BASH/C3/Advance-topics-in-a-function/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | function ல் மேம்பட்ட தலைப்புகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:08 | இந்த டுடோரியலில், நாம் கற்கபோவது |
00:11 | Source command |
00:12 | background ல் ஒரு function ஐ வைத்தல் |
00:14 | இவற்றை விளக்க சில உதாரணங்கள். |
00:18 | இந்த டுடோரியலை தொடர, உங்களுக்கு BASH ல் Shell Scripting பற்றி தெரிந்திருக்க வேண்டும். |
00:24 | இல்லையெனில் அதற்கான டுடோரியல்களுக்கு, எங்கள் இணையத்தளத்தைக் காணவும் |
00:30 | இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது |
00:32 | * Ubuntu Linux 12.04 |
00:36 | GNU BASH பதிப்பு 4.2 |
00:40 | பயிற்சிக்கு GNU Bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது. |
00:46 | Shell script னுள் ஒரு file ஐ load செய்ய Source command பயன்படுகிறது. |
00:53 | இது அந்த file ல் இருந்து commandகளை read செய்து இயக்குகிறது. |
00:58 | இது script னுள் code ஐ import உம் செய்கிறது. |
01:01 | ஒரு பொதுவான data அல்லது function library ஐ பல scriptகள் பயன்படுத்தும்போது இது பயனுள்ளதாகும். |
01:09 | Source command க்கான syntax பின்வருமாறு. |
01:12 | source fileபெயர் |
01:15 | source fileக்கான path |
01:18 | souce fileபெயர் argumentகள் |
01:22 | ஒரு file 'function dot sh' ஐ திறக்கிறேன். |
01:26 | இது shebang line. |
01:29 | Source detail dot sh ஆனது file detail dot sh ஐ function dot sh னுள் load செய்யும் |
01:37 | detail dot sh file ஐ திறக்கிறேன். |
01:41 | ஒரு function machine ஐ கொண்டுள்ளேன். |
01:44 | இப்போது function ன் உள் டைப் செய்க, |
01:47 | echo '"function machine is called in function dot sh file"' |
01:52 | Save மீது க்ளிக் செய்க. |
01:54 | இப்போது function dot sh file க்கு வருவோம். |
01:59 | இங்கே டைப் செய்க echo “Beginning of program” |
02:04 | Save மீது க்ளிக் செய்க |
02:06 | பின் டைப் செய்க machine echo “End of program” |
02:12 | இது செய்தி “Beginning of program” ஐ அச்சடிக்கும் |
02:16 | machine என்பது function call. |
02:19 | இது செய்தி End of program ஐ அச்சடிக்கும் |
02:23 | machine என்பது detail dot sh file ல் உருவாக்கப்பட்ட function என்பதைக் காண்க. |
02:29 | இங்கே function dot sh file ல் அந்த function ஐ call செய்கிறோம். |
02:34 | இப்போது Save மீது க்ளிக் செய்க. |
02:36 | ப்ரோகிராமை இயக்குவோம். |
02:41 | எனவே டெர்மினலில் டைப் செய்க chmod space plus (+) x space function dot sh |
02:51 | எண்டரை அழுத்துக |
02:53 | டைப் செய்க dot slash function dot sh |
02:56 | எண்டரை அழுத்துக |
02:59 | வெளியீடு காட்டப்படுகிறது |
03:02 | இப்போது background functionக்கு வருவோம் |
03:06 | background ல் ஒரு process ஐ இயக்க, function callன் முடிவில் & (ampersand) பயன்படுத்துகிறோம் |
03:13 | அந்த command ஐ இயக்க shell ஒரு child process ஐ பிரிக்கிறது. |
03:19 | பிரிக்கப்பட்ட process ல் ஒரு job number மற்றும் ஒரு PID (Process IDentifier) இருக்கும் |
03:27 | ஒரு உதாரணத்தின் உதவியுடன் இதை புரிந்துகொள்வோம். file background dot sh ஐ திறக்கிறேன் |
03:35 | இது shebang line. |
03:38 | function ன் துவக்கத்தை bg underscore function குறிக்கிறது |
03:44 | echo statement இங்கே செய்தி "Inside bg_function” ஐ காட்டுகிறது |
03:50 | அடுத்து, அனைத்து dotmp3 fileகளையும் கண்டுபிடிக்க find command ஐ பயன்படுத்துகிறோம். |
03:57 | இந்த statement... extension dot mp3 உடன் உள்ள அனைத்து fileகளையும் கண்டுபிடிக்கும் |
04:03 | நடப்பு working directory ல் அது அவற்றை தேடும். |
04:07 | case ஐ புறக்கணிக்க hyphen iname பயன்படுகிறது. |
04:11 | myplaylist.txt ல் விடை சேமிக்கப்படுகிறது. |
04:16 | டைப் செய்க bg underscore function ampersand(&) இதுதான் function call. 'bg_function' ஐ &(Ampersand)... background ல் வைக்கிறது. |
04:28 | இப்போது Save மீது க்ளிக் செய்க. |
04:31 | ப்ரோகிராமை இயக்குவோம். |
04:34 | டெர்மினலுக்கு வருவோம் |
04:37 | டைப் செய்க chmod space plus x space background dot sh |
04:45 | எண்டரை அழுத்துக |
04:46 | டைப் செய்க dot slash background dot sh |
04:51 | எண்டரை அழுத்துக |
04:53 | நடப்பு directory ல் dot mp3 file இல்லை என்பதால் வெளியீடு ஏதும் காட்டப்படவில்லை. |
05:02 | இப்போது நம் ப்ரோகிராம் க்கு வருவோம். |
05:05 | டைப் செய்க echo (hyphen) -e "'Process runing in background are slash n'" மற்றும் jobs space hyphen l |
05:19 | Save மீது க்ளிக் செய்க |
05:21 | இந்த echo statement செய்தி “Process runing in background are ” என்பதை காட்டும் |
05:28 | Jobs space hyphen l அனைத்து background jobகளின் status ஐ பட்டியலிடுகிறது. |
05:34 | நம் டெர்மினலுக்கு வருவோம். |
05:38 | டைப் செய்க dot slash background.sh |
05:42 | எண்டரை அழுத்துவும் |
05:44 | வெளியீடு காட்டப்படுகிறது |
05:48 | இங்கே, square bracketகளினுள் உள்ள ஒன்று... job number ஆகும் |
05:53 | 3962 என்பது PID. |
05:57 | PID கணினிக்கேற்ப வேறுபடும். |
06:01 | இயக்க function க்கு நேரமாகும் எனில், அது background ல் இயங்கும். |
06:06 | நாம் Running என்ற status ஐ பெறுவோம். |
06:11 | scriptக்கு முன்னர் function இயங்கி முடிந்தால், Done என்ற status ஐ காண்போம் |
06:20 | கணினிக்கு கணினி வெளியீடு வேறுபடும். |
06:23 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
06:28 | சுருங்கசொல்ல. |
06:29 | இந்த டுடோரியலில் நாம் கற்றது |
06:32 | Source command |
06:34 | background ல் ஒரு function ஐ வைத்தல் |
06:36 | இவற்றை விளக்க சில உதாரணங்கள் |
06:39 | பயிற்சியாக. |
06:40 | இரு எண்களைக் கூட்ட ஒரு function add ஐ எழுதி அந்த function ஐ மற்றொரு fileல் call செய்யவும். |
06:47 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
06:51 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. |
06:55 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும். |
07:00 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
07:10 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
07:18 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
07:22 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07:30 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro |
07:36 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |