Difference between revisions of "Health-and-Nutrition/C2/Nipple-conditions/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 293: | Line 293: | ||
| 07:19 | | 07:19 | ||
| இத்துடன், தாய்ப்பால் கொடுக்கின்ற தாய்மார்களின் மார்பகக்காம்பு நிலைமைகள் குறித்த இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்து விட்டோம். | | இத்துடன், தாய்ப்பால் கொடுக்கின்ற தாய்மார்களின் மார்பகக்காம்பு நிலைமைகள் குறித்த இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்து விட்டோம். | ||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஆர்த்தி. நன்றி. | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஆர்த்தி. நன்றி. | ||
|} | |} |
Latest revision as of 15:36, 5 August 2020
|
|
00:01 | தாய்ப்பால் கொடுக்கின்ற தாய்மார்களின் மார்பகக்காம்பின் தன்மைகள் குறித்த இந்த Spoken Tutorialக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில், நாம் புண்பட்ட அல்லது வெடிப்புற்ற மார்பகக்காம்புகள் மற்றும் |
00:11 | தட்டையான அல்லது தலைகீழான மார்பகக்காம்புகள் பற்றி அறிந்து கொள்வோம். |
00:15 | முதலாவது - புண்பட்ட அல்லது வெடிப்புற்ற மார்பகக்காம்புகள். |
00:20 | இந்நிலைமையில், தாயின் மார்பகக்காம்புகளில், வெடிப்பு அல்லது ரத்தக்கசிவு ஏற்படுகிறது. |
00:26 | இது, மார்பகக்காம்புகளை உலர்வாக்கி, நமைச்சலை ஏற்படுத்துகிறது. |
00:30 | புண்பட்ட அல்லது வெடிப்புற்ற மார்பகக்காம்புகளுக்கான காரணங்களைப்பற்றி இப்போது காண்போம். |
00:36 | மார்பகக்காம்புகள் மூலம் பாலூட்டல், |
00:38 | பூஞ்சை அல்லது பாக்டீரியா தொற்று, |
00:41 | ஒவ்வொரு முறை தாய்ப்பாலூட்டலுக்குப் பின்னும்,மார்பகக்காம்புகளை சுத்தம் செய்யும் பழக்கம், மற்றும் |
00:45 | தெற்றுநாவுடைய குழந்தை. |
00:47 | முதலில், மார்பகக்காம்புகள் மூலம் பாலூட்டுதலைப் பற்றி பார்ப்போம். |
00:50 | புண்பட்ட அல்லது வெடிப்புற்ற மார்பகக்காம்புகளுக்கான முக்கிய மற்றும் முதன்மையான காரணம், மார்பகக்காம்புகள் மூலம் பாலூட்டுவதாகும். |
00:56 | மார்பகக்காம்புகள் மூலம் பாலூட்டும் போது - குழந்தையினுடைய வாயின் கடினமான அண்ணத்தில், மார்பகக்காம்பு உரசுகிறது. |
01:03 | கடினமான அண்ணம், மற்றும், நாக்குக்கிடையே உள்ள இந்த மார்பக்கக்காம்பை, குழந்தை கிள்ளுகிறது. |
01:08 | இந்த கிள்ளுதலால், வலி அதிகமாகி, புண்பட்ட அல்லது வெடிப்புற்ற மார்பக்கக்காம்பை விளைவிக்கிறது. |
01:17 | மார்பகக்காம்புகள் மூலம் பாலூட்டல், தவறான முறையில் பற்றி கொள்ளுதலின் விளைவாகும். |
01:20 | இதனால் வரக்கூடிய, புண்பட்ட அல்லது வெடிப்புற்ற மார்பகக்காம்புகளைத் தவிர்ப்பதில், சரியாக பற்றிக் கொள்ளுதல், ஒரு முக்கிய பங்கு வகுக்கிறது |
01:29 | இந்த சரியான நுட்பத்தை, இதே தொடரின் மற்றொரு டுடோரியலில், நாம் கற்றோம் என்பதை நினைவில் கொள்ளவும். |
01:37 | சரியாக பற்றிக்கொள்ளும் போது, புண்பட்ட அல்லது வெடிப்புற்ற மார்பகக்காம்புகளில் கண்டிப்பாக வலி ஏற்படும். |
01:43 | சரியாக பற்றிக்கொள்ளும் நுட்பத்தை தாய் தொடர்ந்து கடைப்பிடித்தால், மெதுவாக மற்றும் படிப்படியாக, வலி நின்று விடுகிறது. |
01:51 | அடுத்து, பூஞ்சை அல்லது பாக்டீரியா தொற்று. |
01:56 | தாய்க்கு பூஞ்சை அல்லது பாக்டீரியா தொற்று இருந்தால், அவர் மருத்துவரை அணுக வேண்டும். |
02:03 | அடுத்து, ஒவ்வொரு பாலூட்டலுக்கு முன்பும், மார்பகக்காம்புகளை சுத்தம் செய்யும் பழக்கத்தை, சில தாய்மார்கள் கொண்டிருக்கின்றனர். |
02:09 | இது மார்பகக்காம்புகளின் வறட்சிக்கு காரணமாகிறது. |
02:13 | அதனால், இந்த வழக்கம், தவிர்க்கப்பட வேண்டும். |
02:16 | தாய் குளிக்கும் போது, மார்பகக்காம்புகளை ஒரு முறை சுத்தம் செய்யலாம் என்பதை நினைவில் கொள்க. |
02:21 | எனினும், ஒரு முறை மார்பகக்காம்பில் வெடிப்பு ஏற்பட்டுவிட்டால் தாய், ஒவ்வொரு பாலூட்டலின் பின்னும், அதை சுத்தம் செய்ய வேண்டும். |
02:28 | சுத்தம் செய்த பிறகு, தாய், காயத்தின் மீது, தன் இறுதிப்பாலை தடவ வேண்டும். |
02:32 | ஏனெனில், இறுதிப்பால், தொற்றுதலை தடுப்பதற்கும், குணப்படுத்துவதற்கும் உதவுகின்ற தன்மையை கொண்டது. |
02:39 | இவ்வாறு உயிரணுக்கள், குழந்தையின் வாயிலிருந்து, மார்பகக்காம்பின் வெடிப்பிற்குள் புகுவதை, இது தடுக்கிறது. |
02:46 | அடுத்து, தெற்றுநாவுடைய குழந்தை. |
02:50 | தெற்றுநாவுடைய குழந்தையின் நாக்கு முனை, வாயின் உட்புற பகுதியுடன் ஒட்டியிருக்கும். |
02:58 | இது, மிகவும் அரிதான ஒரு நிலையாகும். |
03:01 | பொதுவாக, தெற்றுநாவுடைய ஒரு குழந்தை, மார்பகக்காம்பிலிருந்தே பாலை உறிஞ்சுகிறது. |
03:06 | தெற்றுநாவுடைய ஒரு குழந்தை, சரியாக பற்றிக்கொண்டால் மட்டும் போதாது, அதற்கு, அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. |
03:16 | அத்தகைய சந்தர்ப்பங்களில், தாய் எப்போதும் மருத்துவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும். |
03:22 | இப்போது, புண்பட்ட அல்லது வெடிப்புற்ற மார்பகக்காம்புகளுக்கான சிகிச்சை முறையை பற்றி காண்போம். |
03:27 | ஒரு தாய்க்கு, புண்பட்ட அல்லது வெடிப்புற்ற மார்பகக்காம்புகள் இருந்தால், சுகாதார ஊழியர், தாயின் மார்பகத்தையும், மார்பகக்காம்பையும் பரிசோதித்து, |
03:37 | பின், பாலூட்டலுக்கு முன்பு தாய், தன் கையினால் அழுத்தி, சிறிது பாலை வெளிக்கொணர வேண்டும் என்று கூற வேண்டும். |
03:42 | இது, மார்பகத்தை மென்மையாக்குவதனால், குழந்தை எளிதாக பற்றிக்கொள்ளும். |
03:47 | இவைகளைத் தவிர, பாலை வெளிக்கொணர்வதன் மூலம், நோய்த்தாக்கம், மஸ்ட்டைடிஸ், மற்றும் மார்பகக்காம்பு வெடிப்புகள் போன்ற ஆபத்துகள் வருவதை குறைக்கலாம். |
03:55 | இதற்குப்பிறகு, தாய் தன் குழந்தையை மார்போடு சரியாக இணைத்துக் கொள்ள உதவவும். |
04:01 | தாய்ப்பாலூட்டும் இடைவெளிகள், தாய்ப்பால் சுரத்தலை தீர்மானிக்கின்ற காரணிகளில் ஒன்றாகும் என்பதை நினைவில் கொள்க. |
04:09 | அதனால் தாய்ப்பாலூட்டுதலை தாய் நிறுத்தக்கூடாது. |
04:13 | தாய்ப்பாலூட்டுதலின் போது, குறைவாக வலி இருக்கின்ற பக்கத்தில் இருந்து பாலூட்டத் தொடங்க வேண்டும். |
04:20 | தாய்ப்பாலூட்டிய சிறிது நேரத்திற்கு பின்பும், வலி இருந்தால் - தன் கையினால், பாலை வெளிக்கொணர்ந்து, ஒரு கரண்டி அல்லது கிண்ணத்தின் மூலம் குழந்தைக்கு பாலூட்டலாம். |
04:32 | மேலும், முன்பு கற்றது போல், ஒவ்வொரு தாய்ப்பாலூட்டலுக்குப் பின்னும், சில துளிகள் இறுதிப்பாலை, பாதிக்கப்பட்ட பகுதியின் மீது தடவவும். |
04:42 | பின்வருவனவற்றை, புண்பட்ட அல்லது வெடிப்புற்ற அல்லது ஆரோக்கியமான மார்பகக்காம்புகளின் மீதும், கூட பயன்படுத்த வேண்டாம். |
04:49 | சோப்புகள், எண்ணெய்கள், களிம்புகள், நறுமணக் குழைகள், மற்றும் வாசனை திரவியங்கள். |
04:54 | அவை, எரிச்சலை கிளப்பி |
04:57 | புண்பட்ட அல்லது வெடிப்புற்ற மார்பகக்காம்புகள் இருந்தால், அது நிலைமையை மேலும் மோசமாக்கும். |
05:03 | நிலைமை மிகவும் மோசமானால், தாய், மருத்துவர் அல்லது சுகாதார ஊழியரை கலந்தாலோசிக்க வேண்டும் |
05:09 | புண்பட்ட அல்லது வெடிப்புற்ற மார்பகக்காம்புகளைத் தவிர்க்க, குழந்தை பிறந்த உடனடியாக, தாய்ப்பாலூட்ட தொடங்க வேண்டும் . |
05:15 | தாய்ப்பாலூட்டும் போது, குழந்தை நன்கு பற்றிக் கொண்டுள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும். |
05:22 | நாம் அடுத்து பார்க்க இருக்கின்ற மார்பகக்காம்பு நிலைமை - தட்டையான அல்லது தலைகீழான முலைக்காம்புகள். |
05:28 | தட்டையான முலைக்காம்புகள், ஏரியோலாவிலிருந்து நீண்டிருப்பதில்லை. |
05:33 | ஆனால், தலைகீழான மார்பகக்காம்புகள், பொதுவாக உள்நோக்கிய திசையில் பதிந்திருக்கும். |
05:38 | தட்டையான அல்லது தலைகீழான மார்பகக்காம்புகள், தாய்ப்பாலூட்டுதலுக்கு ஒரு தடையல்ல என்ற உண்மையை, தாய் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். |
05:48 | ஏனெனில், சரியான பற்றிக்கொள்ளுதலின் போது, குழந்தை, ஏரியோலாவை பற்றிக் கொள்ளுமே தவிர, மார்பகக்காம்பை அல்ல. |
05:56 | தட்டையான அல்லது தலைகீழான மார்பகக்காம்புகள் இருந்தால், தாய்க்கு, குழந்தை பிறந்த முதல் ஒரு வாரத்திற்கு உதவி தேவைப்படுகிறது. |
06:03 | இந்த காலகட்டத்தில் - சுகாதார ஊழியர், சரியான பற்றிக்கொள்ளுதலுக்கு, தாய்க்கு வழிகாட்ட வேண்டும். |
06:08 | இது தாயின் நம்பிக்கையை அதிகரிக்கும். |
06:11 | தாய்க்கு தட்டையான அல்லது தலைகீழான மார்பகக்காம்புகள் இருந்தால், பின்வருபவை, சிறந்த பற்றிக்கொள்ளுதலுக்கான நிலைகள் - குறுக்குத் தொட்டில் நிலை |
06:22 | கால்பந்து நிலை, மற்றும், அரை சாய்ந்த நிலை. |
06:26 | முந்தைய ஒரு டுடோரியலில் விளக்கியது போல் - எந்த நிலையிலும், தாய், தன் மார்பகத்தை சரியான முறையில் பிடித்துக் கொள்வது, மிகவும் முக்கியமாகும். |
06:37 | அதாவது, குழந்தையின் உதடுகளும், தாயின் விரல்களும், ஒரே திசையில் இருக்க வேண்டும். |
06:42 | தவறான முறையில் பற்றிக்கொல்லுதல், புண்பட்ட மார்பகக்காம்புகளை உண்டாக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். |
06:47 | பால் புட்டி, அல்லது மார்பகக்காம்பு கவசங்களை பயன்படுத்த வேண்டாம் என்பதையும் நினைவில் கொள்ளவும். |
06:52 | இது, தட்டையான அல்லது தலைகீழான மார்பகக்காம்புகளை கொண்ட மார்பகங்களில் இருந்து, குழந்தை பாலை உறிஞ்சுவதை கடினமாக்கும். |
07:00 | தாய், குழந்தைக்கு அதிக உடல் சார்ந்த நெருக்கத்தைக் கொடுக்க வேண்டும். |
07:04 | அது, தாயின், ஆக்ஸிடோசின் ரிஃப்ளெக்சை தூண்டுவதால், தாய்ப்பால் எளிதாக வெளிவருகிறது. |
07:12 | இந்த பெரும்பாலான மார்பகக்காம்பு நிலைமைகளை சமாளிப்பதற்கான வழி, சரியான முறையில் பற்றிக் கொள்ளுதலே ஆகும். |
07:19 | இத்துடன், தாய்ப்பால் கொடுக்கின்ற தாய்மார்களின் மார்பகக்காம்பு நிலைமைகள் குறித்த இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்து விட்டோம்.
இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஆர்த்தி. நன்றி. |