Difference between revisions of "Digital-India/C2/Register-on-SBI-Pay-app/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with " {| border=1 | '''Time''' | '''Narration''' |- | 00:01 |வணக்கம் '''SBI Pay''' appல் பதிவு செய்தல் குறித்த ஸ்...")
 
 
(No difference)

Latest revision as of 11:21, 12 July 2017

Time Narration
00:01 வணக்கம் SBI Pay appல் பதிவு செய்தல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது-

உங்கள் Android smartphoneல் SBI Pay appஐ தரவிறக்கி நிறுவுதல்

00:18 நிரந்தர பதிவு செயல்முறையை முடித்தல்
00:21 SBI Pay என்பது ஒரு UPI app. SBI பிரத்தியேகமாக UPI பரிவர்த்தனை முறைக்காக இதை வடிவமைத்துள்ளது.
00:32 UPI என்பது Unified Payment Interface.
00:37 SBI Pay app மூலம் ஒருவர் பண பரிவர்த்தனைகள் செய்ய முடியும்.
00:44 எந்த Android smartphoneலும் SBI Pay appஐ தரவிறக்கி நிறுவ முடியும்.
00:52 ஒரு வங்கி கணக்கு உள்ள எவரும் SBI Pay appஐ பயன்படுத்தலாம்.
00:59 SBI Pay மூலம் ஒருவர் வங்கி அல்லது card தகவல்கள் ஏதும் இல்லாமல் பண பரிவர்த்தனைகள் செய்ய முடியும்.
01:08 UPI வசதியை தரும் எந்த வங்கியும் எந்த வாடிக்கையாளரும் SBI Payஐ பயன்படுத்தலாம்.
01:16 SBI Pay அதற்காக பணம் ஏதும் வசூலிக்காது.
01:21 பதிலாக, உங்கள் பணம் உங்கள் வங்கி கணக்கில் வட்டியை பெற்றுக்கொண்டிருக்கும்.
01:28 இப்போது SBI Pay appஐ எவ்வாறு தரவிறக்கி நிறுவுவது என காண்போம்.
01:35 முக்கிய குறிப்பு- உங்கள் வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்ட அதே மொபைல் எண்ணை SBI Pay appலும் பயன்படுத்தவும்.
01:45 உங்கள் Android smartphoneல் Google Playstore க்கு செல்லவும்
01:51 இங்கு காட்டப்படுவது போல SBI Pay என தேடவும்.
01:55 பல appகள் தெரியலாம். அதில் சரியான SBI Pay appக்கு செல்லவும்.
02:03 மாறாக, SBI Pay க்கான இந்த இணைப்பையும் நீங்கள் பயன்படுத்தலாம்
02:08 உங்கள் Android smartphoneல் SBI Pay app ஐ தரவிறக்கி நிறுவவும்.
02:16 நிறுவுதல் முடிந்த உடனே Open buttonஐ தேர்ந்தெடுத்து appஐ திறக்கலாம்.
02:24 ஆனால் இந்த appஐ பின்னர் பயன்படுத்துகிறீர்கள் எனில் இந்த திரையை காண்பீர்கள்.
02:29 இப்போது இந்த appஐ பயன்படுத்த கற்போம்.
02:34 முதல் படி உங்கள் வங்கி கணக்கை பதிவு செய்வது.
02:37 appல் Account Managementஐ தேர்ந்தெடுத்து .
02:42 பின் Add Accountஐ தேர்ந்தெடுக்கவும்.
02:45 இரு வழிகளிலும் நீங்கள் இந்த செய்தியுடன் இந்த பக்கத்தை காண்பீர்கள்.
02:51 SMS செய்திகளை அனுப்பவும் பார்க்கவும் இந்த app அனுமதி கேட்கும்.
02:57 இங்கு 3ல் 1 என்கிறது. Allow தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
03:03 அடுத்து, தொலைப்பேசி அழைப்புகளை உருவாக்கவும் நிர்வகிக்கவும் இந்த app அனுமதி கேட்கிறது.
03:09 இங்கு 3ல் 1 என்கிறது. மீண்டும், Allowஐ தேர்ந்தெடுக்கவும்.
03:16 கடைசியாக, deviceன் இடததை அனுக இந்த app அனுமதி கேட்கிறது.

மீண்டும் Allowஐ தேர்ந்தெடுக்கவும்

03:26 இப்போது உங்கள் device, PSPன் பதிவில் இல்லை என சொல்கிறது.
03:33 குறிப்பு- SBI Pay appஐ பயன்படுத்த உங்கள் mobile device, PSPல் பதிவாகியிருக்க வேண்டும்.
03:41 Accept தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
03:43 உறுதிப்படுத்துவதற்காக உங்கள் phoneல் இருந்து ஒரு செய்து அனுப்பப்படும்.
03:49 உங்கள் மொபைல் எண் கொண்ட ஒரு உறுதிப்படுத்தும் செய்தி திரையில் தோன்றும்.
03:55 இதை சரிபார்த்து பின் Yesஐ தேர்ந்தெடுக்கவும்.
03:59 இந்த app இப்போது நம்மை UPI Registration பக்கத்திற்கு கொண்டுவரும்
04:04 இங்குதான் உங்கள் VPA அதாவது Virtual Payment Addressஐ உருவாக்க வேண்டும்
04:13 எனவே, கொடுக்கப்பட்டுள்ள text boxல் உங்களுக்கு விருப்பமான virtual address ஐ கொடுக்கவும்.

நான் lata என கொடுக்கிறேன்

04:21 அதன் பின், First Name, Last Name மற்றும் Email fieldகளை நிரப்பவும்.
04:28 பின் பாதுகாப்பு நோக்கத்திற்காக Secret Question ஐயும் Answer ஐயும் தேர்ந்தெடுக்கவும்.
04:36 அதன் பின், இந்த drop-down பட்டியலில் இருந்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுக்கவும்.
04:41 நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியை தேர்ந்தெடுப்பது மிகவும் கட்டாயமானது.
04:47 SBI bank ஐ மட்டும்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை.
04:53 என் வங்கி கணக்கு State Bank of India ல் உள்ளதால் அதை நான் தேர்ந்தெடுக்கிறேன்.
05:00 கடைசியாக, I agree checkboxல் குறியிடவும்.
05:05 இப்போது, Next buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
05:09 இந்த app தானாகவே உங்கள் வங்கி கணக்கு எண்ணை கொண்டு வந்து இங்கு காட்டும்.
05:16 இப்போது, Register buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
05:18 உடனே, ஒரு செய்தி காட்டப்படும்.
05:21 இது சொல்வது உங்கள் UPI பதிவு வெற்றிகரமாக முடிந்துவிட்டது.
05:26 அதாவது உங்கள் நிரந்தர பதிவு முடிந்துவிட்டது.
05:33 இப்போது Ok buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
05:35 இந்த app இப்போது உங்களை அடுத்த பக்கத்திற்கு கொண்டுசெல்லும்.
05:40 இங்கு SBI Pay app passwordஐ அமைக்க வேண்டும்.
05:45 SBI Pay appஐ எப்போது நீங்கள் பயன்படுத்தினாலும் இந்த passwordஐ தான் பயன்படுத்த வேண்டும்.
05:52 உங்களுக்கு விருப்பமான passwordஐ கொடுக்கவும்.
05:56 அதனை தொடர்ந்து மற்றொரு Security Question ஐயும் Answerஐயும் தேர்ந்தெடுக்கவும்
06:01 இப்போது Set App Password buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
06:05 உடனே, ஒரு வெற்றி செய்தி காட்டப்படும். OK ஐ தேர்ந்தெடுக்கவும்
06:12 இந்த app உங்களை இந்த பக்கத்திற்கு கொண்டு வரலாம் அல்லது இல்லை என்றாலும் கவலை இல்லை.
06:18 இந்த பக்கத்தில், இந்த app நீங்கள் அமைத்த passwordஐ நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமா என கேட்கிறது.
06:25 உங்கள் தேவைக்கேற்றவாறு இங்குள்ள தேர்வுகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
06:31 அதன் பின், அடுத்த பக்கத்திற்கு இந்த app கொண்டுசெல்லும்.
06:35 நீங்கள் உருவாக்கிய passwordஐ இங்கு கொடுக்க வேண்டும்.
06:41 அதை கொடுத்து பின் Submit buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
06:47 அப்படி செய்வதால், உங்கள் நிரந்தர பதிவு முடிவடைகிறது.
06:52 SBI Pay appக்கான உங்கள் login மற்றும் passwordஐ வெற்றிகரமாக உருவாக்கிவிட்டீர்கள்.
07:00 அடுத்து, UPI Pin அல்லது MPINஐ அமைப்பதற்கான பக்கத்திற்கு செல்வீர்கள்.
07:08 SET UPI PIN தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
07:12 இந்த பக்கத்திற்கு app உங்களை கொண்டுவரும்.
