Digital-Divide/D0/Introduction-to-PAN-Card/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 PAN அட்டை அறிமுகத்திற்கான ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது
00:08 -PAN அட்டை பற்றி
00:10 -PAN அட்டை ன் அமைப்பு மற்றும் சரிபார்த்தல்
00:14 - PAN அட்டை ன் தேவை
00:16 -உங்கள் PAN அட்டை ஐ அறிந்துகொள்ளுதல்.
00:18 PAN என்பது Permanent... Account... Number நிரந்தர கணக்கு எண்
00:23 PAN அட்டை பாா்க்க இவ்வாறுதான் இருக்கும்.
00:28 அனைத்து சட்டவியல் அமைப்புகளுக்கும் வழங்கப்படும் இது எண்ணும்எழுத்தும் கலந்த 10 இலக்க எண் ஆகும்
00:35 இது இந்திய வருமான வரி துறையால் வழங்கப்படுகிறது
00:40 PAN அட்டை ஐ அளிப்பதன் மிக முக்கியமாக நோக்கம் என்னவென்றால்
00:44 அடையாளம் காணுதலும், அந்த நிறுவனத்தின் நிதி பற்றிய அனைத்து தகவல்களை கண்காணிப்பதும் ஆகும்.
00:53 pan அட்டை பற்றிய உண்மைகள்.
00:55 PAN என்பது தனிப்பட்ட... தேசிய... நிரந்தர அட்டை ஆகும்
01:00 முகவரியை மாற்றினாலும் இதில் எந்த பாதிப்பும் இருக்காது
01:03 ஒன்றுக்கு மேற்பட்ட PAN ஐ வைத்திருப்பது சட்டவிரோதமானது
01:07 யாரெல்லாம் PAN அட்டையைப் பெறலாம்?
01:10 தனிநபர்
01:12 குழுமம்
01:15 HUF அதாவது Hindu Un-divided Family இந்து மத கூட்டுக்குடும்பம்.
01:19 அறக்கட்டளை மற்றும் இதர அமைப்புகள்
01:22 ஏன் நமக்கு PAN அட்டை தேவை?
01:25 PAN அட்டை ஒரு புகைப்பட அடையாள அட்டையாக செயல்படுகிறது
01:30 PAN அட்டை வங்கி கணக்கை தொடங்குதல் போன்ற பரிவர்த்தனைகளில் பயன்படுகிறது,
01:38 சொத்துகளை வாங்க விற்க மற்றும் இதுபோன்ற பலவற்றிலும்.
01:43 பெறத்தக்க வரிக்குட்டபட்ட சம்பளத்தின் மீதான கணக்கீட்டு தேவைகளுக்காக Pan அட்டை பயன்படுகிறது
01:50 வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதில் உதவுகிறது
01:53 பங்கு வர்த்தகத்தில் DEMAT கணக்கை துவக்க ஒரு ஆவணச் சான்றாக பயன்படுகிறது
01:59 வங்கியில் இருந்து ரூ.50, 000 ஐ விட அதிகமாக திரும்ப பெறுவதற்கு ஒரு ஆவணச்சான்றாக பயன்படுகிறது
02:07 இது வரிமான வரியை செலுத்தாதவர்களை கண்டறிய உதவும் ஒரு கருவி ஆகும்.
02:13 இது அவர்களின் credit history ஐ மறைமுகமாக கண்காணிப்பதன் மூலம் செய்யப்படுகிறது.
02:18 TDS அதாவது (Tax Deductions at Source) மூல வரி குறைப்பை பெறுவதற்கான ஒரு ஆவணச் சான்றாக பயன்படுகிறது
02:27 பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க ஆவணச் சான்றாக பயன்படுகிறது,
02:31 முகவரியை மாற்றுதல் மற்றும் அதுபோன்ற மற்ற ஆவணங்களைப் பெறுவதற்கு பயன்படுகிறது
02:40 ரூ.50,000 க்கு மேலே நிரந்தர வைப்புத் தொகைக்காக பயன்படுகிறது
02:47 ரூ.25,000 க்கு மேலே ஹோட்டல் கட்டணங்கள் மற்றும் பயண செலவுகளை செலுத்தும்போது பயன்படுகிறது
02:56 credit card கடன் அட்டையை பெற விண்ணப்பிக்கும் போது பயன்படுகிறது
03:05 தொடைப்பேசி இணைப்பிற்கு விண்ணப்பிக்கும் போது பயன்படுகிறது.
03:10 PAN ன் அமைப்பு இவ்வாறுதான் இருக்கும்
03:13 முதல் ஐந்து characterகள் எழுத்தக்கள் ஆகும், அடுத்து நான்கு எண்கள், கடைசி character எழுத்து.
03:21 முதல் மூன்று எழுத்துக்கள் AAA விலிருந்து ZZZ வரையிலான எழுத்துகளின் தொடர்வரிசை ஆகும்
03:29 நான்காவது எழுத்து அட்டை உடைமையாளரின் வகையை சொல்கிறது . ஒவ்வொரு மதிப்பீடும் தனித்துவமானது
03:36 P தனிநபர்
03:38 C குழுமம்
03:41 H HUF இந்துமத கூட்டுக்குடும்பம்
03:45 F நிறுவனம்
03:47 A AOP கூட்டமைப்பு
03:51 T அறக்கட்டளை
03:53 B BOI தனிநபர் குழு
03:57 L உள்ளூர் ஆணையம்
04:01 J செயற்கையான சட்டபூர்வ மனிதன்
04:05 G அரசாங்கம்
04:07 "தனிநபர்" PAN அட்டை எனில் PAN ன் ஐந்தாவது எழுத்து... அந்த நபரின் துணைப்பெயர் அல்லது கடைசி பெயரின் முதல் எழுத்து ஆகும்
04:18 படத்தில் காட்டப்படுவது போல துணைப்பெயர் Yadav. எனவே ஐந்தாவது எழுத்து Y. அல்லது
04:26 குழுமம்/ HUF /நிறுவனம் அல்லது மற்ற வகை PAN அட்டைகளாக இருந்தால் நிறுவனம்(entity)/ அறக்கட்டளை/ சங்கம்/ அமைப்பின் பெயர்.
04:38 படத்தில் காட்டப்படுவது போல, அறக்கட்டளையின் பெயர் Shanoz.
04:42 எனவே ஐந்தாவது எழுத்து S.
04:46 கடைசி எழுத்து ஒரு எழுத்து வகை சோதனை இலக்கம்.
04:50 PAN அட்டை வழங்கப்பட்ட தேதி அதன் வலது பக்கம் கிடைமட்டமாக குறிப்பிடப்படுகிறது
04:59 பின்வரும் இணைய இணைப்பின் மூலம் புதிய அல்லது பழைய PAN எண்களை மதிப்பிட அல்லது சரிபார்க்க முடியும்:
05:10 சுருங்கசொல்ல
05:12 இந்த டுடோரியலில் நாம் கற்றது
05:15 -PAN அட்டை பற்றி, -'PAN அட்டை ன் அமைப்பு மற்றும் சரிபார்த்தல்
05:19 -PAN அட்டை ன் தேவை மற்றும்
05:21 -உங்கள்PAN அட்டை பற்றி தெரிந்து கொள்ளுதல்
05:23 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
05:27 இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது
05:30 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
05:34 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
05:40 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
05:43 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
05:50 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
05:54 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
06:01 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro
06:11 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
06:14 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst, Ranjana