Difference between revisions of "Blender/C2/The-Blender-Interface/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(No difference)

Revision as of 11:17, 6 January 2014

00:03 Blender Tutorialகளுக்கு நல்வரவு
00:07 இந்த tutorial... Blender 2.59 ல் Blender interface பற்றிய அடிப்படை விவரங்களைக் கொண்டது
00:15 இந்த tutorial க்கு script : Bhanu Prakash மற்றும் editing : Monisha Banerjee
00:22 இதில் நாம் கற்க போவது Blender interface ன் பல்வித windows,
00:29 ஒவ்வொரு window க்கும் ஒதுக்கப்பட்ட parameters மற்றும் tabs, 3D view ல் ஒரு object ஐ தேர்ந்தெடுத்தல்,
00:37 X,Y & Z திசைகளில் ஒரு object ஐ நகர்த்துதல்.
00:44 உங்களுக்கு Blender ஐ ஆரம்பிக்க தெரியும் என கொள்கிறேன்
00:48 இல்லையெனில் அதுகுறித்த முன் tutorial களைக் காணவும்
00:56 இதுதான் 3D panel.
00:58 முன்னிருப்பாக மூன்று objectகள்... 3D view ல் இருக்கும்
01:03 ஒரு cube, ஒரு lamp மற்றும் ஒரு camera.
01:10 முன்னிருப்பாக cube தேர்வாகியுள்ளது
01:14 lamp ஐ தேர்வுசெய்ய right click செய்க
01:19 camera ஐ தேர்வுசெய்ய right click செய்க
01:23 ஆக 3D view ல் ஏதேனும் object ஐ தேர்வுசெய்ய அந்த object ன் மீது right click செய்ய வேண்டும்
01:31 cube ஐ தேர்வுசெய்ய right click செய்க
01:35 இந்த மூவண்ண அம்புகள் cube ன் நடுவில் இணைந்து 3D Transform manipulator ஐ குறிக்கின்றன
01:44 இந்த manipulator... object ஐ ஒரு குறிப்பிட்ட அச்சில் நகர்த்த உதவுகிறது
01:51 சிவப்பு X அச்சைக் குறிக்கிறது
01:55 பச்சை Y அச்சைக் குறிக்கிறது
01:59 நீலம் Z அச்சைக் குறிக்கிறது
02:05 பச்சை அம்புக்குறியை சொடுக்கி பிடித்து இடமிருந்து வலமாக உங்கள் mouse ஐ நகர்த்தவும்
02:15 keyboard shortcut ஆக G&Y ஐ அழுத்துக
02:22 அந்த object... Y அச்சு திசையில் மட்டும் நகர்வதைக் காண்கிறோம்
02:32 அதுபோல, நீல அம்புக்குறியைப் பயன்படுத்தி object ஐ Z அச்சில் நகர்த்துக
02:45 keyboard shortcut ஆக G&Z ஐ அழுத்துக
02:56 இப்போது, object ஐ X அச்சில் நகர்த்த முயற்சிக்கவும்
03:08 keyboard shortcut ஆக G&X ஐ அழுத்துக
03:23 சிவப்பு பெட்டியால் மூடப்பட்டுள்ள பகுதி 3D view ஆகும்
03:32 3D view ன் கீழே இடப்பக்க மூலைக்குச் செல்லவும்
03:36 View ஐ சொடுக்கவும். இங்கே 3D view க்கான பல்வேறு view option களின் பட்டியல் உள்ளது
03:46 ‘Top’ ஐ சொடுக்கவும். keyboard shortcut ஆக numpad 7 ஐ அழுத்துக.
03:52 3D view... User Perspective லிருந்து Top view க்கு மாறுகிறது
03:57 நம் object ஐ top view லிருந்து பார்க்கலாம்
04:03 Select ஐ சொடுக்கவும். இங்கே 3d view ன் எல்லா object களுக்கான பல selection option களின் பட்டியல் உள்ளது
04:18 Object ஐ சொடுக்கவும். இங்கே செயலில் உள்ள object க்கான பல editing option களின் பட்டியல் உள்ளது
04:35 3D view ன் இடப்பக்கம் object Tools panel உள்ளது
04:41 இது 3D view ன் செயல் object ஐ மாற்ற பயன்படும் பல tool களை பட்டியலிடுகிறது
04:49 இந்த toolகள் பல்வேறு பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன
04:52 Transform, Object, Shading, Keyframes, Motion Paths, repeat, Grease Pencil
05:13 உதாரணமாக, lamp ஐ 3D view ல் நகர்த்தலாம்
05:19 lamp ஐ தேர்வுசெய்ய Right click செய்க
05:23 Object tools panel க்கு செல்க
05:28 Object tools panel ல் lamp க்கான options ஐ பார்க்கலாம்
05:35 translate ஐ சொடுக்கி mouse ஐ நகர்த்தவும்
05:41 mouse நகர்வின் திசையில் lamp நகர்கிறது
05:46 screen ல் Right click செய்க அல்லது translate ஐ நீக்க keyboard ல் Esc ஐ அழுத்துக
05:57 3D view ன் வலப்பக்கம் மற்றொரு panel முன்னிருப்பாக மறைந்துள்ளது
06:04 மறைந்துள்ள panel ஐ திறக்க 3D view ன் மேல் வலப்பக்க மூலையில் உள்ள கூட்டல் குறியைச் சொடுக்கவும்
06:12 keyboard shortcut ஆக N ஐ அழுத்துக
06:17 இந்த கூடுதல் Object Transform panel... Properties window ல் உள்ள Object panel ஐ போன்றதே
06:25 பின்வரும் tutorial களில் இந்த Object panel ஐ விரிவாக காணலாம்
06:30 இப்போதைக்கு இந்த கூடுதல் panel ஐ மறைத்து முன்னிருப்பு 3D view க்குத் திரும்பலாம்
06:37 கூடுதல் Object Transform panel ன் இடப்பக்க மூலைக்கு mouse cursor ஐ நகர்த்துக
06:44 ஒரு இருதலை அம்புக்குறி தோன்றுகிறது
06:48 சொடுக்கி Mouse ஐ வலப்பக்கம் இழுக்கவும்
06:52 கூடுதல் Object Transform panel மீண்டும் மறைக்கப்படுகிறது
06:59 இந்த panel ஐ மறைக்க அல்லது மறைவை நீக்க keyboard shortcut N ஐயும் பயன்படுத்தலாம்
07:07 3D view பற்றி மேலும் கற்க, Types of Windows - 3D view tutorial ஐ காணவும்
07:18 சிவப்பு பெட்டியால் மூடப்பட்ட பகுதி Info panel ஆகும்.
07:24 இதுதான் Blender interface ன் மிகச்சிறந்த Panel. ‘Info’ panel.. main menu ஐ கொண்டுள்ளது.
07:33 File ஐ சொடுக்கவும்.
07:36 இந்த menu... புது file ஐ உருவாக்குதல், ஏற்கனவே உள்ள file ஐ திறத்தல், file ஐ சேமித்தல், User Preferences, file ஐ import அல்லது export செய்தல் போன்ற File option களை கொண்டுள்ளது
07:57 Add ஐ சொடுக்கவும்.
08:00 இது object repository.
08:04 இந்த menu ஐ பயன்டுத்தி 3D view க்கு புது Object களை சேர்க்க முடியும்
08:10 keyboard shortcut ஆக Shift & A ஐ அழுத்துக
08:18 இப்போது, 3D view க்கு ஒரு Plane ஐ சேர்க்கலாம்
08:23 3D cursor ஐ நகர்த்த திரையில் எங்காவது சொடுக்கவும்.
08:29 இடத்தை தேர்வு செய்கிறேன்
08:34 ADD menu ஐ கொண்டுவர Shift & A ஐ அழுத்துக
08:39 Mesh. plane ல் சொடுக்குக
08:44 3D cursor நிலையில் 3D view க்கு ஒரு புது plane சேர்க்கப்படுகிறது
08:51 3D cursor பற்றி அறிய, Navigation – 3D cursor tutorial ஐ பார்க்கவும்.
09:00 அதுபோல, 3D view க்கு மேலும் பல object களை சேர்க்க முயற்சிக்கலாம்.
09:13 இப்போது Info panel க்கு திரும்பலாம்
09:16 Render menu ஐ திறக்க Render ல் சொடுக்கவும்
09:21 render image, render animation, show or hide render view போன்ற பல render option களைக் Render கொண்டுள்ளது
09:34 Render settings குறித்து பின்வரும் tutorial களில் விவரிக்கப்படும்
09:40 Info Panel பற்றி மேலும் அறிய, Type of Windows - File Browser மற்றும் Info Panel tutorial ஐ காணவும்
09:55 சிவப்பு பெட்டிக்கு கீழே உள்ள பகுதி outliner panel ஆகும்
10:00 இது blender interface ன் மேல் வலப்பக்க மூலையில் உள்ளது
10:07 3D view ல் தற்போது உள்ள அனைத்து Object களின் பட்டியலை Outliner தருகிறது
10:14 Outliner பற்றி மேலும் அறிய, Types of Windows - Outliner tutorial ஐ காணவும்
10:26 சிவப்பு பெட்டிக்கு உள்ளே உள்ள பகுதி properties window ஆகும்
10:36 இந்த window பலதரப்பட்ட panel களுடன் ஏராளமான tools மற்றும் settings ஐ கொண்டுள்ளது
10:38 இந்த panel களை Blender ல் வேலைசெய்யும் போது பலமுறை பயன்படுத்துவோம்
10:44 outliner window க்கு கீழே Blender interface ன் கீழ் வலப்பக்க மூலையில் Properties window உள்ளது
10:53 Properties window பற்றி மேலும் அறிய, Types of Windows - Properties Part 1 மற்றும் 2 tutorial களைப் பார்க்கவும்
11:07 இதுதான் Timeline.
11:10 இது 3D view க்கு கீழே உள்ளது
11:15 இங்கே animation ன் frame range ஐ பார்க்கலாம்
11:21 நீங்கள் வேலைசெய்துகொண்டிருக்கும் நடப்பு frame ஐ பச்சை செங்குத்துக் கோடு காட்டுகிறது
11:28 இதை frame range ல் நகர்த்தலாம்
11:33 பச்சை கோட்டை சொடுக்கி பிடிக்கவும்
11:36 இப்போது mouse ஐ நகர்த்தவும்.
11:43 frame ஐ உறுதிப்படுத்த சொடுக்கியை விடுவிக்கவும்
11:50 Start one... animation range ன் தொடக்க frame ஐ குறிக்கிறது.
11:58 End 250.... animation range ன் முடிவு frame ஐ குறிக்கிறது
12:10 இவைதான் நம் animation ன் playback optionகள்
12:16 Timeline பற்றி மேலும் அறிய, Types of Windows - Timeline tutorial ஐ பார்க்கவும்
12:25 இதுதான் blender interface ன் சுருக்கமான கண்ணோட்டம்
12:30 blender workspace ல் முன்னிருப்பாக உள்ள இந்த அனைத்து window களை தவிர,
12:35 எந்த இடத்திலும் menu ல் இருந்து தேர்வு செய்யக்கூடிய மற்ற window களும் உள்ளன
12:42 இந்த window களை பற்றிய விளக்கம் பின்வரும் tutorial களில் கொடுக்கப்படும்
12:51 இப்போது 3D view ல் ஒவ்வொரு object ஐயும் தேர்வு செய்ய முயற்சிக்கவும்;
12:57 3D transform manipulator ஐ பயன்படுத்தி, cube ஐ X Y மற்றும் Z திசைகளில் நகர்த்தவும்;
13:06 view tab ஐ ஆராய்க; Object Tools panel ல் translate ஐ பயன்படுத்தி, 3D view ல் camera ஐ நகர்த்துக
13:20 மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.


13:28 மேலும் விவரங்களுக்கு
oscar.iitb.ac.in, மற்றும்  spoken-tutorial.org/NMEICT-Intro.
13:47 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
13:57 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
14:04 தமிழாக்கம் பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Nancyvarkey, Priyacst, Ranjana