Difference between revisions of "Health-and-Nutrition/C2/Importance-of-breastfeeding/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{|border=1 | <center>Time</center> |<center>Narration</center> |- | 00:00 | தாய்ப்பாலூட்டலின் முக்கியத்துவம் க...") |
|||
Line 511: | Line 511: | ||
| இவை அனைத்தும் இதே தொடரின் வேறொரு tutorialலில் விளக்கப்பட்டுள்ளது | | இவை அனைத்தும் இதே தொடரின் வேறொரு tutorialலில் விளக்கப்பட்டுள்ளது | ||
− | | | + | |- |
| 12:44 | | 12:44 | ||
| இத்துடன் இந்த tutorial லின் முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த tutorial லை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஆர்த்தி. நன்றி. | | இத்துடன் இந்த tutorial லின் முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த tutorial லை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஆர்த்தி. நன்றி. | ||
− | |||
|} | |} |
Latest revision as of 18:12, 19 April 2021
|
|
00:00 | தாய்ப்பாலூட்டலின் முக்கியத்துவம் குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
00:07 | இந்த tutorial லில் நாம் கற்க போவது: |
00:09 | தாய்ப்பாலூட்டலின் முக்கியத்துவம் |
00:12 | குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்குமான தாய்ப்பாலூட்டலின் நன்மைகள் |
00:17 | தாய்ப்பாலூட்டுதல் இன்றியமையாதது |
00:19 | குழந்தை பிறந்தலிலுருந்து தொடங்கி அதன் இரண்டாம் பிறந்தநாள் அல்லது அதன் மேலும் கொடுக்கக் கூடியது |
00:26 | பச்சிளம் குழந்தைக்கான ஆரோக்யமான ஆரம்பம் தாய்ப்பாலூட்டலின் மூலம் கிடைக்கிறது |
00:31 | அது குழந்தை மற்றும் தாயின் உடனடி மற்றும் எதிர்கால ஆரோக்கியத்தையும் நிர்ணயிக்கிறது |
00:38 | அதன் நன்மைகள் இருவருக்கும் வாழ்நாள் காலம் முழுவதும் நீடிக்கிறது |
00:43 | ஊட்டசத்து குறைபாடுள்ள தாய்மார்கள் கூட தங்களது குழந்தைக்கு தாய்ப்பாலூட்டலாம் |
00:49 | கர்ப காலத்தின் போது மார்பகத்தின் அளவு அதிகரிக்கிறது |
00:53 | பாலை உற்பத்தி செய்யும் திசுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் இது ஏற்படுகிறது |
00:59 | எனினும் மார்பகத்தின் இறுதி அளவு பாலின் உற்பத்தியை பாதிக்காது |
01:07 | தாய்ப்பாலூட்டல் குழந்தை பிறந்த ஒரு மணிநேரத்திற்குள் தொடங்கப்பட வேண்டும் |
01:13 | இது தாய்ப்பால் வழங்குதலை அதிகரிக்கிறது |
01:17 | ஆதலால், பிரத்யேக தாய்ப்பாலூட்டல் முதல் 6 மாதங்களில் அதிகரிக்கிறது |
01:24 | தாய்ப்பாலூட்டுதல் மேலும் 2 வருடங்களுக்கு நீடிக்க இது உதவுகிறது |
