Difference between revisions of "Digital-Divide/D0/Introduction-to-PAN-Card/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 4: | Line 4: | ||
|- | |- | ||
− | | 00: | + | | 00:01 |
| '''PAN அட்டை அறிமுகத்திற்கான''' ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு | | '''PAN அட்டை அறிமுகத்திற்கான''' ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு | ||
Line 251: | Line 251: | ||
|- | |- | ||
| 05:15 | | 05:15 | ||
− | | -'''PAN அட்டை''' பற்றி | + | | -'''PAN அட்டை''' பற்றி, -'PAN அட்டை''' ன் அமைப்பு மற்றும் சரிபார்த்தல் |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 299: | Line 295: | ||
|- | |- | ||
| 06:01 | | 06:01 | ||
− | |இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும் | + | |இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro |
− | http://spoken-tutorial.org/NMEICT-Intro | + | |
|- | |- |
Latest revision as of 23:12, 22 February 2017
Time | Narration |
00:01 | PAN அட்டை அறிமுகத்திற்கான ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்க போவது |
00:08 | -PAN அட்டை பற்றி |
00:10 | -PAN அட்டை ன் அமைப்பு மற்றும் சரிபார்த்தல் |
00:14 | - PAN அட்டை ன் தேவை |
00:16 | -உங்கள் PAN அட்டை ஐ அறிந்துகொள்ளுதல். |
00:18 | PAN என்பது Permanent... Account... Number நிரந்தர கணக்கு எண் |
00:23 | PAN அட்டை பாா்க்க இவ்வாறுதான் இருக்கும். |
00:28 | அனைத்து சட்டவியல் அமைப்புகளுக்கும் வழங்கப்படும் இது எண்ணும்எழுத்தும் கலந்த 10 இலக்க எண் ஆகும் |
00:35 | இது இந்திய வருமான வரி துறையால் வழங்கப்படுகிறது |
00:40 | PAN அட்டை ஐ அளிப்பதன் மிக முக்கியமாக நோக்கம் என்னவென்றால் |
00:44 | அடையாளம் காணுதலும், அந்த நிறுவனத்தின் நிதி பற்றிய அனைத்து தகவல்களை கண்காணிப்பதும் ஆகும். |
00:53 | pan அட்டை பற்றிய உண்மைகள். |
00:55 | PAN என்பது தனிப்பட்ட... தேசிய... நிரந்தர அட்டை ஆகும் |
01:00 | முகவரியை மாற்றினாலும் இதில் எந்த பாதிப்பும் இருக்காது |
01:03 | ஒன்றுக்கு மேற்பட்ட PAN ஐ வைத்திருப்பது சட்டவிரோதமானது |
01:07 | யாரெல்லாம் PAN அட்டையைப் பெறலாம்? |
01:10 | தனிநபர் |
01:12 | குழுமம் |
01:15 | HUF அதாவது Hindu Un-divided Family இந்து மத கூட்டுக்குடும்பம். |
01:19 | அறக்கட்டளை மற்றும் இதர அமைப்புகள் |
01:22 | ஏன் நமக்கு PAN அட்டை தேவை? |
01:25 | PAN அட்டை ஒரு புகைப்பட அடையாள அட்டையாக செயல்படுகிறது |
01:30 | PAN அட்டை வங்கி கணக்கை தொடங்குதல் போன்ற பரிவர்த்தனைகளில் பயன்படுகிறது, |
01:38 | சொத்துகளை வாங்க விற்க மற்றும் இதுபோன்ற பலவற்றிலும். |
01:43 | பெறத்தக்க வரிக்குட்டபட்ட சம்பளத்தின் மீதான கணக்கீட்டு தேவைகளுக்காக Pan அட்டை பயன்படுகிறது |
01:50 | வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதில் உதவுகிறது |
01:53 | பங்கு வர்த்தகத்தில் DEMAT கணக்கை துவக்க ஒரு ஆவணச் சான்றாக பயன்படுகிறது |
01:59 | வங்கியில் இருந்து ரூ.50, 000 ஐ விட அதிகமாக திரும்ப பெறுவதற்கு ஒரு ஆவணச்சான்றாக பயன்படுகிறது |
02:07 | இது வரிமான வரியை செலுத்தாதவர்களை கண்டறிய உதவும் ஒரு கருவி ஆகும். |
02:13 | இது அவர்களின் credit history ஐ மறைமுகமாக கண்காணிப்பதன் மூலம் செய்யப்படுகிறது. |
