Difference between revisions of "Inkscape/C4/Trace-bitmaps-in-Inkscape/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| border=1 | <center>Time</center> | <center>Narration</center> |- | 00:02 | வணக்கம். '''Inkscape'''ஐ பயன்படுத்தி Inkscape ல்“ ''...") |
|||
Line 278: | Line 278: | ||
|- | |- | ||
| 06:51 | | 06:51 | ||
− | | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது | + | | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது மெஹ்தாஜ் குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |
|} | |} |
Latest revision as of 12:55, 17 March 2017
|
|
00:02 | வணக்கம். Inkscapeஐ பயன்படுத்தி Inkscape ல்“ Trace bitmap” குறித்த டுட்டோரியல்-க்கு நல்வரவு. |
00:08 | இந்த டுட்டோரியலில் நாம் கற்கப்போவது: raster மற்றும் vector படங்களின் வேறுபாடு. raster மற்றும் vector படங்களின் வெவ்வேறு formatகள், raster படத்தை vector ஆக மாற்றுவது. |
00:20 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது Ubuntu Linux 12.04 OS , Inkscape பதிப்பு 0.91 |
00:29 | இந்த டுடோரியலில் உதாரணங்களாக பயன்படுத்தப்படும் படங்கள் Code Files இணைப்பில் வழங்கப்பட்டுள்ளன. |
00:36 | இங்கு டுடோரியலை இடைநிறுத்தி உங்கள் கணினியில் படங்களை தரவிறக்கவும். |
00:42 | இங்கே desktopல் 2 படங்கள் உள்ளன. |
00:45 | இங்கு Linux.png என்பது raster மற்றும் Linux.pdf என்பது vector படம். |
00:51 | அதை திறக்கவும். |
00:53 | இரண்டு படங்களும் ஒன்றாக இருக்கலாம். நாம் படத்தை பெரிதாக்குவதன் மூலம் தான் வேறுபாடுகள் தெரியும். அதை செய்வோம் |
01:02 | இப்போது முதல் படம் '”pixelate'” ஆக தெரிகிறது. ஏனெனில் rasterபடம் pixelsகளால் ஆனது. |
01:09 | ஆனால் இரண்டாவது படம் '”pixelate'” ஆக இல்லை. ஏனெனில் ஒரு vector படம் பாதைகளால் உருவாக்கப்படுகிறது. |
01:15 | rasterபடத்தின் சில formatகளாவன: JPEG, PNG, TIFF, GIF, BMP |
01:27 | vector படத்தின் சில format களாவன: SVG, AI, CGM |
01:34 | vector மற்றும் raster format ,இரண்டிலும் உள்ளவை: PDF, EPS, SWF |
01:43 | இப்போது raster படத்தை எவ்வாறு vector ஆக மாற்றுவது என கற்போம். |
01:47 | Inkscapeஐ திறக்கவும். இப்போது raster படத்தை import செய்யவும். |
01:52 | File ற்கு சென்றுImportஐ க்ளிக் செய்யவும். |
01:57 | இப்போது Path menu சென்று Trace Bitmap'ஐ க்ளிக் செய்யவும். |
02:02 | ஒரு Dialog box திறக்கிறது. Mode tabன் கீழ் பல்வேறு தேர்வுகளை காணலாம். |
02:08 | படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்யவும். முன்னிருப்பாக Brightness cutoff தேர்வு செய்யபட்டுள்ளது. |
02:14 | Previewன் கீழ் Live Preview optionஐ க்ளிக் செய்து மாற்றங்களை கவனிக்கவும். |
02:20 | Preview window ல் பார்ப்பது போல , Brightness cutoff, brightnessன் வித்தியாசத்தை காட்டுகிறது. |
02:26 | இப்போது இரண்டாவது option ஆன Edge detectionஐ க்ளிக் செய்யவும் |
02:31 | பெயர் குறிப்பிடுவது போல அது விளிம்புகளை மட்டுமே காட்டுகிறது. |
02:35 | Color quantization நிறங்கள் குறைக்கப்பட்ட எல்லைகளை காட்டுகிறது. |
02:41 | bitmapன் நிறங்களை தலைகீழாக்கினால் நன்றாக இருக்கும் என நினைத்தால் அதை Invert image தேர்வின் மூலம் செய்யலாம் |
02:47 | '”Invert image " தேர்வில் குறியை நீக்குகிறேன். |
02:51 | பல நிறங்களுக்கு, Multiple scans சிறந்தது. |
02:54 | Brightness steps, brightness ல் வித்தியாசத்தை காட்டுவதற்கு. |
02:58 | Colors, குறிப்பிடப்பட்டுள்ள நிறங்களின் அளவை காட்டுகிறது. |
03:01 | '”Grays'” உம் '”Colors'” போலவே. ஆனால் இது '”Grayscale'” நிறங்களை மட்டும் தேர்வு செய்யும் . அதிகமான மென்மையான கோடுகளை விளிம்புகளில் உருவாக்குவதால் '” Smooth '" தேர்வை '”uncheck'” செய்யவும். |
03:13 | இப்போது அனைத்து tracing தேர்வுகளையும் பார்க்கிறோம். நீங்கள் உங்கள் தேவைக்கேற்ப எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். |
03:20 | Colorsஐ க்ளிக் செய்து தேர்வு செய்கிறேன். |
03:24 | இப்போதுOK ன் மீது க்ளிக் செய்து dialog boxஐ மூடவும். |
03:28 | அசல் படத்தின் மேலே traced படம் உருவாக்கப்பட்டது. |
03:33 | இரண்டு படத்தையும் பார்க்க ஏதுவாக , இந்த படத்தை கிளிக் செய்து ஒரு பக்கமாக நகர்த்தவும். |
03:38 | இந்த படம் இப்போது vectorஆக மாற்றப்படுகிறது. படங்களை பெரிதாக்கவும் |
03:43 | முன்னர் குறிப்பிட்டது போல் முதல் படம் pixelate ஆன படம். இரண்டாவது படம் pixelate ஆகாத படம். |
03:50 | நாம் மிகவும் தெளிவாக பாதைகளையும் பார்க்க முடிகிறது. |
03:56 | இப்போது, அசல் படத்தை நீக்கவும். |
03:58 | படத்தை தேர்ந்தெடுக்கவும்.Pathற்கு சென்று Break Apartன் மீது க்ளிக் செய்யவும். |
04:03 | இப்போது படத்தின் மேல் இரு முறை க்ளிக் செய்யவும். படங்கள் ஒன்றின் மேல் ஒன்று உருவாக்கப்படுகின்றன. |
04:10 | அவற்றை தெளிவாக காண தனியே இழுத்து வைக்கவும் |
04:13 | அடுத்து vector படத்தை எப்படி edit செய்வது என கற்போம். நான் கருப்பு படத்தை edit செய்கிறேன். |
04:19 | எனவே வேறு படங்களை நீக்குக. |
04:23 | படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்க. |
04:26 | Path ற்கு சென்றுBreak Apart மீது க்ளிக் செய்யவும். |
04:29 | Fill and Strokeன் கீழே opacityஐ 50 ஆக குறைக்கவும். இப்போது பகுதிகளை தெளிவாக பார்க்கலாம். |
04:37 | இப்போது படத்தின் நிறங்களை மாற்றுவோம். |
04:40 | நீங்கள் உங்கள் விருப்பப்படி நிறங்களை மாற்ற முடியும். |
04:44 | இப்போது அனைத்து பகுதிகளையும் தேர்வு செய்து opacityஐ 100 ஆக அதிகரிக்கவும். |
04:51 | அனைத்தையும் group செய்ய '”Ctrl + G'” கிளிக் செய்யவும் . |
04:55 | இப்போது சில hair-style ஐ சேர்க்கவும். அதற்கு படத்தை தேர்ந்தெடுத்து Nodes toolன் மீது க்ளிக் செய்யவும். |
05:02 | தலை பகுதியில் nodesஐ சேர்க்கவும். இப்போது இங்கு காட்டப்படுவதுபோல nodesஐ நகர்த்தவும் |
05:09 | raster மற்றும் vector formatகளில் இரு படங்களையும் சேமிக்கவும். |
05:13 | முதலில் இதை raster அதாவது PNG formatல் சேமிக்கவும்.Fileற்கு சென்று Save As ன் மீது க்ளிக் செய்யவும். |
05:21 | Image-raster என பெயரை மாற்றி Save மீது க்ளிக் செய்யவும். |
05:29 | அடுத்து படத்தை vector அதாவது PDF formatல் சேமிக்கவும். |
05:34 | மீண்டும் Fileற்கு சென்று Save As ஐ க்ளிக் செய்யவும். |
05:39 | extension ஐ PDF என மாற்றவும் Image-vector என்று பெயர் மாற்றி Save- மீது க்ளிக் செய்யவும். |
05:48 | இப்போது desktop-ற்குச் சென்று இரண்டு படங்களையும் பார்க்கவும். |
05:53 | நீங்கள் இரண்டு படங்களின் இடையே வேறுபாடுகளை தெளிவாக காணலாம். |
05:58 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
06:01 | சுருங்க சொல்ல இந்த டுட்டோரியலில் நாம் கற்றது, raster மற்றும் vector படங்களின் வேறுபாடு. raster மற்றும் vector படங்களின் வெவ்வேறு formatகள், raster படத்தை vector ஆக மாற்றுவது. |
06:12 | பயிற்சியாக '”code files'” link ல் கொடுக்கப்பட்டுள்ள '”train'” படத்தை தேர்வு செய்து அதை Graysல் vector படமாக மாற்றவும் |
06:20 | நீங்கள் செய்து முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும். |
06:23 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளி ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. அதை காணவும். |
06:30 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் அளிக்கிறது |
06:38 | மேலும் தகவல்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
06:41 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசின் MHRD, NMEICT மூலம் கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும். |
06:51 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது மெஹ்தாஜ் குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |