Difference between revisions of "Health-and-Nutrition/C2/Feeding-expressed-breastmilk-to-babies/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{|border=1 | <center>Time</center> |<center>Narration</center> |- |00:01 | '''வெளிக்கொணரப்பட்ட தாய்ப்பாலை குழந...") |
|||
Line 29: | Line 29: | ||
|- | |- | ||
| 00:42 | | 00:42 | ||
− | | தாய்ப்பாலைக் கையாளும் முன், பராமரிப்பாளர்-சோப்பு மற்றும் தண்ணீரில் தங்கள் கைகளை கழுவி, கைகளை நன்றாக | + | | தாய்ப்பாலைக் கையாளும் முன், பராமரிப்பாளர்-சோப்பு மற்றும் தண்ணீரில் தங்கள் கைகளை கழுவி, கைகளை நன்றாக உலர்த்தி கொள்ள வேண்டும். |
|- | |- | ||
Line 61: | Line 61: | ||
|- | |- | ||
|01:42 | |01:42 | ||
− | | தாய்ப்பாலை கொண்ட பாத்திரத்தை பயன்படுத்துவதற்கு முன் , அதன் வெளிப்புறத்தை சுத்தமான துணியால் | + | | தாய்ப்பாலை கொண்ட பாத்திரத்தை பயன்படுத்துவதற்கு முன் , அதன் வெளிப்புறத்தை சுத்தமான துணியால் துடைக்கவும். |
|- | |- | ||
| 01:48 | | 01:48 | ||
− | | இந்த பனி நீக்கப்பட்ட தாய்ப்பாலை 2 மணி நேரத்திற்குள் பயன்படுத்தவும், பயன்படுத்தப்படாத | + | | இந்த பனி நீக்கப்பட்ட தாய்ப்பாலை 2 மணி நேரத்திற்குள் பயன்படுத்தவும், பயன்படுத்தப்படாத பாலை கொட்டி விடவும். |
|- | |- | ||
Line 73: | Line 73: | ||
|- | |- | ||
| 02:03 | | 02:03 | ||
− | | குழந்தை அதை | + | | குழந்தை அதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் கொடுக்கலாம். |
|- | |- | ||
Line 97: | Line 97: | ||
|- | |- | ||
| 02:47 | | 02:47 | ||
− | | மணிக்கட்டில் சிறிது பாலை | + | | மணிக்கட்டில் சிறிது பாலை ஊற்றி, அது எவ்வளவு சூடாக இருக்கிறது என்பதை சோதிக்கவும். அது இளஞ்சூட்டில் இருந்தால், சரியாக உள்ளது என்பதாகும். |
|- | |- | ||
| 02:56 | | 02:56 | ||
− | | தாய்ப்பாலை சூடாக்க சூடான நீரைப் பயன்படுத்த வேண்டாம். குளிர்சாதன | + | | தாய்ப்பாலை சூடாக்க சூடான நீரைப் பயன்படுத்த வேண்டாம். குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட தாய்ப்பாலை பயன்படுத்த முயற்சிக்கவும். |
|- | |- | ||
Line 109: | Line 109: | ||
|- | |- | ||
|03:12 | |03:12 | ||
− | | தாய்ப்பாலை நேரடியாக அடுப்பில் அல்லது மைக்ரோவேவில் | + | | தாய்ப்பாலை நேரடியாக அடுப்பில் அல்லது மைக்ரோவேவில் வைத்து அதை சூடாக்க வேண்டாம். |
|- | |- | ||
| 03:19 | | 03:19 | ||
− | | நேரடி வெப்பம் தாய்ப்பாலில் உள்ள பல தொற்று-விரட்டும் | + | | நேரடி வெப்பம் தாய்ப்பாலில் உள்ள பல தொற்று-விரட்டும் குணங்களை அழிக்கிறது. |
|- | |- | ||
Line 121: | Line 121: | ||
