Linux/C2/File-System/Tamil

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
0:00 லீனக்ஸ் பைல் சிஸ்டம் பற்றிய ஸ்போகன் டுடோரியலுக்கு நல் வரவு!
0:04 உபுண்டு 10.04 ஐ பயன்படுத்துகிறேன்.
0:07 லீனக்ஸ் OS-ன் துவக்க பாடங்கள் மற்றும் கமாண்ட் களின் அடிப்படைகள் தெரியும் என கொள்கிறேன்.
0:13 ஆர்வம் இருந்தால் அது இதே தளத்தில் வேறு ஸ்போக்கன் டுடோரியலில் உள்ளது. http://spoken-tutorial.org
0:25 லீனக்ஸ் கமாண்ட் கள் case sensitive ஆனவை.
0:28 குறிப்பிட்டு சொன்னால் ஒழிய அத்தனை கமாண்ட் களும் கீழ் நிலை எழுத்துகளே.
0:36 லினக்ஸில் எல்லாமே ஒரு பைல் தான்.
0:39 பைல் என்றால் என்ன? தினசரி வாழ்க்கையில் அது ஆவணங்களையும் காகிதங்களையும் வைத்துக்கொள்ளும் ஒரு கலன்.
0:47 அதே போல லினக்ஸில் பைல் என்பது தகவலை சேமித்து வைக்கும் ஒரு கலன்.
0:53 அடுத்து டிரக்டரி என்பது என்ன?
0:56 டிரக்டரி என்பது பைல் களையும் சப் டிரக்டரிகளையும் சேர்த்தது .
1:02 ஒரு டிரக்டரி நம் பைல்களை ஒரு முறையாக அடுக்கி வைக்க உதவுகிறது.
1:08 இது விண்டோஸில் நாம் போல்டர் என்று சொல்லும் அதேதான்.
1:12 இது பிரத்தியேகமான மற்றவர்களால் அணுக/மாற்ற முடியாத பைல் டிரக்டரிகளை வைக்க உதவுகிறது.
1:20 மேலும் டிரக்டரிகள் இல்லை எனில் ஒவ்வொரு பைல் க்கும் தனித்தனி பெயர்கள் வேண்டியிருக்கும். இது பராமரிக்க கடினமானது.
1:31 பைல், டிரக்டரி என்பன பேச்சளவில் தோன்றினாலும் முழுதும் சரியானதல்ல.
1:42 பைல் க்கு உள்ளடக்கம் தவிர ஒரு பெயர், சில பண்புகள் - மேலாண்மை தகவல்கள் உள்ளன. இதில் பைல் உருவாக்கிய தேதி, மாற்றிய தேதி அதன் உரிமைகள் ஆகியன அடங்கும்.
1:55 இந்த பண்புகள் பைல் சிஸ்டமில் ஐநோட் எனும் சிறப்பு தொகுதியில் உள்ளன. இத்துடன் பைலின் நீளம், அது வட்டில் எங்குள்ளது என்ற விவரங்களும் இருக்கும்.
2:08 கணினி இந்த ஐனோட் எண்ணைத்தான் பயன்படுத்தும். டிரக்டரி அமைப்பு நமக்காக பைல் களை பெயரிடுகிறது. இதனால் பெரிய எண்களை தவிர்த்து பெயரை எளிதில் நினைவில் வைக்கலாம்.
2:23 வரையறுத்தது சுலபமானாலும் உணமையில் டிரக்டரி மற்ற பைல் களை உள்ளே வைத்து இல்லை. அது மற்ற பைல் களின் ஐனோட் எண்களையும் பெயர்களையும் வைத்து இருக்கும் இன்னொரு கோப்பாகும்.
2:37 உண்மையில் லினக்ஸில் மூன்று வகை பைல்கள் உள்ளன.
2:41 ஒன்று சாதாரண பைல்கள். அதில் தகவல் - ஒரு எழுத்துருக்களின் ஸ்ட்ரீம் - மட்டுமே இருக்கும்.
2:48 இரண்டு: இப்போது பார்த்தது போல் டிரக்டரி.
2:52 மூன்று சாதன பைல்கள். கணினியின் எல்லா சாதனங்கள், பெரிபெரல்ஸ் ஆகிய எல்லாம் ஒரு பைலால்தான் பிரதிநிதிக்கப்படுகின்றன.
2:59 ஒரு சிடி, ஹார்ட்டிஸ்க், ஒரு யுஎஸ்பி குச்சி எல்லாமே லினக்ஸில் பைல் தான். ஏன் இப்படி? இந்த சாதனங்களை சாதாரண பைல் போல படிக்க எழுத இது உதவுகிறது.
3:15 லினக்ஸில் எல்லா பைல்களும் குடும்ப சொந்த பந்தங்கள்- நம்மைப்போலவே!
3:22 சில பைல் களையும் சப் டிரக்டரிகளையும் கொண்ட டிரக்டரியில் ஒன்றுக்கொன்று சேய்- தாய் உறவு இருக்கும். இப்படி இருப்பதால் லீனக்ஸ் பைல் சிஸ்டம் ட்ரீ உருவாகிறது.
3:34 எல்லாவற்றுக்கும் மேலே ரூட் இருக்கிறது. இது ஒரு வல சாய் கோட்டால் குறிக்கப்படுகிறது. இதில்தான் மற்ற எல்லா பைல்கள் டிரக்டரிகள் உள்ளன.
3:42 நமக்கு சரியான பாதை தெரிந்து இருந்தால் இது ஒரு அடைவிலிருந்து இன்னொரு பைலுக்கோ டிரக்டரிக்கோ போக உதவுகிறது.
3:51 நாம் வேலை செய்ய செய்ய இந்த லீனக்ஸ் பைல் சிஸ்டம் ட்ரீ இல் நாம் நகருவது போல இருக்கிறது.
3:56 ஒரு கமாண்ட் ஆல் நாம் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லப் படுகிறோம்.
4:01 கேட்க சுவாரசியமாக இருக்கிறதா? ஆமாம். இன்னும் பார்க்கலாம்.
4:05 லீனக்ஸ் அமைப்பில் உள் நுழைந்தால் நாம் முன்னிருப்பாக நம் ஹோம் டிரக்டரியில் இருப்போம்.
4:11 இப்போது டெர்மினலுக்கு மாறுவோம்.
4:13 உபுண்டுவில் கண்ட்ரோல் ஆல்ட் டி[T] தட்ட டெர்மினல் துவங்கும்.
4:17 இந்த குறுக்கு வழி எல்லா யுனிக்ஸ் அமைப்பிலும் வேலை செய்வதில்லை. டெர்மினலை துவக்க பொதுவான வழி வேறு ஒரு ஸ்போக்கன் டுடோரியல் உள்ளது.
4:27 நம் ஹோம் டிரக்டரியை காண ப்ராம்ட்டில் எழுதுக. எகோ ஸ்பேஸ் டாலர் பின் மேலெழுத்துக்களில் ஹெச் ஓ எம் ஈ. உள்ளிடவும்.
4:40 இது நம் ஹோம் டிரக்டரிக்கு பாதையை காட்டுகிறது.
4:44 நாம் ஒரு டிரக்டரியில் இருந்து இன்னொன்றுக்கு மாறலாம்.
4:47 ஆனால் ஒரு சமயத்தில் ஒரு டிரக்டரியில் தான் இருக்க முடியும். இது நடப்பு டிரக்டரி அல்லது வொர்கிங் டிரக்டரி எனப்படும். ஸ்லைடுகளுக்கு செல்லலாம்.
4:56 பிடபில்யுடி[pwd] என்ற கமாண்ட் நம் நடப்பு அடைவை காண உதவுகிறது. பிடபில்யுடி[pwd]என்பது ப்ரெசன்ட் வொர்கிங் டிரக்டரி.
5:03 பிடபில்யுடி[pwd] என டைப் செய்து உள்ளிடுங்கள். இப்போது இதுவே நம் ப்ரெசன்ட் வொர்கிங் டிரக்டரி.
5:13 ஒரு டிரக்டரியில் இருந்து இன்னொரு டிரக்டரிக்கு போகலாம்.
5:17 இதற்கான கமாண்ட் சிடி[cd].
5:22 சிடி என எழுதி செல்ல வேண்டிய அடைவின் முழு பாதை பெயரை எழுத வேண்டும்.
5:28 பிடபில்யுடி[pwd] என உள்ளிட்டு நடப்பு அடைவை காணலாம்.
5:37 ஆகவே இப்போது இந்த டிரக்டரியில் இருக்கிறோம்.
5:41 உதாரணமாக ச்லாஷ் யூசர் டிரக்டரிக்கு செல்ல விரும்புகிறோம் எனில் உள்ளிட்ட வேண்டியது சிடி ஸ்பேஸ் ச்லாஷ் யூசர். லினக்ஸில் ச்லாஷ் என்றால் அது வல சாய்வு கோடுதான்.
5:56 நம் நடப்பு அடைவை காணலாம். பிடபில்யுடி[pwd] என டைப் செய்து உள்ளிடுங்கள்.
6:03 ச்லாஷ் யூசர் டிரக்டரிக்கு நகர்ந்து விட்டோம்.
6:08 பாதை பெயர்கள் நீளமாக இருப்பதே பிரச்சனை. இவை ரூட் டிரக்டரியில் இருந்து துவங்கி வரும் முழு பாதை சரம் அப்சொலூட் பாதை பெயர்கள்.
6:18 பதிலாக நடப்பு டிரக்டரியில் இருந்து பாதை காட்டப்படுவது ரிலேடிவ் பாத்.
6:23 இங்கே இரண்டு சிறப்பு எழுத்துருக்கள் தெரிய வேண்டும். டாட் - புள்ளி என்பது நடப்பு டிரக்டரி . டாட் டாட் அதாவது இரட்டை புள்ளிகள் நடப்பு அடைவின் தாய் டிரக்டரி .
6:36 இப்போது சிடி[cd] கமாண்டை பார்க்கலாம்
6:40 ஆர்க்யுமென்ட் இல்லாத சிடி கமாண்ட் ஹோம் டிரக்டரிக்கு கொண்டு போகும்.
6:46 ப்ராம்ட்டில் சிடி என எழுதி உள்ளிடுக.
6:51 நடப்பு அடைவை சோதிக்க பிடபில்யுடி[pwd] என டைப் செய்து உள்ளிடுங்கள்.
6:55 ஹோம் டிரக்டரிக்கு திரும்பி வந்துவிட்டோம். ச்லாஷ் ஹோம் ச்லாஷ் க்னுஹாடா(gnuhata)
7:01 ம்யூசிக் டிரக்டரிக்கு போகலாம். டைப் செய்க: சிடி ஸ்பேஸ் ம்யூசிக் ஸ்லாஷ் இதில் எம் மேல் நிலை எழுத்து. உள்ளிடவும்.
7:13 நடப்பு அடைவை காணலாம். பிடபில்யுடி[pwd] என டைப் செய்து உள்ளிடுங்கள். ஹோம் க்னுஹாடா ம்யூசிக் க்கு வந்துவிட்டோம்.
7:26 ஹோம் டிரக்டரிக்கு திரும்பி போக சிடி டாட் டாட்.
7:33 டைப் செய்க: சிடி ஸ்பேஸ் டாட் டாட். உள்ளிடுக.
7:40 நடப்பு அடைவை சோதிக்கலாம். பிடபில்யுடி[pwd] ஐ உள்ளிடுங்கள். ஹோம் க்னுஹாடாவுக்கு திரும்பி வந்துவிட்டோம்.
7:51 நடப்பு அடைவின் சப் டிரக்டரி ஒன்றுக்கு டாட் ஐ பயன்படுத்தி போகலாம்.
7:58 டைப் செய்க: சிடி ஸ்பேஸ் டாட் ச்லாஷ் டாகுமென்ட்ஸ் - டி[D] மேல் நிலை எழுத்து. உள்ளிடுக.
8:09 நடப்பு அடைவை காண பிடபில்யுடி[pwd] ஐ உள்ளிடுங்கள். ஹோம் க்னுஹாடா டாகுமென்ட்ஸ் க்கு வந்துவிட்டோம்
8:19 கண்ட்ரோல் எல் அடித்து திரையை துடைக்கலாம்.
8:23 ஹோம் டிரக்டரிக்கு சிடி கமாண்ட் வழியாக போக சிடி என டைப் செய்து உள்ளிடுக.
8:32 மீண்டும் நடப்பு அடைவை சோதிக்க பிடபில்யுடி[pwd] ... ஹோம் க்னுஹாடாவுக்கு திரும்பி வந்துவிட்டோம்.
8:41 ரிலேடிவ் பாதையில் எத்தனை டாட் டாட் ஐயும் ச்லாஷ் ஆல் பிரித்து பயன்படுத்தலாம்.
8:47 இங்கே பைல் அமைப்பு அதிகார அடுக்கை காணலாம். ரூட் அல்லது வல சாய் கோடு மேலே இருக்கிறது. அதன் கீழ் உள்ளவை ஹோம் பின்[bin] என இரண்டு சப் டிரக்டரிகள். க்னுஹாடா ஹோம் டிரக்டரியில் ஒரு சப் டிரக்டரி .
9:05 இப்போது ஹோம் க்னுஹாடா வில் இருக்கிறோம். பின்[bin] டிரக்டரிக்கு போக...
9:12 டைப் செய்க: சிடி ஸ்பேஸ் டாட் டாட் ச்லாஷ் டாட் டாட் ச்லாஷ் பின்[bin]. உள்ளிடுக.
9:23 நடப்பு அடைவை சோதிக்க பிடபில்யுடி[pwd] ... நாம் ச்லாஷ் பின்[bin] இல் இருக்கிறோம்.
9:30 முதல் டாட் டாட் நம்மை ச்லாஷ் ஹோம் ச்லாஷ் க்னுஹாட்டா வில் இருந்து ச்லாஷ் ஹோம் க்கு அழைத்து சென்றது.
9:37 இரண்டாவது ச்லாஷ்... ஹோம் இலிருந்து ரூட்டுக்கு அழைத்து சென்றது.
9:43 இப்போது ச்லாஷ் அதாவது ரூட்டில் இருந்து பின்[bin] க்கு போய் விட்டோம்.
9:48 சிடி கமாண்ட் ஆல் நாம் ஹோம் டிரக்டரிக்கு திரும்புவோம்.
9:52 ஒரு அடைவை உருவாக்க நாம் எம்கேடிர்(mkdir) கமாண்டை பயன்படுத்தலாம்.
9:56 கமாண்டையும் உருவாக்க வேண்டிய டிரக்டரியின் பெயரையும் உள்ளிட்டால் நடப்பு டிரக்டரியில் ஒரு டிரக்டரி உருவாகிவிடும்.
10:04 டெஸ்ட்டிர் என ஒரு அடைவை உருவாக்க கமாண்ட்.... எம்கேடிர் ஸ்பேஸ் டெஸ்ட்டிர் என எழுதி உள்ளிடுவோம்.
10:15 இது டெஸ்ட்டிர் அடைவை வெற்றிகரமாக உருவாக்குகிறது.
10:19 ஆனால் உருவாக்கியதையோ அழித்ததையோ தெளிவாக தெரிவிப்பது இல்லை.
10:25 பிழை செய்தி இல்லையெனில் வெற்றிகரமாக முடிந்தது என்று பொருள்.
10:30 இந்த கணினியில் பைல் எழுத அனுமதி உள்ள இடத்தில்... அப்சொலூட் அல்லது ரிலேடிவ் பாதையை கொடுத்து டிரக்டரியை உருவாக்கலாம். அதே பெயரில் ஏற்கெனெவே டிரக்டரி இருக்கக்கூடாது.
10:43 இந்த வழியில் பல டிரக்டரிகள் அல்லது டிரக்டரி அதிகார அடுக்கு கூட உருவாக்கலாம்.
10:49 உள்ளிடுக: எம்கேடிர் ஸ்பேஸ் டெஸ்ட்1 ஸ்பேஸ் டெஸ்ட்2. இப்படி செய்ய டெஸ்ட்1, டெஸ்ட்2 என இரண்டு டிரக்டரிகள் நடப்பு டிரக்டரியில் உருவாக்கப்படும்.
11:06 உள்ளிடுக: எம்கேடிர் ஸ்பேஸ் டெஸ்ட்ட்ரீ ஸ்பேஸ் டெஸ்ட்ட்ரீ ஸ்பேஸ் ச்லாஷ் டெஸ்ட்3.
11:20 இது டெஸ்ட்ட்ரீ என்ற டிரக்டரி ஒன்றையும் அதன் உள்ளே டெஸ்ட்3 என்ற சப் டிரக்டரியையும் உருவாக்கும்.
11:28 டெஸ்ட்டிர், டெஸ்ட்1, டெஸ்ட்2, டெஸ்ட்ட்ரீ என மூன்று டிரக்டரிகளை நடப்பு டிரக்டரியில் உருவாக்கினோம். கடைசி டிரக்டரியில் டெஸ்ட்3 என்ற சப் டிரக்டரி இருக்கிறது.
11:47 எம்கேடிர் போலவே ஆர்எம்டிர் கமாண்டை டிரக்டரியையோ பல டிரக்டரிகளையோ நீக்க பயன்படுத்தலாம்.
11:56 ஆர்எம்டிர் ஸ்பேஸ் டெஸ்ட்1 என்ற கமாண்ட் டெஸ்ட்1 டிரக்டரியை வெற்றிகரமாக நீக்குகிறது.
12:09 ஒரு டிரக்டரி நீக்கப்பட நாம் அதன் சொந்தக்காரராக இருக்க வேண்டும்; நடப்பு டிரக்டரி அடுக்கில் நீக்க வேண்டிய டிரக்டரிக்கு மேலே இருக்க வேண்டும்; அது காலியாக இருக்க வேண்டும்.
12:23 உள்ளிடுக: சிடி ஸ்பேஸ் டெஸ்ட்ட்ரீ ச்லாஷ் டெஸ்ட்3
12:35 டெஸ்ட்3 டிரக்டரியில் இருக்கிறோம். இது டெஸ்ட்ட்ரீ இன் கீழே உள்ள சப் டிரக்டரி.
12:42 இங்கிருந்து டெஸ்ட்டிர் அடைவை நீக்க முடியுமா என்று பார்க்கலாம். உள்ளிடுக: ஆர்எம்டிர் ஸ்பேஸ் டெஸ்ட்டிர்
12:55 முடியவில்லை. ஏனெனில் டிரக்டரி அடுக்கில் நடப்பு டிரக்டரி நீக்கப்படும் டிரக்டரிக்கு மேலே இல்லை.
13:02 ஆகவே டிரக்டரி அடுக்கில் நீக்கப்படும் டெஸ்ட்டிர் டிரக்டரிக்கு மேலே உள்ள டிரக்டரிக்கு நடப்பு அடைவாக போக வேண்டும்.
13:08 உள்ளிடுக: சிடி ஸ்பேஸ் டாட் டாட்.
13:14 சிடி ஸ்பேஸ் டாட் டாட் கமாண்ட் மூலம் தாய் டிரக்டரிக்கு திரும்பி போகலாம்.
13:20 முன்னே முயன்ற கமாண்டை மீண்டும் முயற்சி செய்யலாம்.
13:24 உள்ளிடுக: ஆர்எம்டிர் ஸ்பேஸ் டெஸ்ட்டிர்
13:30 டெஸ்ட்டிர் டிரக்டரி வெற்றிகரமாக நீக்கப்பட்டது. அது காலியாக இருந்தது என்பதை நினைவு கொள்க.
13:38 ஒரே நேரத்தில் பல டிரக்டரிகளும் அல்லது ஒரு டிரக்டரி அடுக்கும் கூட நீக்கப்படலாம். டெஸ்ட்3 என்ற சப் டிரக்டரி உள்ள டெஸ்ட்ட்ரீ ஐ நீக்குவோம்
13:48 உள்ளிடுக: ஆர்எம்டிர் ஸ்பேஸ் டெஸ்ட்ட்ரீ ஸ்பேஸ் டெஸ்ட்ட்ரீ ச்லாஷ் டெஸ்ட்3
14:02 பிழை செய்தியை பாருங்கள். டெஸ்ட்ட்ரீ டிரக்டரியை நீக்க முடியவில்லை. ஏனெனில் அது காலியாக இல்லை.
14:11 ஆனால் டெஸ்ட்ட்ரீ ச்லாஷ் டெஸ்ட்3 டிரக்டரி நீக்கப்பட்டுவிட்டது.ஏனெனில் அது காலியாக இருந்தது.
14:19 அதை சோதிக்க உள்ளிடுக: சிடி ஸ்பேஸ் டெஸ்ட்ட்ரீ.
14:27 இப்போது எல்எஸ். இந்த டிரக்டரியில் ஏதும் இல்லை என்பதை பாருங்கள். ஆகவே டெஸ்ட்3 டிரக்டரி நீக்கப்பட்டது.
14:36 இதில் லீனக்ஸ் பைல்கள், டிரக்டரிகள்; அவற்றுடன் வேலை செய்வது; காண்பது, அவற்றிடையே நகருவது, உருவாக்குவது, நீக்குவது ஆகியன பார்த்தோம்.
14:49 இத்துடன் இந்த டுடோரியல் முடிவுக்கு வருகிறது. ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
15:03 இது குறித்த மேற்கொண்டு விவரங்களுக்கு இங்கே செல்லுங்கள்: http://spoken-tutorial.org/NMEICT-Intro.
15:08 மொழியாக்கம் கடலூர் திவா. நன்றி

Contributors and Content Editors

Chandrika, Pravin1389, Priyacst