Inkscape/C4/Trace-bitmaps-in-Inkscape/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time
Narration
00:02 வணக்கம். Inkscapeஐ பயன்படுத்தி Inkscape ல்“ Trace bitmap” குறித்த டுட்டோரியல்-க்கு நல்வரவு.
00:08 இந்த டுட்டோரியலில் நாம் கற்கப்போவது: raster மற்றும் vector படங்களின் வேறுபாடு. raster மற்றும் vector படங்களின் வெவ்வேறு formatகள், raster படத்தை vector ஆக மாற்றுவது.
00:20 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது Ubuntu Linux 12.04 OS , Inkscape பதிப்பு 0.91
00:29 இந்த டுடோரியலில் உதாரணங்களாக பயன்படுத்தப்படும் படங்கள் Code Files இணைப்பில் வழங்கப்பட்டுள்ளன.
00:36 இங்கு டுடோரியலை இடைநிறுத்தி உங்கள் கணினியில் படங்களை தரவிறக்கவும்.
00:42 இங்கே desktopல் 2 படங்கள் உள்ளன.
00:45 இங்கு Linux.png என்பது raster மற்றும் Linux.pdf என்பது vector படம்.
00:51 அதை திறக்கவும்.
00:53 இரண்டு படங்களும் ஒன்றாக இருக்கலாம். நாம் படத்தை பெரிதாக்குவதன் மூலம் தான் வேறுபாடுகள் தெரியும். அதை செய்வோம்
01:02 இப்போது முதல் படம் '”pixelate'” ஆக தெரிகிறது. ஏனெனில் rasterபடம் pixelsகளால் ஆனது.
01:09 ஆனால் இரண்டாவது படம் '”pixelate'” ஆக இல்லை. ஏனெனில் ஒரு vector படம் பாதைகளால் உருவாக்கப்படுகிறது.
01:15 rasterபடத்தின் சில formatகளாவன: JPEG, PNG, TIFF, GIF, BMP
01:27 vector படத்தின் சில format களாவன: SVG, AI, CGM
01:34 vector மற்றும் raster format ,இரண்டிலும் உள்ளவை: PDF, EPS, SWF
01:43 இப்போது raster படத்தை எவ்வாறு vector ஆக மாற்றுவது என கற்போம்.
01:47 Inkscapeஐ திறக்கவும். இப்போது raster படத்தை import செய்யவும்.
01:52 File ற்கு சென்றுImportஐ க்ளிக் செய்யவும்.
01:57 இப்போது Path menu சென்று Trace Bitmap'ஐ க்ளிக் செய்யவும்.
02:02 ஒரு Dialog box திறக்கிறது. Mode tabன் கீழ் பல்வேறு தேர்வுகளை காணலாம்.
02:08 படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்யவும். முன்னிருப்பாக Brightness cutoff தேர்வு செய்யபட்டுள்ளது.
02:14 Previewன் கீழ் Live Preview optionஐ க்ளிக் செய்து மாற்றங்களை கவனிக்கவும்.
02:20 Preview window ல் பார்ப்பது போல , Brightness cutoff, brightnessன் வித்தியாசத்தை காட்டுகிறது.
02:26 இப்போது இரண்டாவது option ஆன Edge detectionஐ க்ளிக் செய்யவும்
02:31 பெயர் குறிப்பிடுவது போல அது விளிம்புகளை மட்டுமே காட்டுகிறது.
02:35 Color quantization நிறங்கள் குறைக்கப்பட்ட எல்லைகளை காட்டுகிறது.
02:41  bitmapன் நிறங்களை தலைகீழாக்கினால் நன்றாக இருக்கும் என நினைத்தால் அதை Invert image தேர்வின் மூலம் செய்யலாம்
02:47 '”Invert image " தேர்வில் குறியை நீக்குகிறேன்.
02:51 பல நிறங்களுக்கு, Multiple scans சிறந்தது.
02:54 Brightness steps, brightness ல் வித்தியாசத்தை காட்டுவதற்கு.
02:58 Colors, குறிப்பிடப்பட்டுள்ள நிறங்களின் அளவை காட்டுகிறது.
03:01 '”Grays'” உம் '”Colors'” போலவே. ஆனால் இது '”Grayscale'” நிறங்களை மட்டும் தேர்வு செய்யும் . அதிகமான மென்மையான கோடுகளை விளிம்புகளில் உருவாக்குவதால் '” Smooth '" தேர்வை '”uncheck'” செய்யவும்.
03:13 இப்போது அனைத்து tracing தேர்வுகளையும் பார்க்கிறோம். நீங்கள் உங்கள் தேவைக்கேற்ப எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்.
03:20 Colorsஐ க்ளிக் செய்து தேர்வு செய்கிறேன்.