|- | |- | ||
| 03:32 | | 03:32 | ||
− | | அவ்வாறு செய்ய, பின்வரும் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம்:ஒரு | + | | அவ்வாறு செய்ய, பின்வரும் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம்:ஒரு பாலாடை, ஒரு சிறிய கிண்ணம், ஒரு கரண்டி அல்லது நிஃப்டி கப். |
|- | |- | ||
| 03:42 | | 03:42 | ||
− | | | + | | ஒரு கரண்டி அல்லது ஒரு கிண்ணத்தை பயன்படுத்துவது மேலும் பொருத்தமாக இருக்கும். |
|- | |- | ||
| 03:49 | | 03:49 | ||
− | | முதலாவதாக, பராமரிப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட பாத்திரத்தை சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவ வேண்டும். பின்னர் காற்றினால் அதை முழுமையாக உலர வைக்க வேண்டும் அல்லது சுத்தமான பயன்படுத்தப்படாத துணியால் | + | | முதலாவதாக, பராமரிப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட பாத்திரத்தை சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவ வேண்டும். பின்னர் காற்றினால் அதை முழுமையாக உலர வைக்க வேண்டும் அல்லது சுத்தமான பயன்படுத்தப்படாத துணியால் நன்கு துடைக்கவும். |
|- | |- | ||
| 04:02 | | 04:02 | ||
− | | பின்னர், பராமரிப்பாளர் தங்கள் கைகளை | + | | பின்னர், பராமரிப்பாளர் தங்கள் கைகளை நன்றாக கழுவி உலர்த்தி கொள்ள வேண்டும். |
|- | |- | ||
| 04:10 | | 04:10 | ||
− | | அவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட | + | | அவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பாத்திரத்தில் தாய்ப்பாலை, அரை அல்லது மூன்றில் இரண்டு பங்கு நிரப்ப வேண்டும். |
|- | |- | ||
| 04:16 | | 04:16 | ||
− | | பின்னர், அவர்கள் குழந்தையை மடியில் கிட்டத்தட்ட நிமிர்ந்த நிலையில் | + | | பின்னர், அவர்கள் குழந்தையை மடியில் கிட்டத்தட்ட நிமிர்ந்த நிலையில் தங்கள் மடியில் வைக்க வேண்டும். |
|- | |- | ||
Line 165: | Line 165: | ||
|- | |- | ||
| 04:58 | | 04:58 | ||
− | | குழந்தை பாலைத் உறிஞ்சும் போது - பராமரிப்பாளர் பாலாடாயை சிறிது சாய்த்து, பாலை விளிம்பில் | + | | குழந்தை பாலைத் உறிஞ்சும் போது - பராமரிப்பாளர் பாலாடாயை சிறிது சாய்த்து, பாலை விளிம்பில் நகர்த்த வேண்டும். |
|- | |- | ||
Line 177: | Line 177: | ||
|- | |- | ||
| 05:28 | | 05:28 | ||
− | | இது குழந்தை, கிண்ணத்தின் விளிம்பிலிருந்து பாலை | + | | இது குழந்தை, கிண்ணத்தின் விளிம்பிலிருந்து பாலை கொடுக்க எளிதாக இருக்கும். |
|- | |- | ||
| 05:33 | | 05:33 | ||
− | | பராமரிப்பாளர் குழந்தைக்கு கொடுக்க ஒரு கரண்டியை பயன்படுத்தினால்- அவர்கள் குழந்தையின் உதடுகளுக்கு இடையில் கரண்டியைப் பிடிக்க வேண்டும். | + | | பராமரிப்பாளர் குழந்தைக்கு தாய்ப்பாலை கொடுக்க ஒரு கரண்டியை பயன்படுத்தினால்- அவர்கள் குழந்தையின் உதடுகளுக்கு இடையில் கரண்டியைப் பிடிக்க வேண்டும். |
|- | |- | ||
Line 193: | Line 193: | ||
|- | |- | ||
| 05:54 | | 05:54 | ||
− | | பிறந்த பிறகு முதல் சில நாட்களுக்கு ஒரு கரண்டியால் | + | | பிறந்த பிறகு முதல் சில நாட்களுக்கு ஒரு கரண்டியால் பாலூட்டுவதே நல்லது. |
|- | |- | ||
Line 201: | Line 201: | ||
|- | |- | ||
| 06:07 | | 06:07 | ||
− | | பராமரிப்பாளர் குழந்தைக்கு கொடுக்க, ஒரு நிஃப்டி கப்பை பயன்படுத்துகிறார் என்றால் - அவர்கள் நிஃப்டி கப்பின் சிறிய தேக்கத்தை குழந்தையின் வாய்க்குள் வைக்க வேண்டும். | + | | பராமரிப்பாளர் குழந்தைக்கு தாய்ப்பாலை கொடுக்க, ஒரு நிஃப்டி கப்பை பயன்படுத்துகிறார் என்றால் - அவர்கள் நிஃப்டி கப்பின் சிறிய தேக்கத்தை குழந்தையின் வாய்க்குள் வைக்க வேண்டும். |
|- | |- | ||
Line 213: | Line 213: | ||
|- | |- | ||
| 06:38 | | 06:38 | ||
− | | இதனால் | + | | இதனால் குழந்தைக்கு மூச்சுத் திணறக்கூடும். |
|- | |- | ||
| 06:40 | | 06:40 | ||
− | | அதற்கு பதிலாக, பாலை விளிம்பில் வைத்து, பாலூட்டல் முழுவதும் | + | | அதற்கு பதிலாக, பாலை விளிம்பில் வைத்து, பாலூட்டல் முழுவதும் அதே நிலையில் வைக்கவும். |
|- | |- | ||
|06:47 | |06:47 | ||
− | | குழந்தை முழுமையாக விழித்திருப்பதையும், எச்சரிக்கையாக இருப்பதையும், | + | | குழந்தை முழுமையாக விழித்திருப்பதையும், எச்சரிக்கையாக இருப்பதையும், பாலருந்துவதில் ஆர்வமாகவும் இருப்பதை எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ளவும். |
|- | |- | ||
| 06:54 | | 06:54 | ||
− | | தேவைப்பட்டால், ஊட்டுபவர் கையில் இருந்து குழந்தை கிண்ணத்தை தட்டுவதைத் தடுக்க, | + | | தேவைப்பட்டால், ஊட்டுபவர் கையில் இருந்து குழந்தை கிண்ணத்தை தட்டுவதைத் தடுக்க, குழந்தைக்கு போர்த்தி விடவும். |
|- | |- | ||
Line 233: | Line 233: | ||
|- | |- | ||
| 07:08 | | 07:08 | ||
− | | குழந்தை போதுமான பாலை | + | | குழந்தை போதுமான பாலை எடுத்துக்கொண்டதா என்பதைக் காட்டும் அறிகுறிகளை கவனிக்கவும். |
|- | |- | ||
Line 245: | Line 245: | ||
|- | |- | ||
| 07:21 | | 07:21 | ||
− | | குழந்தையின் கீழ் உதட்டில் அதிக அழுத்தம் | + | | குழந்தையின் கீழ் உதட்டில் அதிக அழுத்தம் கொடுக்க கூடாது. |
|- | |- | ||
Line 269: | Line 269: | ||
|- | |- | ||
| 08:04 | | 08:04 | ||
− | | சில குழந்தைகள் வெளிப்படுத்திய தாய்ப்பாலை எடுத்துக்கொள்ள தயங்கும் | + | | சில குழந்தைகள் வெளிப்படுத்திய தாய்ப்பாலை சிலரிடமிருந்து எடுத்துக்கொள்ள தயங்கும். |
|- | |- | ||
| 08:12 | | 08:12 | ||
− | | | + | | சிலரிடமிருந்து எடுத்துக்கொள்ள தயங்காது. |
|- | |- | ||
Line 281: | Line 281: | ||
|- | |- | ||
| 08:22 | | 08:22 | ||
− | | தாய் வேலையில் இருந்து திரும்பும்போது, குழந்தைக்கு அடிக்கடி அல்லது அதிக நேரம் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தவறவிட்ட | + | | தாய் வேலையில் இருந்து திரும்பும்போது, குழந்தைக்கு அடிக்கடி அல்லது அதிக நேரம் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தவறவிட்ட ஊட்டச்சத்தை குழந்தை பெற்றுக்கொள்ளும். |
|- | |- | ||
| 08:32 | | 08:32 | ||
− | | பின்வருவனவற்றை பின்பற்றி, தாய்ப்பாலை பாதுகாப்பாக வைத்திருக்க நினைவில் கொள்ளவும்: கைகள்,கிண்ணங்கள் மற்றும் பாத்திரங்களை கழுவுதல், தேவைக்கு விரைவில் பால் கொடுத்தல் அல்லது பாதுகாப்பாக சேமித்தல். | + | | பின்வருவனவற்றை பின்பற்றி, தாய்ப்பாலை பாதுகாப்பாக வைத்திருக்க நினைவில் கொள்ளவும்: கைகள்,கிண்ணங்கள் மற்றும் பாத்திரங்களை கழுவுதல், குழந்தையின் தேவைக்கு விரைவில் பால் கொடுத்தல் அல்லது பாதுகாப்பாக சேமித்தல். |
|- | |- |
Revision as of 17:23, 4 September 2019
|
|
00:01 | வெளிக்கொணரப்பட்ட தாய்ப்பாலை குழந்தைகளுக்கு கொடுப்பது குறித்த Spoken tutorial க்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: சேமிக்கப்பட்ட தாய்ப்பாலை ஒரு குழந்தை குடிப்பதற்கு ஏற்ப எப்படி தயாராக வைப்பது |
00:14 | மற்றும் வெளிக்கொணரப்பட்ட தாய்ப்பாலை ஒரு குழந்தைக்கு எப்படி கொடுப்பது. |
00:19 | இப்போது தொடங்குவோம். தாய்ப்பாலை வெளிக்கொணர்வது குழந்தைக்கும் தாய்க்கும் பல நன்மைகளைத் தருகிறது. |
00:26 | தாய்ப்பாலை வெளிக்கொணர்வதும் பாதுகாப்பாக சேமிப்பதும் மற்ற பயிற்சிகளில் விளக்கப்பட்டுள்ளன. |
00:34 | இப்போது, சேமிக்கப்பட்ட தாய்ப்பாலை ஒரு குழந்தை குடிப்பதற்கு ஏற்ப எப்படி தயாராக வைப்பது என்று கற்போம். |
00:42 | தாய்ப்பாலைக் கையாளும் முன், பராமரிப்பாளர்-சோப்பு மற்றும் தண்ணீரில் தங்கள் கைகளை கழுவி, கைகளை நன்றாக உலர்த்தி கொள்ள வேண்டும். |
00:52 | மிகவும் பழைய, சேமிக்கப்பட்ட தாய்ப்பால் எப்போதும் முதலில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். |
00:59 | உறைந்த தாய்ப்பாலைப் பயன்படுத்தும் போது, அதை ஒரே இரவில் குளிர்சாதன பெட்டியின் மிகக் குறைந்த அலமாரியில் வைப்பதன் மூலம் பனி நீக்கம் செய்வது சிறந்ததாகும். |
01:08 | மேலும், இந்த பனி நீக்கம் செய்யப்பட்ட பாலை அடுத்த 24 மணி நேரத்திற்குள் பயன்படுத்தவும். |
01:15 | ஆனால் உறைந்த தாய்ப்பால் விரைவாக தேவைப்பட்டால், அதை குளிர்சாதன பெட்டியின் வெளியே வைத்து பனி நீக்கம் செய்யவும்- முதலில், குளிர்ந்த நீரை கொண்ட ஒரு பாத்திரத்தில் அதை வைத்து, |
01:25 | பின்னர், சற்று வெதுவெதுப்பான நீரை கொண்ட ஒரு பாத்திரத்தில் அதை வைக்கவும். |
01:31 | வெதுவெதுப்பான நீரில் அதை பனி நீக்கம் செய்யும்போது- தாய்ப்பாலை கொண்ட பாத்திரத்தை மெதுவாகவும் அவ்வப்போதும் அசைக்கவும். |
01:38 | அதை வேகமாகவும் தொடர்ச்சியாகவும் அசைக்க வேண்டாம். |
01:42 | தாய்ப்பாலை கொண்ட பாத்திரத்தை பயன்படுத்துவதற்கு முன் , அதன் வெளிப்புறத்தை சுத்தமான துணியால் துடைக்கவும். |
01:48 | இந்த பனி நீக்கப்பட்ட தாய்ப்பாலை 2 மணி நேரத்திற்குள் பயன்படுத்தவும், பயன்படுத்தப்படாத பாலை கொட்டி விடவும். |
01:56 | பனி நீக்கப்பட்ட தாய்ப்பால் புதிய தாய்ப்பாலைக் காட்டிலும் வித்தியாசமாக வாசனை மற்றும் சுவை கொண்டதாக இருக்கும். |
02:03 | குழந்தை அதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் கொடுக்கலாம். |
02:08 | தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுப்பதற்கு முன், பராமரிப்பாளர் எப்போதும் அதை நுகர்ந்து பார்க்க வேண்டும். |
02:16 | பாலில் புளிப்பு வாசனை இருந்தால், அதைப் பயன்படுத்த வேண்டாம். |
02:20 | தாய்ப்பால் சேமிக்கப்படும் போது, அதன் பாலேடு தனித்து, மேலே உயர்ந்து நிற்கும். |
02:28 | இது சாதாரணமானது. பாலேடு மீண்டும் பாலில் கலக்க மெதுவாக குலுக்கவும். |
02:36 | குழந்தைக்கு கொடுப்பதற்கு சற்று முன்பு தாய்ப்பாலை சூடேற்ற- தாய்ப்பாலை கொண்ட பாத்திரத்தை, 20 முதல் 30 நிமிடங்கள் சற்று வெதுவெதுப்பான தண்ணீரை கொண்ட ஒரு கிண்ணத்தில் வைக்கவும். |
02:47 | மணிக்கட்டில் சிறிது பாலை ஊற்றி, அது எவ்வளவு சூடாக இருக்கிறது என்பதை சோதிக்கவும். அது இளஞ்சூட்டில் இருந்தால், சரியாக உள்ளது என்பதாகும். |
02:56 | தாய்ப்பாலை சூடாக்க சூடான நீரைப் பயன்படுத்த வேண்டாம். குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட தாய்ப்பாலை பயன்படுத்த முயற்சிக்கவும். |
03:05 | அதிக வெப்பம் மற்றும் தீக்காயங்கள் ஏற்படும் அபாயங்களைத் தவிர்க்க இது உதவும். |
03:12 | தாய்ப்பாலை நேரடியாக அடுப்பில் அல்லது மைக்ரோவேவில் வைத்து அதை சூடாக்க வேண்டாம். |
03:19 | நேரடி வெப்பம் தாய்ப்பாலில் உள்ள பல தொற்று-விரட்டும் குணங்களை அழிக்கிறது. |
03:27 | தாய்ப்பால் தயாரானதும், அதை குழந்தைக்கு கொடுக்கவும். |
03:32 | அவ்வாறு செய்ய, பின்வரும் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம்:ஒரு பாலாடை, ஒரு சிறிய கிண்ணம், ஒரு கரண்டி அல்லது நிஃப்டி கப். |
03:42 | ஒரு கரண்டி அல்லது ஒரு கிண்ணத்தை பயன்படுத்துவது மேலும் பொருத்தமாக இருக்கும். |