02:18 | TDS அதாவது (Tax Deductions at Source) மூல வரி குறைப்பை பெறுவதற்கான ஒரு ஆவணச் சான்றாக பயன்படுகிறது |
02:27 | பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க ஆவணச் சான்றாக பயன்படுகிறது, |
02:31 | முகவரியை மாற்றுதல் மற்றும் அதுபோன்ற மற்ற ஆவணங்களைப் பெறுவதற்கு பயன்படுகிறது |
02:40 | ரூ.50,000 க்கு மேலே நிரந்தர வைப்புத் தொகைக்காக பயன்படுகிறது |
02:47 | ரூ.25,000 க்கு மேலே ஹோட்டல் கட்டணங்கள் மற்றும் பயண செலவுகளை செலுத்தும்போது பயன்படுகிறது |
02:56 | credit card கடன் அட்டையை பெற விண்ணப்பிக்கும் போது பயன்படுகிறது |
03:05 | தொடைப்பேசி இணைப்பிற்கு விண்ணப்பிக்கும் போது பயன்படுகிறது. |
03:10 | PAN ன் அமைப்பு இவ்வாறுதான் இருக்கும் |
03:13 | முதல் ஐந்து characterகள் எழுத்தக்கள் ஆகும், அடுத்து நான்கு எண்கள், கடைசி character எழுத்து. |
03:21 | முதல் மூன்று எழுத்துக்கள் AAA விலிருந்து ZZZ வரையிலான எழுத்துகளின் தொடர்வரிசை ஆகும் |
03:29 | நான்காவது எழுத்து அட்டை உடைமையாளரின் வகையை சொல்கிறது . ஒவ்வொரு மதிப்பீடும் தனித்துவமானது |
03:36 | P தனிநபர் |
03:38 | C குழுமம் |
03:41 | H HUF இந்துமத கூட்டுக்குடும்பம் |
03:45 | F நிறுவனம் |
03:47 | A AOP கூட்டமைப்பு |
03:51 | T அறக்கட்டளை |
03:53 | B BOI தனிநபர் குழு |
03:57 | L உள்ளூர் ஆணையம் |
04:01 | J செயற்கையான சட்டபூர்வ மனிதன் |
04:05 | G அரசாங்கம் |
04:07 | "தனிநபர்" PAN அட்டை எனில் PAN ன் ஐந்தாவது எழுத்து... அந்த நபரின் துணைப்பெயர் அல்லது கடைசி பெயரின் முதல் எழுத்து ஆகும் |
04:18 | படத்தில் காட்டப்படுவது போல துணைப்பெயர் Yadav. எனவே ஐந்தாவது எழுத்து Y. அல்லது |
04:26 | குழுமம்/ HUF /நிறுவனம் அல்லது மற்ற வகை PAN அட்டைகளாக இருந்தால் நிறுவனம்(entity)/ அறக்கட்டளை/ சங்கம்/ அமைப்பின் பெயர். |
04:38 | படத்தில் காட்டப்படுவது போல, அறக்கட்டளையின் பெயர் Shanoz. |
04:42 | எனவே ஐந்தாவது எழுத்து S. |
04:46 | கடைசி எழுத்து ஒரு எழுத்து வகை சோதனை இலக்கம். |
04:50 | PAN அட்டை வழங்கப்பட்ட தேதி அதன் வலது பக்கம் கிடைமட்டமாக குறிப்பிடப்படுகிறது |
04:59 | பின்வரும் இணைய இணைப்பின் மூலம் புதிய அல்லது பழைய PAN எண்களை மதிப்பிட அல்லது சரிபார்க்க முடியும்: |
05:10 | சுருங்கசொல்ல |
05:12 | இந்த டுடோரியலில் நாம் கற்றது |
05:15 | -PAN அட்டை பற்றி, -'PAN அட்டை ன் அமைப்பு மற்றும் சரிபார்த்தல் |
05:19 | -PAN அட்டை ன் தேவை மற்றும் |
05:21 | -உங்கள்PAN அட்டை பற்றி தெரிந்து கொள்ளுதல் |
05:23 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
05:27 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது |
05:30 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
05:34 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
05:40 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
05:43 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
05:50 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
05:54 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
06:01 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro |
06:11 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
06:14 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |