Difference between revisions of "LibreOffice-Suite-Base/C2/Modify-a-simple-form/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 !Visual Cues !Narration |- ||00:00 || LibreOffice Base குறித்த Spoken tutorial க்கு நல்வரவு |- ||00:04 ||இந்த படி…') |
Pravin1389 (Talk | contribs) |
(No difference)
|
Revision as of 18:51, 2 December 2012
Visual Cues | Narration |
---|---|
00:00 | LibreOffice Base குறித்த Spoken tutorial க்கு நல்வரவு |
00:04 | இந்த படிவத்தை மாற்றி அமைப்பது குறித்த tutorial இல், படிவத்தில் எப்படி தரவை உள்ளிடுவது, படிவத்தை மாற்றி அமைப்பது ஆகியவற்றை கற்போம். |
00:14 | முந்தைய tutorialஇல் LibreOffice Base ஐ பயன்படுத்தி படிவத்தை எப்படி உருவாக்குவது என்று கண்டோம். |
00:22 | நாம் library தரவுத்தள உதாரணத்தில் எளிய Books data entry படிவம் உருவாக்கினோம். |
00:29 | இப்போது இந்த படிவத்தை பயன்படுத்தி Books அட்டவணை யில் எப்படி தரவை உள்ளிடுவது என்றூ பார்க்கலாம். |
00:39 | LibreOffice Base program ஏற்கெனெவே திறந்து இல்லை எனில் அதை துவக்குவோம். |
00:48 | நம் library தரவுத்தளத்தையும் திறப்போம். |
00:52 | Base ஏற்கெனெவே திறந்து இருந்தால் மேலே பைல் மெனுவில் சொடுக்கி பின் Open மீது சொடுக்கி library தரவுத்தளத்தை திறக்கலாம். |
01:03 | அல்லது பைல் மெனுவில் Recent Documents ஐ சொடுக்கி திறக்கலாம். |
01:08 | இப்போது library தரவுத்தளத்தில் இருக்கிறோம். |
01:12 | தரவுத்தளத்தில் இடது பலகத்தில் உள்ள பட்டியலில் படிவங்கள் சின்னத்தின் மீது சொடுக்கலாம். |
01:18 | இந்த சாளரத்தின் மத்தியில் படிவங்கள் கீழ் 'Books data entry form' முன்னிலை படுத்தப்பட்டு இருப்பதை காணலாம். |
01:28 | இந்த படிவத்தின் பெயரில் வலது சொடுக்கி Open மீதும் சொடுக்கவும். |
01:33 | இப்போது நீல பின்புலம், லேபில்கள், Books அட்டவணையில் உள்ள புலங்களுக்கு ஒத்துவரும் உரைப்பெட்டிகள் ஆகியன அடங்கிய ஒரு புதிய சாளரம் தோன்றுவதை காணலாம். |
01:46 | tab விசையை சொடுக்க நாம் ஒவ்வொரு புலமாக நகருவோம். கடைசிக்கு வந்துவிட்டால் base அடுத்த பதிவேட்டை திறக்கிறது. |
01:56 | இப்படியாக நாம் record கள் நடுவில் உலாவலாம். |
02:00 | அல்லது நாம் கீழே உள்ள toolbar இல் கருப்பு முக்கோண சின்னங்களை சொடுக்கி record கள் நடுவில் உலாவலாம். |
02:10 | மாற்றாக, சுலபமாக ஒரு குறிப்பிட்ட record க்கு போக கீழே உள்ள toolbar இல் ரெகார்ட் எண்ணை type செய்து enter விசையையோ அல்லது tab விசையையோ அழுத்தலாம். |
02:23 | நாம் கடைசி ரெகார்டுக்கு போகலாம். அது ஐந்தாவது. |
02:28 | இப்போது புதிய record ஒன்றை சேர்க்கலாம். |
