Blender/C2/The-Blender-Interface/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:03 | Blender Tutorialகளுக்கு நல்வரவு |
00:07 | இந்த tutorial... Blender 2.59 ல் Blender interface பற்றிய அடிப்படை விவரங்களைக் கொண்டது |
00:15 | இந்த tutorial க்கு script : Bhanu Prakash மற்றும் editing : Monisha Banerjee |
00:22 | இதில் நாம் கற்க போவது Blender interface ன் பல்வித windows, |
00:29 | ஒவ்வொரு window க்கும் ஒதுக்கப்பட்ட parameters மற்றும் tabs, 3D view ல் ஒரு object ஐ தேர்ந்தெடுத்தல், |
00:37 | X,Y & Z திசைகளில் ஒரு object ஐ நகர்த்துதல். |
00:44 | உங்களுக்கு Blender ஐ ஆரம்பிக்க தெரியும் என கொள்கிறேன் |
00:48 | இல்லையெனில் அதுகுறித்த முன் tutorial களைக் காணவும் |
00:56 | இதுதான் 3D panel. |
00:58 | முன்னிருப்பாக மூன்று objectகள்... 3D view ல் இருக்கும் |
01:03 | ஒரு cube, ஒரு lamp மற்றும் ஒரு camera. |
01:10 | முன்னிருப்பாக cube தேர்வாகியுள்ளது |
01:14 | lamp ஐ தேர்வுசெய்ய right click செய்க |
01:19 | camera ஐ தேர்வுசெய்ய right click செய்க |
01:23 | ஆக 3D view ல் ஏதேனும் object ஐ தேர்வுசெய்ய அந்த object ன் மீது right click செய்ய வேண்டும் |
01:31 | cube ஐ தேர்வுசெய்ய right click செய்க |
01:35 | இந்த மூவண்ண அம்புகள் cube ன் நடுவில் இணைந்து 3D Transform manipulator ஐ குறிக்கின்றன |
01:44 | இந்த manipulator... object ஐ ஒரு குறிப்பிட்ட அச்சில் நகர்த்த உதவுகிறது |
01:51 | சிவப்பு X அச்சைக் குறிக்கிறது |
01:55 | பச்சை Y அச்சைக் குறிக்கிறது |
01:59 | நீலம் Z அச்சைக் குறிக்கிறது |
02:05 | பச்சை அம்புக்குறியை சொடுக்கி பிடித்து இடமிருந்து வலமாக உங்கள் mouse ஐ நகர்த்தவும் |
02:15 | keyboard shortcut ஆக G&Y ஐ அழுத்துக |
02:22 | அந்த object... Y அச்சு திசையில் மட்டும் நகர்வதைக் காண்கிறோம் |
02:32 | அதுபோல, நீல அம்புக்குறியைப் பயன்படுத்தி object ஐ Z அச்சில் நகர்த்துக |
02:45 | keyboard shortcut ஆக G&Z ஐ அழுத்துக |
02:56 | இப்போது, object ஐ X அச்சில் நகர்த்த முயற்சிக்கவும் |
03:08 | keyboard shortcut ஆக G&X ஐ அழுத்துக |
03:23 | சிவப்பு பெட்டியால் மூடப்பட்டுள்ள பகுதி 3D view ஆகும் |
03:32 | 3D view ன் கீழே இடப்பக்க மூலைக்குச் செல்லவும் |
03:36 | View ஐ சொடுக்கவும். இங்கே 3D view க்கான பல்வேறு view option களின் பட்டியல் உள்ளது |
03:46 | ‘Top’ ஐ சொடுக்கவும். keyboard shortcut ஆக numpad 7 ஐ அழுத்துக. |
03:52 | 3D view... User Perspective லிருந்து Top view க்கு மாறுகிறது |
03:57 | நம் object ஐ top view லிருந்து பார்க்கலாம் |
04:03 | Select ஐ சொடுக்கவும். இங்கே 3d view ன் எல்லா object களுக்கான பல selection option களின் பட்டியல் உள்ளது |
04:18 | Object ஐ சொடுக்கவும். இங்கே செயலில் உள்ள object க்கான பல editing option களின் பட்டியல் உள்ளது |
04:35 | 3D view ன் இடப்பக்கம் object Tools panel உள்ளது |
04:41 | இது 3D view ன் செயல் object ஐ மாற்ற பயன்படும் பல tool களை பட்டியலிடுகிறது |
04:49 | இந்த toolகள் பல்வேறு பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன |
04:52 | Transform, Object, Shading, Keyframes, Motion Paths, repeat, Grease Pencil |
05:13 | உதாரணமாக, lamp ஐ 3D view ல் நகர்த்தலாம் |
05:19 | lamp ஐ தேர்வுசெய்ய Right click செய்க |
05:23 | Object tools panel க்கு செல்க |
05:28 | Object tools panel ல் lamp க்கான options ஐ பார்க்கலாம் |
05:35 | translate ஐ சொடுக்கி mouse ஐ நகர்த்தவும் |
05:41 | mouse நகர்வின் திசையில் lamp நகர்கிறது |
05:46 | screen ல் Right click செய்க அல்லது translate ஐ நீக்க keyboard ல் Esc ஐ அழுத்துக |
05:57 | 3D view ன் வலப்பக்கம் மற்றொரு panel முன்னிருப்பாக மறைந்துள்ளது |
06:04 | மறைந்துள்ள panel ஐ திறக்க 3D view ன் மேல் வலப்பக்க மூலையில் உள்ள கூட்டல் குறியைச் சொடுக்கவும் |
06:12 | keyboard shortcut ஆக N ஐ அழுத்துக |
06:17 | இந்த கூடுதல் Object Transform panel... Properties window ல் உள்ள Object panel ஐ போன்றதே |
06:25 | பின்வரும் tutorial களில் இந்த Object panel ஐ விரிவாக காணலாம் |
06:30 | இப்போதைக்கு இந்த கூடுதல் panel ஐ மறைத்து முன்னிருப்பு 3D view க்குத் திரும்பலாம் |
06:37 | கூடுதல் Object Transform panel ன் இடப்பக்க மூலைக்கு mouse cursor ஐ நகர்த்துக |
06:44 | ஒரு இருதலை அம்புக்குறி தோன்றுகிறது |
06:48 | சொடுக்கி Mouse ஐ வலப்பக்கம் இழுக்கவும் |
06:52 | கூடுதல் Object Transform panel மீண்டும் மறைக்கப்படுகிறது |
06:59 | இந்த panel ஐ மறைக்க அல்லது மறைவை நீக்க keyboard shortcut N ஐயும் பயன்படுத்தலாம் |
07:07 | 3D view பற்றி மேலும் கற்க, Types of Windows - 3D view tutorial ஐ காணவும் |
07:18 | சிவப்பு பெட்டியால் மூடப்பட்ட பகுதி Info panel ஆகும். |
07:24 | இதுதான் Blender interface ன் மிகச்சிறந்த Panel. ‘Info’ panel.. main menu ஐ கொண்டுள்ளது. |
07:33 | File ஐ சொடுக்கவும். |
07:36 | இந்த menu... புது file ஐ உருவாக்குதல், ஏற்கனவே உள்ள file ஐ திறத்தல், file ஐ சேமித்தல், User Preferences, file ஐ import அல்லது export செய்தல் போன்ற File option களை கொண்டுள்ளது |
07:57 | Add ஐ சொடுக்கவும். |
08:00 | இது object repository. |
08:04 | இந்த menu ஐ பயன்டுத்தி 3D view க்கு புது Object களை சேர்க்க முடியும் |
08:10 | keyboard shortcut ஆக Shift & A ஐ அழுத்துக |
08:18 | இப்போது, 3D view க்கு ஒரு Plane ஐ சேர்க்கலாம் |
08:23 | 3D cursor ஐ நகர்த்த திரையில் எங்காவது சொடுக்கவும். |
08:29 | இடத்தை தேர்வு செய்கிறேன் |
08:34 | ADD menu ஐ கொண்டுவர Shift & A ஐ அழுத்துக |
08:39 | Mesh. plane ல் சொடுக்குக |
08:44 | 3D cursor நிலையில் 3D view க்கு ஒரு புது plane சேர்க்கப்படுகிறது |
08:51 | 3D cursor பற்றி அறிய, Navigation – 3D cursor tutorial ஐ பார்க்கவும். |
09:00 | அதுபோல, 3D view க்கு மேலும் பல object களை சேர்க்க முயற்சிக்கலாம். |
09:13 | இப்போது Info panel க்கு திரும்பலாம் |
09:16 | Render menu ஐ திறக்க Render ல் சொடுக்கவும் |
09:21 | render image, render animation, show or hide render view போன்ற பல render option களைக் Render கொண்டுள்ளது |
09:34 | Render settings குறித்து பின்வரும் tutorial களில் விவரிக்கப்படும் |
09:40 | Info Panel பற்றி மேலும் அறிய, Type of Windows - File Browser மற்றும் Info Panel tutorial ஐ காணவும் |
09:55 | சிவப்பு பெட்டிக்கு கீழே உள்ள பகுதி outliner panel ஆகும் |
10:00 | இது blender interface ன் மேல் வலப்பக்க மூலையில் உள்ளது |
10:07 | 3D view ல் தற்போது உள்ள அனைத்து Object களின் பட்டியலை Outliner தருகிறது |
10:14 | Outliner பற்றி மேலும் அறிய, Types of Windows - Outliner tutorial ஐ காணவும் |
10:26 | சிவப்பு பெட்டிக்கு உள்ளே உள்ள பகுதி properties window ஆகும் |
10:36 | இந்த window பலதரப்பட்ட panel களுடன் ஏராளமான tools மற்றும் settings ஐ கொண்டுள்ளது |
10:38 | இந்த panel களை Blender ல் வேலைசெய்யும் போது பலமுறை பயன்படுத்துவோம் |
10:44 | outliner window க்கு கீழே Blender interface ன் கீழ் வலப்பக்க மூலையில் Properties window உள்ளது |
10:53 | Properties window பற்றி மேலும் அறிய, Types of Windows - Properties Part 1 மற்றும் 2 tutorial களைப் பார்க்கவும் |
11:07 | இதுதான் Timeline. |
11:10 | இது 3D view க்கு கீழே உள்ளது |
11:15 | இங்கே animation ன் frame range ஐ பார்க்கலாம் |
11:21 | நீங்கள் வேலைசெய்துகொண்டிருக்கும் நடப்பு frame ஐ பச்சை செங்குத்துக் கோடு காட்டுகிறது |
11:28 | இதை frame range ல் நகர்த்தலாம் |
11:33 | பச்சை கோட்டை சொடுக்கி பிடிக்கவும் |
11:36 | இப்போது mouse ஐ நகர்த்தவும். |
11:43 | frame ஐ உறுதிப்படுத்த சொடுக்கியை விடுவிக்கவும் |
11:50 | Start one... animation range ன் தொடக்க frame ஐ குறிக்கிறது. |
11:58 | End 250.... animation range ன் முடிவு frame ஐ குறிக்கிறது |
12:10 | இவைதான் நம் animation ன் playback optionகள் |
12:16 | Timeline பற்றி மேலும் அறிய, Types of Windows - Timeline tutorial ஐ பார்க்கவும் |
12:25 | இதுதான் blender interface ன் சுருக்கமான கண்ணோட்டம் |
12:30 | blender workspace ல் முன்னிருப்பாக உள்ள இந்த அனைத்து window களை தவிர, |
12:35 | எந்த இடத்திலும் menu ல் இருந்து தேர்வு செய்யக்கூடிய மற்ற window களும் உள்ளன |
12:42 | இந்த window களை பற்றிய விளக்கம் பின்வரும் tutorial களில் கொடுக்கப்படும் |
12:51 | இப்போது 3D view ல் ஒவ்வொரு object ஐயும் தேர்வு செய்ய முயற்சிக்கவும்; |
12:57 | 3D transform manipulator ஐ பயன்படுத்தி, cube ஐ X Y மற்றும் Z திசைகளில் நகர்த்தவும்; |
13:06 | view tab ஐ ஆராய்க; Object Tools panel ல் translate ஐ பயன்படுத்தி, 3D view ல் camera ஐ நகர்த்துக |
13:20 | மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
13:28 | மேலும் விவரங்களுக்கு oscar.iitb.ac.in, மற்றும் spoken-tutorial.org/NMEICT-Intro. |
13:47 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
13:57 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org |
14:04 | தமிழாக்கம் பிரியா. நன்றி. |