Difference between revisions of "Koha-Library-Management-System/C3/Import-MARC-to-Koha/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{|border=1 |Time |Narration |- | 00:01 | '''Kohaவினுள் MARC fileஐ import செய்வது''' குறித்த '''spoken tutorial'''க்கு...") |
|||
Line 345: | Line 345: | ||
|- | |- | ||
| 11:10 | | 11:10 | ||
− | | | + | | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |
|} | |} |
Latest revision as of 15:24, 9 February 2021
Time | Narration |
00:01 | Kohaவினுள் MARC fileஐ import செய்வது குறித்த spoken tutorialக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: KOHA வினுள் ஒரு MARC file ஐ import செய்வது மற்றும் OPAC.ல் import செய்யப்பட்ட dataவை தேடுவது. |
00:20 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், பின்வருவனவற்றை பயன்படுத்துகிறேன்: Ubuntu Linux OS 16.04 |
00:28 | Koha version 16.05 மற்றும் Firefox Web browser. |
00:36 | உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு வேறு எந்த web browserஐயும் நீங்கள் பயன்படுத்தலாம். |
00:41 | இந்த டுடோரியலை புரிந்துகொள்ள, கற்பவர்களுக்கு library science பற்றி தெரிந்துஇருக்க வேண்டும். |
00:47 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்கள் கணினியில் Koha -நிறுவப்பட்டிருக்க வேண்டும். மற்றும், Koha.வில் உங்களுக்கு Admin அணுகல் இருக்க வேண்டும். |
00:58 | இல்லையெனில், இந்த வலைத்தளத்திலுள்ள Koha Spoken Tutorial தொடரைப்பார்க்கவும். |
01:05 | Kohaவினுள் recordகளை import செய்வது இரண்டு படிகளில் செய்யப்படுகிறது: Stage MARC records for import மற்றும் Manage staged records. |
01:18 | தொடங்குவதற்கு, நமது 'Superlibrarian அணுகலுடன் Koha வினுள் login செய்வோம். |
01:24 | Home pageல், Toolsஐ க்ளிக் செய்யவும். |
01:28 | ஒரு புதிய பக்கம் திறக்கிறது. Catalog பிரிவின் கீழ், Stage MARC records for import.ஐ க்ளிக் செய்யவும். |
01:40 | Stage MARC records for import. என்ற தலைப்பை கொண்ட ஒரு புதிய பக்கம் திறக்கிறது. |
01:46 | Stage records into the reservoir. பிரிவுக்கு செல்லவும். |
01:51 | இங்கு, Select the file to stage. க்கு அடுத்துள்ள Browse... ஐ க்ளிக் செய்யவும். |
01:58 | File Upload window திறக்கிறது. பின், Downloads folder க்கு செல்லவும். |
02:06 | இங்கு, TestData.mrc என்ற பெயருடைய fileஐ கண்டறியவும். |
02:12 | ஒரு முந்தைய டுடோரியலில், நாம் TestData.mrc file ஐ உருவாக்கியுள்ளோம் என்பதை நினைவுகூறவும். |
02:20 | TestData.mrc file ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்படவில்லையெனில், அதை தேர்ந்தெடுக்கவும். பின், பக்கத்தின் கீழுள்ள Open பட்டனை க்ளிக் செய்யவும். |
02:32 | அதே பக்கத்தில், Browse. tabக்கு அடுத்து, TestData.mrcஐ fileன் பெயராகக்காண்பீர்கள். |
02:43 | இப்போது, பக்கத்தின் கீழுள்ள Upload file பட்டனை க்ளிக் செய்யவும். |
02:49 | Upload progress barஐ, பழுப்பு நிறத்தில் நீங்கள் காண்பீர்கள். |
02:55 | Upload 100% சதவிகிதம் நிறைவடைந்த வுடன், சில விவரங்களை பூர்த்தி செய்ய நாம் தூண்டப்படுகிறோம். |
03:03 | முதலில், Comments about this file.க்கான fieldஐ பூர்த்தி செய்யவும். |
03:09 | KOHA.வில் upload செய்யப்பட்ட fileஐ அடையாளம் காண இது பயன்படுகிறது. |
03:14 | நான் Book Data.ஐ enter செய்கிறேன். |
03:18 | அடுத்தது, Record type. . இங்கு, Koha முன்னிருப்பாக Bibliographic.ஐ தேர்ந்தெடுக்கிறது. |
03:26 | இவ்வாறே, Character encodingக்கு Koha முன்னிருப்பாக UTF-8 (Default)ஐ தேர்ந்தெடுக்கிறது. |
03:35 | அடுத்து, Look for existing records in catalog? பிரிவுக்கு வரவும். |
03:41 | இந்த பிரிவின் கீழுள்ள Record matching rule: க்கு செல்லவும். Koha முன்னிருப்பாக Do not look for matching recordsஐ தேர்ந்தெடுக்கிறது. |
03:51 | ஏற்கனவே உள்ள recordகளை match செய்ய, drop downனிலிருந்து வேறொரு தேர்வை தேர்ந்தெடுக்கவும், அதாவது ISBN/ISSN number. |
04:04 | இப்போது, நாம் Action if matching record found. க்கு வருகிறோம். |
04:09 | Koha முன்னிருப்பாக Replace existing record with incoming record.ஐ தேர்ந்தெடுக்கிறது. |
04:16 | அடுத்து வருவது, Action if no match is found.. Koha முன்னிருப்பாக Add incoming recordஐ தேர்ந்தெடுக்கிறது. |
04:25 | அடுத்து, Check for embedded item record data? பிரிவுக்கு நாம் வருகிறோம். இங்கு, இரண்டு தேர்வுகள் உள்ளன. Yes மற்றும் No. |
04:37 | Koha முன்னிருப்பாக Yes.ஐ தேர்ந்தெடுக்கிறது. |
04:41 | How to process items,க்கு Koha முன்னிருப்பாக Always add items.ஐ தேர்ந்தெடுக்கிறது. |
04:48 | வேறு தேர்வுகளும் இருக்கின்றன. உங்கள் விருப்புரிமைக்கேற்றவாறு, இதிலிருந்து எந்த தேர்வையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். |
04:56 | பக்கத்தின் கீழுள்ள Stage for import பட்டனை க்ளிக் செய்யவும். ஒரு நீல நிறம் பூசப்பட்ட barல், “Job progress” ஐ நீங்கள் காணலாம். |
05:06 | 100% முன்னேற்றம் முடிந்துவிட்டதெனில், Stage MARC records for import. என்ற தலைப்பை கொண்ட ஒரு புதிய பக்கம் திறக்கிறது. |
05:17 | நமது Excel sheetல் நாம் வைத்திருந்த dataஐ இப்போது நாம் வெற்றிகரமாக import செய்துவிட்டோம் என்பதை கவனிக்கவும். |
05:25 | அது பின்வரும் விவரங்களை கொண்டிருக்கிறது. |
05:28 | உங்கள் .mrc data வின் படி, உங்கள் Koha interfaceல், நீங்கள் ஒரு வேறுபட்ட மதிப்பை காண்பீர்கள் என்பதை கவனிக்கவும். |
05:36 | இதே பக்கத்தில், தலைப்பின் மேல், நீங்கள் இரண்டு தேர்வுகளை காண்பீர்கள்: Stage MARC records மற்றும் Manage staged records. |
05:48 | Excel file, அதாவது TestData.ஐ நான் ஏற்கனவே import செய்துள்ளதால், Stage MARC records ஐ நான் க்ளிக் செய்யப்போவதில்லை என்பதை கவனிக்கவும். |
06:00 | நீங்கள் வேறு ஏதேனும் fileஐ import செய்யவேண்டிய தேவை இருந்தால், Stage MARC recordsஐ க்ளிக் செய்து, முன்பு கூறப்பட்ட படிகளை பின்பற்றவும். |
06:11 | அடுத்து, KOHA Catalog.ல் உள்ள import செய்யப்பட்ட recordகளை நாம் கையாள வேண்டும். அதனால், Manage staged records.ஐ க்ளிக் செய்யவும். |
06:22 | Manage staged MARC records › Batch 6 என்ற ஒரு புதிய window திறக்கிறது. |
06:30 | இந்தப்பக்கத்தில், இங்கு காட்டாப்பட்ட மதிப்புகளுடன் பின்வரும் fieldகளை Koha பூர்த்தி செய்கிறது. |
06:37 | மேலும் பின்வரும் fieldகளுக்கு, Koha முன்னிருப்பாக drop downனிலிருந்து இந்த entryக்களை தேர்ந்தெடுக்கிறது. |
06:45 | ஆனால், உங்கள் தேவைக்கேற்றவாறு உரிய drop-downகளிலிருந்து, இந்த entryக்களை நீங்கள் மாற்றலாம். |
06:52 | அடுத்து, Apply different matching rules. என்ற பெயருடைய பட்டனாகும். |
06:57 | Databaseல் உள்ள recordகளின் நகலாக்கத்தை தவிர்க்க, இந்த பட்டனை நீங்கள் அழுத்தலாம். நான் இந்த பட்டனை தவிர்த்து, மேலும் தொடருகிறேன். |