02:34 | இதை செய்ய புதிய Record சின்னத்தை சொடுக்கவும் அது கீழே உள்ள டூல்பாரில் கடைசி ரெகார்டுக்கு வலப்பக்கம் இரண்டாவதாக இருக்கிறது. |
02:46 | நாம் காலி உரைப்பெட்டிகளை காண்கிறோம். கீழே record எண் 6 ஆக இருப்பதை காண்கிறோம். |
02:55 | நாம் இப்போது புதிய புத்தகம் பற்றிய புதிய record ஐ சேர்க்க தயார். |
03:03 | நாம் இப்போது 'Paradise Lost' என Title உரைப்பெட்டியில் எழுதுவோம். பின் tab விசையை பயன்படுத்தி அடுத்த புலத்துக்கு போகலாம். |
03:16 | 'John Milton' என author இல் டைப் செய்யலாம். |
03:23 | '1975' என PublishedYear |
03:28 | 'Oxford' என Publisher |
03:31 | 200 என price. |
03:36 | அவ்வளவுதான், Books data Entry form ஐ பயன்படுத்தி ஒரு புதிய record ஐ Books அட்டவணையில் உள்ளிட்டு விட்டோம். |
03:46 | இந்த சாளரத்தை மூடலாம். |
03:48 | இப்படியாக நாம் மேலும் records அல்லது தரவை உள்ளிட முடியும். |
03:53 | நாம் கடைசியாக உள்ளிட்டதை Base Books அட்டவணையில் புதுப்பித்துக்கொண்டதா என்று பார்க்கலாம். |
04:02 | இதற்கு, LibreOffice Base முதன்மை சாளரத்தில் வலது பக்க பலகத்தில் Books அட்டவணை மீது இரட்டை சொடுக்கு சொடுக்கலாம். |
04:12 | நாம் படிவம் மூலம் உள்ளிட்ட புதிய record இங்கிருப்பதை காணலாம். |
04:18 | சரி, இந்த சாளரத்தை மூடலாம். |
04:22 | அடுத்து, இப்போது நாம் நம் படிவத்தில் எளிய மாற்றங்களை செய்வது எப்படி என்று கற்போம். |
04:30 | நாம் தரவுத்தள பட்டியலில் இடது பலகத்தில் படிவங்கள் சின்னத்தின் மீது சொடுக்கலாம். |
04:37 | 'Books data Entry form' ஐ வலது சொடுக்கி, பின் 'edit' தேர்வால் திருத்துவதற்கு திறக்கலாம். |
04:48 | பழக்கமான சாளரம் ஒன்று இப்போது திறக்கிறது. |
04:51 | ஆனால் வித்தியாசமாக நீங்கள் label 'title' மீது சொடுக்க, பல சிறு பச்சை நிற பெட்டிகள் label ஐயும் உரைப்பெட்டியையும் சூழ்ந்து இருப்பதை காணலாம். |
05:03 | இது நாம் படிவ அமைப்பு சாளரத்தில் இருப்பதை தெரிவிக்கிறது. |
05:08 | நாம் படிவத்தின் தோற்றம் அதன் அங்கங்கள் செயல்பாடுகள் ஆகியவற்றை மாற்றலாம். |
05:17 | உதாரணமாக, labels உரைப்பெட்டிகள் ஆகியவற்றின் இடம் அளவு ஆகியவற்றை மாற்றலாம். |
05:25 | இவை அவற்றின் பண்புகளாகும். |
05:28 | label தலைப்பில் இரட்டை சொடுக்கலாம். |
05:32 | Properties எனும் துள்ளு சாளரம் ஒன்று திறக்கிறது. |
05:38 | பல் வேறு பண்புகளை இங்கே காணலாம். |
05:48 | 'author' label மீது சொடுக்க Properties சாளரம் தன்னை புதுப்பித்துக்கொண்டு label Author இன் பண்புகளை காட்டுகிறது. |
06:02 | ஆகவே நாம் படிவத்தின் பல் வேறு அங்கங்கள் மீது சொடுக்க Properties சாளரம் தன்னை புதுப்பித்துக்கொண்டு தேர்ந்தெடுத்த அங்கத்தின் பண்புகளை காட்டுகிறது. |
06:14 | இப்போது Properties சாளர தலைப்பு Properties:MultiSelection என்கிறது. |
06:21 | இது ஏன் எனில் author label உம் அதன் அருகில் உள்ள உரைப்பெட்டியும் ஒரே தொகுதி பச்சைப்பெட்டிகளால் சூழப்பட்டுள்ளது. |
06:34 | Base தானியங்கியாக label களையும் படிவத்தில் அவற்றுக்கான உரைப்பெட்டிகளையும் ஒரே குழுவாக்கிவிட்டது. அவற்றை நாம் பிரிக்க முடியும். |
06:44 | Title label மீது வலது சொடுக்கி பின் கீழே 'Group' மீது சொடுக்கி பின் 'Ungroup' மீது சொடுக்கவும். |
06:54 | இப்போது Title label உம் அதன் உரைப்பெட்டியும் குழு பிரிக்கப்பட்டுவிட்டன. |
07:02 | இப்படியாக படிவத்தின் ஒவ்வொரு அங்கத்தின் பண்புகளையும் மாற்றலாம். |
07:10 | அடுத்து, தலைப்பு உரைப்பெட்டிக்கு ஒரு கருவிக்குறிப்பை சேர்க்கலாம். |
07:16 | Properties சாளரத்தின் கீழே போகலாம். |
07:22 | 'Help text' என ஒரு label இருப்பதை காணலாம். நாம் 'Enter the title of the book here' என type செய்வோம். |
07:32 | இப்போது மேலே பைல் மெனுவில் Save சின்னத்தை சொடுக்கி படிவத்தை சேமிப்போம். இந்த சாளரத்தையும் மூடுவோம். |
07:46 | இப்போது நாம் மாற்றங்களை செய்த பின் நம் படிவம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். |
07:54 | இதற்கு, நாம் Base இன் முதன்மை சாளரத்துக்கு போய் இடது பக்க பலகத்தில் படிவங்கள் சின்னத்தின் மீது சொடுக்கலாம். |
08:03 | பின் வலது பக்க பலகத்தில் 'Books data Entry form' மீதும் இரட்டை சொடுக்கு சொடுக்கலாம். |
08:10 | தலைப்பு label அல்லது உரைப்பெட்டி மீது சொடுக்கியை வைத்து பாருங்கள். |
08:17 | 'Enter the title of the book here' என்று ஒரு கருவிக்குறிப்பு சொல்வதை பாருங்கள். |
098:24 | இப்போது நம் படிவத்தில் எளிய மாற்றங்களை செய்வது எப்படி என்று கண்டோம். |
08:31 | அடுத்த Base tutorial இல் படிவத்தில் எப்படி மேலும் மாற்றங்களை செய்வது என்று காணலாம். |
08:38 | உங்களுக்கு ஒரு பயிற்சி. |
08:41 | உறுப்பினர்கள் அட்டவணைக்கு எளிய படிவம் ஒன்றை உருவாக்குக. |
08:46 | இத்துடன் LibreOffice Base இல் படிவத்தை மாற்றி அமைப்பது குறித்த இந்த டுடோரியல் முடிவுக்கு வருகிறது. |
08:52 | சுருங்கசொல்ல நாம் கற்றது: படிவத்தில் எப்படி தரவை உள்ளிடுவது, படிவத்தை மாற்றி அமைப்பது |
09:00 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09:12 | இந்த திட்டம் Spoken Tutorial.org ஆல் ஒருங்கிணைக்கப்படுகிறது. http://spoken-tutorial.org. |
09:17 | மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
09:22 | மூல பாடம், குரல் Priya Suresh, Ria - DesiCrew Solutions. . தமிழில் கடலூர் திவா, குரல்...
வணக்கம் |