Digital-Divide/D0/First-Aid-on-Snake-Bite/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 உங்கள் கிராமத்தில் குழந்தைகள் திறந்தவெளியில் விளையாடுவதைப் பார்த்திருப்பீர்கள்.
00:09 இந்தச் சிறுவன் பந்தைத் துரத்துவதைப் பார்க்கவும்.
00:12 அருகிலுள்ள புதருக்குள் நுழைகிறான்.
00:16 ஒரு பாம்பைப் பார்த்து விட்டான்.
00:18 அது மறைந்திருந்த இடத்திலிருந்து வெளிவருகிறது.
00:21 பயந்த சிறுவன் கல்லால் அடித்து விரட்டப் பார்க்கிறான்.
00:26 பாம்பு ஊர்ந்து செல்லவில்லை.
00:29 பையன் பக்கம் திரும்பி அவன் காலில் கடித்துவிட்டது.
00:34 சிறுவன் உதவிக்கு அலறுகிறான்.
00:36 நண்பர்கள் அவன் உதவிக்கு வருகின்றனர்.
00:39 காலில் இரு சிவப்புப்புள்ளிகளைப் பார்க்கின்றனர்.
00:42 புதரிலிருந்து அவனைத் தூக்குகின்றனர்.
00:45 அங்கே குழப்பம்.
00:47 வெவ்வேறுவிதமான சிகிச்சைமுறைகளை ஒவ்வொருவரும் கூறுகிறார்கள்.
00:52 பாம்புக்கடிக்குச் செய்யவேண்டிய முதலுதவி குறித்த முக்கியத்துவத்தைப் பார்ப்போம்
00:57 பாம்புக்கடிக்கு முதலுதவி குறித்த spoken tutorial க்கு நல்வரவு.
01:02 இந்த tutorial இல் நாம்
01:04 முதலுதவியின் முக்கியத்துவம்,
01:07 சரியான முதலுதவியை அளிக்கும் விதம் குறித்து பார்ப்போம்.
01:11 ஆலோசனைகளைப் பார்க்கும் முன்
01:15 சிறுவர்கள் நண்பனை எப்படிக் காப்பாற்றினார்கள்?
01:20 சிறுவனைப் படுக்க வைத்தனர்
01:22 மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பெரியவர்களின் உதவியை நாடினார்கள்.
01:28 காயத்தின் மேலே ஒரு துணியை இறுகக் கட்டினார்கள்.
01:32 சரியான முதலுதவி என்ன?
01:35 ஒரு வகையில் அது சரியே!
01:39 மருத்துவமனை தூரத்தில் இல்லை.
01:42 சரியான நேரத்தில் சிறுவன் மருத்துவ உதவியைப் பெறுவான்.
01:46 பாம்புக்கடிக்குச் சரியான முதலுதவி எனில்
01:51 சமதரையில் கடி க்கப்பட்டவரைப் படுக்க வைக்கவும்.
01:55 கடித்த இடத்தில் துணியைச் சுற்றிக்கட்டவும்.
01:59 விஷம் உடல் பூராவும் பரவுவதை இது தடுக்கும்.
02:07 காயத்தைச் சுற்றித் துணியை எப்படிச் சுற்றவேண்டும்?
02:10 காலின் மேல்பக்கம் ஆரம்பித்துக் கீழ் வரை சுற்றவேண்டும்.
02:15 மேற்சிகிச்சைக்கு உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவும்.
02:20 சரியான நேரத்தில் முதலுதவி மூலம் இழப்பைத் தடுக்கமுடியும்.
02:26 தவறான முதலுதவி இழப்பை உண்டாக்கும் என்பதை நினைவிருத்தவும்
02:32 பாம்புக்கடியில் செய்ய வேண்டியவை
02:34 - கடி க்கப்பட்டவரைப் படுக்க வைக்கவும்.
02:37 - துணியைச் சுற்றுகையில் அழுத்தம் கொடுக்கவும்.
02:41 பாம்புக்கடியில் செய்யக்கூடாதவை
02:44 - கடியைச் சுற்றியுள்ள தோலையோ சதையையோ வெட்ட வேண்டாம்.
02:49 - ஐசைக் கடியின் மேலோ சுற்றியோ வைக்க வேண்டாம்.
02:52 - மின் அதிர்ச்சி கொடுக்க வேண்டாம்.
02:56 - கடிவாயிலிருந்து விஷத்தையோ, ரத்தத்தையோ உறிஞ்ச முயலவேண்டாம்.
03:01 - துணியை மிகவும் இறுக்கினால் கால் அழுக நேரிடலாம்.
03:07 இந்த வீடியோ spoken tutorial project இன் bridge the digital divide initiative இன் ஒரு அங்கம்.
03:13 spoken tutorial project குறித்த மேலதிகத் தகவல்களுக்கு
03:15 http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial இந்த தளத்தின் வீடியோவைப் பார்க்கவும்.
03:21 இதில் Spoken Tutorial project பற்றி சுருக்கமாகக் காணலாம்.
03:25 சிறந்த bandwidth இல்லாதிருந்தால் தரவிறக்கி காணவும்
03:29 Spoken Tutorial திட்ட குழு இணைந்து செய்முறை வகுப்புகளை நடத்துகிறது.
03:33 இணைய பரிட்சையில் தேர்பவர்களுக்கு சான்றிதழ் வழங்குகிறது.
03:37 மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் எழுதவும் contact@spoken-tutorial.org ம
03:44 Spoken Tutorial Project--Talk to a Teacher project இன் ஒரு அங்கம்.
03:48 இந்திய அரசாங்கத்தின் ICT, MHRD, மூலம் National Mission on Education அமைப்பு இதற்கு ஆதரவளிக்கிறது.
03:54 மேலதிகத் தகவல்களுக்கு http://spoken-tutorial.org\NMEICT-Intro.
04:01 தமிழாக்கம் Geetha Sambasivam. நன்றி

Contributors and Content Editors

Priyacst, Ranjana