01:31 | பிறந்த 1 மணி நேரத்திற்குள் தாய்ப்பாலூட்டப்படும் குழந்தைகள் இறக்கும் ஆபத்து குறைவாக உள்ளது |
01:39 | தாமதமான தாய்ப்பாலூட்டல் பச்சிளம் குழந்தைகளுக்கான வியாதிகள் உண்டாக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது |
01:47 | எதுத்துக்காட்டாக: நீரிழிவு நோய், உடல் பருமன் மற்றும் உயர் இரத்த அழுத்தம் |
01:53 | முன்கூட்டியே தாய்ப்பாலூட்ட ஆரம்பிப்பது, குழந்தைக்கு colostrum கிடைப்பதை உறுதிப்படுத்துகிறது |
02:00 | Colostrum என்பது குழந்தை பெற்றெடுத்த பிறகு சேகரிக்கப்படும் முதல் பாலாகும் |
02:07 | குழந்தைகளுக்கு, இது முதன்மையான சக்தி மற்றும் ஊட்டச்சத்து ஆகும் |
02:13 | இது முக்கியமாக, குழந்தை பிறந்த முதல் சில நாட்களுக்கு மிகவும் அவசியமாகும் |
02:20 | தொற்று நோய்களை எதிர்த்து போராடக்கூடிய கூறுகள் இதில் அதிகம் உள்ளன |
02:24 | Vitamin A மற்றும் |
02:26 | நல்ல கொழுப்புகள் |
02:28 | வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு தேவையானவையும் colostrum மில் அதிகம் உள்ளன |
02:35 | பழைய கழிவுகளை நீக்கக்கூடிய பண்பு colostrum மில் உள்ளது |
02:42 | Colostrum மின் விரிவான பல நன்மைகள் வேறொரு tutorial லில் விளக்கப்பட்டுள்ளது |
02:48 | மேலும் விவரங்களுக்கு எங்கள் வலைத்தளத்தை காணவும் |
02:52 | முதல் 6 மாதங்களுக்கு பிரத்யேக தாய்ப்பாலூட்ட வேண்டும் என்பதை நினைவில் கொள்க |
02:59 | தாய்ப்பால் என்பது தனித்துவமான மற்றும் போலியாக செய்யமுடியாத இணையில்லா உணவாகும் |
03:05 | குழந்தைக்கு 6 மாதங்கள் முடிந்தவுடன், கூடுதல் உணவு தொடங்கப்பட வேண்டும் |
03:12 | அது தாய்ப்பாலுடன் சேர்த்து கொடுக்கப்பட வேண்டும் |
03:16 | தாய்ப்பாலூட்டல் 2 வயது வரை அல்லது அதற்கு மேலும் தொடரப்பட வேண்டும் |
03:22 | தாய்ப்பாலூட்டுவதால் குழந்தைக்கு பல நன்மைகள் உண்டு |
03:27 | தாய்ப்பாலின் ஊட்டச்சத்துக் கலவை குழந்தையின் ஜீரணத்திற்கு ஏற்றது |
03:34 | தாய்ப்பாலின் மூலம் குழந்தைகளுக்கு antibodies கிடைக்கிறது |
03:38 | குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கி தொற்றுகளின் ஆபத்தை குறைக்கிறது |
03:46 | மேலும் குழந்தைகளுக்கு ஒவ்வாமை வராமல் தடுக்கிறது |
03:52 | வளர்ச்சிக்கு தேவையானவையும் தாய்ப்பாலில் உள்ளது |
03:56 | குழந்தைகளின் குடல் உறுப்பு மேம்பாட்டிற்கு இது உதவுகிறது |
04:02 | குழந்தையின் குடலில் நல்ல bacteria வளர இது உதவுகிறது |
04:08 | ஆதலால், குடல் வீக்கம் மற்றும் தொற்றுக்களில் இருந்து குழந்தைகளை இது காக்கிறது |
04:16 | மேலும், உடலின் பல்வேறு உறுப்புகள் மேம்பட இது உதவுகிறது |
04:23 | தாய்ப்பாலூட்டுதல் வயிற்றுப்போக்கின் ஆபத்தை குறைக்கிறது |
04:27 | மேலும் சில நன்மைகள், காது நோய்தொற்று |
04:31 | மற்றும் பல் சொத்தையிலிருந்து தடுப்பது |
04:34 | ஈறுகளை மேம்படுத்துதல் மற்றும் பற்களை வலிமை படுத்துதல் மேலும் சில உதாரணங்கள் ஆகும் |
04:41 | வாழ்வின் பிற்காலத்தில் ஏற்படும் சில வியாதிகளின் ஆபத்தையும் இது குறைக்கிறது |
04:48 | எதுத்துக்காட்டாக: நீரிழிவு நோய், உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த புற்றுநோய் |
04:56 | சுவாச சம்பந்தமான வியாதிகளான ஆஸ்மா மற்றும் நிமோனியா குறைகிறது |
05:05 | 1 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் திடீர் மரணத்தை தாய்ப்பாலூட்டுதல் குறைக்கிறது |
05:14 | தாய்ப்பாலூட்டப்பட்ட குழந்தைகளுக்கு atopic eczema கான ஆபத்தும் குறைகிறது |
05:22 | Eczema என்பது சருமத்தில் ஏற்படும் சிவந்த, நமைச்சல் ஏற்படக்கூடிய கடிமான திட்டுக்களாகும் |
05:30 | தாய்ப்பாலூட்டப்பட்ட குழந்தைகள் கூட நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர் |
05:39 | தாய்ப்பாலூட்டப்பட்ட குழந்தைகள் தங்கள் பசி அறிகுறிகளை அறிந்து கொள்கின்றனர் |
05:44 | தாய்ப்பாலில் பசியை கட்டுப்படுத்தக்கூடிய hormoneகள் உள்ளன |
05:48 | அந்த hormoneகள் பசியையும் பசி நிறைவுபெற்றதையும் உணர உதவி புரிகிறது |
05:57 | இந்த சுய கட்டுப்பாடு, தாய்ப்பால் கொடுக்கப்படாத குழந்தைகளிடம் சரியாக இருப்பதில்லை |
06:03 | இறுதியாக, இது தேவைக்கு அதிகமாக உண்ணுதல், |
06:07 | உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயை உண்டாக்குறது |
06:11 | தாய்ப்பாலூட்டுதல் மூலையிலும் பலன்களை ஏற்படுத்துகிறது |
06:15 | தாய்ப்பாலிலுள்ள கூறுகள், மூளைyin வளர்ச்சி மற்றும் முதிர்ச்சியடைவதற்கு உதவுகிறது |
06:23 | தாய்ப்பாலூட்டப்பட்ட குழந்தைகளுக்கு அதிக அறிவு திறன் மற்றும் மற்ற திறன்களும் உள்ளன |
06:28 | தாய்ப்பாலின் நன்மைகள் குறைபிரசவ குழந்தைகளுக்கு மேலும் அதிகமாக கிடைக்கிறது |
06:34 | மார்பகத்தை உறுஞ்சுவதினால் இந்த குழந்தைகளுக்கு மூச்சுத்திறன் மேம்படுகிறது |
06:40 | இந்த குழந்தைகள் குடல் தொற்றுக்கு ஆளாக வாய்ப்புள்ளது |
06:47 | எடுத்துக்காட்டாக: வயிற்றுப்போக்கு மற்றும் Necrotizing enterocolitis எனப்படும் NEC |
06:56 | NEC என்பது நோய் தொற்றால் குடலுக்கு ஏற்படக்கூடிய ஒரு தீவிர வியாதியாகும் |
07:05 | தாய்ப்பால், குறைப்பிரசவ குழந்தைகளை நோய் தொற்றிலிருந்து காக்கிறது |
07:11 | குறைப்பிரசவ குழந்தைகளின் தாய்மார்களிடமிருந்து கிடைக்கும் பாலில்
நோய்தொற்றிலிருந்து பாதுகாக்கக்கூடிய புரதங்கள் உள்ளன |
07:19 | அதில் குடலை பாதுகாக்க கூடிய பொருட்களும் உள்ளன |
07:25 | அதிக அளவிலான குறிப்பிட்ட amino acidகள் மற்றும் நல்ல பாக்டீரியாக்களும் நிறைந்துள்ளன |
07:33 | குறைபிரசவ குழந்தைகளின் வளர்ச்சிக்கு இந்த amino acidகள் தேவை |
07:40 | ஆதலால், தாய்ப்பால் நோய்த்தொற்றிலிருந்து காத்து |
07:43 | எடை அதிகரிக்க உதவுகிறது |
07:46 | குறைபிரசவத்தினால் ஏற்படும் நீண்ட கால பிரச்சனையையும் தாய்ப்பால் குறைக்கிறது |
07:52 | எடுத்துக்காட்டாக: நுரையீரல் மற்றும் கண் சம்மந்தமான பிரச்சனை |
07:57 | ஆதலால், குறைபிரசவ குழந்தைகளுக்கு அதிகமான தாய்ப்பால் கிடைக்க வேண்டும் |
08:04 | கங்காரு மதர் கேர் என்று சொல்லக்கூடிய KMC கூட குறைபிரசவ குழந்தைகளுக்கு உபயோகமானது |
08:12 | அடிக்கடி தாய்ப்பாலூட்டுதல் மற்றும் அதிக நேரம் தாய்ப்பாலூட்டுதலை இது மேம்படுத்துகிறது |
08:18 | KMC இன் போது கொடுக்கப்படும் தோலுடன் தோல் தொடர்பானது குழந்தையின் உடல் வெப்பநிலையை பராமரிக்க உதவுகிறது |
08:27 | மேலும் குழந்தையின் இதயத்துடிப்பு மற்றும் இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை நிலைப்படுத்துவதற்கு உதவுகிறது |
08:35 | கங்காரு மதர் கேரின் செயல்முறை வேறொரு tutorial லில் விளக்கப்பட்டுள்ளது |
08:42 | தாய்ப்பாலூட்டுதல் குழந்தைகளுக்கு மட்டும் அல்லாமல், தாய்மார்களுக்கும் நன்மைகளை தருகிறது |
08:48 | இந்த நன்மைகள் உடனடி மற்றும் நீண்ட காலத்திற்கு ஆகும் |
08:53 | குழந்தை பிறந்தவுடன் உடனடியாக தாய்ப்பாலூட்டுதல் ரத்தப்போக்கை குறைக்கிறது |
08:59 | உடலில் oxytocin hormoneனின் அளவை அதிகரிக்கிறது |
09:05 | நஞ்சுக்கொடி உடலில் இருந்து வெளியே வருவதற்கு இது உதவுகிறது |
09:09 | இதன் விளைவாக கருப்பை சுருங்குதல் மேம்பட்டு இரத்த போக்கு குறைகிறது |
09:17 | ஆதலால், தாய்மார்களுக்கு இரத்த சோகை வராமல் தடுக்கிறது |
09:21 | தாய்ப்பாலூட்டுவதினால், தாய்மார்களுக்கு மன ரீதியான நன்மைகள் உள்ளன |
09:27 | அடிக்கடி தோலுடன் தோல் தொடர்பு ஏற்படுவதினால் தாய்க்கும் குழந்தைக்குமான பந்தம் மேம்படுகிறது |
09:35 | இந்த பந்தம் தாயை தாய்ப்பாலூட்ட தயாராக்குகிறது |
09:39 | இறுதியாக, மகப்பேற்று இறுக்கத்தையும் மனசோர்வையும் குறைக்கிறது |
09:46 | தாய்ப்பாலூட்டுதல் தாய்மார்களுக்கு நீண்ட கால நன்மைகளை தருகிறது |
09:51 | பிற்காலத்தில், எலும்புகள் பலவீனமாவதை தடுக்கிறது |
09:56 | மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பையின் புற்றுநோய் வருவது குறைகிறது |
10:02 | கர்ப காலத்தின் போது, பெண்ககளின் உடல் உள்ளுறுப்புகளில் கொழுப்பு சேர்கிறது |
10:08 | அதாவது, வயிறு, குடல் மற்றும் கல்லீரலில் |
10:12 | இந்த கொழுப்பானது, வயிறு மற்றும் அடிவயிற்று பகுதிகளில் ஒளிந்திருக்கிறது |
10:18 | அதிகப்படியான கொழுப்பு, இன்சுலின் எதிர்ப்பு, |
10:23 | நீரிழுவு நோய் மற்றும் உடல் பருமனை விளைவிக்கிறது |
10:26 | தாய்ப்பாலூட்டுதல், பெண்களிடம் இந்த கொழுப்பை குறைக்க உதவுகிறது |
10:31 | உடல் பருமன், இரத்த கொதிப்பு மற்றும் இதய நோய் வருவதை குறைக்கிறது |
10:37 | பிரத்யேக தாய்ப்பாலூட்டல் இயற்கையான கருத்தடையாக அமையலாம் |
10:44 | எனினும் தம்பதியர், பிரசவத்தின் 6 வாரங்களுக்கு பின் கருத்தடையை பயன்படுத்த வேண்டும் |
10:50 | இரண்டு பிரசவத்திற்கான இடைவெளி இருக்க இது உதவுகிறது |
10:56 | தாய்ப்பாலூட்டுவதலினால் சில பொருளாதார நன்மைகளும் உள்ளன |
11:00 | தாய்ப்பால் இலவசமாக கிடைக்கிறது மற்றும் குழந்தைக்கும் சிறந்தது |
11:07 | பவுடர் பால், புட்டி பால் மற்றும் செயற்கை காம்புகளுக்கான செலவு இல்லை |
11:15 | தாய்ப்பால் தயாரிப்பதற்கான அதிகப்படியான நேரமும் செலவிடப்படுவதில்லை |
11:20 | தாய்ப்பால் தயாரிக்க வெந்நீர், பாத்திரம் மற்றும் எரிபொருள் தேவைப்படுவதில்லை |
11:28 | அசுத்த நீர் மற்றும் அசுத்தமான புட்டி பால் குழந்தையை நோய்வாய்ப்பட செய்கிறது |
11:35 | ஆதலால், தாய்க்கும் குழந்தைக்குமான சுகாதர பாராமரிப்பிற்கான செலவு பிற்காலத்தில் குறைகிறது |
11:42 | தாய்ப்பாலூட்டப்படுவதினால் பல சுற்றுசூழல் நன்மைகளும் உள்ளன |
11:47 | முதலில், தாய்ப்பாலை பெட்டியினுள் அடைத்தல் மற்றும் இடம் மாற்றுதல் போன்ற வேலைகள் இல்லை |
11:54 | அது எந்த கழிவு, |
11:57 | புகை மற்றும் சத்தத்தையும் ஏற்படுத்துவதில்லை |
12:00 | உலகின் வளம் மற்றும் எரிபொருளை காத்து மாசை குறைக்கிறது |
12:06 | ஆதலால், தாய்ப்பாலூட்டலே சிறந்த தேர்வாகும் |
12:10 | குழந்தைக்கு 2 வயதாகும் வரை தாய்ப்பாலூட்டுவதை தாய்மார்கள் உறுதிபடுத்திக் கொள்ளவேண்டும் |
12:18 | இது தாய்க்கும் குழந்தைக்குமான ஆரோக்யத்திற்கே ஆகும் |
12:24 | தாய்ப்பாலூட்ட சரியான நுட்பத்தை அறிந்திருப்பது அவசியம் |
12:30 | அதனுடன் சேர்த்து, குடும்பத்தின் ஆதரவும் வழிகாட்டுதலும் கூட தேவை |
12:38 | இவை அனைத்தும் இதே தொடரின் வேறொரு tutorialலில் விளக்கப்பட்டுள்ளது |
12:44 | இத்துடன் இந்த tutorial லின் முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த tutorial லை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஆர்த்தி. நன்றி. |