Difference between revisions of "Health-and-Nutrition/C2/Laid-back-hold-for-breastfeeding/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{|border=1 | <center>Time</center> |<center>Narration</center> |- | 00:01 | தாய்ப்பாலூட்டுவதற்கான '''லெய்டு பேக்...") |
|||
(One intermediate revision by one other user not shown) | |||
Line 65: | Line 65: | ||
|- | |- | ||
| 01:32 | | 01:32 | ||
− | | தாய்ப்பால் கொடுக்கின்ற தாய்மார்கள், நாளொன்றுக்கு சுமார் 750ல் இருந்து 850 மில்லிலிட்டர் வரை பாலை உற்பத்தி | + | | தாய்ப்பால் கொடுக்கின்ற தாய்மார்கள், நாளொன்றுக்கு சுமார் 750ல் இருந்து 850 மில்லிலிட்டர் வரை பாலை உற்பத்தி செய்வதால் அவர்கள், அதிக நீரை அருந்த வேண்டும். |
|- | |- | ||
Line 222: | Line 222: | ||
| 06:02 | | 06:02 | ||
| இதே நிலையில், தாய் சாய்ந்துகொண்டு தளர்வாக தாய்ப்பாலூட்ட வேண்டும். இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். | | இதே நிலையில், தாய் சாய்ந்துகொண்டு தளர்வாக தாய்ப்பாலூட்ட வேண்டும். இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். | ||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 07:03 | | 07:03 | ||
− | | | + | | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது Arthi. நன்றி. |
− | + | ||
|} | |} |
Latest revision as of 16:34, 5 August 2020
|
|
00:01 | தாய்ப்பாலூட்டுவதற்கான லெய்டு பேக் பிடிமானம் குறித்த Spoken Tutorialக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது, தாய் தன் குழந்தைக்கான சரியான தாய்ப்பாலூட்டுகின்ற பிடிமானத்தை தேர்வு செய்வது. |
00:15 | தாய்ப்பாலூட்டும் முன் தாய் தன்னை தயார்படுத்திக் கொள்ளவேண்டிய முறை மற்றும் லெய்டு பேக் பிடிமானத்தை செய்யும் முறை. |
00:22 | இப்போது தொடங்கலாம். |
00:24 | உலகெங்கிலும் தாய்மார்கள், பல்வேறு பிடிமானங்களை பயன்படுத்தி தன் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டுகின்றனர். |
00:31 | முந்தைய ஒரு டுட்டோரியலில் நாம் கற்றது போல், சிறந்த தாய்ப்பாலூட்டுகின்ற பிடிமானம் எதுவெனில் |
00:39 | தாய் மற்றும் குழந்தை இருவரும் தாய்ப்பாலூட்டுகின்ற நேரம் முழுவதும் சௌகர்யமாக இருக்க வேண்டும். |
00:47 | குழந்தையால், தாயின் மார்பகத்தை ஆழமாக இணைத்துக்கொண்டு, போதிய அளவு பாலை பெற முடிய வேண்டும். |
00:55 | லெய்டு பேக் எனும் பிடிமான முறையை கற்போம். |
01:00 | லெய்டு பேக் பிடிமானம் பின்வரும் நிலைமைகளில் பரிந்துரைக்கப்படுகிறது- க்ராஸ் கிரேடல் அல்லது கிரேடல் பிடிமானத்தை பயன்படுத்தி குழந்தையை மார்பகத்தோடு ஆழமாக இணைப்பது கடினமாக இருக்கும் போது, |
01:10 | அல்லது தாய்க்கு பெரிய மார்பகங்கள் இருந்தால் |
01:13 | அல்லது தாய்க்கு முதுகு வலி இருந்தால் |
