Difference between revisions of "Health-and-Nutrition/C2/Importance-of-Protein/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{|border=1 | <center>Time</center> |<center>Narration</center> |- | 00:00 | புரதத்தின் முக்கியத்துவம் குறித்த sp...") |
|||
Line 111: | Line 111: | ||
| 02:54 | | 02:54 | ||
| மூளையிலிருந்து signalகளின் போக்குவரத்துக்கும் இது உதவுகிறது | | மூளையிலிருந்து signalகளின் போக்குவரத்துக்கும் இது உதவுகிறது | ||
− | |||
|- | |- |
Latest revision as of 10:02, 26 April 2021
|
|
00:00 | புரதத்தின் முக்கியத்துவம் குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
00:05 | இந்த tutorial லில், நாம் கற்க போவது |
00:08 | புரதத்தின் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் |
00:11 | அதன் குறைபாட்டினால் ஏற்படும் விளைவுகள் |
00:15 | வெவ்வேறு வயதினருக்கான தேவைகள் |
00:18 | உணவு மூலங்கள் |
00:21 | புரதம் என்பது நம் உடலுக்கு தேவையான முக்கிய பேர் ஊட்டச்சத்து ஆகும் |
00:27 | இது 22 amino acidகளால் ஆனது |
00:31 | இந்த 22இல் 9 மிகவும் முக்கியமானவை |
00:36 | இவைகளை, நம் உடம்பினால் செய்ய இயலாது, அதனால் இவற்றை நாம் உணவிலிருத்து எடுத்துக்கொள்ள வேண்டும் |
00:43 | மீதமுள்ள 13 நம் உடம்பால் செய்யப்படுகிறது |
00:47 | Amino acid களை பற்றி சுருக்கமாக கூறுகிறேன் |
00:51 | Amino acidஎன்பது குழுவாக சேர்ந்து புரதத்தை உருவாக்க கூடிய இயற்கையான compoundகள் ஆகும் |
00:58 | Lysine, leucine, histidine, methionine, tryptophan ஆகியவை சில amino acidகள் ஆகும் |
01:09 | புரதம் இரண்டு வகையாக பிரிக்க படுகிறது |
01:12 | அவை முழுமையான புரதம் மற்றும் முழுமையற்ற புரதம் |
01:18 | உணவில் இருக்கும் amino acidகளின் வகையை பொறுத்து இந்த வேறுபாடு ஏற்படுகிறது |
01:27 | முக்கியமான 9 amino acidகளை கொண்டிருந்தால் அது, முழுமையான புரதமாக கருதப்படுகிறது |
01:34 | அனைத்து அசைவ உணவுகளும் முழுமையான புரதமாகும் |
01:39 | எடுத்துக்காட்டாக: கோழி |
01:41 | முட்டை |
01:43 | மீன் மற்றும் ஆட்டுக்கறி |
01:46 | அதை போல், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களும் முழுமையான புரதமாகும் |
01:53 | முழுமையற்ற புரதத்தில் 1 அல்லது அதற்கு மேற்பட்டு amino acidகள் குறைவாக உள்ளது |
02:02 | பெரும்பாலான சைவ உணவுகள் முழுமையற்ற புரதங்களாகும் |
02:06 | எடுத்துக்காட்டாக: பருப்பு வகைகள் |
02:09 | தானியங்கள், கொட்டைகள் |
02:12 | மற்றும் விதைகள் |
02:14 | இவை அனைத்திலும், சோயாபீனில் அதிக புரதம் நிறைந்துள்ளது |
02:21 | தசை திசுக்களின் வளர்ச்சி, பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு ஆகியவை புரதத்தின் நன்மைகளில் அடங்கியவை |
02:30 | மேலும், இது இரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது |
02:33 | வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது |
02:37 | புரதம் நிறைந்த உணவுகள், நமது பசியை குறைக்கிறது, மேலும் அதிக நேரம் வயிறு நிரம்பி இருக்கிறது |
02:43 | எடை பராமரிப்பிற்கும் இது உதவுகிறது |
02:47 | ஜீரணத்திற்கும், நச்சுக்களை நீக்குவதற்கும் உதவுதல் வேறு சில பயன்பாடுகள் ஆகும் |
02:54 | மூளையிலிருந்து signalகளின் போக்குவரத்துக்கும் இது உதவுகிறது |
03:00 | உடலில், ஊட்டச்சத்தின் போக்குவரத்திற்கும் மற்றும் சேமிப்பிற்கும் புரதம் உதவுகிறது |
03:06 | புரத குறைபாட்டின் அறிகுறிகளை இப்பொழுது பார்ப்போம் |
03:13 | புரத குறைபாட்டின் ஓர் அறிகுறி கரு குறைதல் |
03:20 | குழந்தைகளில், இதன் குறைபாடு wasting மற்றும் stunting ஐ உருவாக்குகிறது |
03:26 | இது குறைந்த உடல் எடையை விளைவிக்கிறது |
03:30 | இம்மாதிரியான நிலைமைகளில், குழந்தைகள் நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர் |
03:37 | மோசமான வளர்ச்சியினால், குழந்தையின் மூளை வளர்ச்சியும் பாதிக்கப்படலாம் |
03:43 | மோசமாக வளர்ச்சியடையும் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் நீரிழுவு நோய் வர வாய்ப்புள்ளது |
03:51 | அவர்கள் பெரியவர்கள் ஆனதும் உயர் இரத்த அழுத்தம் வரவும் வாய்ப்புள்ளது |
03:56 | பெரியவர்களில், புரதத்தின் குறைபாடு தசை இழப்பினை ஏற்படுத்துகிறது |
04:02 | அவர்கள் சோர்வாக, |
04:05 | பலகீனமாக மற்றும் நோய்த்தொற்றுக்கு ஆளாகக்கூடும் |
04:09 | தோல் சுருக்கும் மற்றும் முடி கொட்டுதல் வேறு சில எடுத்துக்காட்டுகளாகும் |
04:15 | வெவ்வேறு வயதினருக்கு வெவ்வேறு தினசரி தேவைகள் உண்டு |
04:20 | இந்த tutorial லில் அறிவுறுத்தப்படும் புரதத் தேவைகள் மக்களிடம் கண்காணித்ததை வைத்ததாகும் |
04:28 | பிறந்ததிலிருந்து 12 மாத குழந்தைகளுக்கு உடல் எடையின் 1 கிலோவிற்கு 1-2 கிராம் தேவைப்படுகிறது |
04:36 | 1-3 வயதுள்ள குழந்தைகளுக்கு 16 கிராம் புரதம் தேவைப்படுகிறது |
04:43 | 4-6 வயதுள்ள குழந்தைகளுக்கு 20 கிராம் புரதம் தேவைப்படுகிறது |
04:48 | 7-9 வயதுள்ள குழந்தைகளுக்கு 29 கிராம் புரதம் தேவைப்படுகிறது |
04:55 | 10-12 வயதுள்ள குழந்தைகளுக்கு 40 கிராம் புரதம் தேவைப்படுகிறது |
05:00 | குமரப் பருவத்தினருக்கு 52-62 கிராம் பரிந்துரைக்கப்படுகிறது |
05:06 | கர்பிணிப் பெண்களுக்கு 78 கிராம் தேவைப்படுகிறது |
05:11 | தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு 68-74 கிராம் பரிந்துரைக்கப்படுகிறது |
05:18 | பெரியவர்களுக்கு, புரதத்தின் தேவை அவர்களது உடல் உழைப்பை பொருத்தது ஆகும் |
05:25 | உழைப்பானது பின்வருமாறு பிரிக்கப்படுகிறது உட்கார்ந்த வேலை, |
05:30 | மத்தியமான உழைப்பு மற்றும் கடின உழைப்பு |
05:33 | உட்கார்ந்த வேலையில், ஆசிரியர் தொழில், |
05:36 | தையல் தொழில் |
05:38 | தகவல் உள்ளீட்டல் வேலை |
05:40 | மற்றும் கால் சென்டர் வேலைகள் ஆகும் |
05:44 | கணினி மற்றும் மேசை வேலைகள் அனைத்தும் ஒரே இடத்தில உட்கார்ந்து செய்யும் வேலைகள் ஆகும் |
05:50 | மத்தியமான வேலையில், விவசாயி, |
05:55 | பணிப்பெண், மேஸ்திரி |
05:58 | மற்றும் ஓட்டுனர் வேலைகள் அடங்கும் |
06:00 | கடின உழைப்பில் அடங்கியவை கல் உடைத்தல், |
06:04 | மரம் வெட்டுதல், உடற்பயிற்சி போட்டியாளர் |
06:07 | மற்றும் சுரங்க தொழிலாளி ஆகும் |
06:10 | உட்கார்ந்த வேலை செய்பவர்களுக்கு சரியான உடல் எடையின் 1 கிலோவிற்கு 1 கிராம் புரதம் தேவை |
06:18 | சரியான உடல் எடை என்பது, ஒரு மனிதனுக்கு உகந்த ஆரோக்கியமானதாகும் |
06:24 | மத்தியமான வேலை செய்பவர்களுக்கு உடல் எடையின் 1 கிலோவிற்கு 1.2 கிராம் புரதம் தேவை |
06:32 | கடினமான வேலை செய்பவர்களுக்கு உடல் எடையின் 1 கிலோவிற்கு 1.5 கிராம் புரதம் தேவை |
06:40 | இதை ஒரு எடுத்துக்காட்டுடன் புரிந்து கொள்வோம் |
06:44 | ஒரு 55 வயதுள்ள மத்தியமான வேலை செய்யும் பெண்ணிற்கு 66 கிராம் புரதம் தேவை |
06:53 | அதே பெண் கடினமான வேலை செய்தால் 82 கிராம் புரதம் தேவை |
07:00 | புரதம் அதிகம் நிறைந்த உணவுகளை தினசரி சாப்பாட்டில் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது |
07:06 | அத்தகைய உணவுகள், குழந்தைக்கு 6 மாதங்கள் முடிந்தவுடன் கொடுக்கப்பட வேண்டும் |
07:11 | சில உணவுகளில் உள்ள புரதத்தின் அளவை இப்பொழுது பார்ப்போம் |
07:17 | 1 முழு முட்டையில் 7 கிராம் புரதம் உள்ளது |
07:22 | 100 கிராம் எலும்பில்லாத கோழியில் 19 கிராம் புரதம் உள்ளது |
07:29 | இதேபோல், 100 கிராம் மீனில் 20 கிராம் புரதம் உள்ளது |
07:36 | 250 மில்லிலிட்டர் பசும்பாலில் 8 கிராம் புரதம் உள்ளது |
07:43 | பசும்பாலில் தயாரிக்கப்பட்ட 250 மில்லிலிட்டர் தயிரில் 8 கிராம் புரதம் உள்ளது |
07:51 | பசும்பாலில் தயாரிக்கப்பட்ட 45 கிராம் பனீரில் 8 கிராம் புரதம் உள்ளது |
07:59 | 20 கிராம் கொட்டைகள் மற்றும் விதைகளில் 4 கிராம் புரதம் உள்ளது |
08:05 | 30 கிராம் சமைக்கப்படாத சோயாபீன்ஸில் சுமார் 11 கிராம் புரதம் உள்ளது |
08:14 | கிட்டத்திட்ட 30 கிராம் சமைக்கப்படாத பீன்ஸில் 5 கிராம் புரதம் உள்ளது |
08:22 | 30 கிராம் சமைக்கப்படாத பருப்பு வகைகளில் 4 கிராம் புரதம் உள்ளது |
08:30 | 30 கிராம் அரைத்த அரிசியில் சுமார் 2 கிராம் புரதம் உள்ளது |
08:36 | 30 கிராம் தினையில் 4 கிராம் புரதம் உள்ளது |
08:43 | 30 கிராம் கோதுமை மாவில் செய்யப்பட்ட 1 சப்பாத்தியில் 3 கிராம் புரதம் உள்ளது |
08:52 | சோளம் மற்றும் கம்பு சப்பாத்தியில் கூட 3 கிராம் புரதம் உள்ளது |
08:59 | மிஸ்ஸி ரொட்டியில் 3 கிராம் புரதம் உள்ளது |
09:06 | மிஸ்ஸி ரொட்டி என்பது கடலை மாவு மற்றும் கோதுமை மாவின் சம அளவில் செய்ய பட்டதாகும் |
09:13 | அசைவ உணவிலிருந்து கிடைக்கப்படும் புரதமானது சைவ உணவைவிட எளிதில் உறிஞ்சப்படுகிறது |
09:21 | இதன் காரணம், அசைவ உணவில் முழுமையான புரதம் உள்ளது |
09:27 | முழுமையான புரதத்தில் தேவையான amino acidகள் உள்ளன |
09:33 | அசைவ உணவின் புரதத்தின் தரம் சைவ உணவைக் காட்டிலும் சிறந்தது ஆகும் |
09:40 | புரதத்தின் தரம் DIAAS முறையால் சோதனை செய்யப்படுகிறது |
09:48 | DIAAS என்பது Digestible indispensable amino acid score ஆகும் |
09:56 | இது உணவில் உள்ள ஜீரணம் ஆகக்கூடிய amino acid கள் மற்றும் தேவையான
amino acid களின் சரிவிகிதம் ஆகும் |
10:05 | இதன் மதிப்பெண் 0-1 வரை கொடுக்கப்படுகிறது |
10:10 | அதிகமான மதிப்பெண் ஒன்றாகவும் குறைவானது பூஜ்யமாகவும் இருக்கும் |
10:16 | சில உணவுகளின் ஜீரணத்தன்மையின் மதிப்பிணை இப்பொழுது பார்ப்போம் |
10:22 | முட்டையின் ஜீரணத்தன்மையின் மதிப்பெண் 1.18 |
10:27 | முழுமையான பாலின் மதிப்பெண் 1.32 |
10:31 | பட்டாணி 0.64 ஐ கொண்டுள்ளது |
10:35 | வெள்ளை கொண்டைக்கடலை 0.66 ஐ கொண்டுள்ளது |
10:41 | சமைத்த சாதம் 0.59 ஐ கொண்டுள்ளது |
10:46 | கோதுமை 0.43 ஐ கொண்டுள்ளது |
10:50 | வறுத்த வேர்க்கடலை 0.43 ஐ கொண்டுள்ளது |
10:56 | முன்பு விளக்கியது போல, சைவ உணவுகள் முழுமையற்ற புரதமாகும் |
11:02 | தானியங்கள் lysine இல் குறைவாகவும் பருப்பு வகைகள் methionine இல் குறைவாகவும் உள்ளன |
11:08 | இதை சேர்த்து உண்ணுவதால், amino acidகளின் குறைபாட்டை ஈடு செய்கிறது |
11:14 | தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை சேர்பதினால் புரதத்தின் தரம் உயர்கிறது |
11:20 | இது புரதத்தின் நிரப்பு நடவடிக்கை எனப்படுகிறது |
11:25 | பல்வேறு உணவுகளை சேர்த்து உண்ண பரிந்துரைக்கப்படுகிறது |
11:31 | உணவுக் குழுக்களை சேர்ப்பதினால், பல முக்கிய amino acidகள் கிடைக்க உதவுகிறது |
11:38 | பருப்பு வகைகள் மற்றும் தானியங்களை பால் பொருட்களுடன் சேர்பதினால், புரதத்தின் தரம் உயர்கிறது |
11:46 | பருப்பு வகைகள் மற்றும் தானியங்களில் குறையும் amino acidகளை பால் பொருட்கள் ஈடு செய்கிறது |
11:54 | இம்மாதிரியான சில உணவு சேர்ககைகளை இப்பொழுது பார்ப்போம் |
12:00 | சிறுதானிய கிச்சடியுடன் ரைத்தா |
12:03 | மோர் குழம்பு சாதம் மற்றும் பனீர் பராட்டா ஆகியவை வேறு சில உதாரணங்கள் ஆகும் |
12:08 | அடையுடன் தயிர் |
12:11 | சிவப்பு காராமணியுடன் தயிர் |
12:16 | தானியங்கள் மற்றும் சிறு தானியங்களை அசைவ உணவுடன் சேர்ப்பதும் புரதத்தின் தரத்தை மேம்படுத்துகிறது |
12:24 | இந்த சேர்க்கைகளை கொண்ட சில உணவு செய்முறைகளை கூறுகிறேன் |
12:30 | சிறுதானிய கோழி புலவு |
12:34 | முட்டை தோசை |
12:36 | சிறுதானிய கோழி ரொட்டி ராப் |
12:39 | முட்டை சாதம் |
12:41 | கறி அடைத்த பராட்டா |
12:43 | கேழ்வரகு உருண்டை மற்றும் கோழி குழம்பு வேறு சில உதாரணங்கள் ஆகும் |
12:49 | இந்த சேர்க்கைகளை தவிர வேறு சில உணவுக்கு குழுக்களின் சேர்க்கைகளையும் பார்ப்போம் |
12:55 | தயிர் சாதம் |
12:57 | கீரை பனீர் கூட்டு |
12:59 | தேங்காய் தயிர் சட்னி வேறு சில உதாரணங்கள் ஆகும் |
13:04 | கொட்டைகள் மற்றும் விதைகளின் விழுதை பயன்படுத்துவதால் புரதத்தின் தரம் உயர்கிறது |
13:11 | இந்த அனைத்து உணவுகளையும் உங்கள் ஆரோக்கியத்திற்காக தினசரி எடுத்துக்கொள்ளுங்கள் |
13:16 | இத்துடன் இந்த tutorial லின் முடிவுக்கு வந்து விட்டோம். இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஆர்த்தி |