Difference between revisions of "OpenModelica/C2/Introduction-to-OMEdit/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 21: Line 21:
 
|-
 
|-
 
| |00:36
 
| |00:36
| ஆனால், இந்த டுடோரியலில் விளக்கப்பட்டுள்ள செயல்முறை, '''Windows''' ,  '''Mac OS X''' அல்லது '''ARM''' மீதான ''''FOSSEE OS''' , போன்ற மற்ற OSயிலும் இவ்வாறே இருக்கிறது.  
+
| ஆனால், இந்த டுடோரியலில் விளக்கப்பட்டுள்ள செயல்முறை, '''Windows''' ,  '''Mac OS X''' அல்லது '''ARM''' மீதான '''FOSSEE OS''' , போன்ற மற்ற OSயிலும் இவ்வாறே இருக்கிறது.  
  
 
|-
 
|-

Latest revision as of 10:31, 22 December 2017

Time Narration
00:01 OMEditக்கு அறிமுகம் குறித்த இந்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது, OpenModelica பற்றி, OMEditக்கு அறிமுகம்,
00:15 Libraries Browserல் இருந்து, ஒரு Classஐ திறப்பது, Libraries Browserல் இருந்து, ஒரு Classஐ simulate செய்வது.
00:23 இந்த டுடோரியலை பதிவு செய்வதற்கு, நான், OpenModelica பதிப்பு 1.9.5 மற்றும் Ubuntu Linux OS 14.04ஐ பயன்படுத்துகிறேன்.
00:36 ஆனால், இந்த டுடோரியலில் விளக்கப்பட்டுள்ள செயல்முறை, WindowsMac OS X அல்லது ARM மீதான FOSSEE OS , போன்ற மற்ற OSயிலும் இவ்வாறே இருக்கிறது.
00:48 இந்த டுடோரியலை பின்பற்ற, differential மற்றும்algebraic equationகள் உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும்.
00:55 OpenModelica என்றால் என்ன? OpenModelica, ஒரு , open-source modeling மற்றும், simulation சூழல் ஆகும்.
01:03 இது சிக்கலான systemகளுக்கான, object-oriented, multi-domain modeling language ஆகும்.
01:09 இது தொழில் சார்ந்த, மற்றும் கல்வி சார்ந்த நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
01:15 முதலில், OMEdit. என்றால் என்ன என்பதை பற்றி காண்போம்.
01:19 OMEdit என்பது, OpenModelica Connection Editor என்பதன் சுருக்கமாகும்.
01:24 இது, graphical model க்கான ஒரு புது Graphical User Interface ஆகும்.
01:29 அது, modelகளை உருவாக்க, மற்றும் மாற்ற, பல அம்சங்களை கொண்டிருக்கிறது.
01:34 இப்போது, OMEdit windowக்கு செல்கிறேன்.
01:38 நான் எனது கணினியில், ஏற்கனவே, OMEditஐ நிறுவிவிட்டேன்.
01:43 OMEdit windowஐ திறக்க, Dash Homeஐ க்ளிக் செய்யவும்.
01:47 Search barல் டைப் செய்க: OMEdit.
01:51 காட்டப்படுகின்ற OMEdit iconஐ க்ளிக் செய்யவும்.
01:55 OMEdit iconஐ க்ளிக் செய்தவுடன், Welcome perspective windowஐ நாம் காண்கிறோம். Recent Files மற்றும்Latest News.ன் ஒரு பட்டியலை அது காட்டுகிறது.
02:06 OMEdit windowவின் இடது பக்கத்தில், Libraries Browserஐ நாம் காண்கிறோம். இங்கு, libraryகளின் ஒரு பட்டியலை நாம் காணலாம்.
02:15 Modelica libraryஐ விரிவாக்குவோம்.
02:18 இதைச் செய்ய, Modelica libraryன் இடது பக்கத்தில் இருக்கின்ற, arrow headஐ க்ளிக் செய்யவும்.
02:23 இங்கு, கிடைக்கின்ற libraryகளின் பட்டியலை நாம் காணலாம்.
02:28 Thermal libraryன் இடது பக்கத்தில் இருக்கின்ற, arrow headஐ க்ளிக் செய்யவும்.
02:31 Thermalன் கீழ், HeatTransfer libraryஐ நாம் பார்க்கிறோம். அதை விரிவாக்கவும்.
02:37 மீண்டும், பல வெவ்வேறு libraryகள் காட்டப்படுவதை நாம் காண்கிறோம்.
02:43 இப்போது, Example libraryஐ விரிவாக்குவோம்.
02:47 இங்கு, Heat Transferன் வெவ்வேறு உதாரணங்களை நாம் காணலாம்.
02:52 TwoMasses என்ற பெயருடைய classஐ திறப்போம்.
02:56 TwoMassesஐ ரைட்-க்ளிக் செய்து, Open Classஐ தேர்ந்தெடுக்கவும்.
03:01 Classஐ திறக்க, class ன் பெயரையும் நாம் டபுள்-க்ளிக் செய்யலாம்.
03:06 இப்போது, நாம் Modeling Perspective windowவில் உள்ளோம்.
03:10 முன்னிருப்பாக, class, Diagram Viewல் திறக்கிறது.
03:14 Class, Diagram Viewல், திறக்கவில்லை எனில், கவலைப்பட வேண்டாம்.
03:19 வெவ்வேறு viewகளுக்கு இடையே எப்படி மாறுவது என்று நான் உங்களுக்கு காட்டுகிறேன்.
03:23 Modeling area windowவில், modelகளின் Diagram Viewஐ நாம் காணலாம்.
03:28 Modeling areaவின் மேல், நான்கு வெவ்வேறு iconகளை நாம் காண்கிறோம்.
03:33 முதல்icon, Icon Viewஐ குறித்துக்காட்டுகிறது.
03:37 Modelன் உருவமைப்பை பார்க்க, அதை க்ளிக் செய்யவும்.
03:41 அடுத்த icon, Diagram Viewஐ குறித்துக்காட்டுகிறது.
03:45 Modelஐ பிரதிபலிக்கின்ற diagramஐ பார்க்க, அதை க்ளிக் செய்யவும்.
03:49 மூன்றாவதுicon, Text View icon ஆகும்.
03:52 அதை க்ளிக் செய்வோம்.
03:54 Two Masses classக்கு தொடர்புடைய Modelica codeஐ இங்கு நாம் காண்கிறோம்.
04:00 பின்வரும் டுடோரியல்களில், OMEditல், codeஐ எப்படி எழுதுவது என்று கற்போம்.
04:05 அடுத்த iconஆன, Documentation viewஐ க்ளிக் செய்யவும்.
04:10 OMEdit windowவின் வலது பக்கத்தில், Documentation Browser என்ற பெயருடைய புது window தோன்றுகிறது.
04:17 Modelஐ பற்றி கொடுக்கப்பட்டுள்ள விரிவான தகவலை இங்கு நாம் படிக்கலாம்.
04:23 இப்போது, Documentation Browserஐ மூடவும்.
04:27 ஒரு modelஐ simulate செய்வதற்கு முன்பு, modelன் சரிநிலையை நாம் சரி பார்க்க வேண்டும்.
04:32 இதைச் செய்ய, முதலில், tool barல், Check All Models பட்டனை கண்டுபிடிக்கவும்.
04:37 இந்த பட்டன் மீது, இரண்டு வெள்ளை நிற tickகள் இருக்கும். அதை க்ளிக் செய்யவும்.
04:43 Windowவின் கீழ், ஒரு Messages Browser திறப்பதை கவனிக்கவும்.
04:48 Modelica classக்கு தொடர்புடைய messageகளை இது காட்டும்.
04:53 இப்போது, modelஐ simulate செய்ய முயற்சிப்போம்.
04:56 இதைச் செய்ய, tool barல் இருக்கின்ற, பச்சை நிற arrow பட்டனை க்ளிக் செய்யவும்.
05:02 இதுவே, modelஐ simulate செய்ய பயன்படுத்தப்படுகின்றSimulate பட்டன் ஆகும்.
05:06 ஒரு Modelica class.ஐ simulate செய்ய, Ctrl +Bஐயும் நாம் அழுத்தலாம்.
05:11 Simulate செய்த பிறகு, ஒரு புது window திறக்கிறது.
05:14 இது classன் compilation செயல்முறையை காட்டுகிறது.
05:18 Compilation வெற்றிகரமாக முடிந்த பிறகு, output window, messageஐ காட்டுகிறது:
05:23 Simulation process finished successfully. இந்த windowஐ சிறிதாக்கவும்.
05:30 முன்னிருப்பாக, OMEdit windowல், Plotting Perspective திறக்கிறது.
05:35 அது திறக்கவில்லையெனில், கீழ் வலது பக்கத்தில் இருக்கின்ற, Plotting பட்டனை க்ளிக் செய்யவும்.
05:40 Plotting windowஐ திறக்க, Ctrl +F3ஐயும் நாம் அழுத்தலாம்.
05:45 இங்கு, Modelica class.ன், simulation முடிவுகளை நாம் காணலாம்.
05:50 Plotting Perspectiveன், வலது பக்கத்தில் இருக்கின்ற, Variables Browser windowஐ பார்க்கவும்.
05:55 Variables Browserன் கீழ்: ஒரு Modelica class.ன், input variableன் மதிப்பை எப்படி மாற்றுவது என்று நான் காட்டுகிறேன்.
06:03 Conduction variableஐ விரிவாக்குவோம்.
06:06 Gன் மதிப்பை மாற்றி, Q_flow மற்றும் dTன் மதிப்புகள் எப்படி மாறுகின்றன என்று பார்க்கவும்.
06:13 முன்னிருப்பாக, G = 10, Q_flow = 263.599 W மற்றும்dT = 26.3599 K
06:25 Gன் மதிப்பை, 10ல் இருந்து, 15 க்கு மாற்றுவோம்.
06:30 பின், Enterஐ அழுத்தவும்.
06:32 Windowவின் மேல் வலது மூலைக்கு செல்லவும்.
06:35 Tool barல், Re-simulate பட்டனை க்ளிக் செய்யவும்.
06:39 Success message window ஐ நாம் பெறுகிறோம். இந்தwindowஐ சிறிதாக்கவும்.
06:44 Simulation நிறைவு பெற்றவுடன், மாற்றங்களை குறித்துக் கொள்ளவும்.
06:48 Q_flow = 203.009 W மற்றும்dT = 13.5339 K
06:56 இப்போது, ஒரு plotஐ எப்படி உருவாக்குவதென உங்களுக்கு காட்டுகிறேன்.
07:00 dT variableக்கு எதிரே இருக்கின்ற check boxஐ க்ளிக் செய்யவும்.
07:04 X-axis ல் time, மற்றும், Y-axisல் dTக்கும் இடையே ஒரு plotஐ நீங்கள் காணலாம்.
07:11 மாறிக்கொண்டிருக்கிற நேரத்திற்கு, இரண்டு massகளுக்கு இடையே உள்ள ன் வேறுபாட்டை, இந்த plot வர்ணிக்கிறது.
07:17 முன்னிருப்பாக, simulation, 0ல் இருந்து, 1 unit நேரத்திற்குrun செய்கிறது.
07:22 Simulation Setup optionஐ பயன்படுத்தி, இந்த இடைவெளியை நாம் மாற்ற முடியும்.
07:27 இதற்கு, Modeling Perspective.க்கு செல்லவும்.
07:30 கீழ் வலது பக்கத்தில் இருக்கின்ற, Modeling பட்டனை க்ளிக் செய்யவும்.
07:33 அல்லது, Modeling windowஐ திறக்க, Ctrl +F2ஐ அழுத்தவும்.
07:38 Tool barல் இருக்கின்ற, Simulation Setup optionஐ க்ளிக் செய்யவும்.
07:43 Simulation Setup window திறக்கிறது.
07:46 Stop Timeஐ , 5 unitக்கு மாற்றவும்.
07:49 Simulate check box, check செய்யப்பட்டுள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
07:52 Okஐ க்ளிக் செய்யவும்.
07:55 உடனே, நாம், success message window ஐ பெறுகிறோம்.
07:59 இந்தwindowஐ சிறிதாக்கவும்.
08:02 0ல் இருந்து, 5 வரைunit நேரத்துடன் கூடிய, simulation இடைவெளிக்கு, class re-simulate செய்யப்படுகிறது.
08:08 நேரத்தை தவிர, வேறு எந்த இரண்டு variableகளுக்கு இடையேயும் ஒரு plotஐ நாம் பெறலாம். அதை இப்போது முயற்சிப்போம்.
08:16 Tool barல் இருக்கின்ற, New Parametric Plot Windowஐ க்ளிக் செய்யவும்.
08:20 நாம் plot செய்ய விரும்புகின்ற, Q_flow மற்றும் dT என்ற இரண்டு variableகளை தேர்ந்தெடுப்போம்.
08:26 X-axis ல் dT, மற்றும், Y-axisல் Q_flowக்கும் இடையே ஒரு plotஐ நாம் காணலாம்.
08:34 அவைகளுக்கு இடையே உள்ள temperatureன் வேறுபாடு குறையும் போது, heat flowல் ஏற்படுகின்ற மாறுபாட்டை அது காட்டுகிறது.
08:40 தேவையானplot உருவாக்கப்பட்டவுடன், நாம் முடிவுகளை நீக்கி விடலாம்.
08:45 Variables Browserல், TwoMassesஐ ரைட்-க்ளிக் செய்யவும்.
08:49 Delete Resultஐ தேர்ந்தெடுக்கவும். முடிவு நீக்கப்பட்டுவிட்டது.
08:55 OpenModelica, ஒரு Help menuஐ கொண்டுள்ளது.
08:58 Menu barக்கு சென்று, Help optionஐ க்ளிக் செய்யவும்.
09:02 இங்கு, User Guide, System, Scripting மற்றும், Modelica Documentationஐ நாம் காணலாம்.
09:10 சுருங்கச் சொல்ல.
09:12 இந்த டுடோரியலில் நாம் கற்றது: OpenModelica பற்றி
09:16 OMEditக்கு அறிமுகம்
09:18 Libraries Browserல் இருந்து, ஒரு Classஐ திறப்பது
09:21 Libraries Browserல் இருந்து, ஒரு Classஐ simulate செய்வது
09:25 பயிற்சியாக: Modelicaவில், Fluid libraryஐ விரிவாக்கவும்.
09:30 Modelicaவில், Examples libraryஐ விரிவாக்கவும்.
09:34 HeatExchanger Libraryல், HeatExchangerSimulation classஐ simulate செய்யவும்
09:39 சில input variableகளின் மதிப்பை மாற்றி, re-simulate செய்யவும்.
09:43 Q_Flow_1 மற்றும்timeக்கு இடையே ஒரு plotஐ உருவாக்கவும்.
09:48 பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும்.
09:51 அது, ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது.
09:55 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
10:01 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
10:08 இந்த spoken tutorialலில் உங்களுக்கு, ஏதேனும் கேள்விகள் உள்ளதா? இந்த தளத்தை பார்க்கவும். உங்கள் கேள்விக்கான, நிமிடம் மற்றும் நொடியை தேர்வு செய்யவும்.
10:17 உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கவும். FOSSEE குழுவிலிருந்து எவரேனும் ஒருவர், அதற்கு பதிலளிப்பார்.
10:23 ஸ்போகன் டுடோரியல் குழு, இந்த டுடோரியல் மீதான குறிப்பிட்ட கேள்விகளுக்கானது. அதில், பொதுவான, மற்றும் தொடர்பில்லாத கேள்விகளைpost செய்ய வேண்டாம். இது, குழப்பத்தை குறைக்க உதவும்.
10:36 குழப்பத்தை குறைத்தால், இந்த விவாதத்தை, வழிகாட்டுரையாக நாம் பயன்படுத்தலாம்.
10:42 FOSSEE குழு, பிரபலமான புத்தகங்களில் இருந்து, தீர்க்கப்பட்ட உதாரணங்களை code செய்வதை ஒருங்கிணைக்கிறது.
10:47 இதை செய்பவர்களுக்கு, நாங்கள், மதிப்பூதியம், மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும்.
10:56 FOSSEE குழு, commercial simulator labகளை, OpenModelicaக்கு, இடம் பெயர்க்க உதவுகிறது.
11:02 இதை செய்பவர்களுக்கு, நாங்கள், மதிப்பூதியம், மற்றும் சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு, இந்த தளத்தை பார்க்கவும்.
11:11 Spoken Tutorial மற்றும்FOSSEE திட்டங்களுக்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது.
11:20 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ..குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி .


Contributors and Content Editors

Jayashree, Venuspriya