01:16 | அல்லது தாய் சோர்வாக இருந்தால். |
01:19 | பாலூட்டுவதற்கு முன்பு, தாய் தன் கைகளை சோப்பு மற்றும் நீரினால் கழுவி, பின் தன் கைகளை ஒழுங்காக உலர்த்திக்கொள்ள வேண்டும். |
01:27 | பின் அவள், கொதிக்கவிடப்பட்டு, பின் குளிரவைக்கப்பட்ட, ஒரு குவளை நீரை அருந்த வேண்டும். |
01:32 | தாய்ப்பால் கொடுக்கின்ற தாய்மார்கள், நாளொன்றுக்கு சுமார் 750ல் இருந்து 850 மில்லிலிட்டர் வரை பாலை உற்பத்தி செய்வதால் அவர்கள், அதிக நீரை அருந்த வேண்டும். |
01:44 | அடுத்து, தாய் குழந்தைக்கு பாலூட்ட விரும்புகின்ற மார்பகத்தை திறக்க வேண்டும். |
01:50 | தனது ப்ரா மற்றும் ரவிக்கையின் அழுத்தம், மார்பகத்தின் மீது படாமலிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். |
01:55 | பின் தாய், தரை அல்லது ஒரு கட்டிலின் மீது சௌகர்யமாக படுத்துக்கொள்ள வேண்டும். |
02:01 | தலையணைகள் மூலம், அவளது தலை, கழுத்து மற்றும் மேல் முதுகுக்கு ஆதரவு தரப்பட வேண்டும். |
02:07 | இப்போது தாய் தயாராக இருப்பதால், குழந்தையை எவ்வாறு சரியாக பிடித்துக்கொள்வது என்று கற்போம். |
02:13 | தாய், பாலூட்ட போகின்ற மார்பகத்தின் பக்கமுள்ள கையினால் குழந்தையின் உடம்பை பிடித்துக்கொள்ள வேண்டும் |
02:20 | அவள் தனது மற்றொரு கையின் கட்டைவிரல் மற்றும் மற்ற விரல்களை வைத்து தனது குழந்தையினுடைய தலையின் கீழ்ப்பக்கத்தை பிடித்துக்கொள்ள வேண்டும். |
02:27 | இப்படத்திலுள்ள தாய், தனது குழந்தைக்கு, தன் வலதுபுற மார்பகத்திலிருந்து பாலூட்டுவாள். |
02:32 | அதனால், குழந்தையின் உடம்பை பிடித்துக்கொள்ள அவள் தனது வலது கையை பயன்படுத்துகிறாள். |
02:38 | அவள் தனது இடது கையின் கட்டைவிரல் மற்றும் மற்ற விரல்களை, தனது குழந்தையினுடைய தலையின் கீழ்ப்பக்கத்தை பிடித்துக்கொள்ள பயன்படுத்துகிறாள். |
02:46 | அடுத்து, குழந்தையின் தலையை பிடித்துக்கொள்வதற்கு தேவையான, தாயினுடைய கட்டைவிரல் மற்றும் மற்ற விரல்களின் சரியான நிலையை பற்றி பார்ப்போம். |
02:54 | தாயின் கட்டைவிரல், குழந்தையின் ஒரு காதிற்கு பின்புறமும், மற்ற விரல்கள், மற்றொரு காதின் பின்புறமும் இருக்க வேண்டும். |
03:02 | அவள் தனது கட்டைவிரல் அல்லது மற்ற விரல்களை, காதின் பின்புறத்திலிருந்து, குழந்தையின் கழுத்திற்கு இடம் மாற்றக்கூடாது. |
03:08 | அவள் தனது கையினால், குழந்தையின் தலையின் பின்புறத்தில் அழுத்தம் கொடுக்கக்கூடாது. ஏனெனில், அது தாய்ப்பாலூட்டலின் போது, குழந்தைக்கு அசௌகர்யமாக இருக்கும். |
03:20 | அடுத்து, குழந்தையின் உடம்பை எவ்வாறு சரியான நிலையில் வைப்பது என்று கற்போம். |
03:25 | குழந்தையின் வயிறு, தாயின் வயிற்றின் மீது படுமாறு, குழந்தையை தாயின் உடம்பின் மீது வைக்க வேண்டும். |
03:32 | மற்றும் குழந்தையின் தலை, தாயின் மார்பகத்தின் பக்கத்தில் இருக்க வேண்டும். |
03:38 | குழந்தை மற்றும் மார்பகத்தின் இடையே உள்ள தூரம் குறையும்போது, அது, குழந்தை மார்பகத்தை அடைய உதவி புரியும். |
03:44 | அதனால், குழந்தைக்கு ஆழமாக இணைத்துக்கொள்ள எளிதாக இருக்கும். |
03:49 | அடுத்து, குழந்தையின் முழு உடம்பு எந்த திசையில் பிடித்துக்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது இரண்டாவது முக்கிய குறிப்பாகும். |
03:56 | நாம் உணவு உண்கையில், நமது தலை, கழுத்து மற்றும் உடம்பு, ஒரே திசையில் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். |
04:05 | அவ்வாறே, தாய்பாலூட்டலின்போது குழந்தையின் தலை, கழுத்து மற்றும் உடம்பு, ஒரே திசையில் இருக்க வேண்டும். |
04:14 | இது குழந்தை பாலை விழுங்குவதற்கு எளிதாக இருக்கும். |
04:19 | குழந்தையின் உடம்பின் முழு முன்புற பகுதி, தாயின் உடம்பின் முன்புற பகுதியின் மீது வைக்கப்பட்டிருக்கும் வரை-குழந்தையை தாயின் உடம்பின் மீது எந்த திசையிலும் வைக்கலாம் என்பதை நினைவில் கொள்க. |
04:32 | மேலும், குழந்தையால் மார்பகத்தை எளிதாக அடைய முடிய வேண்டும். |
04:38 | குழந்தையின் உடம்பை வைத்திருக்கும் முறையில், மூன்றாவது குறிப்பிற்கு நாம் இப்போது வருகிறோம். |
04:42 | தாய் தன் குழந்தையின் முழு உடம்பையும் தாங்கிக்கொள்ள வேண்டும். |
04:47 | இல்லையெனில், குழந்தை மார்பகத்துடன் ஆழமாக இணைத்துக்கொள்ள அதிக முயற்சி எடுத்துக்கொள்ளும். |
04:54 | அடுத்து, குழந்தையின் மூக்கு மற்றும் கன்னத்தின் நிலைப்படுதலை பற்றி பார்ப்போம். |
04:59 | குழந்தையின் மூக்கும் முலைக்காம்பும் ஒரே கோட்டில் இருக்க வேண்டும். |
05:04 | மேலும் அவளது கன்னம் முன்னுக்கு கொண்டுவரப்பட்டு, மார்பகதிற்கு மிக அருகே வைக்கப்பட வேண்டும். |
05:09 | இது, குழந்தை, ஏரியோலாவின் கீழ்ப்பகுதியை அதிகமாக பற்றிக்கொள்வதை உறுதிப்படுத்தும். |
05:16 | அதனால், அதிக பாலை குடிக்க, குழந்தை தனது கீழ்த்தாடையை திறமையாகப் பயன்படுத்தும். |
05:21 | ஏரியோலா என்பது முலைக்காம்பை சுற்றியிருக்கின்ற கருமையான பகுதியாகும் என்பதை நினைவில் கொள்ளவும். |
05:27 | இப்போது, குழந்தை லெய்டு பேக் பிடிமானத்தில் உள்ளது மற்றும் தாய்ப்பாலைப் பெறுவதற்கு தயாராக இருக்கிறது. |
05:34 | இந்தப் பிடிமானத்தில், குழந்தை தாயின் மார்பகத்தோடு இயல்பாக, ஆழமாக இணைத்துக்கொள்ளும். |
05:40 | இதே தொடரின் மற்றொரு காணொளியில், குழந்தை மார்பகத்தோடு ஆழமாக இணைத்துக்கொள்ளுதல் பற்றி விளக்கப்பட்டுள்ளது. |
05:49 | குழந்தை மார்பகத்தோடு ஆழமாக இணைத்துக்கொண்டவுடன்-தாய் குழந்தையின் தலையை தன் கையிலிருந்து விடுவிக்கலாம். பின், தன் இரண்டு கைகளாலும் குழந்தையின் உடம்பை தாங்கிக்கொள்ள வேண்டும். |
06:02 | இதே நிலையில், தாய் சாய்ந்துகொண்டு தளர்வாக தாய்ப்பாலூட்ட வேண்டும். இந்த டுடோரியலின் முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். |
07:03 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது Arthi. நன்றி. |