Digital-India/C2/Register-on-SBI-Pay-app/Tamil
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | வணக்கம் SBI Pay appல் பதிவு செய்தல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது-
உங்கள் Android smartphoneல் SBI Pay appஐ தரவிறக்கி நிறுவுதல் |
00:18 | நிரந்தர பதிவு செயல்முறையை முடித்தல் |
00:21 | SBI Pay என்பது ஒரு UPI app. SBI பிரத்தியேகமாக UPI பரிவர்த்தனை முறைக்காக இதை வடிவமைத்துள்ளது. |
00:32 | UPI என்பது Unified Payment Interface. |
00:37 | SBI Pay app மூலம் ஒருவர் பண பரிவர்த்தனைகள் செய்ய முடியும். |
00:44 | எந்த Android smartphoneலும் SBI Pay appஐ தரவிறக்கி நிறுவ முடியும். |
00:52 | ஒரு வங்கி கணக்கு உள்ள எவரும் SBI Pay appஐ பயன்படுத்தலாம். |
00:59 | SBI Pay மூலம் ஒருவர் வங்கி அல்லது card தகவல்கள் ஏதும் இல்லாமல் பண பரிவர்த்தனைகள் செய்ய முடியும். |
01:08 | UPI வசதியை தரும் எந்த வங்கியும் எந்த வாடிக்கையாளரும் SBI Payஐ பயன்படுத்தலாம். |
01:16 | SBI Pay அதற்காக பணம் ஏதும் வசூலிக்காது. |
01:21 | பதிலாக, உங்கள் பணம் உங்கள் வங்கி கணக்கில் வட்டியை பெற்றுக்கொண்டிருக்கும். |
01:28 | இப்போது SBI Pay appஐ எவ்வாறு தரவிறக்கி நிறுவுவது என காண்போம். |
01:35 | முக்கிய குறிப்பு- உங்கள் வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்ட அதே மொபைல் எண்ணை SBI Pay appலும் பயன்படுத்தவும். |
01:45 | உங்கள் Android smartphoneல் Google Playstore க்கு செல்லவும் |
01:51 | இங்கு காட்டப்படுவது போல SBI Pay என தேடவும். |
01:55 | பல appகள் தெரியலாம். அதில் சரியான SBI Pay appக்கு செல்லவும். |
02:03 | மாறாக, SBI Pay க்கான இந்த இணைப்பையும் நீங்கள் பயன்படுத்தலாம் |
02:08 | உங்கள் Android smartphoneல் SBI Pay app ஐ தரவிறக்கி நிறுவவும். |
02:16 | நிறுவுதல் முடிந்த உடனே Open buttonஐ தேர்ந்தெடுத்து appஐ திறக்கலாம். |
02:24 | ஆனால் இந்த appஐ பின்னர் பயன்படுத்துகிறீர்கள் எனில் இந்த திரையை காண்பீர்கள். |
02:29 | இப்போது இந்த appஐ பயன்படுத்த கற்போம். |
02:34 | முதல் படி உங்கள் வங்கி கணக்கை பதிவு செய்வது. |
02:37 | appல் Account Managementஐ தேர்ந்தெடுத்து . |
02:42 | பின் Add Accountஐ தேர்ந்தெடுக்கவும். |
02:45 | இரு வழிகளிலும் நீங்கள் இந்த செய்தியுடன் இந்த பக்கத்தை காண்பீர்கள். |
02:51 | SMS செய்திகளை அனுப்பவும் பார்க்கவும் இந்த app அனுமதி கேட்கும். |
02:57 | இங்கு 3ல் 1 என்கிறது. Allow தேர்வை தேர்ந்தெடுக்கவும். |
03:03 | அடுத்து, தொலைப்பேசி அழைப்புகளை உருவாக்கவும் நிர்வகிக்கவும் இந்த app அனுமதி கேட்கிறது. |
03:09 | இங்கு 3ல் 1 என்கிறது. மீண்டும், Allowஐ தேர்ந்தெடுக்கவும். |
03:16 | கடைசியாக, deviceன் இடததை அனுக இந்த app அனுமதி கேட்கிறது.
மீண்டும் Allowஐ தேர்ந்தெடுக்கவும் |
03:26 | இப்போது உங்கள் device, PSPன் பதிவில் இல்லை என சொல்கிறது. |
03:33 | குறிப்பு- SBI Pay appஐ பயன்படுத்த உங்கள் mobile device, PSPல் பதிவாகியிருக்க வேண்டும். |
03:41 | Accept தேர்வை தேர்ந்தெடுக்கவும். |
03:43 | உறுதிப்படுத்துவதற்காக உங்கள் phoneல் இருந்து ஒரு செய்து அனுப்பப்படும். |
03:49 | உங்கள் மொபைல் எண் கொண்ட ஒரு உறுதிப்படுத்தும் செய்தி திரையில் தோன்றும். |
03:55 | இதை சரிபார்த்து பின் Yesஐ தேர்ந்தெடுக்கவும். |
03:59 | இந்த app இப்போது நம்மை UPI Registration பக்கத்திற்கு கொண்டுவரும் |
04:04 | இங்குதான் உங்கள் VPA அதாவது Virtual Payment Addressஐ உருவாக்க வேண்டும் |
04:13 | எனவே, கொடுக்கப்பட்டுள்ள text boxல் உங்களுக்கு விருப்பமான virtual address ஐ கொடுக்கவும்.
நான் lata என கொடுக்கிறேன் |
04:21 | அதன் பின், First Name, Last Name மற்றும் Email fieldகளை நிரப்பவும். |
04:28 | பின் பாதுகாப்பு நோக்கத்திற்காக Secret Question ஐயும் Answer ஐயும் தேர்ந்தெடுக்கவும். |
04:36 | அதன் பின், இந்த drop-down பட்டியலில் இருந்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுக்கவும். |
04:41 | நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியை தேர்ந்தெடுப்பது மிகவும் கட்டாயமானது. |
04:47 | SBI bank ஐ மட்டும்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. |
04:53 | என் வங்கி கணக்கு State Bank of India ல் உள்ளதால் அதை நான் தேர்ந்தெடுக்கிறேன். |
05:00 | கடைசியாக, I agree checkboxல் குறியிடவும். |
05:05 | இப்போது, Next buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
05:09 | இந்த app தானாகவே உங்கள் வங்கி கணக்கு எண்ணை கொண்டு வந்து இங்கு காட்டும். |
05:16 | இப்போது, Register buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
05:18 | உடனே, ஒரு செய்தி காட்டப்படும். |
05:21 | இது சொல்வது உங்கள் UPI பதிவு வெற்றிகரமாக முடிந்துவிட்டது. |
05:26 | அதாவது உங்கள் நிரந்தர பதிவு முடிந்துவிட்டது. |
05:33 | இப்போது Ok buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
05:35 | இந்த app இப்போது உங்களை அடுத்த பக்கத்திற்கு கொண்டுசெல்லும். |
05:40 | இங்கு SBI Pay app passwordஐ அமைக்க வேண்டும். |
05:45 | SBI Pay appஐ எப்போது நீங்கள் பயன்படுத்தினாலும் இந்த passwordஐ தான் பயன்படுத்த வேண்டும். |
05:52 | உங்களுக்கு விருப்பமான passwordஐ கொடுக்கவும். |
05:56 | அதனை தொடர்ந்து மற்றொரு Security Question ஐயும் Answerஐயும் தேர்ந்தெடுக்கவும் |
06:01 | இப்போது Set App Password buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
06:05 | உடனே, ஒரு வெற்றி செய்தி காட்டப்படும். OK ஐ தேர்ந்தெடுக்கவும் |
06:12 | இந்த app உங்களை இந்த பக்கத்திற்கு கொண்டு வரலாம் அல்லது இல்லை என்றாலும் கவலை இல்லை. |
06:18 | இந்த பக்கத்தில், இந்த app நீங்கள் அமைத்த passwordஐ நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமா என கேட்கிறது. |
06:25 | உங்கள் தேவைக்கேற்றவாறு இங்குள்ள தேர்வுகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். |
06:31 | அதன் பின், அடுத்த பக்கத்திற்கு இந்த app கொண்டுசெல்லும். |
06:35 | நீங்கள் உருவாக்கிய passwordஐ இங்கு கொடுக்க வேண்டும். |
06:41 | அதை கொடுத்து பின் Submit buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
06:47 | அப்படி செய்வதால், உங்கள் நிரந்தர பதிவு முடிவடைகிறது. |
06:52 | SBI Pay appக்கான உங்கள் login மற்றும் passwordஐ வெற்றிகரமாக உருவாக்கிவிட்டீர்கள். |
07:00 | அடுத்து, UPI Pin அல்லது MPINஐ அமைப்பதற்கான பக்கத்திற்கு செல்வீர்கள். |
07:08 | SET UPI PIN தேர்வை தேர்ந்தெடுக்கவும். |
07:12 | இந்த பக்கத்திற்கு app உங்களை கொண்டுவரும். |
07:15 | இங்கு, நீங்கள் முன்னர் சேர்த்த அதே கணக்கு எண்ணை தேர்ந்தெடுக்கவும். |
07:22 | முதல் முறை பயன்படுத்தும் போது ஒரே ஒரு கணக்கு மட்டும் காட்டப்படும். |
07:27 | எனினும், மேற்சொன்ன வழிமுறைகளை பின்பற்றி மற்றொரு வங்கி கணக்கையும் இந்த appல் சேர்க்கலாம். |
07:35 | இதே மொபைல் எண்ணை மற்றொரு வங்கியிலும் பதிவு செய்துள்ளீர்கள் எனில் இது சாத்தியம். |
07:44 | அதனால் தான் கணக்கு எண்ணை தேர்ந்தெடுக்கையில் கவனமாக இருக்க வேண்டும். |
07:49 | பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கணக்கில் உள்ள Debit Cardன் கடைசி 6 எண்களைக் கொடுக்கவும். |
07:56 | கடைசியாக, கலாவதி தேதியை கொடுத்து Submit buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
08:03 | buffering குறி தெரிந்தால் சற்று காத்திருக்கவும். |
08:07 | இப்போது இந்த பக்கத்திற்கு வருவீர்கள். |
08:11 | இங்கு OTP மற்றும் MPINஐ கொடுக்க தேர்வுகளை பெறுவீர்கள். |
08:18 | என் phoneல் நான் SMS மூலம் ஒரு OTP ஐ பெற்றுள்ளேன். |
08:23 | அதை இங்கு கொடுக்கிறேன். |
08:27 | அடுத்து, MPINஐ கொடுக்கவும். அது நீங்கள் உருவாக்கிய password. |
08:32 | பின் Submit buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
08:35 | buffering குறி தெரிந்தால் சற்று காத்திருக்கவும். |
08:39 | MPIN இப்போது வெற்றிகரமாக உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்படுகிறது. |
08:43 | Back buttonஐ தேர்ந்தெடுக்கவும். |
08:45 | இந்த app இப்போது நம்மை Main menuக்கு கொண்டுவருகிறது. |
08:50 | இந்நிலையில், நிரந்தர பதிவிற்கான அனைத்து செயல்முறைகளும் முடிகின்றன. |
08:55 | SBI Pay ஆனது மின்னணு பண பரிவர்த்தனை முறையில் ஒரு மயிற்கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
09:02 | SBI Pay app ஆனது பண பரிவர்த்தனைக்கான ஒரு எளிய முறை. |
09:08 | SBI Pay appல் ஒரு பரிவர்த்தனைக்கு 50 பைசாவை விட குறைவாகவே செலவாகும். |
09:15 | செலவு குறைவாக இருப்பதால் சிறுத்தொகைகளுக்கான ரொக்கமில்லா பரிவர்த்தனைகளுக்கும் இதை பயன்படுத்தலாம். |
09:22 | சிறுதொகை பரிவர்த்தனைகளான – மளிகை கடை கட்டணம் அல்லது காய்கறி கடை கட்டணம் ஆகியவை இப்போது சிறு கடைக்காரர்களுக்கும் நுகர்வோருக்கும் சாத்தியமாகும் |
09:37 | சாதாரண மனிதனுக்கான பாதுகாப்பு கட்டுப்பாடுகளை SBI Pay app தளர்த்தியுள்ளது. |
09:44 | உங்கள் வங்கி கணக்கு பற்றிய எந்த ஒரு தகவலையும் Virtual Payment Address கொடுக்காது. |
09:51 | மேலும், இரு வெவ்வேறு PINகளை கொடுத்து அங்கீகரிப்பதும் உங்கள் smartphoneலேயே நடக்கிறது. |
10:00 | SBI Pay என்பது IMPS platformஐ அடிப்படையாக கொண்ட ஒரு UPI app. |
10:06 | இது 24 மணிநேரமும் 7 நாளும் வேலைசெய்கிறது. எனவே பரிவர்த்தனைகளை உடனே செய்யலாம். |
10:13 | எப்போது வேண்டுமானாலும் பரிவர்த்தனைகளை செய்யலாம். விடுமுறை அல்லது காத்திருப்பு என எந்த கட்டுப்பாடும் இல்லை. |
10:20 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
10:24 | சுருங்க சொல்ல |
10:26 | இந்த டுடோரியலில் நாம் கற்றது - ஒரு Android smartphoneல் SBI Pay appஐ தரவிறக்கி நிறுவுதல் |
10:33 | நிரந்தர பதிவு செயல்முறையை முடித்தல் |
10:37 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு பல்வேறு தகவல் மற்றும் பொது விழிப்புணர்வு தலைப்புகளில் ஆடியோ வீடியோ டுடோரியல்களை உருவாக்குகிறது. |
10:48 | செய்முறை வகுப்புகளும் நடத்துகிறது. |
10:51 | அனைத்து தலைப்புகளையும் கொண்ட பட்டியலைக் காண http://spoken-tutorial.orgக்கு செல்லவும் |
10:58 | மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் செய்யவும். இந்த டுடோரியல் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். |
11:05 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |