Difference between revisions of "Linux/C2/File-System/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 !Time !Narration |- | 0:00 |லீனக்ஸ் பைல் சிஸ்டம் பற்றிய ஸ்போகன் டுடோரியலுக்கு …') |
Pravin1389 (Talk | contribs) m (moved Linux/C2/File-System /Tamil to Linux/C2/File-System/Tamil) |
(No difference)
|
Revision as of 16:18, 2 December 2012
Time | Narration |
---|---|
0:00 | லீனக்ஸ் பைல் சிஸ்டம் பற்றிய ஸ்போகன் டுடோரியலுக்கு நல் வரவு! |
0:04 | நான் உபுண்டு 10.04 ஐ பயன்படுத்துகிறேன். |
0:07 | லீனக்ஸ் ஆபரேடிங் சிஸ்டம் குறித்த துவக்க பாடங்களையும் கமாண்ட் கள் குறித்த அடிப்படைகளையும் அறிந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். |
0:13 | உங்களுக்கு ஆர்வம் இருந்தால் அது இதே தளத்தில் வேறு ஸ்போக்கன் டுடோரியலில் உள்ளது. http://spoken-tutorial.org |
0:25 | லீனக்ஸ் கமாண்ட் கள் மேல்நிலை கீழ் நிலை எழுத்து உணர்வு உள்ளவை. |
0:28 | குறிப்பிட்டு சொன்னால் ஒழிய இங்கு தரப்படும் அத்தனை கமாண்ட் களும் கீழ் நிலை எழுத்துகளால் ஆனவை. |
0:36 | லினக்ஸில் எல்லாமே ஒரு பைல் தான். |
0:39 | ஆகவே பைல் என்றால் என்ன? தினசரி வாழ்க்கையில் அது ஆவணங்களையும் காகிதங்களையும் வைத்துக்கொள்ளும் ஒரு கலன். |
0:47 | அதே போல லினக்ஸில் பைல் என்பது தகவலை சேமித்து வைக்கும் ஒரு கலன். |
0:53 | அடுத்து டிரக்டரி என்பது என்ன? |
0:56 | டிரக்டரி என்பது பைல் களையும் சப் டிரக்டரிகளையும் சேர்த்தது . |
1:02 | ஒரு டிரக்டரி நம் பைல்களை ஒரு முறையாக அடுக்கி வைக்க உதவுகிறது. |
1:08 | இது விண்டோஸில் நாம் போல்டர் என்று சொல்லும் அதேதான். |
1:12 | இது பயனர்கள் தங்கள் பிரத்தியேகமான மற்றவர்களால் அணுக/மாற்ற முடியாத பைல் களை அடக்கிய டிரக்டரிகளை வைத்துக்கொள்ள உதவுகிறது. |
1:20 | மேலும் டிரக்டரிகள் இல்லை எனில் ஒவ்வொரு பைல் க்கும் தனித்தனி பெயர்கள் வேண்டியிருக்கும். இது பராமரிக்க கடினமானது. |
1:31 | பைல், டிரக்டரி என்பன பேச்சளவில் தோன்றினாலும் முழுதும் சரியானதல்ல. |
1:42 | பைல் க்கு உள்ளடக்கம் தவிர ஒரு பெயர், சில பண்புகள் - மேலாண்மை தகவல்கள் உள்ளன. இதில் பைல் உருவாக்கிய தேதி, மாற்றிய தேதி அதன் உரிமைகள் ஆகியன அடங்கும். |
1:55 | இந்த பண்புகள் எங்குள்ளன? பைல் சிஸ்டமில் உள்ள ஐநோட் எனப்படும் ஒரு சிறப்பு தொகுதியில் உள்ளன. இத்துடன் பைலின் நீளம், அது வட்டில் எங்குள்ளது என்ற விவரங்களும் இருக்கும். |
2:08 | கணினி இந்த ஐனோட் எண்ணைத்தான் பயன்படுத்தும். டிரக்டரி அமைப்பு நமக்காக பைல் களை பெயரிடுகிறது. இதனால் பெரிய எண்களை தவிர்த்து பெயரை எளிதில் நினைவில் வைக்க முடிகிறது. |
2:23 | வரையறுத்தது சுலபமானாலும் உணமையில் டிரக்டரி மற்ற பைல் களை உள்ளே வைத்து இல்லை. அது மற்ற பைல் களின் ஐனோட் எண்களையும் பெயர்களையும் வைத்து இருக்கும் இன்னொரு கோப்பாகும். |
2:37 | உண்மையில் லினக்ஸில் மூன்று வகை பைல்கள் உள்ளன. |
2:41 | ஒன்று சாதாரண பைல்கள். அதில் தகவல் - ஒரு எழுத்துருக்களின் ஸ்ட்ரீம் - மட்டுமே இருக்கும். |
2:48 | இரண்டு: இப்போது பார்த்தது போல் டிரக்டரி. |
2:52 | மூன்று சாதன பைல்கள். கணினியின் எல்லா சாதனங்கள், பெரிபெரல்ஸ் ஆகிய எல்லாம் ஒரு பைலால்தான் பிரதிநிதிக்கப்படுகின்றன. |
2:59 | ஒரு சிடி, ஹார்ட்டிஸ்க், ஒரு யுஎஸ்பி குச்சி எல்லாமே லினக்ஸில் பைல் தான். ஏன் இப்படி? இந்த சாதனங்களை சாதாரண பைல் போல படிக்க எழுத இது உதவுகிறது. |
3:15 | லினக்ஸில் எல்லா பைல்களும் குடும்ப சொந்த பந்தங்கள்- நம்மைப்போலவே! |
3:22 | சில பைல் களையும் சப் டிரக்டரிகளையும் கொண்ட டிரக்டரியில் ஒன்றுக்கொன்று சேய்- தாய் உறவு இருக்கும். இப்படி இருப்பதால் லீனக்ஸ் பைல் சிஸ்டம் ட்ரீ உருவாகிறது. |
3:34 | எல்லாவற்றுக்கும் மேலே ரூட் இருக்கிறது. இது ஒரு வல சாய் கோட்டால் குறிக்கப்படுகிறது. இதில்தான் மற்ற எல்லா பைல்கள் டிரக்டரிகள் உள்ளன. |
3:42 | நமக்கு சரியான பாதை தெரிந்து இருந்தால் இது ஒரு அடைவிலிருந்து இன்னொரு பைலுக்கோ டிரக்டரிக்கோ போக உதவுகிறது. |
3:51 | நாம் வேலை செய்ய செய்ய இந்த லீனக்ஸ் பைல் சிஸ்டம் ட்ரீ இல் நாம் நகருவது போல இருக்கிறது. |
3:56 | ஒரு கமாண்ட் ஆல் நாம் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லப் படுகிறோம். |
4:01 | கேட்க சுவாரசியமாக இருக்கிறதா? ஆமாம். இன்னும் பார்க்கலாம். |
4:05 | லீனக்ஸ் அமைப்பில் உள் நுழைந்தால் நாம் முன்னிருப்பாக நம் ஹோம் டிரக்டரியில் இருப்போம். |
4:11 | இப்போது டெர்மினலுக்கு மாறுவோம். |
4:13 | உபுண்டுவில் கண்ட்ரோல் ஆல்ட் டி[T] தட்ட டெர்மினல் துவங்கும். |
4:17 | இந்த குறுக்கு வழி எல்லா யுனிக்ஸ் அமைப்பிலும் வேலை செய்வதில்லை. டெர்மினலை துவக்க பொதுவான வழி வேறு ஒரு ஸ்போக்கன் டுடோரியல் உள்ளது. |
4:27 | நம் ஹோம் டிரக்டரியை காண ப்ராம்ட்டில் எழுதுக. எகோ ஸ்பேஸ் டாலர் பின் மேலெழுத்துக்களில் ஹெச் ஓ எம் ஈ. உள்ளிடவும். |
4:40 | இது நம் ஹோம் டிரக்டரிக்கு பாதையை காட்டுகிறது. |
4:44 | நாம் ஒரு டிரக்டரியில் இருந்து இன்னொன்றுக்கு மாறலாம். |
4:47 | ஆனால் ஒரு சமயத்தில் ஒரு டிரக்டரியில் தான் இருக்க முடியும். இது நடப்பு டிரக்டரி அல்லது வொர்கிங் டிரக்டரி எனப்படும். ஸ்லைடுகளுக்கு செல்லலாம். |
4:56 | பிடபில்யுடி[pwd] என்ற கமாண்ட் நம் நடப்பு அடைவை காண உதவுகிறது. பிடபில்யுடி[pwd]என்பது ப்ரெசன்ட் வொர்கிங் டிரக்டரி. |
5:03 | பிடபில்யுடி[pwd] என டைப் செய்து உள்ளிடுங்கள். இப்போது இதுவே நம் ப்ரெசன்ட் வொர்கிங் டிரக்டரி. |
5:13 | ஒரு டிரக்டரியில் இருந்து இன்னொரு டிரக்டரிக்கு போகலாம் என்று சொன்னோம் இல்லையா? |
5:17 | அதை எப்படி செய்வது? இதற்கான கமாண்ட் சிடி[cd]. |
5:22 | நீங்கள் சிடி என எழுதி செல்ல வேண்டிய அடைவின் முழு பாதை பெயரை -பாத்நேம்- எழுத வேண்டும். |
5:28 | பிடபில்யுடி[pwd] என டைப் செய்து உள்ளிட்டு நம் நடப்பு அடைவை காணலாம். |
5:37 | ஆகவே இப்போது இந்த டிரக்டரியில் இருக்கிறோம். |
5:41 | உதாரணமாக இப்போது ச்லாஷ் யூசர் டிரக்டரிக்கு செல்ல விரும்புகிறோம். ஆகவே நாம் எழுதி உள்ளிட்ட வேண்டியது சிடி ஸ்பேஸ் ச்லாஷ் யூசர். லினக்ஸில் ச்லாஷ் என்றால் அது வல சாய்வு கோடுதான் என நினைவில் கொள்க. |
5:56 | நம் நடப்பு அடைவை காணலாம். பிடபில்யுடி[pwd] என டைப் செய்து உள்ளிடுங்கள். |
6:03 | ஆமாம். இப்போது ச்லாஷ் யூசர் டிரக்டரிக்கு நகர்ந்து விட்டோம். |
6:08 | இங்கே பிரச்சினை என்னவென்றால் பாதை பெயர்கள் நீளமாக இருக்கலாம். இவை அப்சொலூட் பாதை பெயர்கள். அதாவது ரூட் டிரக்டரியில் இருந்து துவங்கி வரும் முழு பாதை சரம். |
6:18 | இதற்கு பதிலாக நம் நடப்பு டிரக்டரியில் இருந்து பாதையை காட்டலாம். இது ரிலேடிவ் பாத். |
6:23 | இங்கே நமக்கு இரண்டு சிறப்பு எழுத்துருக்கள் தெரிய வேண்டும். டாட் - புள்ளி என்பது நடப்பு டிரக்டரி . டாட் டாட் அதாவது இரட்டை புள்ளிகள் நடப்பு அடைவின் தாய் டிரக்டரி . |
6:36 | இப்போது சிடி[cd] கமாண்ட் யில் கொஞ்சம் நேரம் செலவிடலாம். |
6:40 | ஆர்க்யுமென்ட் இல்லாத சிடி கமாண்ட் ஹோம் டிரக்டரிக்கு கொண்டு போகும். |
6:46 | ப்ராம்ட்டில் சிடி என எழுதி உள்ளிடுக. |
6:51 | நம் நடப்பு அடைவை சோதிக்கலாம். பிடபில்யுடி[pwd] என டைப் செய்து உள்ளிடுங்கள். |
6:55 | ஆகவே இப்போது நம் ஹோம் டிரக்டரிக்கு திரும்பி வந்துவிட்டோம். ச்லாஷ் ஹோம் ச்லாஷ் க்னுஹாடா |
