Difference between revisions of "Digital-Divide/D0/First-Aid-on-Snake-Bite/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 64: | Line 64: | ||
|- | |- | ||
| 01:04 | | 01:04 | ||
− | | | + | | முதலுதவியின் முக்கியத்துவம், |
|- | |- | ||
| 01:07 | | 01:07 | ||
− | | | + | | சரியான முதலுதவியை அளிக்கும் விதம் குறித்து பார்ப்போம். |
|- | |- | ||
| 01:11 | | 01:11 |
Latest revision as of 17:06, 3 April 2017
Time | Narration |
00:01 | உங்கள் கிராமத்தில் குழந்தைகள் திறந்தவெளியில் விளையாடுவதைப் பார்த்திருப்பீர்கள். |
00:09 | இந்தச் சிறுவன் பந்தைத் துரத்துவதைப் பார்க்கவும். |
00:12 | அருகிலுள்ள புதருக்குள் நுழைகிறான். |
00:16 | ஒரு பாம்பைப் பார்த்து விட்டான். |
00:18 | அது மறைந்திருந்த இடத்திலிருந்து வெளிவருகிறது. |
00:21 | பயந்த சிறுவன் கல்லால் அடித்து விரட்டப் பார்க்கிறான். |
00:26 | பாம்பு ஊர்ந்து செல்லவில்லை. |
00:29 | பையன் பக்கம் திரும்பி அவன் காலில் கடித்துவிட்டது. |
00:34 | சிறுவன் உதவிக்கு அலறுகிறான். |
00:36 | நண்பர்கள் அவன் உதவிக்கு வருகின்றனர். |
00:39 | காலில் இரு சிவப்புப்புள்ளிகளைப் பார்க்கின்றனர். |
00:42 | புதரிலிருந்து அவனைத் தூக்குகின்றனர். |
00:45 | அங்கே குழப்பம். |
00:47 | வெவ்வேறுவிதமான சிகிச்சைமுறைகளை ஒவ்வொருவரும் கூறுகிறார்கள். |
00:52 | பாம்புக்கடிக்குச் செய்யவேண்டிய முதலுதவி குறித்த முக்கியத்துவத்தைப் பார்ப்போம் |
00:57 | பாம்புக்கடிக்கு முதலுதவி குறித்த spoken tutorial க்கு நல்வரவு. |
01:02 | இந்த tutorial இல் நாம் |
01:04 | முதலுதவியின் முக்கியத்துவம், |
01:07 | சரியான முதலுதவியை அளிக்கும் விதம் குறித்து பார்ப்போம். |
01:11 | ஆலோசனைகளைப் பார்க்கும் முன் |
01:15 | சிறுவர்கள் நண்பனை எப்படிக் காப்பாற்றினார்கள்? |
01:20 | சிறுவனைப் படுக்க வைத்தனர் |
01:22 | மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பெரியவர்களின் உதவியை நாடினார்கள். |
01:28 | காயத்தின் மேலே ஒரு துணியை இறுகக் கட்டினார்கள். |
01:32 | சரியான முதலுதவி என்ன? |
01:35 | ஒரு வகையில் அது சரியே! |
01:39 | மருத்துவமனை தூரத்தில் இல்லை. |
01:42 | சரியான நேரத்தில் சிறுவன் மருத்துவ உதவியைப் பெறுவான். |
01:46 | பாம்புக்கடிக்குச் சரியான முதலுதவி எனில் |
01:51 | சமதரையில் கடி க்கப்பட்டவரைப் படுக்க வைக்கவும். |
01:55 | கடித்த இடத்தில் துணியைச் சுற்றிக்கட்டவும். |
01:59 | விஷம் உடல் பூராவும் பரவுவதை இது தடுக்கும். |
02:07 | காயத்தைச் சுற்றித் துணியை எப்படிச் சுற்றவேண்டும்? |
02:10 | காலின் மேல்பக்கம் ஆரம்பித்துக் கீழ் வரை சுற்றவேண்டும். |
02:15 | மேற்சிகிச்சைக்கு உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவும். |
02:20 | சரியான நேரத்தில் முதலுதவி மூலம் இழப்பைத் தடுக்கமுடியும். |
02:26 | தவறான முதலுதவி இழப்பை உண்டாக்கும் என்பதை நினைவிருத்தவும் |
02:32 | பாம்புக்கடியில் செய்ய வேண்டியவை |
02:34 | - கடி க்கப்பட்டவரைப் படுக்க வைக்கவும். |
02:37 | - துணியைச் சுற்றுகையில் அழுத்தம் கொடுக்கவும். |
02:41 | பாம்புக்கடியில் செய்யக்கூடாதவை |
02:44 | - கடியைச் சுற்றியுள்ள தோலையோ சதையையோ வெட்ட வேண்டாம். |
02:49 | - ஐசைக் கடியின் மேலோ சுற்றியோ வைக்க வேண்டாம். |
02:52 | - மின் அதிர்ச்சி கொடுக்க வேண்டாம். |
02:56 | - கடிவாயிலிருந்து விஷத்தையோ, ரத்தத்தையோ உறிஞ்ச முயலவேண்டாம். |
03:01 | - துணியை மிகவும் இறுக்கினால் கால் அழுக நேரிடலாம். |
03:07 | இந்த வீடியோ spoken tutorial project இன் bridge the digital divide initiative இன் ஒரு அங்கம். |
03:13 | spoken tutorial project குறித்த மேலதிகத் தகவல்களுக்கு |
03:15 | http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial இந்த தளத்தின் வீடியோவைப் பார்க்கவும். |
03:21 | இதில் Spoken Tutorial project பற்றி சுருக்கமாகக் காணலாம். |
03:25 | சிறந்த bandwidth இல்லாதிருந்தால் தரவிறக்கி காணவும் |
03:29 | Spoken Tutorial திட்ட குழு இணைந்து செய்முறை வகுப்புகளை நடத்துகிறது. |
03:33 | இணைய பரிட்சையில் தேர்பவர்களுக்கு சான்றிதழ் வழங்குகிறது. |
03:37 | மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் எழுதவும் contact@spoken-tutorial.org ம |
03:44 | Spoken Tutorial Project--Talk to a Teacher project இன் ஒரு அங்கம். |
03:48 | இந்திய அரசாங்கத்தின் ICT, MHRD, மூலம் National Mission on Education அமைப்பு இதற்கு ஆதரவளிக்கிறது. |
03:54 | மேலதிகத் தகவல்களுக்கு http://spoken-tutorial.org\NMEICT-Intro. |
04:01 | தமிழாக்கம் Geetha Sambasivam. நன்றி |