03:49 | முதலாவதாக, பராமரிப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட பாத்திரத்தை சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவ வேண்டும். பின்னர் காற்றினால் அதை முழுமையாக உலர வைக்க வேண்டும் அல்லது சுத்தமான பயன்படுத்தப்படாத துணியால் நன்கு துடைக்கவும். |
04:02 | பின்னர், பராமரிப்பாளர் தங்கள் கைகளை நன்றாக கழுவி உலர்த்தி கொள்ள வேண்டும். |
04:10 | அவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பாத்திரத்தில் தாய்ப்பாலை, அரை அல்லது மூன்றில் இரண்டு பங்கு நிரப்ப வேண்டும். |
04:16 | பின்னர், அவர்கள் குழந்தையை மடியில் கிட்டத்தட்ட நிமிர்ந்த நிலையில் தங்கள் மடியில் வைக்க வேண்டும். |
04:23 | அவர்களின் கை குழந்தையின் தலை மற்றும் கழுத்தை தாங்க வேண்டும். |
04:28 | குழந்தைக்கு கொடுக்க அவர்கள் ஒரு பாலாடாயைப் பயன்படுத்தினால்- அவர்கள் குழந்தையின் வாயின் மூலையில் பாலாடையின் நுனியை வைக்க வேண்டும். |
04:39 | இது குழந்தையின் உதடுகளுக்கு இடையில் லேசாகப் பிடிக்கப்பட வேண்டும். |
04:45 | பாலாடையின் நுனி குழந்தையின் மேல் உதட்டை லேசாகத் தொட வேண்டும் . |
04:50 | இந்த நிலையில், பால் பாலடாயின் கொக்கின் விளிம்பில் இருக்க வேண்டும் |
04:58 | குழந்தை பாலைத் உறிஞ்சும் போது - பராமரிப்பாளர் பாலாடாயை சிறிது சாய்த்து, பாலை விளிம்பில் நகர்த்த வேண்டும். |
05:07 | கிண்ணத்தின் விளிம்பு குழந்தையின் மேல் உதட்டை லேசாகத் தொட வேண்டும். |
05:22 | பால், கிண்ணத்தின் மேல் விளிம்பை அடையும் வரை அவர்கள் கிண்ணத்தை சிறிது சாய்க்க வேண்டும். |
05:28 | இது குழந்தை, கிண்ணத்தின் விளிம்பிலிருந்து பாலை கொடுக்க எளிதாக இருக்கும். |
05:33 | பராமரிப்பாளர் குழந்தைக்கு தாய்ப்பாலை கொடுக்க ஒரு கரண்டியை பயன்படுத்தினால்- அவர்கள் குழந்தையின் உதடுகளுக்கு இடையில் கரண்டியைப் பிடிக்க வேண்டும். |
05:42 | கரண்டியின் விளிம்பு குழந்தையின் மேல் உதட்டை லேசாகத் தொட வேண்டும். |
05:47 | பால் கரண்டியின் விளிம்பிற்கு வரும் வரை அவர்கள் கரண்டியை சிறிது சாய்க்க வேண்டும். |
05:54 | பிறந்த பிறகு முதல் சில நாட்களுக்கு ஒரு கரண்டியால் பாலூட்டுவதே நல்லது. |
05:59 | ஏனெனில் இந்த நாட்களில் ஒரு சிறிய அளவு பால் மட்டுமே தேவைப்படுகிறது. |
06:07 | பராமரிப்பாளர் குழந்தைக்கு தாய்ப்பாலை கொடுக்க, ஒரு நிஃப்டி கப்பை பயன்படுத்துகிறார் என்றால் - அவர்கள் நிஃப்டி கப்பின் சிறிய தேக்கத்தை குழந்தையின் வாய்க்குள் வைக்க வேண்டும். |
06:19 | குழந்தை பாலைத் உறிஞ்சும் போது, அவர்கள் கப்பை சற்று மேலே சாய்க்க வேண்டும். இது காலியாகும் போது, தேக்கத்தில் பாலை சேர்க்கும். |
06:31 | வெளிக்கொணர்ந்த தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுக்கும் போது, குழந்தையின் வாயினுள் பாலை ஒருபோதும் கொட்டக்கூடாது. |
06:38 | இதனால் குழந்தைக்கு மூச்சுத் திணறக்கூடும். |
06:40 | அதற்கு பதிலாக, பாலை விளிம்பில் வைத்து, பாலூட்டல் முழுவதும் அதே நிலையில் வைக்கவும். |
06:47 | குழந்தை முழுமையாக விழித்திருப்பதையும், எச்சரிக்கையாக இருப்பதையும், பாலருந்துவதில் ஆர்வமாகவும் இருப்பதை எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ளவும். |
06:54 | தேவைப்பட்டால், ஊட்டுபவர் கையில் இருந்து குழந்தை கிண்ணத்தை தட்டுவதைத் தடுக்க, குழந்தைக்கு போர்த்தி விடவும். |
07:03 | எப்போதும் குழந்தையை, தனது வேகத்தில் பாலை குடிக்க விடவும். |
07:08 | குழந்தை போதுமான பாலை எடுத்துக்கொண்டதா என்பதைக் காட்டும் அறிகுறிகளை கவனிக்கவும். |
07:13 | அவள் கைகளை உயர்த்திப் பிடிப்பது. |
07:16 | தூங்குவது அல்லது வாயை மூடுவது, போன்ற அறிகுறிகள். |
07:21 | குழந்தையின் கீழ் உதட்டில் அதிக அழுத்தம் கொடுக்க கூடாது. |
07:28 | பாத்திரத்தின் விளிம்பு எப்போதும் குழந்தையின் மேல் உதட்டை லேசாகத் தொடுமாறு வைக்கவும். |
07:34 | கிண்ணம், பாலாடை அல்லது கரண்டி ஆகியவற்றை குழந்தையின் வாய்க்குள் அதிக ஆழமாக செலுத்த வேண்டாம். |
07:41 | படுத்திருக்கும் நிலையில் ஒரு குழந்தைக்கு ஒருபோதும் தாய்ப்பாலூட்டக்கூடாது. |
07:45 | வெளிக்கொணரப்பட்ட தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுக்க, ஃபீடிங் பாட்டிலை பயன்படுத்த வேண்டாம். |
07:51 | குழந்தைக்கு பாலூட்டிய பிறகு, கிண்ணம், பாலாடை அல்லது கரண்டியை சோப்பு மற்றும் சுத்தமான தண்ணீரில் நன்றாக கழுவ வேண்டும். மற்றும் காற்றினால் முழுவதுமாக உலர விடவும். |
08:04 | சில குழந்தைகள் வெளிப்படுத்திய தாய்ப்பாலை சிலரிடமிருந்து எடுத்துக்கொள்ள தயங்கும். |
08:12 | சிலரிடமிருந்து எடுத்துக்கொள்ள தயங்காது. |
08:17 | வெளிப்படுத்தப்பட்ட பால் குழந்தையால் மறுக்கப்பட்டால், கவலைப்பட வேண்டாம். |
08:22 | தாய் வேலையில் இருந்து திரும்பும்போது, குழந்தைக்கு அடிக்கடி அல்லது அதிக நேரம் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தவறவிட்ட ஊட்டச்சத்தை குழந்தை பெற்றுக்கொள்ளும். |
08:32 | பின்வருவனவற்றை பின்பற்றி, தாய்ப்பாலை பாதுகாப்பாக வைத்திருக்க நினைவில் கொள்ளவும்: கைகள்,கிண்ணங்கள் மற்றும் பாத்திரங்களை கழுவுதல், குழந்தையின் தேவைக்கு விரைவில் பால் கொடுத்தல் அல்லது பாதுகாப்பாக சேமித்தல். |
08:44 | இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஆர்த்தி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |