LibreOffice-Suite-Base/C2/Modify-a-simple-form/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:00 LibreOffice Base குறித்த Spoken tutorial க்கு நல்வரவு
00:04 இந்த படிவத்தை மாற்றி அமைப்பது குறித்த tutorial இல், படிவத்தில் எப்படி தரவை உள்ளிடுவது, படிவத்தை மாற்றி அமைப்பது ஆகியவற்றை கற்போம்.
00:14 முந்தைய tutorialஇல் LibreOffice Base ஐ பயன்படுத்தி படிவத்தை எப்படி உருவாக்குவது என்று கண்டோம்.
00:22 நாம் library தரவுத்தள உதாரணத்தில் எளிய Books data entry படிவம் உருவாக்கினோம்.
00:29 இப்போது இந்த படிவத்தை பயன்படுத்தி Books அட்டவணை யில் எப்படி தரவை உள்ளிடுவது என்றூ பார்க்கலாம்.
00:39 LibreOffice Base program ஏற்கெனெவே திறந்து இல்லை எனில் அதை துவக்குவோம்.
00:48 நம் library தரவுத்தளத்தையும் திறப்போம்.
00:52 Base ஏற்கெனெவே திறந்து இருந்தால் மேலே பைல் மெனுவில் சொடுக்கி பின் Open மீது சொடுக்கி library தரவுத்தளத்தை திறக்கலாம்.
01:03 அல்லது பைல் மெனுவில் Recent Documents ஐ சொடுக்கி திறக்கலாம்.
01:08 இப்போது library தரவுத்தளத்தில் இருக்கிறோம்.
01:12 தரவுத்தளத்தில் இடது பலகத்தில் உள்ள பட்டியலில் forms சின்னத்தின் மீது சொடுக்கவும்.
01:18 இந்த சாளரத்தின் மத்தியில் forms ன் கீழ் 'Books data entry form' முன்னிலை படுத்தப்பட்டு இருப்பதை காணலாம்.
01:28 இந்த படிவத்தின் பெயரில் வலது சொடுக்கி Open மீதும் சொடுக்கவும்.
01:33 இப்போது நீல பின்புலம், லேபில்கள், Books அட்டவணையில் உள்ள புலங்களுக்கு ஒத்துவரும் உரைப்பெட்டிகள் ஆகியன அடங்கிய ஒரு புதிய சாளரம் தோன்றுவதை காணலாம்.
01:46 tab விசையை சொடுக்க நாம் ஒவ்வொரு புலமாக நகருவோம். கடைசிக்கு வந்துவிட்டால் base அடுத்த பதிவேட்டை திறக்கிறது.
01:56 இப்படியாக நாம் record கள் நடுவில் உலாவலாம்.
02:00 அல்லது நாம் கீழே உள்ள toolbar இல் கருப்பு முக்கோண சின்னங்களை சொடுக்கி record கள் நடுவில் உலாவலாம்.
02:10 மாற்றாக, சுலபமாக ஒரு குறிப்பிட்ட record க்கு போக கீழே உள்ள toolbar இல் ரெகார்ட் எண்ணை type செய்து enter விசையையோ அல்லது tab விசையையோ அழுத்தலாம்.
02:23 நாம் கடைசி ரெகார்டுக்கு போகலாம். அது ஐந்தாவது.
02:28 இப்போது புதிய record ஒன்றை சேர்க்கலாம்.
02:34 இதை செய்ய புதிய Record சின்னத்தை சொடுக்கவும் அது கீழே உள்ள டூல்பாரில் கடைசி ரெகார்டுக்கு வலப்பக்கம் இரண்டாவதாக இருக்கிறது.
02:46 நாம் காலி உரைப்பெட்டிகளை காண்கிறோம். கீழே record எண் 6 ஆக இருப்பதை காண்கிறோம்.
02:55 நாம் இப்போது புதிய புத்தகம் பற்றிய புதிய record ஐ சேர்க்க தயார்.
03:03 நாம் இப்போது 'Paradise Lost' என Title உரைப்பெட்டியில் எழுதுவோம். பின் tab விசையை பயன்படுத்தி அடுத்த புலத்துக்கு போகலாம்.
03:16 'John Milton' என author இல் டைப் செய்யலாம்.
03:23 '1975' என PublishedYear
03:28 'Oxford' என Publisher
03:31 200 என price.
03:36 அவ்வளவுதான், Books data Entry form ஐ பயன்படுத்தி ஒரு புதிய record ஐ Books அட்டவணையில் உள்ளிட்டு விட்டோம்.
03:46 இந்த சாளரத்தை மூடலாம்.
03:48 இப்படியாக நாம் மேலும் records அல்லது தரவை உள்ளிட முடியும்.
03:53 நாம் கடைசியாக உள்ளிட்டதை Base Books அட்டவணையில் புதுப்பித்துக்கொண்டதா என்று பார்க்கலாம்.
04:02 இதற்கு, LibreOffice Base முதன்மை சாளரத்தில் வலது பக்க பலகத்தில் Books அட்டவணை மீது இரட்டை சொடுக்கு சொடுக்கலாம்.
04:12 நாம் படிவம் மூலம் உள்ளிட்ட புதிய record இங்கிருப்பதை காணலாம்.
04:18 சரி, இந்த சாளரத்தை மூடலாம்.
04:22 அடுத்து, இப்போது நாம் நம் படிவத்தில் எளிய மாற்றங்களை செய்வது எப்படி என்று கற்போம்.
04:30 நாம் தரவுத்தள பட்டியலில் இடது பலகத்தில் forms சின்னத்தின் மீது சொடுக்கலாம்.
04:37 'Books data Entry form' ஐ வலது சொடுக்கி, பின் 'edit' தேர்வால் திருத்துவதற்கு திறக்கலாம்.
04:48 பழக்கமான சாளரம் ஒன்று திறக்கிறது.
04:51 ஆனால் வித்தியாசமாக நீங்கள் label 'title' மீது சொடுக்க, பல சிறு பச்சை நிற பெட்டிகள் label ஐயும் உரைப்பெட்டியையும் சூழ்ந்து இருப்பதை காணலாம்.
05:03 இது நாம் படிவ அமைப்பு சாளரத்தில் இருப்பதை தெரிவிக்கிறது.
05:08 நாம் படிவத்தின் தோற்றம் அதன் அங்கங்கள் செயல்பாடுகள் ஆகியவற்றை மாற்றலாம்.
05:17 உதாரணமாக, labels உரைப்பெட்டிகள் ஆகியவற்றின் இடம் அளவு ஆகியவற்றை மாற்றலாம்.
05:25 இவை அவற்றின் பண்புகளாகும்.
05:28 label தலைப்பில் இரட்டை சொடுக்கலாம்.
05:32 Properties எனும் துள்ளு சாளரம் ஒன்று திறக்கிறது.
05:38 பல் வேறு பண்புகளை இங்கே காணலாம்.
05:48 'author' label மீது சொடுக்க Properties சாளரம் தன்னை புதுப்பித்துக்கொண்டு label Author இன் பண்புகளை காட்டுகிறது.
06:02 ஆகவே நாம் படிவத்தின் பல் வேறு அங்கங்கள் மீது சொடுக்க Properties சாளரம் தன்னை புதுப்பித்துக்கொண்டு தேர்ந்தெடுத்த அங்கத்தின் பண்புகளை காட்டுகிறது.
06:14 இப்போது Properties சாளர தலைப்பு Properties:MultiSelection என்கிறது.
06:21 இது ஏன் எனில் author label உம் அதன் அருகில் உள்ள உரைப்பெட்டியும் ஒரே தொகுதி பச்சைப்பெட்டிகளால் சூழப்பட்டுள்ளது.
06:34 Base தானியங்கியாக label களையும் படிவத்தில் அவற்றுக்கான உரைப்பெட்டிகளையும் ஒரே குழுவாக்கிவிட்டது. அவற்றை நாம் பிரிக்க முடியும்.
06:44 Title label மீது வலது சொடுக்கி பின் கீழே 'Group' மீது சொடுக்கி பின் 'Ungroup' மீது சொடுக்கவும்.
06:54 இப்போது Title label உம் அதன் உரைப்பெட்டியும் குழு பிரிக்கப்பட்டுவிட்டன.
07:02 இப்படியாக படிவத்தின் ஒவ்வொரு அங்கத்தின் பண்புகளையும் மாற்றலாம்.
07:10 அடுத்து, தலைப்பு உரைப்பெட்டிக்கு ஒரு கருவிக்குறிப்பை சேர்க்கலாம்.
07:16 Properties சாளரத்தின் கீழே போகலாம்.
07:22 'Help text' என ஒரு label இருப்பதை காணலாம். நாம் 'Enter the title of the book here' என type செய்வோம்.
07:32 இப்போது மேலே பைல் மெனுவில் Save சின்னத்தை சொடுக்கி படிவத்தை சேமிப்போம். இந்த சாளரத்தையும் மூடுவோம்.
07:46 இப்போது நாம் மாற்றங்களை செய்த பின் நம் படிவம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
07:54 இதற்கு, நாம் Base இன் முதன்மை சாளரத்துக்கு போய் இடது பக்க பலகத்தில் forms சின்னத்தின் மீது சொடுக்கலாம்.
08:03 பின் வலது பக்க பலகத்தில் 'Books data Entry form' மீதும் இரட்டை சொடுக்கு சொடுக்கலாம்.
08:10 title label அல்லது textbox மீது சொடுக்கியை வைத்து பாருங்கள்.
08:17 'Enter the title of the book here' என்று ஒரு கருவிக்குறிப்பு சொல்வதை பாருங்கள்.
08:24 இப்போது நம் படிவத்தில் எளிய மாற்றங்களை செய்வது எப்படி என்று கண்டோம்.
08:31 அடுத்த Base tutorial இல் படிவத்தில் எப்படி மேலும் மாற்றங்களை செய்வது என்று காணலாம்.
08:38 உங்களுக்கு ஒரு பயிற்சி.
08:41 உறுப்பினர்கள் அட்டவணைக்கு எளிய படிவம் ஒன்றை உருவாக்குக.
08:46 இத்துடன் LibreOffice Base இல் படிவத்தை மாற்றி அமைப்பது குறித்த இந்த டுடோரியல் முடிகிறது.
08:52 சுருங்கசொல்ல நாம் கற்றது: படிவத்தில் எப்படி தரவை உள்ளிடுவது, படிவத்தை மாற்றி அமைப்பது
09:00 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09:12 இந்த திட்டம் Spoken Tutorial.org ஆல் ஒருங்கிணைக்கப்படுகிறது. http://spoken-tutorial.org.
09:17 மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
09:22 தமிழாக்கம் கடலூர் திவா,

நன்றி

Contributors and Content Editors

Chandrika, Pravin1389, Priyacst