடையே உள்ள temperatureன் வேறுபாடு குறையும் போது, heat flowல் ஏற்படுகின்ற மாறுபாட்டை அது காட்டுகிறது. |
08:40 | தேவையானplot உருவாக்கப்பட்டவுடன், நாம் முடிவுகளை நீக்கி விடலாம். |
08:45 | Variables Browserல், TwoMassesஐ ரைட்-க்ளிக் செய்யவும். |
08:49 | Delete Resultஐ தேர்ந்தெடுக்கவும். முடிவு நீக்கப்பட்டுவிட்டது. |
08:55 | OpenModelica, ஒரு Help menuஐ கொண்டுள்ளது. |
08:58 | Menu barக்கு சென்று, Help optionஐ க்ளிக் செய்யவும். |
09:02 | இங்கு, User Guide, System, Scripting மற்றும், Modelica Documentationஐ நாம் காணலாம். |
09:10 | சுருங்கச் சொல்ல. |
09:12 | இந்த டுடோரியலில் நாம் கற்றது: OpenModelica பற்றி |
09:16 | OMEditக்கு அறிமுகம் |
09:18 | Libraries Browserல் இருந்து, ஒரு Classஐ திறப்பது |
09:21 | Libraries Browserல் இருந்து, ஒரு Classஐ simulate செய்வது |
09:25 | பயிற்சியாக: Modelicaவில், Fluid libraryஐ விரிவாக்கவும். |
09:30 | Modelicaவில், Examples libraryஐ விரிவாக்கவும். |
09:34 | HeatExchanger Libraryல், HeatExchangerSimulation classஐ simulate செய்யவும் |
09:39 | சில input variableகளின் மதிப்பை மாற்றி, re-simulate செய்யவும். |
09:43 | Q_Flow_1 மற்றும்timeக்கு இடையே ஒரு plotஐ உருவாக்கவும். |
09:48 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். |
09:51 | அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
09:55 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
10:01 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
10:08 | இந்த spoken tutorialலில் உங்களுக்கு, ஏதேனும் கேள்விகள் உள்ளதா? இந்த தளத்தை பார்க்கவும். உங்கள் கேள்விக்கான, நிமிடம் மற்றும் நொடியை தேர்வு செய்யவும். |
10:17 | உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கவும். FOSSEE குழுவிலிருந்து எவரேனும் ஒருவர், அதற்கு பதிலளிப்பார். |
10:23 | ஸ்போகன் டுடோரியல் குழு, இந்த டுடோரியல் மீதான குறிப்பிட்ட கேள்விகளுக்கானது. அதில், பொதுவான, மற்றும் தொடர்பில்லாத கேள்விகளைpost செய்ய வேண்டாம். இது, குழப்பத்தை குறைக்க உதவும். |
10:36 | குழப்பத்தை குறைத்தால், இந்த விவாதத்தை, வழிகாட்டுரையாக நாம் பயன்படுத்தலாம். |
10:42 | FOSSEE குழு, பிரபலமான புத்தகங்களில் இருந்து, தீர்க்கப்பட்ட உதாரணங்களை code செய்வதை ஒருங்கிணைக்கிறது. |
10:47 | இதை செய்பவர்களுக்கு, நாங்கள், மதிப்பூதியம், மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும். |
10:56 | FOSSEE குழு, commercial simulator labகளை, OpenModelicaக்கு, இடம் பெயர்க்க உதவுகிறது. |
11:02 | இதை செய்பவர்களுக்கு, நாங்கள், மதிப்பூதியம், மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும். |
11:11 | Spoken Tutorial மற்றும்FOSSEE திட்டங்களுக்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது. |
11:20 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ..குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி .
|