07:15 இங்கு, நீங்கள் முன்னர் சேர்த்த அதே கணக்கு எண்ணை தேர்ந்தெடுக்கவும்.
07:22 முதல் முறை பயன்படுத்தும் போது ஒரே ஒரு கணக்கு மட்டும் காட்டப்படும்.
07:27 எனினும், மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி மற்றொரு வங்கி கணக்கையும் இந்த appல் சேர்க்கலாம்.
07:35 இதே மொபைல் எண்ணை மற்றொரு வங்கியிலும் பதிவு செய்துள்ளீர்கள் எனில் இது சாத்தியம்.
07:44 அதனால் தான் கணக்கு எண்ணை தேர்ந்தெடுக்கையில் கவனமாக இருக்க வேண்டும்.
07:49 பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கணக்கில் உள்ள Debit Cardன் கடைசி 6 எண்களைக் கொடுக்கவும்.
07:56 கடைசியாக, கலாவதி தேதியை கொடுத்து Submit buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
08:03 buffering குறி தெரிந்தால் சற்று காத்திருக்கவும்.
08:07 இப்போது இந்த பக்கத்திற்கு வருவீர்கள்.
08:11 இங்கு OTP மற்றும் MPINஐ கொடுக்க தேர்வுகளை பெறுவீர்கள்.
08:18 என் phoneல் நான் SMS மூலம் ஒரு OTP ஐ பெற்றுள்ளேன்.
08:23 அதை இங்கு கொடுக்கிறேன்.
08:27 அடுத்து, MPINஐ கொடுக்கவும். அது நீங்கள் உருவாக்கிய password.
08:32 பின் Submit buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
08:35 buffering குறி தெரிந்தால் சற்று காத்திருக்கவும்.
08:39 MPIN இப்போது வெற்றிகரமாக உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்படுகிறது.
08:43 Back buttonஐ தேர்ந்தெடுக்கவும்.
08:45 இந்த app இப்போது நம்மை Main menuக்கு கொண்டுவருகிறது.
08:50 இந்நிலையில், நிரந்தர பதிவிற்கான அனைத்து செயல்முறைகளும் முடிகின்றன.
08:55 SBI Pay ஆனது மின்னணு பண பரிவர்த்தனை முறையில் ஒரு மயிற்கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
09:02 SBI Pay app ஆனது பண பரிவர்த்தனைக்கான ஒரு எளிய முறை.
09:08 SBI Pay appல் ஒரு பரிவர்த்தனைக்கு 50 பைசாவை விட குறைவாகவே செலவாகும்.
09:15 செலவு குறைவாக இருப்பதால் சிறுத்தொகைகளுக்கான ரொக்கமில்லா பரிவர்த்தனைகளுக்கும் இதை பயன்படுத்தலாம்.
09:22 சிறுதொகை பரிவர்த்தனைகளான – மளிகை கடை கட்டணம் அல்லது காய்கறி கடை கட்டணம் ஆகியவை இப்போது சிறு கடைக்காரர்களுக்கும் நுகர்வோருக்கும் சாத்தியமாகும்
09:37 சாதாரண மனிதனுக்கான பாதுகாப்பு கட்டுப்பாடுகளை SBI Pay app தளர்த்தியுள்ளது.
09:44 உங்கள் வங்கி கணக்கு பற்றிய எந்த ஒரு தகவலையும் Virtual Payment Address கொடுக்காது.
09:51 மேலும், இரு வெவ்வேறு PINகளை கொடுத்து அங்கீகரிப்பதும் உங்கள் smartphoneலேயே நடக்கிறது.
10:00 SBI Pay என்பது IMPS platformஐ அடிப்படையாக கொண்ட ஒரு UPI app.
10:06 இது 24 மணிநேரமும் 7 நாளும் வேலைசெய்கிறது. எனவே பரிவர்த்தனைகளை உடனே செய்யலாம்.
10:13 எப்போது வேண்டுமானாலும் பரிவர்த்தனைகளை செய்யலாம். விடுமுறை அல்லது காத்திருப்பு என எந்த கட்டுப்பாடும் இல்லை.
10:20 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
10:24 சுருங்க சொல்ல
10:26 இந்த டுடோரியலில் நாம் கற்றது - ஒரு Android smartphoneல் SBI Pay appஐ தரவிறக்கி நிறுவுதல்
10:33 நிரந்தர பதிவு செயல்முறையை முடித்தல்
10:37 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு பல்வேறு தகவல் மற்றும் பொது விழிப்புணர்வு தலைப்புகளில் ஆடியோ வீடியோ டுடோரியல்களை உருவாக்குகிறது.
10:48 செய்முறை வகுப்புகளும் நடத்துகிறது.
10:51 அனைத்து தலைப்புகளையும் கொண்ட பட்டியலைக் காண http://spoken-tutorial.orgக்கு செல்லவும்
10:58 மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் செய்யவும். இந்த டுடோரியல் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.
11:05 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Nancyvarkey, Priyacst