Difference between revisions of "Koha-Library-Management-System/C2/How-to-create-a-library/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| border =1 | <center>'''Time'''</center> | <center>'''Narration'''</center> |- | 00:01 | '' Kohaவில் ஒரு libraryஐ எப்படி உருவாக்...") |
|||
Line 384: | Line 384: | ||
|- | |- | ||
| 09:28 | | 09:28 | ||
− | | | + | | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |
|} | |} |
Latest revision as of 15:23, 9 February 2021
|
|
00:01 | Kohaவில் ஒரு libraryஐ எப்படி உருவாக்குவது' குறித்த spoken tutorialக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: ஒரு libraryஐ உருவாக்குவது மற்றும் ஒரு Groupஐ உருவாக்குவது. |
00:16 | இந்த டுடோரியலை பதிவு செய்ய நான், Ubuntu Linux Operating System 16.04 |
00:24 | மற்றும் Koha version 16.05ஐ பயன்படுத்துகிறேன். |
00:29 | இந்த டுடோரியலைப்புரிந்துகொள்ள கற்பவருக்கு, Library Science. பற்றி தெரிந்து இருக்க வேண்டும். |
00:35 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்கள் கணினியில் Koha நிறுவப்பட்டிருக்க வேண்டும். |
00:41 | மேலும், Koha.வில் உங்களுக்கு Admin அனுமதி இருக்க வேண்டும். |
00:46 | மேலும் விவரங்களுக்கு, இந்த வலைத்தளத்திலுள்ள Koha Spoken Tutorial தொடரைப்பார்க்கவும். |
00:53 | இப்போது தொடங்கலாம். நான் எனது கணினியில் Kohaவை ஏற்கனவே நிறுவிவிட்டேன். |
00:59 | நான் Koha interfaceக்கு மாறுகிறேன். |
01:03 | நிறுவுதலின் போது கொடுத்த, username மற்றும் password ஐ பயன்படுத்தி, Koha வினுள் login செய்யவும். |
01:10 | எனது கணினியில், Username ஐ, koha underscore library. என நான் கொடுத்துள்ளேன். |
01:17 | இப்போது conf.xml file லிலிருந்து குறித்துக்கொள்ளப்பட்ட Password ஐ டைப் செய்யவும். |
01:25 | Kohaவின் முக்கிய பக்கம் திறக்கிறது. |
01:27 | Kohaவை அமைக்கும் போது, நாம் Kohaவில் உருவாக்கப்போகும் ஒவ்வொரு Branch libraryன் விவரங்களையும் நாம் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். |
01:38 | இந்த data, Koha வின் பல்வேறுபட்ட துறைகளில் பின்னர் பயன்படுத்தப்படுகிறது. |
01:43 | இப்போது, ஒரு புது libraryஐ சேர்ப்போம். |
01:47 | Koha interfaceக்கு திரும்பவும். |
01:50 | Homeக்கு சென்று, Koha Administration.ஐ க்ளிக் செய்யவும். |
01:56 | Basic parameters. பிரிவை கண்டறியவும். |
02:00 | Libraries and groups.ஐ க்ளிக் செய்யவும். |
02:04 | ஒரு புது libraryஐ சேர்க்க, '+ New Library' tab ஐ க்ளிக் செய்யவும். |
02:10 | இப்போதைக்கு, groups பிரிவை நாம் தவிர்ப்போம். |
02:15 | இந்தப்பக்கத்தில், சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்ட fieldகள் அனைத்தும் கட்டாயமாகும் என்பதை பார்க்கவும். |
02:21 | நான் இங்கு செய்துள்ளது போல், உங்கள் libraryக்கான, Library code மற்றும் Name fieldகளை பூர்த்தி செய்யவும். |
02:29 | கவனிக்கப்படவேண்டிய சில விஷயங்கள்- Library codeல் எந்த இடைவெளியும் இருக்கக்கூடாது. |
02:36 | மேலும், அதன் நீளம் 10 characterகளுக்கு குறைவாக இருக்க வேண்டும். |
02:40 | இந்த code, databaseல், ஒரு தனித்த identifierஆக பயன்படுத்தப்படும். |
02:46 | அடுத்த பிரிவில், நமது libraryன் தொடர்பு விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்- Address, phone number போன்றவை. |
02:58 | இங்கு காட்டப்பட்டுள்ளபடி நான் விவரங்களை பூர்த்தி செய்துள்ளேன். |
03:01 | இங்கு பட்டியலிடப்பட்ட எந்த field பற்றிய தகவல் உங்களிடம் இல்லையெனில், பின் அதை காலியாக விடவும். |
03:08 | இவ்வாறே, இந்தப்பக்கத்தில், உங்கள் libraryன் விவரங்களை பூர்த்தி செய்யவும். |
03:13 | உங்கள் libraryக்கு பின்னர், தனி அறிவிப்புகளை செய்ய, address மற்றும் phone விவரங்கள் பயன்படுத்தப்படலாம். |
03:20 | உறுப்பினர்கள் எப்போது libraryஐ தொடர்பு கொள்ள நினைத்தாலும், இந்த விவரங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். |
03:26 | நீங்கள் காண்பது போல், Email id field கட்டாயமானது அல்ல. |
03:31 | எனினும், நீங்கள் உருவாக்கப்போகின்ற libraryக்கு ஒரு email idஐ வைத்துக்கொள்வது மிக முக்கியமாகும். |
03:38 | உறுப்பினர்களுக்கு, அறிவிப்புகள் இந்த email idயிலிருந்தே அனுப்பப்படுகிறது மற்றும் பெறப்படுகிறது. |
03:45 | Gmail id , எளிதாக கட்டமைக்கப்படக்கூடியதால், mailஐ அனுப்ப மற்றும்/அல்லது பெறுவதற்கு, அதற்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. |
03:54 | Email id fieldன் கீழே, Reply-To மற்றும் Return-Path fieldகள் உள்ளன. |
04:01 | Reply-To- அறிவிப்புகளுக்கான எல்லா பதில்களுக்கும் மற்றொரு முன்னிருபான email addressஐ நீங்கள் குறிப்பிட வேண்டுமெனில், அதை நீங்கள் இங்கு செய்யலாம். |
04:11 | Reply-To email idல், stlibreoffice@gmail.com என நான் சேர்க்கிறேன். |
04:20 | இது காலியாக விடப்பட்டால், எல்லா பதில்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ள Email idஐயே சென்றடையும். |
04:27 | Return-Path- இதுவே எல்லா திருப்பி அனுப்பப்படுகின்ற செய்திகளும் சென்றடைகின்ற email address ஆகும். |
04:34 | இது காலியாக விடப்பட்டால், எல்லா திருப்பி அனுப்பப்படுகின்ற செய்திகளும் மேலே கொடுக்கப்பட்டுள்ள Email idஐயே சென்றடையும். |
04:42 | அதனால், பின்வருகின்ற ஒவ்வொன்றுக்கும் மூன்று வெவ்வேறு email idக்கள் பயன்படுத்தப்படலாம்- |
04:48 | Email id , |
04:50 | Reply-To மற்றும் |
04:52 | Return-Path. |
04:55 | எனினும், ஒரே ஒரு email id கொடுக்கப்பட்டால், பின் முன்னிருப்பாக Koha, அதையே மூன்று fieldகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளும். |
05:04 | அடுத்து, நான் இங்கு செய்துள்ளது போல், உங்கள் libraryன் URLஐ, fieldல் குறிப்பிடவும். |
05:10 | URL fieldஐ பூர்த்தி செய்யும் போது, அந்த குறிப்பிட்ட URL fieldன் பெயர் OPAC.ல் உள்ள holdings tableலில் இணைக்கப்படும். |
05:18 | இதற்குப்பிறகு, OPAC info.ஐ நாம் பூர்த்தி செய்யவேண்டும். |
05:23 | இங்கு தான் உங்கள் library பற்றிய தகவலை நீங்கள் வைக்க வேண்டும். |
05:28 | என்னுடைய library பற்றிய சில தகவலை நான் இங்கு enter செய்துள்ளேன். |
05:33 | holdings table.லில், libraryன் பெயரின் மீது நாம் cursorஐ நகர்த்தும் போது, இந்த தகவல் OPACல் தோன்றும். |
05:41 | ஒரு குறிப்பிட்ட branch library க்கான URL, இந்த fieldல் வைக்கப்பட்டால், புத்தகம் இருக்கின்ற branch libraryஐ, OPAC நமக்கு கூறிவிடும். |
05:52 | hyper-link address பற்றிய தகவலைப்பெற, mouseஐ இணைப்பின் மீது நகர்த்தவும். |
05:58 | புத்தகத்தை வெளியிடக்கூடிய அந்த குறிப்பிட்ட branch library ன் முகவரியை இது கொடுக்கும். |
06:05 | Koha interface.க்கு திரும்பச் செல்வோம். |
06:09 | அடுத்து, IP address.உள்ளது. |
06:12 | Koha admin accessஐ, ஒரு குறிப்பிட்ட IP addressக்கு நீங்கள் கட்டுப்படுத்த விரும்பினால், பின் அந்த IPஐ இங்கு நீங்கள் குறிப்பிடலாம். |
06:22 | இல்லையெனில், அதை காலியாக விடவும். |
06:25 | நான், அதை காலியாக விடுகிறேன். |
06:28 | இறுதியாக இருப்பது, Notes field. |
06:32 | வருங்காலத்தில் பார்ப்பதற்கு, எந்த குறிப்புகளையும் இங்கு நீங்கள் வைத்துக்கொள்ளலாம். |
06:37 | இவை, OPAC.ல் காட்டப்படமாட்டாது. |
06:40 | எல்லா விவரங்களையும் enter செய்த பிறகு, Submit பட்டனை க்ளிக் செய்யவும். |
06:46 | புதிதாக சேர்க்கப்பட்ட libraryன் பெயர், Libraries பக்கத்தில் தோன்றுகிறது. |
06:51 | இங்கு, அது Spoken Tutorial Library.ஆகும். |
06:55 | இப்போது, Group Library தேர்வை எப்போது பயன்படுத்துவதென பார்ப்போம். |
07:00 | ஒரு புது groupஐ நீங்கள் சேர்க்க விரும்பினால், '+ New Group' tabஐ க்ளிக் செய்யவும். |
07:07 | ஒரு வேளை உங்களிடம், சில branch libraryகள் உள்ளன, உதாரணத்திற்கு- வேதியியல் library, இயற்பியல் library, மற்றும் உயிரியல் library, மற்றும் நீங்கள் அவற்றை group செய்ய விரும்புகிறீர்கள். |
07:19 | அத்தகைய நிலவரத்தில், Group Library தேர்வை பயன்படுத்தவும். |
07:24 | இந்த groupஐ Science library என பெயரிடம், மற்றும், இது தலைமை libraryன் கீழ் வரும். |
07:31 | ஒற்றுமைகள் மற்றும் / அல்லது இதே போன்ற தனிச்சிறப்பின் அடிப்படையில் grouping செய்யப்படலாம். |
07:40 | உங்கள் தற்போதைய அமர்விலிருந்து, ஒரு Database administrative userஆக logout செய்யவும். |
07:45 | அதை செய்வதற்கு, மேல் வலது மூலையில் உள்ள No Library Set.ஐ க்ளிக் செய்யவும். |
07:52 | Drop-downனிலிருந்து, Logout. ஐ க்ளிக் செய்யவும். |
07:57 | இத்துடன், இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். |
08:01 | சுருங்கச்சொல்ல, |
08:03 | இந்த டுடோரியலில் நாம் கற்றது- ஒரு libraryஐ உருவாக்குவது மற்றும் ஒரு Groupஐ உருவாக்குவது. |
08:11 | பயிற்சியாக- ஒரு புது library மற்றும் ஒரு புது Groupஐ உருவாக்கவும். |
08:17 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளி, Spoken Tutorial திட்டத்தை சுருங்கச் சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
08:25 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும். |
08:35 | குறிப்பிட்டகேள்விகளுக்கான மன்றம்: இந்த Spoken Tutorialலில் உங்களுக்கு கேள்விகள் ஏதேனும் உள்ளதா? |
08:42 | இந்த தளத்தை பார்க்கவும். உங்கள் கேள்விக்கான நிமிடம் மற்றும் நொடியை தேர்வு செய்யவும். |
08:49 | உங்கள் கேள்வியை சுருக்கமாக விளக்கவும். |
08:51 | எங்கள் குழுவிலிருந்து எவரேனும் ஒருவர் பதிலளிப்பார். |
08:55 | Forum for specific questions: |
08:58 | Spoken Tutorial forum, இந்த டுடோரியல் பற்றிய குறிப்பிட்ட கேள்விகளுக்கே ஆகும். |
09:03 | இதில், பொதுவான மற்றும் தொடர்பற்ற கேள்விகளை கேட்க வேண்டாம். |
09:08 | இது குழப்பத்தை குறைக்க உதவும். |
09:11 | குழப்பங்கள் குறைந்தால், இந்த விவாதத்தை, வழிகாட்டுரையாக நாம் பயன்படுத்தலாம். |
09:17 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு பண ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
09:23 | மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
09:28 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ, குரல் கொடுத்தது பிரியதர்ஷினி. கலந்துகொண்டமைக்கு நன்றி. |