03:24 இப்போதுOK ன் மீது க்ளிக் செய்து dialog boxஐ மூடவும்.
03:28 அசல் படத்தின் மேலே traced படம் உருவாக்கப்பட்டது.
03:33 இரண்டு படத்தையும் பார்க்க ஏதுவாக , இந்த படத்தை கிளிக் செய்து ஒரு பக்கமாக நகர்த்தவும்.
03:38 இந்த படம் இப்போது vectorஆக மாற்றப்படுகிறது. படங்களை பெரிதாக்கவும்
03:43 முன்னர் குறிப்பிட்டது போல் முதல் படம் pixelate ஆன படம். இரண்டாவது படம் pixelate ஆகாத படம்.
03:50 நாம் மிகவும் தெளிவாக பாதைகளையும் பார்க்க முடிகிறது.
03:56 இப்போது, அசல் படத்தை நீக்கவும்.
03:58 படத்தை தேர்ந்தெடுக்கவும்.Pathற்கு சென்று Break Apartன் மீது க்ளிக் செய்யவும்.
04:03 இப்போது படத்தின் மேல் இரு முறை க்ளிக் செய்யவும். படங்கள் ஒன்றின் மேல் ஒன்று உருவாக்கப்படுகின்றன.
04:10 அவற்றை தெளிவாக காண தனியே இழுத்து வைக்கவும்
04:13 அடுத்து vector படத்தை எப்படி edit செய்வது என கற்போம். நான் கருப்பு படத்தை edit செய்கிறேன்.
04:19 எனவே வேறு படங்களை நீக்குக.
04:23 படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்க.
04:26 Path ற்கு சென்றுBreak Apart மீது க்ளிக் செய்யவும்.
04:29 Fill and Strokeன் கீழே opacityஐ 50 ஆக குறைக்கவும். இப்போது பகுதிகளை தெளிவாக பார்க்கலாம்.
04:37 இப்போது படத்தின் நிறங்களை மாற்றுவோம்.
04:40 நீங்கள் உங்கள் விருப்பப்படி நிறங்களை மாற்ற முடியும்.
04:44 இப்போது அனைத்து பகுதிகளையும் தேர்வு செய்து opacityஐ 100 ஆக அதிகரிக்கவும்.
04:51 அனைத்தையும் group செய்ய '”Ctrl + G'” கிளிக் செய்யவும் .
04:55 இப்போது சில hair-style ஐ சேர்க்கவும். அதற்கு படத்தை தேர்ந்தெடுத்து Nodes toolன் மீது க்ளிக் செய்யவும்.
05:02 தலை பகுதியில் nodesஐ சேர்க்கவும். இப்போது இங்கு காட்டப்படுவதுபோல nodesஐ நகர்த்தவும்
05:09 raster மற்றும் vector formatகளில் இரு படங்களையும் சேமிக்கவும்.
05:13 முதலில் இதை raster அதாவது PNG formatல் சேமிக்கவும்.Fileற்கு சென்று Save As ன் மீது க்ளிக் செய்யவும்.
05:21 Image-raster என பெயரை மாற்றி Save மீது க்ளிக் செய்யவும்.
05:29 அடுத்து படத்தை vector அதாவது PDF formatல் சேமிக்கவும்.
05:34 மீண்டும் Fileற்கு சென்று Save As ஐ க்ளிக் செய்யவும்.
05:39 extension ஐ PDF என மாற்றவும் Image-vector என்று பெயர் மாற்றி Save- மீது க்ளிக் செய்யவும்.
05:48 இப்போது desktop-ற்குச் சென்று இரண்டு படங்களையும் பார்க்கவும்.
05:53 நீங்கள் இரண்டு படங்களின் இடையே வேறுபாடுகளை தெளிவாக காணலாம்.
05:58 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
06:01 சுருங்க சொல்ல இந்த டுட்டோரியலில் நாம் கற்றது, raster மற்றும் vector படங்களின் வேறுபாடு. raster மற்றும் vector படங்களின் வெவ்வேறு formatகள், raster படத்தை vector ஆக மாற்றுவது.
06:12 பயிற்சியாக '”code files'” link ல் கொடுக்கப்பட்டுள்ள '”train'” படத்தை தேர்வு செய்து அதை Graysல் vector படமாக மாற்றவும்
06:20 நீங்கள் செய்து முடித்த பயிற்சி இவ்வாறு இருக்க வேண்டும்.
06:23 கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளி ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. அதை காணவும்.
06:30 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் அளிக்கிறது
06:38 மேலும் தகவல்களுக்கு எங்களுக்கு எழுதவும்.
06:41 ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசின் MHRD, NMEICT மூலம் கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்.
06:51 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது மெஹ்தாஜ் குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst