Difference between revisions of "OpenFOAM/C3/Flow-over-a-flat-plate/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 305: Line 305:
 
|-
 
|-
 
| 08:17
 
| 08:17
| மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட URL  இணைப்பை பார்க்கவும்:  http://spoken-tutorial.org/NMEICT-Intro.  இந்த டுடோரியலை தமிழாக்கம்  செய்தது ஜெயஸ்ரீ.
+
| மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட URL  இணைப்பை பார்க்கவும்.  இந்த டுடோரியலை தமிழாக்கம்  செய்தது ஜெயஸ்ரீ. இதற்கு குரல் கொடுத்தது பத்மலோச்சினி. நன்றி.
  
 
|}
 
|}

Latest revision as of 10:49, 10 November 2017

Time Narration
00:01 OpenFOAMஐ பயன்படுத்தி, ஒரு flat plate மீதான flow குறித்தspoken tutorialக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில், நான் உங்களுக்கு கற்றுக் கொடுக்கப்போவது: தட்டையான தட்டின் geometry, meshingல் grid spacingஐ மாற்றுவது, Paraview ல் முடிவுகளை postprocess செய்வது, மற்றும், Vector Plotஐ பயன்படுத்தி, visualize செய்வது.
00:19 இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான்: Linux Operating system Ubuntu பதிப்பு12.04, OpenFOAM பதிப்பு, 2.1.1, ParaView பதிப்பு 3.12.0ஐ பயன்படுத்துகிறேன்.
00:30 Flow over flat plate, fluid mechanicsல் ஒரு அடிப்படை சிக்கல் ஆகும்.
00:35 Boundary layerன் வளர்ச்சியை நாம் காட்சிப்படுத்த முடியும். Boundary layer என்பது, பொருளின் மேல் இருக்கும் ஒரு மெல்லிய பகுதி.
00:41 இங்கு, velocity, 0.99 times free stream velocity ஆகும்.
00:46 இது flow over the flat plateன் ஒரு வரைபடம் ஆகும்.
00:49 Boundary conditionகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன. Inlet, Plate, Farfield எனப்படுகின்றTop, Outlet எனப்படுகின்ற pressure outlet boundary.
01:00 Free stream velocity U = 1 m/s, மற்றும், Reynolds number Re =100க்கு, இதை நாம் தீர்க்கிறோம்.
01:08 இப்போது home folderக்கு செல்வோம். Home folderல், OpenFoam folderஐ க்ளிக் செய்யவும்.
01:15 பின், 'run' directoryக்கு செல்லவும். 'Tutorials' ஐ நீங்கள் காண்பீர்கள். அதை க்ளிக் செய்யவும். Scroll down செய்து, பின், Incompressible.ஐ க்ளிக் செய்யவும். Scroll down செய்யவும்.
01:27 'SimpleFoam' folderஐ நீங்கள் காண்பீர்கள். அதை க்ளிக் செய்யவும். இந்த, solver, நமது caseற்கு பொருந்துகிறது.
01:34 இதனுள், flatplate என்ற பெயரைக் கொண்ட folderஐ உருவாக்கவும். ரைட் க்ளிக் - Create New Folder - flatplate.
01:44 இப்போது, pitzdaily caseஐ திறப்போம்.
01:47 இதை பெரிதாக்குகிறேன். 0, constant மற்றும் system என்ற மூன்று folderகளையும் செய்யவும். இதைcopy செய்யவும்.
01:56 இப்போது ஒரு நிலை பின்னால் செல்வோம். இந்த மூன்று folderகளையும், flatplate folderயினுள் paste செய்யவும்.
02:05 முதலில், constant folderஐயும், பின் polyMesh folderஐயும் திறக்கவும்.
02:10 BlockMeshDict fileனுள் இருக்கும், geometry மற்றும் boundary conditionபெயர்களை மாற்றவும்.
02:15 நான் ஏற்கனவே மாற்றங்களை செய்துவிட்டேன். BlockMeshDict file ஐ திறப்போம். Scroll down செய்யவும். Geometry, meterகளில் இருக்கிறது.
02:25 நாம் flatplateன் பரிமாணங்களைset செய்துவிட்டோம்.
02:29 நாம்simpleGradingஐ காணலாம். தட்டின் அருகில் நேர்த்தியானmesh தேவைப்படுவதால், அது (1 3 1)ல் வைக்கப்படுகிறது.
02:35 இப்போது இதை மூடவும். இரண்டு நிலைகள் பின்னால் செல்லவும்.
02:41 அவ்வாறே, '0' folderல் இருக்கும் fileகளினுள் உள்ள boundary conditionகளின் பெயர்களில் மாற்றங்களை செய்யவும்.
02:48 இந்த fileகள், pressure, velocity மற்றும் wall functionகளை கொண்டிருக்கிறது.
02:54 Wall functionகளின் மதிப்புகளை கணக்கிட, OpenFoam தொடரில் இருக்கும் முந்தைய டுடோரியலை பார்க்கவும். ஒரு நிலை பின்னால் செல்வோம்.
03:03 System folderஐ முன்னிருப்பாக வைக்கலாம். இதை மூடுவோம்.
03:09 இப்போது, terminal windowஐ திறப்போம். Terminal windowவில், டைப் செய்கrun, பின் Enterஐ அழுத்தவும்.
03:16 டைப் செய்க, cd space tutorials, பின் Enterஐ அழுத்தவும்.
03:21 டைப் செய்க, cd space incompressible , பின் Enterஐ அழுத்தவும்.
03:25 டைப் செய்க, cd space simpleFoam, பின் Enterஐ அழுத்தவும்.
03:31 இப்போது, டைப் செய்க, ls, பின் Enterஐ அழுத்தவும்.
03:34 நாம் flatplate folderஐ காணலாம்.
03:37 இப்போது, டைப் செய்க, cd space flatplate, பின் Enterஐ அழுத்தவும்.
03:42 இப்போது, டைப் செய்க, ls, பின் Enterஐ அழுத்தவும்.
03:45 0, constant மற்றும் system என்ற மூன்று folderகளை நீங்கள் காணலாம்.
03:49 இப்போது, geometryஐ mesh செய்வோம். இந்த சிக்கலுக்கு ஒரு course meshஐ நாம் பயன்படுத்துகிறோம். Terminalலில், blockMesh, என டைப் செய்வதன் மூலம், Meshingஐ செய்யலாம்.
03:58 Enterஐ அழுத்தவும். Meshing செய்யப்பட்டுவிட்டது.
04:01 BlockMesh fileலில் ஏதேனும் error இருந்தால், அது terminal windowவில் காட்டப்படும் என்பதை கவனிக்கவும்.
04:07 Geometryஐ பார்க்க, டைப் செய்க, paraFoam, பின் Enterஐ அழுத்தவும்.
04:13 ParaView window திறந்தவுடன், Object Inspector menuவின் இடது பக்கத்தில் இருக்கும் Applyஐ க்ளிக் செய்யவும்.
04:21 நாம் geometryஐ காணலாம். ParaView windowஐ மூடவும். நான் slideகளுக்கு திரும்புகிறேன்.
04:28 நாம் simpleFoam என்கிற solverஐ இங்கு பயன்படுத்துகிறோம். In compressible மற்றும் turbulent flowகளுக்கு, SimpleFoam, ஒரு steady state solver ஆகும்.
04:37 நான் terminal windowக்கு திரும்பச் செல்கிறேன். Terminal windowவில், டைப் செய்கsimpleFoam, பின் Enterஐ அழுத்தவும்.
04:45 Terminal windowவில், iterationகள் run செய்துகொண்டிருப்பதை நீங்கள் காணலாம்.
04:51 தீர்வு காணல் முடிந்த பிறகு, முடிவுகளைக் காண, டைப் செய்கparaFoam.
04:55 Geometryஐ காண, Object Inspector menuவின் இடது பக்கத்தில் இருக்கும் Applyஐ க்ளிக் செய்யவும்.
05:01 Time step, regions மற்றும்fieldsக்கு, Object Inspector menuவின், properties panelலில் scroll down செய்யவும்.
05:08 Contourகளை காண, Active Variable Control menuவின், மேல் drop down menu வில், solid colorல் இருந்து, capital 'U'க்கு மாற்றவும்.
05:19 நீங்கள் velocityன் initial conditionஐ காணலாம்.
05:23 ParaView windowவின் முதலில், VCR controlஐ நீங்கள் காண்பீர்கள்.
05:28 Play பட்டனை க்ளிக் செய்யவும்.
05:33 அதன்படி, Pressure அல்லதுVelocityன், contourஐ தட்டையான தட்டின் மீது நீங்கள் காண்பீர்கள்.
05:39 இது தான் velocity contour. Color legendஐ toggle செய்யவும்.
05:43 இதைச் செய்ய, Active Variable Control menuவில் இருக்கும், color legend iconஐ க்ளிக் செய்யவும்.
05:50 Object Inspector menuவில் இருக்கும், Applyஐ க்ளிக் செய்யவும்.
05:53 Object Inspector menuவில், Displayஐ க்ளிக் செய்யவும்.
05:57 Scroll down செய்து, Rescale to data rangeஐ க்ளிக் செய்யவும்.
06:03 Vector Plotஐ காட்சிப்படுத்த, இந்த Color legendஐ , மேலுக்கு இடம் மாற்றுகிறேன். Filters Menu > Common > Glyphக்கு செல்லவும்.
06:15 Object Inspector menuவில் இருக்கும், Propertiesக்கு செல்லவும்.
06:20 Object Inspector menuவின் இடது பக்கத்தில் இருக்கும் Applyஐ க்ளிக் செய்யவும்.
06:24 Vectorகளின் எண்ணிக்கையை, கீழிருக்கும் அதன் அளவுகளை மாற்றுவதன் மூலம் மாற்றலாம்.
06:29 மேலும், vectorகளின் அளவை, Edit பட்டனை க்ளிக் செய்வதன் மூலம் மாற்றலாம். Set Scale Factorஐ 0.1க்கு மாற்றலாம்.
06:41 மீண்டும், Apply பட்டனை க்ளிக் செய்யவும்.
06:44 இப்போது இதை பெரிதாக்குகிறேன்.
06:46 இதைச் செய்ய, Active Variable Control menuவில் இருக்கும், zoom To Box optionஐ க்ளிக் செய்து,
06:52 உங்களுக்கு விருப்பமான எந்த பகுதியின் மீதும் zoom செய்யவும்.
06:58 Plateன் மீது, flow நகருகையில், vector plotகளின் parabolic variationஐ நாம் காணலாம்.
07:04 இதைdelete செய்யவும். இப்போது, vector plotஐ delete செய்யவும்.
07:09 மேலும், 1க்கு அருகில் இருக்கின்ற வண்ணம், 0.99 times the free stream velocityன் velocityக்கு ஒத்திருக்கிறது.
07:17 Plot over data lineஐ பயன்படுத்தி, X மற்றும் Y axes நெடுகிலும், velocityன் மாறுபாட்டையும் நீங்கள் plot செய்யலாம்.
07:26 இத்துடன் நாம் இந்த டுடோரியலின் முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த டுடோரியலில் நாம் கற்றது: flat plate geometryன் meshing, மற்றும், Geometry, மற்றும், ParaViewல் vectorஐ plot செய்வது.
07:37 பயிற்சியாக- flow over a flat plate ன் ஒரு geometryஐ உருவாக்கவும். தட்டின் அருகில் உள்ள grid spacingஐ சுத்திப்படுத்தவும்.
07:45 இந்த URLலில் இருக்கும் வீடியோவை காணவும்: http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial . அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும்.
07:55 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும்.
08:08 Spoken tutorial திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின்,National Mission on Education through ICT, MHRD, மூலம் கிடைக்கிறது.
08:17 மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட URL இணைப்பை பார்க்கவும். இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. இதற்கு குரல் கொடுத்தது பத்மலோச்சினி. நன்றி.

Contributors and Content Editors

Jayashree, Priyacst