7:01 | இப்போது ம்யூசிக் டிரக்டரிக்கு போகலாம. கமாண்ட் ப்ராம்ட்டில் டைப் செய்க: சிடி ஸ்பேஸ் ம்யூசிக் ஸ்லாஷ் இதில் எம் மேல் நிலை எழுத்து. உள்ளிடவும். |
7:13 | இப்போது நம் நடப்பு அடைவை பிடபில்யுடி[pwd] கமாண்ட் ஆல் காணலாம். பிடபில்யுடி[pwd] என டைப் செய்து உள்ளிடுங்கள். பாருங்கள், ஹோம் க்னுஹாடா ம்யூசிக் க்கு வந்துவிட்டோம். |
7:26 | ஹோம் டிரக்டரிக்கு திரும்பி போகலாம். அதற்கு கமாண்ட் சிடி டாட் டாட். |
7:33 | கமாண்ட் ப்ராம்ட்டில் டைப் செய்க: சிடி ஸ்பேஸ் டாட் டாட். உள்ளிடுக. |
7:40 | நம் நடப்பு அடைவை சோதிக்கலாம். பிடபில்யுடி[pwd] என டைப் செய்து உள்ளிடுங்கள். நம் ஹோம் அடைவான ஹோம் க்னுஹாடாவுக்கு திரும்பி வந்துவிட்டோம். |
7:51 | நடப்பு அடைவின் சப் டிரக்டரி ஒன்றுக்கு டாட் ஐ பயன்படுத்தி போகலாம். |
7:58 | கமாண்ட் ப்ராம்ட்டில் டைப் செய்க: சிடி ஸ்பேஸ் டாட் ச்லாஷ் டாகுமென்ட்ஸ் - டி[D] மேல் நிலை எழுத்து. உள்ளிடுக. |
8:09 | இப்போது நம் நடப்பு அடைவை காண பிடபில்யுடி[pwd] என டைப் செய்து உள்ளிடுங்கள். ஹோம் க்னுஹாடா டாகுமென்ட்ஸ் க்கு வந்துவிட்டோம் |
8:19 | கண்ட்ரோல் எல் அடித்து திரையை துடைக்கலாம். இப்போது நன்றாக பார்க்கலாம். |
8:23 | நம் ஹோம் டிரக்டரிக்கு சிடி கமாண்ட் வழியாக போக சிடி என டைப் செய்து உள்ளிடுக. |
8:32 | மீண்டும் நம் நடப்பு அடைவை சோதிக்க பிடபில்யுடி[pwd] கமாண்ட் ஆல் சோதிக்க ... நம் ஹோம் அடைவான ஹோம் க்னுஹாடாவுக்கு திரும்பி வந்துவிட்டோம். |
8:41 | நாம் ரிலேடிவ் பாதையில் எத்தனை டாட் டாட் ஐயும் ச்லாஷ் ஆல் பிரித்து பயன்படுத்தலாம். |
8:47 | இந்த ஸ்லைடில் நாம் பைல் அமைப்பு அதிகார அடுக்கை காணலாம். ரூட் அல்லது வல சாய் கோடு மேலே இருக்கிறது. அதன் கீழ் உள்ளவை ஹோம் பின்[bin] என இரண்டு சப் டிரக்டரிகள். க்னுஹாடா ஹோம் டிரக்டரியில் ஒரு சப் டிரக்டரி . |
9:05 | இப்போது நாம் ஹோம் க்னுஹாடா வில் இருக்கிறோம். எப்படி பின்[bin] டிரக்டரிக்கு போவது? |
9:12 | கமாண்ட் ப்ராம்ட்டில் டைப் செய்க: சிடி ஸ்பேஸ் டாட் டாட் ச்லாஷ் டாட் டாட் ச்லாஷ் பின்[bin]. உள்ளிடுக. |
9:23 | நம் நடப்பு அடைவை சோதிக்க பிடபில்யுடி[pwd] கமாண்ட் யால் சோதிக்க... நாம் ச்லாஷ் பின்[bin] இல் இருக்கிறோம். |
9:30 | முதல் டாட் டாட் நம்மை ச்லாஷ் ஹோம் ச்லாஷ் க்னுஹாட்டா வில் இருந்து ச்லாஷ் ஹோம் க்கு அழைத்து சென்றது. |
9:37 | இரண்டாவது ச்லாஷ் ஹோம் இலிருந்து ரூட்டுக்கு அழைத்து சென்றது. |
9:43 | இப்போது நாம் ச்லாஷ் அதாவது ரூட்டில் இருந்து பின்[bin] க்கு போய் விட்டோம். |
9:48 | சிடி கமாண்ட் ஆல் நாம் ஹோம் டிரக்டரிக்கு திரும்புவோம். |
9:52 | ஒரு அடைவை உருவாக்க நாம் எம்கேடிர் கமாண்டை பயன்படுத்தலாம். |
9:56 | கமாண்டையும் உருவாக்க வேண்டிய டிரக்டரியின் பெயரையும் உள்ளிட்டால் நடப்பு டிரக்டரியில் ஒரு டிரக்டரி உருவாகிவிடும். |
10:04 | டெஸ்ட்டிர் என ஒரு அடைவை உருவாக்க கமாண்ட் எம்கேடிர் ஸ்பேஸ் டெஸ்ட்டிர் எழுதி உள்ளிடுவோம். |
10:15 | இது டெஸ்ட்டிர் அடைவை வெற்றிகரமாக உருவாக்குகிறது. |
10:19 | ஆனால் இப்படி உருவாக்கியதையோ அழித்ததையோ நமக்கு தெளிவாக தெரிவிப்பது இல்லை. |
10:25 | பிழை செய்தி எதுவும் வரவில்லை எனில் வெற்றிகரமாக முடிந்தது என்று பொருள். |
10:30 | இந்த கணினியில் எங்கு நமக்கு பைல் எழுத அனுமதி உண்டோ, அந்த இடம் எதுவானாலும் நாம் அப்சொலூட் பாதை அல்லது ரிலேடிவ் பாதையை கொடுத்து ஒரு டிரக்டரியை உருவாக்கலாம். அதே பெயரில் ஏற்கெனெவே ஒரு டிரக்டரி இருக்கக்கூடாது. |
10:43 | இந்த வழியில் பல டிரக்டரிகள் அல்லது டிரக்டரி அதிகார அடுக்கு கூட உருவாக்கலாம். |
10:49 | டைப் செய்து உள்ளிடுக: எம்கேடிர் ஸ்பேஸ் டெஸ்ட்1 ஸ்பேஸ் டெஸ்ட்2. இப்படி செய்ய டெஸ்ட்1, டெஸ்ட்2 ஏன் இரண்டு டிரக்டரிகள் நடப்பு டிரக்டரியில் உருவாக்கப்படும். |
11:06 | டைப் செய்து உள்ளிடுக: எம்கேடிர் ஸ்பேஸ் டெஸ்ட்ட்ரீ ஸ்பேஸ் டெஸ்ட்ட்ரீ ஸ்பேஸ் ச்லாஷ் டெஸ்ட்3. |
11:20 | இது டெஸ்ட்ட்ரீ என்ற டிரக்டரி ஒன்றையும் அதன் உள்ளே டெஸ்ட்3 என்ற சப் டிரக்டரியையும் உருவாக்கும். |
11:28 | ஆகவே இப்போது நாம் டெஸ்ட்டிர், டெஸ்ட்1, டெஸ்ட்2, டெஸ்ட்ட்ரீ என மூன்று டிரக்டரிகளை நடப்பு டிரக்டரியில் உருவாக்கினோம். கடைசி டிரக்டரியில் டெஸ்ட்3 என்ற சப் டிரக்டரி இருக்கிறது. |
11:47 | எம்கேடிர் போலவே ஆர்எம்டிர் கமாண்டை டிரக்டரியையோ பல டிரக்டரிகளையோ நீக்க பயன்படுத்தலாம். |
11:56 | ஆர்எம்டிர் ஸ்பேஸ் டெஸ்ட்1 என்ற கமாண்ட் டெஸ்ட்1 டிரக்டரியை வெற்றிகரமாக நீக்குகிறது. |
12:09 | ஒரு டிரக்டரி நீக்கப்பட நாம் அதன் சொந்தக்காரராக இருக்க வேண்டும்; நடப்பு டிரக்டரி அடுக்கில் நீக்க வேண்டிய டிரக்டரிக்கு மேலே இருக்க வேண்டும்; அது காலியாக இருக்க வேண்டும். |
12:23 | டைப் செய்து உள்ளிடுக: சிடி ஸ்பேஸ் டெஸ்ட்ட்ரீ ச்லாஷ் டெஸ்ட்3 |
12:35 | நாம் இப்போது டெஸ்ட்3 டிரக்டரியில் இருக்கிறோம். இது டெஸ்ட்ட்ரீ இன் கீழே உள்ள சப் டிரக்டரி. |
12:42 | இங்கிருந்து டெஸ்ட்டிர் அடைவை நீக்க முடியுமா என்று பார்க்கலாம். டைப் செய்து உள்ளிடுக: ஆர்எம்டிர் ஸ்பேஸ் டெஸ்ட்டிர் |
12:55 | இப்படி செய்ய முடியவில்லை. ஏனெனில் டிரக்டரி அடுக்கில் நடப்பு டிரக்டரி நீக்கப்படும் டிரக்டரிக்கு மேலே இல்லை. |
13:02 | ஆகவே டிரக்டரி அடுக்கில் நீக்கப்படும் டெஸ்ட்டிர் டிரக்டரிக்கு மேலே உள்ள டிரக்டரிக்கு நடப்பு அடைவாக போக வேண்டும். |
13:08 | டைப் செய்து உள்ளிடுக: சிடி ஸ்பேஸ் டாட் டாட். |
13:14 | இப்போது சிடி ஸ்பேஸ் டாட் டாட் கமாண்ட் மூலம் நம் தாய் டிரக்டரிக்கு திரும்பி போகலாம். |
13:20 | இப்போது முன்னே முயற்சி செய்த கமாண்டை மீண்டும் முயற்சி செய்யலாம். |
13:24 | டைப் செய்து உள்ளிடுக: ஆர்எம்டிர் ஸ்பேஸ் டெஸ்ட்டிர் |
13:30 | டெஸ்ட்டிர் டிரக்டரி வெற்றிகரமாக நீக்கப்பட்டது. இப்போது அது காலியாக இருந்தது என்பதை கவனத்தில் வைக்கவும். |
13:38 | ஒரே நேரத்தில் பல டிரக்டரிகளும் அல்லது ஒரு டிரக்டரி அடுக்கும் கூட நீக்கப்படலாம். டெஸ்ட்3 என்ற சப் டிரக்டரி உள்ள டெஸ்ட்ட்ரீ அடைவை நீக்க பார்க்கலாம். |
13:48 | டைப் செய்து உள்ளிடுக: ஆர்எம்டிர் ஸ்பேஸ் டெஸ்ட்ட்ரீ ஸ்பேஸ் டெஸ்ட்ட்ரீ ச்லாஷ் டெஸ்ட்3 |
14:02 | இந்த பிழை செய்தியை பாருங்கள். டெஸ்ட்ட்ரீ டிரக்டரியை நீக்க முடியவில்லை. ஏனெனில் அது காலியாக இல்லை. |
14:11 | ஆனால் ஒரு விஷயத்தை விட்டுவிடாதீர்கள். டெஸ்ட்ட்ரீ ச்லாஷ் டெஸ்ட்3 டிரக்டரி நீக்கப்பட்டுவிட்டது.ஏனெனில் அது காலியாக இருந்தது. |
14:19 | அதை சோதிக்க கமாண்ட் ப்ராம்ட்டில் டைப் செய்து உள்ளிடுக: சிடி ஸ்பேஸ் டெஸ்ட்ட்ரீ. |
14:27 | இப்போது எல்எஸ் கமாண்டை உள்ளிடுக. இந்த டிரக்டரியில் ஏதும் இல்லை என்பதை பாருங்கள். ஆகவே டெஸ்ட்3 டிரக்டரி நீக்கப்பட்டுவிட்டது. |
14:36 | ஆகவே இந்த டுடோரியலில் லீனக்ஸ் பைல்கள், டிரக்டரிகள்; அவற்றுடன் எப்படி வேலை செய்வது; அவற்றை காண்பது, அவற்றிடையே நகருவது, உருவாக்குவது, நீக்குவது ஆகியன எல்லாம் பார்த்தோம். |
14:49 | இத்துடன் இந்த டுடோரியல் முடிவுக்கு வருகிறது. ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
15:03 | இது குறித்த மேற்கொண்டு விவரங்களுக்கு இங்கே செல்லுங்கள்: http://spoken-tutorial.org/NMEICT-Intro. |
15:08 | இந்த மொழியாக்கம் செய்தது கடலூரில் இருந்து திவா. டப் [dub] செய்து இப்போது வந்தனம் கூறி விடை பெறுவது காஞ்சிபுரத்தில் இருந்து பிரியா. |