07:09 | இப்போது, Add new bibliographic records into this framework.ஐ கண்டறியவும். மற்றும், drop downனிலிருந்து நான் BOOKSஐ தேர்ந்தெடுக்கிறேன். |
07:20 | மீண்டும், உங்கள் தேவைக்கேற்றவாறு நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். |
07:25 | இப்போது, நான் Import this batch into the catalog tabஐ க்ளிக் செய்கிறேன். |
07:32 | எனினும், க்ளிக் செய்வதற்கு முன் Citation. பிரிவை பற்றி பார்ப்போம் . |
07:37 | குறிப்பிட்ட எண்களை கவனிக்கவும். நாம் Excel.லிலிருந்து import செய்த விவரங்களுடன் ஒரு வேறுபட்ட எண்ணை நீங்கள் காண்பீர்கள். |
07:48 | இப்போது, Import this batch into the catalog. என்று பெயரிடப்பட்ட பட்டனை நாம் க்ளிக் செய்வோம். |
07:55 | அவ்வாறு செய்கையில், Job progress bar தோன்றுகிறது. |
08:00 | முன்னேற்றம் 100% நிறைவடைந்த பிறகு, ஒரு புதிய பக்கம் திறக்கிறது. |
08:06 | Manage staged MARC records › Batch 6 என்ற தலைப்பையும், முன்பு enter செய்யப்பட்ட விவரங்களையும் அது கொண்டிருக்கிறது. |
08:16 | உங்கள் importஐ undo செய்வது சாத்தியமாகும். நீங்கள் import செய்த dataவில், ஏதேனும் பிழையை நீங்கள் கண்டுபிடித்தால், அதை திருத்த பின்வருவனவற்றை செய்யவும். |
08:27 | பிரிவின் கீழுள்ள Undo import into catalog tabஐ க்ளிக் செய்யவும். |
08:34 | நான் இங்கு க்ளிக் செய்யப்போவதில்லை. |
08:37 | அடுத்தது, Completed import of records. |
08:42 | இங்கு, records added, updated போன்ற பல விவரங்களை நீங்கள் காணலாம். |
08:49 | பின், import செய்யப்பட்ட விவரங்களுடன் Citation பிரிவை நீங்கள் காண்பீர்கள். |
08:56 | Import நிறைவடைந்தவுடன், புதிய Record க்கான ஒரு இணைப்பு தோன்றும். |
09:02 | Import செய்யப்பட்ட ஒவ்வொரு Citationனின் வலது பக்கத்தில் இது தெரியும். |
09:08 | இப்போது, Catalog ல் தலைப்புகள் சேர்க்கப்பட்டனவா இல்லையா என்பதை நாம் உறுதி செய்வோம். |
09:15 | அதைச் செய்ய, அதே பக்கத்தின் மேலுள்ள Search the catalog.க்கான fieldஐ தேடவும். |
09:22 | Kohaவினுள் recordsகள் import செய்யப்பட்டுவிட்டனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள, இப்போது ஒரு சிறிய சோதனையை நான் செய்கிறேன். |
09:29 | அதனால், Citation பிரிவில், import செய்யப்பட்ட recordலிருந்து ஒரு தலைப்பை இங்கு நான் டைப் செய்கிறேன். |
09:37 | பின், fieldன் வலது பக்கத்தில் உள்ள Submit பட்டனை க்ளிக் செய்யவும். |
09:43 | ஒரு புதிய பக்கம் திறக்கிறது- Inorganic chemistry Housecroft, Catherine E. |
09:50 | Koha, தேடப்பட்ட Titleன் முடிவை காட்டுகிறது. இது, recordகள் சரியாக import செய்யப்பட்டுள்ளன என்பதை நிரூபிக்கிறது. |
09:58 | இத்துடன், Koha.வினுள் MARC ஐ import செய்வது முடிவடைந்துவிட்டது. |
10:04 | சுருங்கச்சொல்ல. இந்த டுடோரியலில் நாம், KOHA வினுள் ஒரு MARC file ஐ import செய்வது மற்றும் OPAC.ல் import செய்யப்பட்ட dataவை தேடக்கற்றோம். |
10:17 | பயிற்சியாக- ஒரு முந்தைய டுடோரியலில் மாற்றப்பட்ட MARCன் 10 recordsகளை பயன்படுத்தவும் மற்றும் அவற்றை KOHA.வினுள் import செய்யவும். |
10:29 | குறிப்பு: Conversion of Excel data to Marc 21 format. டுடோரியலை பார்க்கவும். |
10:37 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
10:45 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும். |
10:56 | உங்கள் நேரமிடப்பட்ட கேள்விகளை, இந்த மன்றத்தில் முன்வைக்கவும். |
10:59 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
11:10 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |