Difference between revisions of "Health-and-Nutrition/C2/Laid-back-hold-for-breastfeeding/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 222: Line 222:
 
| 06:02
 
| 06:02
 
| இதே நிலையில், தாய் சாய்ந்துகொண்டு தளர்வாக தாய்ப்பாலூட்ட வேண்டும். இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம்.
 
| இதே நிலையில், தாய் சாய்ந்துகொண்டு தளர்வாக தாய்ப்பாலூட்ட வேண்டும். இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம்.
 
|-
 
| 06:11
 
| இந்த டுடோரியலில் நாம் கற்றது- ஒரு தாய் மற்றும் அவளது குழந்தைக்கான சரியான தாய்ப்பாலூட்டுகின்ற பிடிமானத்தை தேர்வு செய்வது.
 
 
|-
 
| 06:18
 
| தாய்ப்பாலூட்டும் முன் தாய் தன்னை தயார்படுத்திக் கொள்ளவேண்டிய முறை மற்றும் '''லெய்டு பேக்''' பிடிமானத்தை எப்படி செய்வது.
 
 
|-
 
| 06:25
 
| இந்த டுடோரியல், '''Spoken Tutorial''' '''Project''', '''IIT Bombay'''ஆல் வழங்கப்பட்டுள்ளது.
 
 
|-
 
| 06:31
 
| '''Spoken Tutorial Project'''க்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், '''NMEICT, MHRD''' மூலம் கிடைக்கிறது. இதைப்பற்றிய மேலும் தகவல்கள், இந்த இணைப்பில் உள்ளன.
 
 
|-
 
| 06:44
 
| இந்த டுடோரியலின் ஒருபகுதி நிதி, '''WHEELS Global Foundation'''ன் பெருந்தன்மையான பங்களிப்பாகும்.
 
 
|-
 
| 06:51
 
| இந்த டுடோரியல், '''Maa aur Shishu Poshan Project'''ன் ஒரு பகுதியாகும். இந்த டுடோரியலுக்கான domain reviewer, '''Dr. Rupal Dalal,''' எம். டி குழந்தை மருத்துவ அறிவியல்.
 
  
 
|-
 
|-
 
| 07:03
 
| 07:03
| விடை பெறுவது, ''' IIT Bombay '''ல் இருந்து, அனிமேட்டர் '''Shital Joshi'''யுடன், டையடீசின் '''Tasneem Shaikh'''.
+
| இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.  குரல் கொடுத்தது Arthi. நன்றி.
இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ.  குரல் கொடுத்தது Arthi. நன்றி.
+
 
|}
 
|}

Latest revision as of 16:34, 5 August 2020

Time
Narration
00:01 தாய்ப்பாலூட்டுவதற்கான லெய்டு பேக் பிடிமானம் குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது, தாய் தன் குழந்தைக்கான சரியான தாய்ப்பாலூட்டுகின்ற பிடிமானத்தை தேர்வு செய்வது.
00:15 தாய்ப்பாலூட்டும் முன் தாய் தன்னை தயார்படுத்திக் கொள்ளவேண்டிய முறை மற்றும் லெய்டு பேக் பிடிமானத்தை செய்யும் முறை.
00:22 இப்போது தொடங்கலாம்.
00:24 உலகெங்கிலும் தாய்மார்கள், பல்வேறு பிடிமானங்களை பயன்படுத்தி தன் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டுகின்றனர்.
00:31 முந்தைய ஒரு டுட்டோரியலில் நாம் கற்றது போல், சிறந்த தாய்ப்பாலூட்டுகின்ற பிடிமானம் எதுவெனில்
00:39 தாய் மற்றும் குழந்தை இருவரும் தாய்ப்பாலூட்டுகின்ற நேரம் முழுவதும் சௌகர்யமாக இருக்க வேண்டும்.
00:47 குழந்தையால், தாயின் மார்பகத்தை ஆழமாக இணைத்துக்கொண்டு, போதிய அளவு பாலை பெற முடிய வேண்டும்.
00:55 லெய்டு பேக் எனும் பிடிமான முறையை கற்போம்.
01:00 லெய்டு பேக் பிடிமானம் பின்வரும் நிலைமைகளில் பரிந்துரைக்கப்படுகிறது- க்ராஸ் கிரேடல் அல்லது கிரேடல் பிடிமானத்தை பயன்படுத்தி குழந்தையை மார்பகத்தோடு ஆழமாக இணைப்பது கடினமாக இருக்கும் போது,
01:10 அல்லது தாய்க்கு பெரிய மார்பகங்கள் இருந்தால்
01:13 அல்லது தாய்க்கு முதுகு வலி இருந்தால்
01:16 அல்லது தாய் சோர்வாக இருந்தால்.
01:19 பாலூட்டுவதற்கு முன்பு, தாய் தன் கைகளை சோப்பு மற்றும் நீரினால் கழுவி, பின் தன் கைகளை ஒழுங்காக உலர்த்திக்கொள்ள வேண்டும்.
01:27 பின் அவள், கொதிக்கவிடப்பட்டு, பின் குளிரவைக்கப்பட்ட, ஒரு குவளை நீரை அருந்த வேண்டும்.
01:32 தாய்ப்பால் கொடுக்கின்ற தாய்மார்கள், நாளொன்றுக்கு சுமார் 750ல் இருந்து 850 மில்லிலிட்டர் வரை பாலை உற்பத்தி செய்வதால் அவர்கள், அதிக நீரை அருந்த வேண்டும்.
01:44 அடுத்து, தாய் குழந்தைக்கு பாலூட்ட விரும்புகின்ற மார்பகத்தை திறக்க வேண்டும்.
01:50 தனது ப்ரா மற்றும் ரவிக்கையின் அழுத்தம், மார்பகத்தின் மீது படாமலிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.
01:55 பின் தாய், தரை அல்லது ஒரு கட்டிலின் மீது சௌகர்யமாக படுத்துக்கொள்ள வேண்டும்.
02:01 தலையணைகள் மூலம், அவளது தலை, கழுத்து மற்றும் மேல் முதுகுக்கு ஆதரவு தரப்பட வேண்டும்.
02:07 இப்போது தாய் தயாராக இருப்பதால், குழந்தையை எவ்வாறு சரியாக பிடித்துக்கொள்வது என்று கற்போம்.
02:13 தாய், பாலூட்ட போகின்ற மார்பகத்தின் பக்கமுள்ள கையினால் குழந்தையின் உடம்பை பிடித்துக்கொள்ள வேண்டும்
02:20 அவள் தனது மற்றொரு கையின் கட்டைவிரல் மற்றும் மற்ற விரல்களை வைத்து தனது குழந்தையினுடைய தலையின் கீழ்ப்பக்கத்தை பிடித்துக்கொள்ள வேண்டும்.
02:27 இப்படத்திலுள்ள தாய், தனது குழந்தைக்கு, தன் வலதுபுற மார்பகத்திலிருந்து பாலூட்டுவாள்.
02:32 அதனால், குழந்தையின் உடம்பை பிடித்துக்கொள்ள அவள் தனது வலது கையை பயன்படுத்துகிறாள்.
02:38 அவள் தனது இடது கையின் கட்டைவிரல் மற்றும் மற்ற விரல்களை, தனது குழந்தையினுடைய தலையின் கீழ்ப்பக்கத்தை பிடித்துக்கொள்ள பயன்படுத்துகிறாள்.
02:46 அடுத்து, குழந்தையின் தலையை பிடித்துக்கொள்வதற்கு தேவையான, தாயினுடைய கட்டைவிரல் மற்றும் மற்ற விரல்களின் சரியான நிலையை பற்றி பார்ப்போம்.
02:54 தாயின் கட்டைவிரல், குழந்தையின் ஒரு காதிற்கு பின்புறமும், மற்ற விரல்கள், மற்றொரு காதின் பின்புறமும் இருக்க வேண்டும்.
03:02 அவள் தனது கட்டைவிரல் அல்லது மற்ற விரல்களை, காதின் பின்புறத்திலிருந்து, குழந்தையின் கழுத்திற்கு இடம் மாற்றக்கூடாது.
03:08 அவள் தனது கையினால், குழந்தையின் தலையின் பின்புறத்தில் அழுத்தம் கொடுக்கக்கூடாது. ஏனெனில், அது தாய்ப்பாலூட்டலின் போது, குழந்தைக்கு அசௌகர்யமாக இருக்கும்.
03:20 அடுத்து, குழந்தையின் உடம்பை எவ்வாறு சரியான நிலையில் வைப்பது என்று கற்போம்.
03:25 குழந்தையின் வயிறு, தாயின் வயிற்றின் மீது படுமாறு, குழந்தையை தாயின் உடம்பின் மீது வைக்க வேண்டும்.
03:32 மற்றும் குழந்தையின் தலை, தாயின் மார்பகத்தின் பக்கத்தில் இருக்க வேண்டும்.
03:38 குழந்தை மற்றும் மார்பகத்தின் இடையே உள்ள தூரம் குறையும்போது, அது, குழந்தை மார்பகத்தை அடைய உதவி புரியும்.
03:44 அதனால், குழந்தைக்கு ஆழமாக இணைத்துக்கொள்ள எளிதாக இருக்கும்.
03:49 அடுத்து, குழந்தையின் முழு உடம்பு எந்த திசையில் பிடித்துக்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது இரண்டாவது முக்கிய குறிப்பாகும்.
03:56 நாம் உணவு உண்கையில், நமது தலை, கழுத்து மற்றும் உடம்பு, ஒரே திசையில் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.
04:05 அவ்வாறே, தாய்பாலூட்டலின்போது குழந்தையின் தலை, கழுத்து மற்றும் உடம்பு, ஒரே திசையில் இருக்க வேண்டும்.
04:14 இது குழந்தை பாலை விழுங்குவதற்கு எளிதாக இருக்கும்.
04:19 குழந்தையின் உடம்பின் முழு முன்புற பகுதி, தாயின் உடம்பின் முன்புற பகுதியின் மீது வைக்கப்பட்டிருக்கும் வரை-குழந்தையை தாயின் உடம்பின் மீது எந்த திசையிலும் வைக்கலாம் என்பதை நினைவில் கொள்க.
04:32 மேலும், குழந்தையால் மார்பகத்தை எளிதாக அடைய முடிய வேண்டும்.
04:38 குழந்தையின் உடம்பை வைத்திருக்கும் முறையில், மூன்றாவது குறிப்பிற்கு நாம் இப்போது வருகிறோம்.
04:42 தாய் தன் குழந்தையின் முழு உடம்பையும் தாங்கிக்கொள்ள வேண்டும்.
04:47 இல்லையெனில், குழந்தை மார்பகத்துடன் ஆழமாக இணைத்துக்கொள்ள அதிக முயற்சி எடுத்துக்கொள்ளும்.
04:54 அடுத்து, குழந்தையின் மூக்கு மற்றும் கன்னத்தின் நிலைப்படுதலை பற்றி பார்ப்போம்.
04:59 குழந்தையின் மூக்கும் முலைக்காம்பும் ஒரே கோட்டில் இருக்க வேண்டும்.
05:04 மேலும் அவளது கன்னம் முன்னுக்கு கொண்டுவரப்பட்டு, மார்பகதிற்கு மிக அருகே வைக்கப்பட வேண்டும்.
05:09 இது, குழந்தை, ஏரியோலாவின் கீழ்ப்பகுதியை அதிகமாக பற்றிக்கொள்வதை உறுதிப்படுத்தும்.
05:16 அதனால், அதிக பாலை குடிக்க, குழந்தை தனது கீழ்த்தாடையை திறமையாகப் பயன்படுத்தும்.
05:21 ஏரியோலா என்பது முலைக்காம்பை சுற்றியிருக்கின்ற கருமையான பகுதியாகும் என்பதை நினைவில் கொள்ளவும்.
05:27 இப்போது, குழந்தை லெய்டு பேக் பிடிமானத்தில் உள்ளது மற்றும் தாய்ப்பாலைப் பெறுவதற்கு தயாராக இருக்கிறது.
05:34 இந்தப் பிடிமானத்தில், குழந்தை தாயின் மார்பகத்தோடு இயல்பாக, ஆழமாக இணைத்துக்கொள்ளும்.
05:40 இதே தொடரின் மற்றொரு காணொளியில், குழந்தை மார்பகத்தோடு ஆழமாக இணைத்துக்கொள்ளுதல் பற்றி விளக்கப்பட்டுள்ளது.
05:49 குழந்தை மார்பகத்தோடு ஆழமாக இணைத்துக்கொண்டவுடன்-தாய் குழந்தையின் தலையை தன் கையிலிருந்து விடுவிக்கலாம். பின், தன் இரண்டு கைகளாலும் குழந்தையின் உடம்பை தாங்கிக்கொள்ள வேண்டும்.
06:02 இதே நிலையில், தாய் சாய்ந்துகொண்டு தளர்வாக தாய்ப்பாலூட்ட வேண்டும். இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம்.
07:03 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது Arthi. நன்றி.

Contributors and Content Editors

Debosmita, Jayashree